யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/11/16

செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்.

மத்தியஅரசு ஊழியர்களுக்கு வாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கும்நடைமுறை விரைவில்
அமலுக்கு வரவுள்ளது.இதற்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளைமத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறைவிரைவில் கொண்டுவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள்வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தங்களது செயல்திறன் அறிக்கையைசமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையில், முடிக்கப்பட்டபணிகள், நிலுவையில் உள்ள பணிகள் பற்றியவிவரங்களை அவர்கள் தெரிவிக்கவேண்டும்.மத்தியஅரசு ஊழியர்களுக்கு "செயல்திறன் அடிப்படையில் ஊதியம்' என்ற முறையைஅனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஏழாவது ஊதியக்குழு கடந்த ஜூலை மாதம்பரிந்துரை செய்தது.அவர்கள் குறிப்பிட்டஅளவிலான பணிகளை முடித்தால் மட்டுமே, அவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கப்படவேண்டும் என்றும் அந்தக் குழுபரிந்துரை செய்தது.அதன்படி, ஊழியர்களின்பணிகள், அவர்கள் அளிக்கும் வாராந்திரசெயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, அவர்களுக்கு வருடாந்திர அளவில் தர மதிப்பீடுசெய்யப்படும்.


வாராந்திரஅறிக்கை அல்லது குறிப்பிட்ட இலக்குகளைமுடிக்காத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மறுக்கப்படவாய்ப்புள்ளது.அரசு ஊழியர் ஒருவர், முதல் 20 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றவில்லையெனில் அவரது ஊதிய உயர்வைநிறுத்தி வைக்க முடியும்.சிறப்பாகப்பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளதுஎன்று ஏழாவது ஊதியக் குழுவின்பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக