யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/11/17

NMMS தேர்வு - online பதிவு செய்வது எப்படி?

Step:1
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்
"Click to access online portal" பகுதியை Click செய்யவும்

👉Step:2
திரையில் தோன்றும் WELCOME TO ONLINE PORTAL பக்கத்தில் NMMS EXAM NOV 2017 APPLICATION REGISTRATION - ஐ Click செய்யவும்.

👉Step:3
திரையில் தோன்றும் Log in பகுதியில் தங்கள் பள்ளிக்குரிய user id & password கொடுக்கவும். (குறிப்பு User id ல் DE0 என்பதில் 0 என்பது zero ஐ குறிக்கும்)

👉Step:4
தற்போது மீண்டும் ஒரு முறை user id & password கொடுக்கவும்.

👉Step:5
திரையில் முதலாவதாக தோன்றும் NOMINAL ROLL REGISTRATION ஐ Click செய்து மாணவரின் விவரங்களை பதிவு செய்து SUBMIT கொடுக்கவும். (குறிப்பு : அனைத்து விவரங்களும் விடுபடாமல் நிரப்பப்பட வேண்டும் )

👉Step : 6
மாணவனின் புகைப்படத்தை update செய்யவும். புகைப்படம்
25 Kb க்கு குறைவாக இருக்க வேண்டும். மாணவனின் விவரங்களை Online -ல் பதிவேற்றம் செய்வதற்கு முன்னதாக புகைப்படங்களை Resize செய்து 25 Kb க்கு குறைவாக Save செய்து கொள்வது வேலையை சுலபமாக்கும்.

👉Step:7
புகைப்படம் பதிவேற்றம் செய்தவுடன் திரையில் தோன்றும் download ஐ Click செய்து மாணவனின் online registration application ஐ Pdf வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறாக அனைத்து மாணவர்களின் விவரங்களை பதிவு செய்த பின் இறுதியாக...

👉SCHOOL WISE REPORT ஐ Click செய்து School report (Summary report) ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

👉download செய்யப்பட்ட மாணவனின் online registration application - ஐ 2 நகல்கள் எடுத்து அதில் மாணவர் கையொப்பம், பெற்றோர் கையொப்பம், தலைமை ஆசிரியர் கையொப்பம் ( with Seal) இருப்பதை உறுதி செய்யவும்.

👉தவறுதலாக பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அழிக்கவோ, புகைப்படம் மற்றும் தவறான விவரங்களை INDIVIDUAL REPORT/EDIT/PHOTO UPDATE/DELETE option ஐ பயன்படுத்திதிருத்திக் கொள்ளவோ முடியும்.

👉அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியவை:👇

👉மாணவனின் online registration application - 2 நகல்கள்
👉SCHOOL WISE REPORT - 2 நகல்கள்
👉தேர்வு கட்டணம் .
👉குறிப்பு :
மேற்கண்ட Online பதிவேற்றத்தை கால தாமதமின்றி உடனே முடிப்பது சிறந்தது. இறுதி நேரத்தில் பதிவு செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்படும். மேலும்
AEE0 அலுவலகத்தில் ஒவ்வொரு பள்ளியின் விண்ணப்பத்தையும் தொகுத்து , block wise report தயார் செய்து அனுப்ப சற்று கால அவகாசம் தேவைப்படுவதால் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இறுதி தேதிக்கு (8.11.17) முன்னதாகவே AEEO அலுவலகத்தில் ஒப்படைப்பது சிறந்தது.

தேவையென்றால் பள்ளி நிர்வாகமே விடுமுறை விடலாம் : முதன்மை கல்வி அதிகாரி!!!

சென்னை : வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 
பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல பகுதிகளில் மழைநீர் வடியத்துவங்கியதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சென்னையில் 9 பள்ளிகள், திருவள்ளூரில் 12 பள்ளிகள், காஞ்சிபுரத்தில் 10 பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் இன்று திறக்கப்படுவதாக மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், மழைப்பொழிவை பொறுத்து வேளச்சேரி பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பள்ளி நிர்வாகமே முடிவு செய்யலாம். தேவைப்பட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை விடலாம் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய ஓவியப் போட்டி!!!

                                   
சென்னை, நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில், 
'குளோபல் ஆர்ட் இந்தியா' நிறுவனம் சார்பில், நடந்த, தேசிய ஓவியப் போட்டியில், தமிழகம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 1200 மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவர்கள் ரயில் மறியல்!

                                                 
கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் ரயில்வே நிலையத்தில்,
ரயிலில் பயணம்

செய்த மாணவர்கள் மற்றும் பொது மக்கள், ரயில்வே நிலைய அதிகாரிகளுக்கு

எதிராக ரயிலை மறித்து போராட்டம் இன்று (நவம்பர்,7) காலை போராட்டம் செய்தனர்.

56873 மயிலாடுதுறை பயணிகள் ரயில், விழுப்புரத்திலிருந்து காலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, சிதம்பரத்துக்கு 7.50 மணிக்கு தினந்தோறும் வந்துசேரும். இந்த

ரயிலில்தான், அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள், நந்தனார் பச்சையப்ப பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயணிக்கிறார்கள்.

ரயில் மறியல் பற்றி, ரயிலில் பயணம் செய்த பாலமுருகனிடம் கேட்டோம். இதுப்பற்றி அவர் கூறுகையில், புதுச்சத்திரத்தில் ஐ.எல்.எப்.எஸ். பவர் கம்பெனி

ஆரம்பிக்கப்பட்டத்திலிருந்து பயணிகள் ரயிலை ½ மணிநேரத்துக்கும் மேலாக

நிறுத்தி, காலதாமதமாக அனுப்புகிறார்கள் ரயில்வே நிலைய அதிகாரிகள்.

பவர் கம்பெனிக்கும், பயணிகள் பயணிக்கும் ரயிலுக்கும் என்ன சம்பந்தம்

என்று கேட்டோம். “ பவர் கம்பெனிக்கு தூத்துக்குடியிலிருந்து கூட்ஸ்

மூலமாக ரயில் பாதையில்தான் நிலக்கரி ஏற்றிவருகிறார்கள். கூட்ஸ்பெட்டிகள்

ஒரு கிலோமீட்டர் தூரம் வரையிலிருக்கும். கூட்ஸ் வண்டி எதிரில் வருவதால், மாணவர்கள் பயணிக்கும் பயணிகள் ரயிலைப் புதுச்சத்திரத்தில் நிறுத்தி, கூட்ஸ் வண்டிக்கு வழிவிடுகிறார்கள். கூட்ஸ் வண்டிக்கு என்ன அவசரம், பரங்கிப்பேட்டை, கிள்ளை, ரயில் நிலையத்தில் நிறுத்தி, பயணிகள் ரயிலுக்கு வழிவிடலாமே? இப்போது தேர்வு நேரம், மாணவர்களின் படிப்புப்பற்றி ரயில்வே அதிகாரிகளுக்குத் அக்கறை இல்லையா?

அதனால்தான், ரயிலில் பயணித்த அனைவரும் ஒத்தகருத்துடன் இன்று காலை (நவம்பர், 7) ரயில் மறியல் போராட்டம் செய்தோம். அதன்பிறகு, பயணிகள் பயணிக்கும் ரயிலுக்குத் இனி தடையிருக்காது என்று உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள் ரயில்வே நிலைய அதிகாரிகள்.

அடிப்படை உரிமையைக்கூட இங்கு போராடித்தான் பெறவேண்டியதாகயிருக்கு. இந்தியசுதந்திர நாட்டில், இனி போராட்டங்கள் இல்லாமல் பொழுதுகள்

விடியப்போவதில்லை என்பது மட்டும் உணரமுடிகிறது என்று சொன்னார்.

வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்!!!

                                               
பள்ளிக்கூடத்துக்காகக் கட்டப்பட்ட அறைகளில் வட்டார வளர்ச்சி மையம்
செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு பெரியார் வீதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புவரை உள்ளன. சுமார் 306 மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். பள்ளியில் மொத்தம் 9 வகுப்புகள் உள்ளன. இந்த வகுப்புகள் போதாது, கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என ஏற்கெனவே மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன் பேரில் கூடுதலாக 5 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அப்படிக் கட்டப்பட்ட அறைகளில் வகுப்பறைகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் புதிய அறைகள் கல்வி இயக்கத்தின் வட்டார வளர்ச்சி மைய அலுவலங்களாகச் செயல்பட்டுவருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இன்று (நவம்பர் 07) காலை வழக்கம்போல் பள்ளிக்கூடம் வந்த மாணவ மாணவிகள் திடீரென வகுப்புகளைப் புறக்கணித்து வெளியே வந்து பள்ளிக்கூடத்தின் முன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் புதிய அறைகள் வகுப்பறைகளாகச் செயல்பட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகப் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதாமணி ஆகியோர் இருந்தனர்.

கட்டணத்தை உயர்த்திய ரயில்வே துறை!!!

                                              
48 ரயில்களை அதிவேக ரயில்களாகத் தரம் உயர்த்தவும்,
அவற்றின் வேகத்தை மணிக்கு 5 கி.மீ. உயர்த்தவும் திட்டமிட்டுள்ள ரயில்வே துறை பயணக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

தற்போதைய நிலையில் ராஜ்தானி, டுரோண்டோ, சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் மிகவும் தாமதமாகவே இயங்கி வருகின்றன. பனிமூட்டம் காரணமாக வடக்குக் கட்டுப்பாட்டு ரயில்கள் அனைத்தும் பல மணி நேரங்கள் குறைவான அளவிலேயே இயங்குகின்றன. எனவே 48 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை சூப்பர் பாஸ்ட் ரயில்களாகத் தரம் உயர்த்த இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ள ரயில்வே துறை நவம்பர் 1ஆம் தேதி வெளியிட்டுள்ள புதிய பயண அட்டவணையில் ரயில் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.70 கோடி வருவாய் கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய கட்டண முறைப்படி, வழக்கமான கட்டணத்தில், ஸ்லீப்பர் பிரிவுக்கு ரூ.30 கூடுதலாகவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தர ஏ.சி. பெட்டிகளில் ரூ.45 கூடுதலாகவும், முதல் தர ஏ.சி. பிரிவுக்கு ரூ.75 கூடுதலாகவும் பயணிகள் செலுத்த வேண்டியிருக்கும். சூப்பர் பாஸ்ட் ரயில்களாக 48 ரயில்களும் மாற்றப்பட்ட பிறகு, சூப்பர் பாஸ்ட் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 1,072 ஆக உயரும். ரயில்வே துறையிடமுள்ள விவரங்களின்படி, ஜூலை - செப்டம்பர் மாதங்களில் 890 சூப்பர் பாஸ்ட் ரயில்கள் தாமதமாக இயங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஜூலை மாதத்தில் 129 ரயில்களும், ஆகஸ்ட் மாதத்தில் 145 ரயில்களும் செப்டம்பர் மாதத்தில் 183 ரயில்களும் 1 முதல் 3 மணி நேரங்கள் தாமதமாக இயங்கியுள்ளன. இந்நிலையில்தான் ரயில்களின் வேகத்தை மணிக்கு 5 கி.மீ. வேகம் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

EMIS NEWS

EMIS : மாணவர்களின் PHOTO மற்றும் BLOOD GROUP பதிவேற்ற வேண்டும்*


EMIS தகவல்

பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் மற்றும் குருதி வகை ஆகிய இரண்டு தகவல்கள் அனைவருக்கும் (for all standards) புதியதாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

புகைப்படம் 3 x4 அளவில் 50 KB க்குள் இருக்க வேண்டும்

புகைப்படம் white or blue ,கலர் background ஆக இருக்க வேண்டும்

ஏற்கனவே ஏற்றப்பட்ட புகைப்படங்கள் ,குருதிவகை இரண்டும் நீக்கப்பட்டு விட்டன

 இவை student I'd card தலைப்பில் செலெக்ட் செய்து View Students Data சென்று edit option மூலம் செய்யப்படவேண்டும்

நவமபர் 2017 மாதத்தில் தொடக்க/ உயர் தொடக்க நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியவை

 NAS தேர்வு மாதிரி மற்றும் உண்மையான தேர்வு

👉CRC level science exbition (8-11-17)
👉கலைத்திருவிழா
👉EMIS பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் புதியதாக  எடுக்கப்பட்ட 2x3 அளவுள்ள 50 k b க்குள் உள்ள புகைப்படம் அடையாள அட்டைக்காக பதிவேற்ற வேண்டும்
👉EMIS அனைத்து மாணவர்களுக்கும் blood group பதிவேற்றம் செய்யப்படவேண்டும்
👉EMIS விடுபட்ட பதிவுகள் முடித்தல்.
👉தொடக்க நிலை ஆசிரியர் களுக்கு 4 நாட்கள் கற்றல் விளைவுகள் பயிற்சி,(2 spell)
👉உயர் தொடக்க நிலை ஆசிரியர் களுக்கு 2 நாட்கள் கற்றல் விளைவுகள் பயிற்சி பாட வாரியாக (3  spell)
👉06-11-17 ல் விடப்பட்ட மழை விடுமுறைக்கு  ஈடு செய் வேலைநாள்
👉C& D மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி இம்மாதத்தில் தமிழ் ,கணக்கு பாடத்தில் முழு அடைவை எட்டுதல்
👉 New pay _option கொடுத்து ஊதிய நிர்ணயம் செய்தல்/ சரிபார் த்தல்,
👉டெங்கு விழிப்புணர்வு செயல்பாடுகள்,தினமும் நடைமுறை மற்றும் கண்காணித்து வருதல்
👉school grant,MG போன்றவற்றை முழுமையாக எடுத்து பயன் படுத்துதல்
👉SMC மீட்டிங் நடத்தி டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளல்
👉NMMS மாணவர் பதிவு முடித்து அவர்களை தேர்வுக்கு தாயார் படுத்துத்துதல்
👉மேலும் அறிவிக்கப்பட உள்ளதை செயல்படுத்துதல்

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து!!!

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் 
தேர்வு ரத்து செய்யப்படுகிறது. சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் அறிவித்துள்ளார்.

தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுள்ளதால் படங்களை நடத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியமில்லா ஊரக வேலைத் திட்டம்!!!

                                       
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 
19 மாநிலங்களில் ஊதிய பாக்கியில் ரூ.3,066 கோடி இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாக இந்தியா ஸ்பெண்ட் அறிக்கை கூறுகிறது.

பொதுவேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு அரசின் குறைந்த ஊதியத்துடன் ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்குக் கட்டாய சிறப்புத் திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம்தான் ’மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’. ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரையில் ஹரியானா மாநிலத்தில் இத்திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படவில்லை என்று சங்கர்ச் மோர்ச்சா என்ற பொதுநலச் சங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

இதேபோல, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் செப்டம்பர் 1ஆம் தேதி முதலும், கேரளா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாகவும் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் 19 மாநிலங்களில் ரூ.3,066 கோடி ஊதிய பாக்கி வழங்கப்படவில்லை. இதனால் 9.2 கோடி ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலைக்கான ஊதியமானது 15 நாட்களில் வழங்கப்படும். ஆனால் மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதால் இந்த வேலையை மட்டுமே நம்பியுள்ள மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்காமல் தாமதப்படுத்தினால் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். கடந்த ஆண்டில் ஊதியம் தருவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.689 கோடியாக இருந்ததாக அரசு மதிப்பிட்டுள்ளது.

Flash News : TRB - Polytechnic Exam 2017 - Final Key answers and Individual Candidate Qurey and C.V List Published

6/11/17

70% பணி பதிவேடுகளில் குளறுபடி அரசு ஊழியர் ஆசிரியர்கள் அதிர்ச்சி!!!

பள்ளிகளை தேடி புத்தக கண்காட்சி : கல்வித்துறையில் புதிய முயற்சி

பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்தால், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும், பள்ளிக்கல்வியில் தரத்தை உயர்த்த, அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு திட்டங்களை அறிவித்துஉள்ளார். நுாலக மேம்பாடு மற்றும் புத்தக வாசிப்பை அதிகப்படுத்தவும், புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நுாலகங்களுக்கும், மாணவர்களுக்கும் அரிய வகை புத்தகங்களை வழங்கும் வகையில், புத்தக கொடை திட்டத்தையும், முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த, புத்தக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. பள்ளி வளாகங்களில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஒரு நாள் புத்தக கண்காட்சி நடத்தலாம். இதற்கு அதிகாரிகளை அணுகினால், புத்தக தலைப்புகள் மற்றும் தரத்தை பார்த்து, கண்காட்சி நடத்த அனுமதி அளிக்கப்படும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர் அறிவித்து உள்ளனர்.
கல்வி, ஒழுக்கம், தொழில்நுட்பம், சமூக சிந்தனை, வரலாறு போன்ற வற்றை, மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலான புத்தகங்கள் மட்டும், இந்த கண்காட்சியில் அனுமதிக்கப்படும்.
மாணவர்களின் எதிர்காலத்துக்கும், ஒழுக்கத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் எந்த புத்தகங்களையும், கண்காட்சியில் வைக்க முடியாது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெட்' தேர்வு: 7 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: நாடு முழுவதும், உதவி பேராசிரியர் பணிக்கு நடந்த தகுதி தேர்வில், ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகள், பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, நேற்று நாடு முழுவதும், 91 நகரங்களில் உள்ள, 1,700 மையங்களில் நடந்தது.
இதில், ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர். மொத்தம், 84 பாடங்களுக்கு, இரண்டு தாள்களாக தேர்வு நடந்தது. தேர்வு பணிகளில், ௨,௦௯௧ கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். இத்தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தியது.

தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு, 'டியூஷன்' : 'ஆன்லைன்' வகுப்பில் பங்கேற்க பயிற்சி

மத்திய அரசின், 'ஆன்லைன்' படிப்பில் சேர்ந்த, ௨௫ ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை வழியாக, 'டியூஷன்' என்ற, சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், 'பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் எடுக்காதோர் மற்றும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாதோர்.
'மேலும், மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசிய திறந்தவெளி பள்ளியில், இரண்டு ஆண்டு டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற்றால், பணியில் நீடிக்கலாம்' என, சலுகை வழங்கப்பட்டு உள்ளது.
'இச்சலுகையை பயன்படுத்தி, படிப்பை முடிக்காவிட்டால், 2019 மார்ச்சுக்கு பின், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவர்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்புக்கு, அக்டோபரில், 'ஆன் - லைன்' பதிவு நடந்தது. இதில், நாடு முழுவதும், 15 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் இருந்து மட்டும், 2௫ ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அப்படி விண்ணப்பித்தோர், மத்திய அரசின், 'ஸ்வயம்' அமைப்பின், https://swayam.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து, புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய, உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல், ஆன்லைனில் நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்கவும், ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழகம் முழுவதும், ௩௦ இடங்களில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனம் வழியாக, இரண்டு நாட்களாக டியூஷன் என்ற சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது எப்படி, இந்த படிப்புக்கான பாடங்கள் எவை என, தமிழக பள்ளிக்கல்வி அதிகாரி கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

மழைக்கால விடுமுறை நிறைவு : பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

மழைக்கால தொடர் விடுமுறை முடிந்து, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் இன்று, இடை தேர்வுகள் துவங்குகின்றன. தமிழகம் முழுவதும், வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன், பாடங்களை விரைந்து முடிக்க, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். 

சென்ற வாரம் திங்களன்று மட்டுமே, பள்ளிகள் செயல்பட்டன. வடகிழக்கு பருவ மழையின் ஆக்ரோஷத்தால், அக்., ௩௦, செவ்வாய் முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளில், தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது, கனமழை குறைந்து விட்ட நிலையில், இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவர்கள் வரமுடியாத அளவுக்கு, வெள்ளப்பெருக்கு உள்ள பகுதி பள்ளிகளும், வளாகத்தில் தண்ணீர் தேங்கிய பள்ளிகள் மட்டுமே இன்று இயங்காது.
இதை, அந்தந்த தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ள, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இன்று பள்ளிகள் துவங்கும் போது, பெரும்பாலான தனியார் பள்ளிகளில், இடைத்தேர்வு என்ற, 'மிட் டேம்' தேர்வும் துவங்குகிறது. அதேநேரத்தில், மழை பாதித்த பகுதிகளில், பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை, உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் அகற்றி, நிலைமையை சீர் செய்யவும், அதிகாரிகள் வலியுறுத்திஉள்ளனர்.

மழையால் தொடரும் விடுமுறை... தேர்வுகள் தள்ளிப்போகுமா? - பெற்றோர்கள் கவலை

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழையால் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.


வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இன்று மழையால் 10 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கடந்த செவ்வாய்கிழமை தொடங்கி தொடர்ச்சியாக இன்று 7வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வு நிலை

காற்றழுத்த தாழ்வுநிலையால் மேலும் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. சுகாதாரமான சூழல் நிலவினால் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

  

மாணவர்கள் ஜாலி- பெற்றோர்களுக்குக் கவலை

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதியே பள்ளிகளுக்கு மழை விடுமுறை விடப்படுகிறது என்றாலும் இரண்டாம் பருவம் மிகக் குறுகிய காலம் என்பதால் பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி முடிக்காவிட்டால் அரையாண்டுத் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்வது சிரமமாகிவிடும் என பெற்றோர்கள் குறிப்பாக பொதுத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 10, 11, 12 வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

  

தள்ளிப் போன அரையாண்டு

கடந்த 2015ஆம் ஆண்டு மழை வெள்ளம் காரணமாக 40 நாட்கள் வரை தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் டிசம்பர் மாதம் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டும் அதே போல தேர்வுகள் தள்ளிப்போகுமா என்ற கவலை பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. மழையால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் போலி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.” - கலை ஆசிரியர் நலச்சங்கம் வலியுறுத்தல்

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு - முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்ற பெயரில் தெரிவு செய்யப்படுவதில்லை - TRB விளக்கம்

ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து அமைத்த "ஸ்மார்ட் வகுப்பு" சப்-கலெக்டர் தொடங்கி வைத்தார்