யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/9/17

அரசு விழாவிற்கு பள்ளி மாணவர்களா?: உயர் நீதிமன்றம்!

கல்வி சாராத நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வது தொடர்பாகத் தமிழக அரசு 
விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவை மாவட்ட தலைநகரங்களில் தமிழக அரசு கொண்டாடிவருகிறது. இந்த நிகழ்வில் பார்வையாளர்களாக பங்கெடுப்பதற்காக அரசுப் பள்ளி மாணவர்கள் அழைத்துவரப்படுகிறார்கள். இது போன்ற கல்விச்சாராத நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கெடுப்பதை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் மனுத்தாக்கல் செய்திருந்தார் அந்த மனுவில்.

தமிழக அரசுக் கல்வி சாராத அரசியல் பொது நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ, மாணவிகளைக் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைத்து வருகிறது. மாலையில் நடக்கும் நிகழ்ச்சிக்குக் காலை முதலே மாணவர்களை அரங்கத்தில் காத்திருக்க வைக்கின்றனர். மாணவ, மாணவியருக்குத் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள்கூட முறையாகச் செய்து கொடுப்பதில்லை. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக மாணவ, மாணவியரை அழைத்துச் செல்பவர்கள் பெற்றோரிடம் முறையான அனுமதி பெறுவதில்லை. சில இடங்களில் மாணவர்களை அழைத்துச் சென்ற வாகனங்கள் விபத்துக்குள்ளாகி மாணவர்களும் காயமடைந்துள்ளனர். இதனால், மாணவ, மாணவியர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பெற்றோர் தங்களது குழந்தைகளை கல்வி கற்கவே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுப்பி வைப்பதில்லை. எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற கல்வி சாராத அரசியல் பொது நிகழ்ச்சிகளில் பள்ளி நேரங்களின்போது அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளைக் கட்டாயப்படுத்தி கலந்து கொள்ள வைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி அரசியல் பொது நிகழ்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைப்பதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குத் தமிழக அரசு அக்டோபர் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக