யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/9/17

30,000 இளைஞர்களுக்குப் பயிற்சி!"

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவின் சுமார் 30,000 இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியளித்துள்ளதாகத் 
தெரிவித்துள்ளது. மேலும், 4,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், 26,000 ஆசிரியர்களுக்கும் பயிற்சியளித்திட பல்வேறு மாநில அரசுகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு உதவியுள்ளதாகவும் செப்டம்பர் 22ஆம் தேதி (நேற்று) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவுவதற்கு பிஸ்பார்க், மைக்ரோசாஃப்ட் ஆக்சலரேட்டர் ஆகிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பிஸ்பார்க் திட்டத்தின்கீழ் 100 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 2016-17ஆம் நிதியாண்டில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் ஆக்சலரேட்டர் திட்டத்தின்படி ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கட்டமைக்கும் பணி, சந்தைப்படுத்துதலுக்குத் தயார்படுத்துதல், பொருள்கள் வழங்குதல், இணைப்புகள், ஆலோசனை போன்ற உதவிகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்க சிக்ஸா திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 8,124 ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,61,000 மாணவர்கள் பயனடைவார்கள்’. இவ்வாறு கூறியுள்ளது. மேலும், இந்திய அரசின் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழ், தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுதல், சுகாதாரம், வேளாண்துறை குறித்த பயிற்சியும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக