யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/6/17

சிரிப்பு பல்கலைக்கழகம் !!

சிரிப்பு என்பது மனிதனோடு பிறந்த ஓர் உணர்வின் வெளிப்பாடு. சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்துகிறது. சிரிக்கும்போது உடலில் 300 தசைகள் அசைகின்றன. இதனால், உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன. சிரிப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கிறது. இன்றைய கால 
சூழ்நிலையில் வாழும் மக்கள் இத்தகைய சிறப்பு வாய்ந்த சிரிப்பை மறந்துவிட்டு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, பெரும்பாலான மக்கள் மற்றவர்களுக்கு பிளாஸ்டிக் சிரிப்பை கொடுக்கிறோம். இன்னும் சில பேர் சிரிக்க மறந்துவிட்டனர் என்று கூட கூறலாம்.

இந்நிலையில், கர்நாடகாவில் பெங்களூரில் சிக்பள்ளாபுரா மாவட்டத்தில் 15 ஏக்கர் நிலத்தில் சிரிப்பு பல்கலைக்கழகம் அமையவுள்ளது. ஒருவர் ஆயிரம் கவலைகளோடு இருந்தாலும், சாதாரண புன்னகை அவர்களின் கவலைகளை விரட்டியடித்து விடும். அந்தளவுக்குச் சிரிப்புக்கு வல்லமை இருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு உலகில் பல நாடுகளில் சிரிப்பு மன்றங்கள் இயங்கி வருகிறது. 65 நாடுகளைச் சேர்ந்த சிரிப்பு மன்றங்கள் இணைந்து இந்தப் பல்கலைக்கழகத்தை அமைக்கின்றன. இரண்டு ஆண்டுகளில் இந்தப் பல்கலைக்கழகம் செயல்பட தொடங்கும்.

சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை இயந்திரமாகத்தான் உள்ளது. அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற சிரிப்பு மிகவும் தேவைப்படுகிறது. கடந்த மாதம் 65 நாடுகளைச் சேர்ந்த சிரிப்பு மன்றங்கள் பெங்களூரில் கூடி சிரிப்பு கலையை மக்களிடையே ஊக்கப்படுத்தத் தனி பல்கலைக்கழகம் அமைக்க முடிவு செய்தன.

இந்த பல்கலைக்கழகம் சிக்பள்ளாபுரா நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹிந்துபூர் சாலையில் 15 ஏக்கரில் அமைகிறது. 20 வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளன. மண் குடிசைகளில்தான் வகுப்பறை அமையவுள்ளது. ஒருமுறை பல்கலைக்கழகத்தைச் சுற்றி வந்தாலே தானாக சிரிப்பு வருமளவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும்,மாலை 5.30 மணி முதல் 7.30 வரையும் நடைபெறவுள்ள வகுப்புகளுக்கு 40 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிந்துவிடும் என சிரிப்பு மன்றங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக