கொடைக்கானல்:
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி.
இவர் மார்க்கெட்டில் கடை வைத்து நடத்தி வருகிறார். வோடபோன் செல்லில் போஸ்ட்பெய்டு வசதி வைத்திருந்தார். அதில் பில் கூடுதலாக வந்ததால் பிரீபெய்டு சேவைக்கு மாறினார்.
அதன் பிறகு தனது போஸ்ட்பெய்டு கணக்கில் உள்ள பாக்கித் தொகையை அனுப்புமாறு செல்போன் நிறுவனத்துக்கு தகவல் அனுப்பியிருந்தார்.
இதனையடுத்து 34 பைசாவுக்கு காசோலையாக ஆக்சிஸ் வங்கி மூலம் பாலசுப்பிரமணி வீட்டுக்கு ஒரு தபால் வந்தது. அதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணி இது குறித்து செல்போன் கம்பெனியிடம் போய் கேட்ட போது உங்கள் கணக்கில் 34 பைசா மட்டுமே பாக்கி இருந்ததாகவும் அதனால்தான் அதனை காசோலையாக அனுப்பி வைத்ததாக அவர்கள் கூறினர்.
இதனை வங்கியில் போட்டு கலெக்ஷன் எடுத்தாலே ரூ.150 செலவாகும். இது கூட தெரியாமல் எதற்காக காசோலையை வீணடித்தீர்கள்? என கூறியவாறு பாலசுப்பிரமணி வேதனையுடன் வீடு திரும்பினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக