யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/6/17

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்:
தரவரிசை பட்டியலை www.annauniv.edu, www.tnea.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
*பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூன் 27ம் தேதிநடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
*பொறியியல் 200க்கு  200 கட்- ஆப்  59பேர்.இந்தாண்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இன்ஜி., கலந்தாய்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் 59பேர் 200க்கு 200-ம், 811 பேர் 199-ம், 2,097 பேர் 198, 3,766 பேர் 197 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.பொது தேர்வு முடிவுகளை போன்று முதலிடம் பெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

நீட் தேர்வு முடிவு வெளியான பின்பு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

டிப்ளமா' ஆசிரியர்: இன்று ஹால் டிக்கெட்

டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு, இன்றுமுதல், ஜூலை, 5 வரை, 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.தொடக்கக் கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்பில், இரண்டாம் ஆண்டுக்கு, ஜூன், 28 முதல், ஜூலை, 12 வரையும், முதல் ஆண்டுக்கு, ஜூன், 29 முதல், ஜூலை, 14 வரையிலும் தேர்வு நடக்கிறது.இதற்கு விண்ணப்பித்த, தனித்தேர்வர்கள் மற்றும் தத்கல் திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள், தேர்வுத் துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல்ஜூலை, 5 வரை, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி., மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் மறுகூட்டல் விண்ணப்பித்தவர்களுக்கு முடிவுகள் இன்று(ஜூன் 23ம் தேதி) வெளியிடப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.மறு கூட்டலில் மாற்றம் இல்லையெனில் இணையதளத்தில் முடிவுகள் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்நாடு அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி பாடத்திட்ட குழுவுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு :

பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாற்றி அமைக்கவும், பிளஸ் 1 வகுப்புக்கு தேர்வு நடத்துவது தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதையடுத்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அந்த பணியை செய்ய இருக்கிறது. அதில் கலைதிட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் தயாரித்து  வடிவமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த பணியை அனுபவம் மிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள், ஆசிரியர்களை கொண்டு செயல்படுத்த மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

இதற்காக பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இணைய தளம் மூலம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த கால அவகாசம் ஜூலை 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

நீட்' தேர்வு முடிவுக்கு பிறகே இன்ஜினியரிங் கவுன்சிலிங்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவங்கும் தேதி, 'நீட்' தேர்வு முடிவுக்கு பின் இறுதி செய்யப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இன்ஜி., மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் நேற்று வெளியிட்டார்.
பின் அவர் அளித்த பேட்டி: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை ஜூன் 27ல் துவங்க திட்டமிட்டுள்ளோம்.ஆனால், நீட் தேர்வு முடிவு தாமதமானால், கவுன்சிலிங் தேதி தள்ளிப்போகும். தற்போதைய நிலையில் 200க்கு 200, 'கட் ஆப்' பெற்றவர்கள் 59 பேர் உள்ளனர். இவர்களில் 36 பேர் மருத்துவப் படிப்பில் இடம் பெற வாய்ப்புள்ளது. 199 கட் ஆப் பட்டியலில் உள்ள 811 பேரில் 645 பேரும்; 198 கட் ஆப் பட்டியலில் உள்ள 2,097 பேரில் 1,681 பேரும்; 197 கட் ஆப் பட்டியலில்உள்ள 3,766 பேரில் 3,014 பேரும் மருத்துவப் படிப்புஇடம் பெற தகுதியுடன் உள்ளனர்.இவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பில் சேர்ந்தால், அவர்கள் இன்ஜி., படிப்புக்கு வர மாட்டார்கள். எனவே இன்ஜி., கவுன்சிலிங்கை முன்கூட்டியே நடத்தினால் மருத்துவம் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் இன்ஜி., இடங்கள் காலியாகி,அதை மீண்டும் நிரப்ப முடியாத சிக்கல் ஏற்படும்.எனவே, மருத்துவ கவுன்சிலிங்குக்கு பின்பே இன்ஜி., கவுன்சிலிங் நடத்தப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஜூலை 31க்குள் இன்ஜி., கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும்.தற்போது நீட் தேர்வால், இன்ஜி., கவுன்சிலிங் தள்ளிப்போகும் என்பதால் ஜூலை 31க்கு பிறகும் கவுன்சிலிங் நடத்த, சட்டரீதியாக அனுமதி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 11 கல்லுாரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன. 67 படிப்புகள், கல்லுாரிகளால் நிறுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 527 கல்லுாரிகளில், இரண்டு லட்சத்து, 85 ஆயிரத்து 844 இடங்களுக்கு, அரசுமற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். இடங்களின் எண்ணிக்கை, இறுதி நேரத்தில் மாறும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

சட்டப்பேரவை வளாகத்தில் கணினி பயிற்றுநர்கள் தர்ணா - கைது :

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2005ம் ஆண்டில் கணினிப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் 330 பேர் கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு மாதம் ரூ.4000 என தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டது.
இவர்கள், கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக கால முறை ஊதியம் கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு தரப்பில் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு அறப்போராட்டம் நடத்தினர்.


நேற்று காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகம் வந்த கணினி பயிற்றுநர்கள் அங்குள்ள அருங்காட்சியகத்துக்கு போவதாக பதிவு செய்துவிட்டு உள்ளே வந்தனர். பின்னர் 11.30 மணி அளவில் இரண்டாவது நுழைவாயில் அடுத்துள்ள அருங்காட்சியகத்தின் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.சட்டப்பேரவை கூட்ட நிகழ்ச்சி தொடங்கி உள்ளே விவாதம் நடந்து கொண்டு இருக்கும் போது கணினி பயிற்றுநர்கள் அந்த வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேரவை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பதற்றம் அடைந்தனர். அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.கூடுதல் ஆணையர் கேள்வி : தர்ணாவில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பயிற்றுநர்களைபோலீசார் தூக்கி தலைமைச் செயலகத்துக்கு வெளியில் கொண்டு சென்றனர். அங்கும் அவர்கள் தர்ணாவில் ஈடுபட முயன்றதால் அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

 இந்த பரபரப்பு சம்பவத்தால் அங்கு பாதுகாப்பு பொறுப்பில் இருந்த கூடுதல் ஆணையர் ஜெயராமன், போலீசாரை கடுமையாக எச்சரித்தார். தர்ணாவில் ஈடுபட்டவர்கள் எப்படி உள்ளே வந்தனர். அவர்களை எப்படிஅனுமதித்தீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.இதனால் போலீசார் விழிபிதுங்கி நின்றனர்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.

CLICK HERE FOR NEET - 2017 RESULTS
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் கடந்த 12 ஆம் தேதி அனுமதி அளித்திருப்பதை அடுத்து, இன்று அல்லது நாளை என எதிர்பார்க்கப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுவை சிபிஎஸ்இ நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) மே 7-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 11.50 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை பிறப்பித்திருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. விசாரணையின் போது சிபிஎஸ்இ பதில் விளக்கம் அளித்திருந்தது. அப்போது, ஜூன் 8 ஆம் தேதியே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.

சிபிஎஸ்இ விளக்கத்தை ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த இடைக்காலத் தடையை ரத்து செய்து, தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நீட் தேர்வு முடிவுகளை இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 23) சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Flash News:தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3ஆம் வாரம் தொடக்கம்.

மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு வரும் ஜூலை 3ஆம் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பின்னரே தமிழகத்தில் மாநில மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்படும், ஒரு வாரத்தில் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இனி வரும் காலங்களில் SSA Upper Primary Block level பயிற்சிகள் RMSA உடன் இணைந்தே நடைபெறும் .

6,7,8,9,10 ஆகிய வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கு ஒரே வளாகத்தில் பயிற்சி

Upper Primary SSA block level training 
இனிமேல் RMSA உடன் இணைந்தே நடத்தப் படும் .
RMSA ஆசிரியர்கள் , BRTEs இதில்
சேர்ந்தே  கருத்தாளராக பங்கேற்க வேண்டும்

ஒரே வளாகத்தில் நடத்தப்படும் இப்பயிற்சியில்
 9,10 எடுக்கும் ஆசிரியர்களுக்கு தனி அறையிலும் ,
6,7,8 எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும்
 ( both middle , HIgh , and. Hr .sec school )
 தனி அறையிலும் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும்
( ஆனால் வளாகம் ஒரே வளாகம் தான் )


11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கு
 தயாராகும் விதத்தில்
RMSA
Rashtriya Avishkar Abhiyaan ( RAA ) என்ற பெயரில் விரிவடைகிறது .

நோக்கம் நல்ல நோக்கம்
NEET போன்ற போட்டித் தேர்வுக்கு
மாணவர்களை தயார் செய்தல்

பயிற்சியில் பாடம் தவிர பிற அரட்டைகள் , நகைச்சுவைக்காக வெளி விஷயம் கூறல் போன்றவை இருக்கக் கூடாது

பாடம் சார்ந்த பயனுள்ள தகவல் மட்டுமே
பகிரப்பட வேண்டும்

சரியாக பாடம் எடுக்காத கருத்தாளர் பற்றிய
புகாரை What's app logo வை scan செய்து
Education secretary க்கு பயிற்சி மையத்தில் இருந்தே பங்கேற்பாளர்கள் புகார் அளிக்கலாம்

Skype மூலம் ONLINE VIDEO CONFERANCE இல் பள்ளிக் கல்வி செயலர் , ஒவ்வொரு மையத்தையும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்வார் .நோக்கம் , தரமான பயிற்சி .

FEED BACK படிவங்களை பயிற்சி மையங்களில் இருந்தே , ONLINE மூலமாக
ஆசிரியர்கள் வழங்க , கூடிய விரைவில்,  வசதிகள் செய்யப்படும்

புதிதாக வரவிருக்கும் பாடத்திட்டத்திற்கு
புத்தகம் எழுதும் பணிக்கும் , ஆசிரியர்களுடன்
BRTE s உம் , சேர்ந்தே கலந்து கொள்ள வேண்ணடும்
*RMSA (SSA combined ) பயிற்சிகள்*
 நடைபெறும் மையங்களில் கருத்தாளர்கள் ( RPs ) முறையாகப் பாடம் மற்றும் பயிற்சி எடுக்கிறாரா ???
பயிற்சி முறையாக ,நன்றாகச் சென்று கொண்டிருக்கிறதா ???

 என்பதை நொடிக்கு நொடி கண்காணித்து
 Education Secretary க்கு அனுப்ப
*MICRO OBSERVER* ஒருவர் நியமிக்கப் பட்டு
அந்தப் பயிற்சி மையத்தின் பயிற்சியின் *current  status -  Education secretary க்கு* *Video conference* ( video call )  மூலம் Micro observer ஆல் தெரிவிக்கப்படும் . இதன் பிரதான நோக்கம் ஒன்றே ஒன்றுதான்
*பயிற்சி தரமான பயிற்சியாக சென்றடைய வேண்டும்*

22/6/17

அரசுப் பள்ளிகளில் 2,536 ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அனுமதி !

மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,536 பணியிடங்களை நிரப்பும் வரை, தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள, பள்ளிக்கல்வித்துறை அனுமதி
வழங்கியுள்ளது

தமிழகத்தில், 2,500க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,645 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 2,536 பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள்முடிந்து, ஆசிரியர்களை நியமிக்க குறைந்தபட்சம், நான்கு மாதங்களாகிவிடும். நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பும் பொதுத்தேர்வு என, அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள பள்ளிகளில், மாணவர்களின் கற்பித்தல் பணிகள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.இந்நிலையில், காலிப்பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதியளித்து, பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, 2,536 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை, ஜூன் முதல், செப்டம்பர் வரையுள்ள நான்கு மாதங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்து கொள்ளலாம்.அந்தந்த ஊர்களில், அந்தந்த பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களை, நியமித்துக் கொள்ளலாம். பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலை வகுப்பு துணைத்தலைமை ஆசிரியர், ஒரு முதுகலை ஆசிரியர் கொண்ட தேர்வுக்குழு மூலம், நியமனம் செய்யப்பட வேண்டும்.இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதந்தோறும், 7,500 ரூபாய்வழங்கப்படும். இதற்காக, தமிழகம் முழுவதும், 7.61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி? முழு விவரம் இதோ

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மறைமுக வரி விதிப்புகளை ஒழித்துவிட்டு சரக்கு
மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு முழுக்க ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பால், விலைவாசி ஏறுமா, குறையுமா என்ற விவாதங்கள் ஒருபக்கம் நடந்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக பார்த்தால், விலைவாசி சிறிது இறங்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒவ்வொரு பொருளிலும் எப்படியெல்லாம் விலைவாசி மாற்றம் இருக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ள அந்தந்த பொருட்கள் மீதான வரி விதிப்பு குறித்து தெரிந்திருப்பது நல்லது. இதுகுறித்த ஒரு விளக்கம்.

வரிஇல்லை

குங்குமம்-பொட்டு, ஸ்டாம்புகள், நீதித்துறை சார்ந்த பேப்பர்கள், பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள், செய்தித்தாள்கள், கண்ணாடி வளையல்கள், கைத்தறி, மெட்ரோ பயணம், லோக்கல் ரயில், ஃப்ரெஷ் இறைச்சி, பதப்படுத்தப்படாத மீன், பதப்படுத்தப்படாத சிக்கன், முட்டைகள், பழங்கள்-காய்கறிகள், உப்பு, மோர், பால், தயிர், பிரெட், மாவு, பருப்பு, தேன்.

இந்தபொருட்களுக்கு வரி விலக்கு உள்ளது.

5 சதவீத வரி

கிரீம்-மில்க் பவுடர், பன்னீர், பீட்சா பிரெட், ரஸ்க், சபுதானா, டீ, காபி, மசாலா பொருட்கள், மருந்துகள், ஸ்டென்ட், கேன், பீட் சுகர், ஃலைப் போட்டுகள், மண்ணெண்ணை, நிலக்கரி.

12 சதவீத வரி

பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட்டுகள், ஏசி வசதியில்லாத ஹோட்டல்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பணி ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

18 சதவீத வரி

ஃப்ளேவர் செய்யப்பட்ட சுகர், பாஸ்தா, கார்ன்பிளேக்ஸ், பேஸ்ட்ரிஸ்-கேக்குகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், ஜாம்-சாஸ், சூப், இன்ஸ்டன்ட் உணவு மிக்ஸ், ஐஸ் கிரீம், மினரல் வாட்டர், எல்பிஜி ஸ்டவ், ஹெல்மெட், டிஷ்யூ பேப்பர், மாதவிடாய்க்கான நாப்கின்கள், என்வலோப் கவர்கள், நோட்டு புத்தகங்கள், இரும்பு பொருட்கள், பிரிண்ட் சர்க்கியூட்கள், கேமரா, ஸ்பீக்கர்கள், மானிட்டர்கள், எலக்ட்ரானிக் பொம்மைகள்.

28 சதவீத வரி

சுயிங்கம், சாக்லேட், வேஃப்ல்ஸ், வேஃபர்ஸ், பான் மசாலா, குளிர்பானங்கள், பெயிண்ட், ஷேவிங் கிரீம்கள், வாசனை திரவியங்கள், ஆப்டர் ஷேவ் லோஷன்கள், ஷாம்பு, ஹேர்டை, சன்ஸ்க்ரீன், வால்பேப்பர், டைல்ஸ், வாட்டர் ஹீட்டர், டிஷ்வாஷர், எடை பார்ப்பு மெஷின், வாஷிங் மெஷின், ஏடிஎம், வேக்யூம் கிளீனர், ஹேர்கிளிப், ஆட்டோமொபைல்ஸ், மோட்டார் சைக்கிள்கள்.

சேவைகளுக்கான வரி

பல்வேறு சேவைகளுக்கும் வரி விகிதம் மாறுபடும். மதுபான லைசென்ஸ் வைத்துள்ள ஏசி ஹோட்டல்கள், டெலிகாம் சேவைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி), நிதி சேவைகள், பிராண்டட் கார்மெண்ட்ஸ் ஆகியதுறைகள் மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.

28 சதவீத வரி


ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ரேஸ்கிளப் பெட்டிங், சினிமா டிக்கெட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஸ்டார் ஹோட்டல்களிலுள்ள ஏசி ரெஸ்டாரண்டுகள் உட்பட அனைத்து வகை ரெஸ்டாரண்டுகளுக்கும், ஒருநாள் வாடகை ரூ.75000 வரையிலான ஹோட்டல் அறைகளுக்கும் வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை மேற்கிந்திய ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் வரவேற்றுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி? சிறப்புக் கட்டுரை - C.P.சரவணன், வழக்குரைஞர்

ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி,
பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும்
அரசாணைகள் பற்றி பார்ப்போம்.

பொதுவான அரசாணைகள்

(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)
(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)

(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

(ஈ) புதியதாக பணி ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10,1991)

(உ) ஊதிய உயர்வு நிலுவை இருப்பின், அதற்கான சான்று கையொப்பமிட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறின், அடுத்த உயர் அலுவலரின் முன் தணிக்கை பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நிலுவையாக உள்ள இனங்களுக்குத் துறைத் தலைவரின் அனுமதி தேவை. (G.O Ms No.1285, Finance department Dated 11.10.1973 மற்றும் G.O Ms No.349, Finance department, Dated 21.5.1981)

(ஊ) தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியிருப்பின், தேர்வுகள் நடந்த கடைசி நாளுக்கு (பிரிவுகளாக நடந்திருப்பின், பிரிவுத் தேர்வு நடந்த கடைசி நாளுக்கு) மறுநாள் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் (அடிப்படை விதி 26(எ)ன் துணை விதி (2)
தற்காலிக மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு ஊதிய உயர்வு
(அ) தற்காலிக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், அவர் வசிக்கும் பதவியில் தகுதிகாண் பருவக்காலத்தில் தேர்வுகள் ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும். (அரசாணை எண். 1087, நிர்வாகத்துறை, நாள் 10.11.1982 அரசாணை எண். 231, P&AR,சி.16383 மற்றும் அரசு க.எண் 35068DOFIP&AR,நாள் 1.1.1994) தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவருக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter. No. 15285/FR.1746, Finance dated. 16.8.1975)
(ஆ) தகுதிகாண் பருவத்தினருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். தகுதிகாண் பருவக் காலத்தில் தேர்வுகள் வரையறை செய்யப்பட்ட பதவிகளுக்கு இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வழங்கப்படும். தகுதிகாண் பருவம் முடிந்து ஆணை வழங்கிய பின்னர் தான் இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது இனி இல்லை (G.O Ms No. 618, P&A.R., Dated 6.7.1987)
பணிஅமர்த்தப்பட்டால், முந்தையப் பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு சேராது. இருப்பினும் அதே பதவியில் அதே துறையிலோ வேறு துறையிலோ பணி அமர்த்தப்பட்டால் அதே ஊதியம் வழங்குவதுடன் முந்தைய பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (Govt. Letter. No.76362874, P&AR Dated 27.7.1988)
முன்ஊதிய உயர்வு
(அ) ஒரு குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றால் முன் ஊதிய உயர்வு வழங்கலாம் என குறிப்பான அரசாணை உள்ள பதவிகளுக்கு மட்டுமே, முன் ஊதிய உயர்வு வழங்கலாம்.
(ஆ) பணிக்கு வருவதற்கு முன்னரே குறிப்பிட் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (G.O Ms No.245, P&A.R., Dated 16.3.1985)
(இ) தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு ஒரு முன் ஊதிய உயர்வும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டு ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் (G.O Ms No.1755, P&A.R., Dated 22.11.1988) மேற்படி ஊதிய உயர்வு போட்டி நடைபெற்ற மறுநாள் முதல் கிடைக்கும். மொத்த பணிக்காலத்தில் இதுபோன்ற காரணத்திற்கு மூன்று ஊதிய உயர்வுகளுக்கு மேல் கிடைக்காது. இருப்பினும் மேற்படி ஊதிய உயர்வு பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்திற்குச் சேராது.
(ஈ) சார்நிலை ஊழியர்களுக்கான கணக்குத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Number Gazette பதிவுகளைக் கொண்டு முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter.No. 52011 iii/873 P&A.R., Dated 13.8.1987)
(உ) உதவியாளர் பதவி உயர்வை துறக்கின்ற தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கு முன் ஊதிய உயர்வு கிடைக்காது. (G.O Ms No.10302 அ.வி. 285-2, P&A.R., Dated 4.9.1985)
(ஊ) தண்டனையாக ஊதிய உயர்வு தள்ளிப் போகின்ற நிகழ்வில் ஒருவருக்கு Advance Increment பெறுவதற்கான தகுதி கிடைத்தால் அதுவும் வழங்கப்பட வேண்டும். (Govt. Letter No. 28857 FR.177-1, P&A.R. dated 29.4.77)
பதவிஇறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்றால் ஊதிய உயர்வு
ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்று விடுப்பு முடிந்து மீண்டும் அதே பதவியில் சேர்ந்தால் விடுப்புக்காலம் உயர் பதவியின் ஆண்டு ஊதிய உயர்வுக்கு சேரும் (24.3.1988 வரை விடுப்புக்காலம் பதவி உயர்வுக்கு சேராது என்று விதிகள் இருந்தன) (G.O Ms No.212, P&A.R., Dated 25.3.1988)
குற்றமாக கருதப்பட்ட தற்காலிகப் பணிநீக்க காலம்
கீழ்நிலைப் பதவியில் பணிபுரிந்த காலம் உயர் பதவிக்கு சேராது
தண்டனைக் காலம் விடுப்புகளை சேர்த்தோ அல்லது நீங்கலாகவோ என தண்டனை வழங்கப்படும் ஆணையில் குறிப்பிட வேண்டும். இருப்பினும், With Cumulative effect-ஆக தள்ளப்படும் ஊதிய உயர்வு எப்போதுமே விடுப்புக்காலம் சேர்த்துதான் இருக்கும். (விதி 24 & அதன் அறிவுரை 2 (b))
தண்டனையாக ஊதிய உயர்வைத் தள்ளிப் போடுதல்
ஊதியஉயர்வை தண்டனையாக கருதி குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடலாம். With Cumulative effect and Without Cumulative effect என இரு வகைகள் உள்ளன.
Without cumulative effect-ல் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு தண்டனைக்காலம் முடிவுற்றதும் நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும்.
With Cumulative effect-ல் தண்டனையாக நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வின் இழப்பு பணிக்காலம் முழுவதும் இருக்கும். தண்டனையாக நிறுத்தப்பட்டது மீண்டும் கிடைக்காது.
இதுவன்றி ஊதிய உயர்வு தள்ளிப் போகும் காலத்தில் விடுப்பு அனுபவித்தால் இணையான காலத்திற்கு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்.
ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிலிருப்பினும், ஊதிய உயர்வு வழங்கலாம். (Rule.6 under FR) ஆணை வழங்குதலை எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்கக் கூடாது. ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும் ஆணை வழங்கப்பட்டால், ஆனைக்குப் பின்னர் எதிர்வருகின்ற முதல் ஊதிய உயர்வு தள்ளிப் போகும். ஆணை வழங்கப்பட இருக்கின்றது என எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்க முடியாது. (அடிப்படை விதி 24)
ஊதியஉயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பிலிருந்தால்
ஊதியஉயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பில் இருந்தால் (LLP Without M.C. தவிர) ஊதிய உயர்வின் நிதிப்பயன் விடுப்பு முடிந்து பணியேற்ற உடன் வழக்கமான ஊதிய நாள் முதல் கிடைக்கும். நிதிப்பயன் தள்ளிப் போகாது. விடுப்பு என்பது எல்லா விடுப்பும் சேரும், LLP Without MC-ல் இருந்தால் விடுப்பு முடிந்து சேர்ந்த பிறகுதான் அனுமதிக்க முடியும். (Govt Letter No.48747/FRDOI/93-9, dated 30.5.1994) (G.O.Ms.No 90 P&AR, Dated 28.3.95)
பணிநீக்கப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால் ஊதிய உயர்வு
(அ) தகுதிகாண் பருவம் முடித்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால், அவர் பணிநீக்கத்திற்கு முன்னர் பெற்று வந்த ஊதியமே பெறலாம். அத்துடன் முந்தைய பணிக்காலமும், ஊதிய உயர்வுக்குக் கணக்கிடப்படும் (G.O.Ms.No.400 P&AR, Dated 7.4.1988) இதனைசாதாரணமாக ஊதியம் நிர்ணயம் செய்யும் அலுவலரே வழங்கலாம் - (Govt Letter no.44316/86-4. P&AR, Dated 29.8.1986)
(ஆ) இடைப்பட்ட பணி நீக்கக் காலம் Condone செய்யப்பட வேண்டிய தேவையில்லை (Govet Letter No.44318/86-4, Finance Department, Dated 29.8.1986)
(இ) தகுதிகாண் பருவக் காலத்தில் ஒருவருக்கு 1.4.1988 அன்று ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட தேர்வு தேறாத காரணத்தால் 1.4.1988 ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 1.4.1989 மற்றும் 1.4.1990 ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. இவர் 18.9.1990 அன்று நடைபெற்ற தேர்வில்தான் தேர்ச்சி பெறுகின்றார். இவருக்கு 1988, 1989, 1990 ஆகிய மூன்று ஊதிய உயர்வுகளும் சேர்ந்து 17.9.1990 அன்று ஒரு சேர வழங்கப்படும் என்று Rule of 28 of State and Subordinate Service Rules கூறுகிறது. இதனால் இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக Cumulative நிதி இழப்பு ஏற்படவில்லை.
(ஈ) தகுதிகாண் பருவக்காலத்தில் பயிற்சி முடிக்கவேண்டிய இளநிலை உதவியாளர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வு அப்பயிற்சி முடிந்த பின்னர் தான் வழங்கப்பட வேண்டும். அலுவலக நடைமுறை காரணமாக பயிற்சிக்கு அனுப்புவது தாமதப்பட்டால், அரசின் ஆணை பெற்று விதிகளைத் தளர்த்தி வழக்கமான நாளிலேயே ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt Letter No.6888/90-3, P&AR Dated 18.4.1990 மற்றும் G.O.Ms No. 71720 பணி-பி/92-1, P&AR Dated, 2.12.1992)
(உ) ஒரு பதவிக்கு பணி அமர்வு செய்வதற்கான தகுதிகள் அனைத்தும் ஒருவர் பெற்றிருக்கவேண்டும். ஏதேனும் ஒரு தகுதி குறைவாக இருந்தாலும் அவருக்கு ஊதிய உயர்வே கிடைக்காது. (Govt Letter No.16599A/FRI/74-3 Finance Dept, dated 21.3.1975 & G.O.Ms No.41, Finance Dept, Dated 11.1.1977)
(ஊ) பணி இறக்கம் பெறுவதைத் தொடர்ந்து ஒருவர் விடுப்பில் செல்வதால் விடுப்பு முடிந்து மீண்டும் பதவி உயர்வு பெற்று அதே உயர் பதவியில் சேர்ந்தால் விடுப்புக் காலத்திற்கும் ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது தள்ளிப் போகாது (Effective from 25.388) G.O.Ms.No.212, P&A.R., dated 25.388)
தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர்கள்
முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கலாம். இரண்டாம் உதிய உயர்வு தமிழ் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும்.
ஊதியவிகிதத்தில் அதிகபட்சம் பெற்றவருக்கு ஊதிய உயர்வு
1.1.96 முதல் (நிதிப்பயன்1.9.1998) ஒரு ஊதிய வீதத்தில் அதிக பட்சம் பெற்றுவிட்ட ஒருவருக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறைதான் ஊதிய உயர்வு கிடைக்கும் (GO.Ms No. 483, Finance (Pay commission) Dated 8.9.1998)
ஊதியஉயர்வுக்கு சேரும் காலம் –
பணியேற்பிடைக்காலம் FR 26(d)
அயல்பணி FR-26(d)
உயர்நிலைப் பதவியின் பணிபுரிந்த காலம் கீழ்நிலைப் பகுதிக்கு சேரும் FR26(e))
பயிற்சிக்கு சென்ற காலம் - (GO.Ms.No.370, P&ARdL26689)– அனைத்து விடுப்புகள்-(FR2660)
மருத்துவச் சான்றின் பேரில் ஊதியமில்லா விடுப்பு - (FR 26 (bb)
ஊதியஉயர்வுக்கு சேராத காலம்
மருத்துவச் சான்று அல்லாத ஊதியமில்லாத விடுப்புFR26(bb)
அனுமதித்ததற்கும் அதிகமாக எடுக்கப்பட்ட வரன்முறை செய்யாத விடுப்புக்காலம்

C.P. சரவணன், வழக்கறிஞர்.

DSE - HS & HSS CLUB ACTIVITIES 2017/18 - TOPICS & MONTH WISE ACTIVIES & COMPETETION LIST

2017 - 18 உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் மன்ற செயல்பாடுகள்

கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு



1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?
இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

3.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?
தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

4.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?
உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

5.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?
இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

6.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?
இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

7.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?
1. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.
2. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.
3. இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.
4. இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.
5. இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.
6. நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.
7. கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.
8. வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.
இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.

8.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற  நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.

9.கேள்வி:- அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?
காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து  கணக்கிடப்படுகிறது.

10.கேள்வி:- காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும்,  ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.

11.கேள்வி:- என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3,  என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார்,  நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன்,   என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?
அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,  எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்,  ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.

12.கேள்வி:- என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன்,  5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை,  எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன்,  நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?
தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்,  ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.

13.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா?
கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும்,  மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

14.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,  ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,
தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.

15.கேள்வி:- திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?
திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

16.கேள்வி:- மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
1. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).
2. அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.
3. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.                        ⁠⁠⁠⁠

சோதனை அலுவலர்கள் ஆய்வின்போது வாகன ஓட்டிகள் அசல் உரிமம் காட்டவேண்டும் !!

வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை ஓட்டும் போது அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்றும் சோதனை அலுவலர்கள் ஆய்வின்போது அசல் உரிமத்தை கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சாலை பாதுகாப்புக்குழு ஆய்வுக்கூட்டம் நடந்தது._

இதில் வீதிமீறல்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை தற்காலிக/நிரந்தரமாக ரத்து செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் பயணியும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும் வேகமாக பயணித்தால் ஓட்டுநர் உரிமங்களை தற்காலிக/நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.  குடிபோதையில் வாகனம் ஒட்டினாலோ, சிவப்பு விளக்கை தாண்டினாலோ ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்._

220 - நாட்களை தாண்டி பணிபுரியும் நாட்களுக்கு SSTA பெற்றுத்தந்த சிறப்பு ஈடுசெய் விடுப்பு உண்டு !!

2017-18 ஆண்டிற்கான  விடுமுறைப் பட்டியல் &  ஆண்டு செயல்திட்டம் மாத வாரியாக உள்ள பட்டியல் படி

210+10 Trg=220 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது..

*பட்டியலில் இல்லாமல் நடைபெறும் CRC க்கு ஈடுசெய் விடுப்பு உண்டு....

 எனவே

*இந்த மாதம் 24 ல்  மற்றும் ஜூலை 1 ல்  CRC நடைபெற்றால் ஈடுசெய் விடுப்பு உண்டு.

இனி கணிதம் விருப்பப் பாடம்: நீதிமன்றம் பரிந்துரை!!

பெரும்பாலான மாணவர்கள் கணிதப் பாடத்தை வெறுக்கின்றனர். இதனால், பத்தாம் வகுப்பிற்குப் பின் மாணவர்கள் கணிதப் பாடம் இல்லாத பிரிவுகளையே தேர்வு செய்கின்றனர். ஒருசில மாணவர்கள் கணிதம் காரணமாகப் பள்ளிக்கு செல்வதை நிறுத்துகின்றனர்.

இந்நிலையில், கல்வி வாரியங்கள் பத்தாம் வகுப்பில் கணிதத்தை விருப்பப் பாடமாக கருதுமாறு மும்பை 
உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. பல மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவும், உயர் கல்வி பெறவும் இது உதவும். குறிப்பாக இளங்கலை பட்டப் படிப்புகள்,போன்றவற்றிற்கு கணித பாட அறிவு தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பை உயர்நீதிமன்றத்தில் மனநல மருத்துவர் ஹரீஷ் ஷெட்டி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், கற்றல் குறைபாடுகள் கொண்ட மாணவர்களுக்கு உதவுவதற்குப் பள்ளிகள் முன்வர வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு கடந்த திங்கள்கிழமை( ஜூன் 19) நீதிபதி வி.எம். கனடே மற்றும் நீதிபதி எம்.ஏ.பாதர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறப்பு பள்ளிகளில் கைவிடப்படக் கூடிய பாடங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. கலை மற்றும் பிற தொழிற்கல்வி படிப்புகள் போன்ற பட்டப்படிப்புகளில் கணிதம் போன்ற பாடங்கள் தேவையில்லை. கணிதத்தை ஒரு விருப்பப் பாடமாக மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டால், அது அவர்கள் முழுமையாகப் பட்டப்படிப்பை முடிக்க உதவும். கணிதம் மற்றும் மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற முடியாத காரணத்தால், பெரும்பாலான மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, மாநில கல்வி வாரியங்கள் கணிதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தை தேர்வு செய்ய அனுமதித்தனர்.

மாணவர்கள் கணிதத்தை படிக்காமல் பிற பாடங்களைப் படித்திருந்தாலும், பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர் என நீதிபதி வி.எம். கனடே தெரிவித்தார்.

கோடிகளில் ஊதியம் வழங்கும் இன்ஃபோசிஸ்!!! !!

இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களை விட வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் கோடிகளில் ஊதியம் வழங்குவது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமாக இன்ஃபோசிஸ் உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் 10 ஆயிரம் 
பணியாளர்களை வேலைக்கு எடுக்கப்போவதாக இந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் பணியாற்றுபவர்களை விட வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் கோடிக் கணக்கில் சம்பளம் வழங்கப்படுவது தரவு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்களில் 1,800க்கும் மேற்பட்டவர்களுக்கு ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமாக அந்நிறுவனம் ஊதியம் வழங்குகிறது. இதில், 150 ஊழியர்களைக் கடந்த நிதியாண்டில் அந்நிறுவனம் பணியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் 1,51,956 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 50 பேருக்கு மட்டுமே ரூ.1 கோடிக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளில் பணிசெய்யும் 48,400 ஊழியர்களில் 1,800 பேர் ரூ.1 கோடிக்கும் அதிகமாக ஊதியம் பெறுகின்றனர்.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் பாஸ்போர்ட் சேவை!!

தமிழகத்தில் சேலம் மற்றும் வேலூர் தலைமை தபால் நிலையங்களில் கடந்த மார்ச் மாதம் பாஸ்போர்ட் செவை மையங்கள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 11 மாவட்ட தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படும் எனச் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நேற்று (ஜூன்,19) அறிவித்துள்ளது.


இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், ‘பாஸ்போர்ட் சேவைக்காகப் பொதுமக்கள் இடைத்தரகர்களை இனி நாடத் தேவையில்லை. எளிதில் பாஸ்போர்ட் சேவையை பெறுதற்கு வசதியாக மத்திய அரசு நாடெங்கும் 149 அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களைத் திறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 86 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதில், 52 பாஸ்போர்ட் சேவை மையங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் கடலூர், திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்ட தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படவுள்ளன. அதேபோல், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படவுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 800 மாவட்டத் தலைமை தபால் நிலையங்களில், 2 ஆண்டுகளுக்குள் பாஸ்போர்ட் வழங்கும் சேவை தொடங்கப்படும் என வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் ஜூன்,13 ஆம் தேதி தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

சிரிப்பு பல்கலைக்கழகம் !!

சிரிப்பு என்பது மனிதனோடு பிறந்த ஓர் உணர்வின் வெளிப்பாடு. சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்துகிறது. சிரிக்கும்போது உடலில் 300 தசைகள் அசைகின்றன. இதனால், உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன. சிரிப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கிறது. இன்றைய கால 
சூழ்நிலையில் வாழும் மக்கள் இத்தகைய சிறப்பு வாய்ந்த சிரிப்பை மறந்துவிட்டு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, பெரும்பாலான மக்கள் மற்றவர்களுக்கு பிளாஸ்டிக் சிரிப்பை கொடுக்கிறோம். இன்னும் சில பேர் சிரிக்க மறந்துவிட்டனர் என்று கூட கூறலாம்.

இந்நிலையில், கர்நாடகாவில் பெங்களூரில் சிக்பள்ளாபுரா மாவட்டத்தில் 15 ஏக்கர் நிலத்தில் சிரிப்பு பல்கலைக்கழகம் அமையவுள்ளது. ஒருவர் ஆயிரம் கவலைகளோடு இருந்தாலும், சாதாரண புன்னகை அவர்களின் கவலைகளை விரட்டியடித்து விடும். அந்தளவுக்குச் சிரிப்புக்கு வல்லமை இருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு உலகில் பல நாடுகளில் சிரிப்பு மன்றங்கள் இயங்கி வருகிறது. 65 நாடுகளைச் சேர்ந்த சிரிப்பு மன்றங்கள் இணைந்து இந்தப் பல்கலைக்கழகத்தை அமைக்கின்றன. இரண்டு ஆண்டுகளில் இந்தப் பல்கலைக்கழகம் செயல்பட தொடங்கும்.

சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை இயந்திரமாகத்தான் உள்ளது. அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற சிரிப்பு மிகவும் தேவைப்படுகிறது. கடந்த மாதம் 65 நாடுகளைச் சேர்ந்த சிரிப்பு மன்றங்கள் பெங்களூரில் கூடி சிரிப்பு கலையை மக்களிடையே ஊக்கப்படுத்தத் தனி பல்கலைக்கழகம் அமைக்க முடிவு செய்தன.

இந்த பல்கலைக்கழகம் சிக்பள்ளாபுரா நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹிந்துபூர் சாலையில் 15 ஏக்கரில் அமைகிறது. 20 வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளன. மண் குடிசைகளில்தான் வகுப்பறை அமையவுள்ளது. ஒருமுறை பல்கலைக்கழகத்தைச் சுற்றி வந்தாலே தானாக சிரிப்பு வருமளவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும்,மாலை 5.30 மணி முதல் 7.30 வரையும் நடைபெறவுள்ள வகுப்புகளுக்கு 40 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிந்துவிடும் என சிரிப்பு மன்றங்கள் தெரிவித்துள்ளன.