சமூக வலைதளங்களில் வலம்வரும் போலி செய்திகளைக் கட்டுப்படுத்தும் விதமான
பிரசாரத்தை ஃபேஸ்புக் தொடங்கியுள்ளது.
உலகளவில் ஃபேஸ்புக் பயனாளர்கள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதுபோல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்அப் பயன்பாட்டிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் இந்த வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக ஃபேஸ்புக்கில் அதிகளவு போலி செய்தி பகிரப்பட்டு வருகிறது. இதனால் போலி செய்தி பரப்பப்படுவதற்கான ஊடகமாக ஃபேஸ்புக் உள்ளது என்று பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே, போலி செய்திகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஃபேஸ்புக் இறங்கியுள்ளது. போலி செய்திகளைக் கண்டுபிடிப்பதற்கான 10 வழிகளை பயனாளர்களுக்கு அது வழங்கியுள்ளது. இது தொடர்பாக முக்கிய செய்தித்தாள்களில் விளம்பரமும் அளித்துள்ளது. அந்த விளம்பரத்தில், ‘நாம் ஒன்றாக இருப்பதன் மூலம் தவறான செய்தி பரவுவதைக் குறைக்க முடியும்’ என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளது.
மேலும், ‘செய்திகளின் தலைப்புகளைச் சந்தேகியுங்கள். இணையப்பக்கத்தின் யு.ஆர்.எல்லைக் கவனியுங்கள். செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயுங்கள். செய்திக்கும் புகைப்படத்துக்குத் தொடர்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நம்பகமான செய்தியாக இருந்தால் மட்டும் சமூக வலைதளத்தில் பகிருங்கள்’ என்றும் ஃபேஸ்புக் தனது பயனாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.