தன்னம்பிக்கையுடன்தேர்வுக்கு செல்லுங்கள். வெற்றியை உங்களால் மட்டுமே பெற முடியும்,'' என, மாணவர்களுக்கு, மனநல பயிற்சியாளர்,
கீர்த்தன்யாகிருஷ்ணமூர்த்தி அறிவுரை வழங்கினார். 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், மனநல பயிற்சியாளர், கீர்த்தன்யாகிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
கடந்தவைகடந்தவையாக இருக்கட்டும். உங்களின் படிப்புக்கு பல இன்னல்கள் வந்திருக்கலாம்; அவற்றை இனிமேல் நினைக்க வேண்டாம். உங்களுக்கு தீங்கு செய்தவர்களை மன்னித்துவிடுங்கள்; இப்போது புதிதாக பிறந்ததாகநினைத்து கொள்ளுங்கள்.
பொதுத்தேர்வுக்கு இன்னும் நான்கு மாதங்களேஇருப்பதால், அதை மட்டுமே நினைக்கவேண்டும். அதற்காக, தினமும், பல மணி நேரம்படிக்க துவங்குங்கள். உங்களுக்கு பிடிக்காத பாடமாக இருந்தாலும், பிடித்ததாககற்பனை செய்து, தன்னம்பிக்கையுடன் படியுங்கள். தன்னம்பிக்கையுடன் தேர்வுக்கு செல்லுங்கள்.வெற்றியை உங்களால் மட்டுமே பெற முடியும். நட்புடன், அருகில் உள்ள மாணவர்களைகட்டியணைத்து, புன்னகையுங்கள். தன்னம்பிக்கையுடன், கைகளை உயர்த்தி, 'ஜெயித்துக்காட்டுவோம்' என, கூறுங்கள். இவ்வாறுஅவர் பேசினார்.
கண்களைமூடி, கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கேட்ட மாணவர்கள், தாங்கள்முன்னர் செய்த தவறுகளை உணர்ந்து, கண்களில் நீர் வடித்தனர். பின், தன்னம்பிக்கை பெற்று புன்னகையுடன், 'ஜெயித்துக்காட்டுவோம்' என, உறுதி கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக