யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/11/16

மின்னணு முறைக்கு மாறுகிறது அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு!

தமிழகத்தில்அரசு ஊழியர்களுக்காக பராமரிக்கப்பட்டு வரும் நீண்டகாலத்தய பணிப்பதிவேடு முறைக்கு விடை கொடுத்து புதியஇ-மின்னணு பதிவேற்றத்துக்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்அனைவரும் பணிக்கு சேர்ந்தது
முதல்அவர்கள் ஓய்வு பெறும் வரையில்அவர்கள் பெறும் ஊதியம், நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு, ஊக்கஊதிய உயர்வு,
பணி வரன்முறை, பணி நிரந்தரம், பதவிஉயர்வு, பணிக் காலத்தில் பெற்றதண்டனைகள், அயல் பணி உள்ளிட்டவிவரங்கள் அனைத்தும் பணிப் பதிவேட்டில் (சர்வீஸ்ரெஜிஸ்டர்) பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வோர் அரசு ஊழியருக்கும்தனித் தனியாகப் பராமரிக்கப்படும் இந்தப் பணிப் பதிவேட்டை, தாங்கள் பணிபுரியும் துறையின் அதிகாரி கவனித்து வருவார்.
மேலும், பணிப் பதிவேட்டில் ஊழியரின் குடும்ப விவரம், கல்வித்தகுதிகள், உடல் தகுதிகள், குடும்பநல நிதி, வருங்கால வைப்புநிதி உள்ளிட்டவையும் இடம் பெற்றிருக்கும். அரசுஊழியரின் பணியிடமாறுதலின் போது, இந்தப் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, ஊதியச்சான்றிதழுடன் உரிய அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
இந்தப்பணிப் பதிவேட்டில் உள்ள பதிவுகள் சரிபார்க்கப்பட்டு, அதற்கு ஒப்புதலாக ஒவ்வோர் அரசு ஊழியரும்ஆண்டுக்கு ஒரு முறை கையெழுத்திடவேண்டும்.
புத்தகவடிவிலான பதிவேடு: இந்தப் பணிப் பதிவேடுகள்ஆரம்ப காலத்திலிருந்தே தாள்கள் வடிவில் பெறப்பட்டு, பின்னர் புத்தக வடிவில் மாற்றப்பட்டுபராமரிக்கப்பட்டு வருகின்றன.
பணிப் பதிவேட்டின் பக்கங்கள் நிறைவு பெற்றதும், இரண்டாவதுபணிப் பதிவேடு பதிவு செய்யப்படும்.
ஆண்டுக்கணக்கில்பராமரிக்கப்படும் இந்தப் பணிப் பதிவேடுகள்கிழிந்துவிடும் நிலையும் உள்ளது. அவற்றை பைண்டிங்செய்பவர்களிடம் கொடுத்து தைத்துவைத்து பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.
மின்னணுபணிப் பதிவேடு: இதுபோன்ற பிரச்னைகளுக்கு விடை கொடுக்கும் வகையில், அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகளைக் கணினிமயமாக்கும்நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மின்னணு பணிப் பதிவேடு (இ-எஸ்ஆர்) திட்டத்தில், தற்போதுள்ளகாகிதத்தால் ஆன புத்தக வடிவபணிப் பதிவேடுகளின் தகவல்களை அப்படியே மின்னணு முறையில் கணினியில்பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகக்கருவூலத் துறையின் உத்தரவின் பேரில், மாவட்ட கருவூலஅலுவலர்கள் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை மின்னணுமுறையில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த சில நாள்களுக்குமுன்பு தொடங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக, மாவட்டங்கள்தோறும் அனைத்துத் துறை அலுவலர்களையும் அழைத்து, கருவூல அதிகாரிகள் இதற்கான ஆயத்தப் பணிகளைமேற்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளனர். ஒவ்வொருதுறையினரும் பணிப் பதிவேடு தகவல்களைச்சரிபார்த்து, அதை நிறைவாகத் தொகுத்துஅளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துவிழுப்புரம் மாவட்டக் கருவூல அலுவலர் இளங்கோபிரபு கூறியதாவது:
புத்தகவடிவில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு ஊழியர்களின்பணிப் பதிவேடுகளைக் கணினி முறையில் தொகுத்துநவீனப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கருவூலஆணையரின் உத்தரவின் பேரில், இதற்காக பணிப்பதிவேடுகள் குறித்த தகவல்களைச் சரிபார்த்துத்தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அனைத்துத் துறைஅலுவலர்களிடமும் அறிவுறுத்தியுள்ளோம்.
விரைவில்இந்தத் தகவல்களைப் பதிவேற்றம் செய்ய பயிற்சி பெற்றகுழுவினர் மாவட்டத்துக்கு வர உள்ளனர். இவர்கள், துறை வாரியாக தற்போதுள்ள பணிப்பதிவேடுகளின் விவரங்களைக் கணினியில் பதிவேற்றம் செய்வர்.
அதன்பிறகு, அந்தந்த துறை அலுவலர்கள், கணினிவாயிலாக பணிப் பதிவேடு தகவல்களைப்பதியவும், பராமரிக்கவும் முடியும்.
தேவைப்படும்போது அந்தத் துறையின் தலைமைக்கும், அரசுத் துறை ஆய்வுக்காகவும் பதிவேடுகுறித்த தகவல்களை இணைய வழியில் அனுப்பிவைக்கலாம். இதன்மூலம், புத்தக முறை பணிப்பதிவேடுக்கு விடை கொடுத்து, எளிதாகப்பதிவு செய்தும், பார்த்தும் பராமரிக்க முடியும். அதற்கான நடவடிக்கையை அரசுவிரைந்து மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.
பணிகள்எளிதாகும்: இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறியதாவது:
தமிழகத்தில்உள்ள சுமார் 13.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 35 ஆயிரம்ஊழியர்களுக்கும் பணிப் பதிவேடு புத்தகமாகவேபராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நவீனத் திட்டம் நடைமுறைக்குவருவதன் மூலம் எளிதாகத் தகவல்களைப்பதிவு செய்யவும், பராமரிக்கவும் முடியும். காகித முறையால் பதிவேடுசேதமாவது தடுக்கப்பட்டு, தகவல்கள் நீண்ட காலம் பாதுகாப்புடன்இருக்கும் என்றனர் அவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக