- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
3/2/18
2/2/18
NHIS திட்டத்தில் தொடரும் குளறுபடியும், மருத்துவமனைகளின் பித்தலாட்டமும்
எதிர்த்து களமிறங்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாரம் TNPTF வட்டாரத் தலைவர் திரு.பிரிட்டோ அவர்கள் கடந்த 23.1.2018 அன்று எலும்பு முறிவிற்காக மதுரையில் புகழ் வாய்ந்த மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். சிவகங்கை மாவட்ட பொருளாளர் குமரேசன் அவர்கள் உடன் இருந்து அனைத்து உதவிகளையும் செய்தார். தனக்கு NHIS திட்டத்தில் சிகிச்சையளிக்க கோரியபொழுது முன் பணம் கட்ட வற்புறுத்திய மருத்துமனை நிர்வாகம் 50 ஆயிரம் செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது. வேற வழியில்லாமல் தன்னிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயை தோழர் செலுத்தியுள்ளார். இந்நிலையில் காப்பீட்டு நிறுவனம் தங்களுக்கு 23.1.2018 அன்று 32ஆயிரம் ரூபாய்தான் அனுமதித்துள்ளது, மேலும் சிகிச்சையளிக்க வேண்டுமானால் 40 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என மருத்துமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறுவதாக 31.1.2018 அன்று மருத்துமனை நிர்வாகம் எழுத்து பூர்வமான கடிதம் கோரியுள்ளது.
இது குறித்து மாவட்ட மையத்தை தோழர் பிரிட்டோ தொடர்பு கொண்டபொழுது நாம் இத்திட்டத்தினால் எழும் பிரச்சனைகளுக்காக மாநில மையத்தால் நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகனேஷ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இது குறித்து விரிவாக ஆலோசிக்க திருப்பரங்குன்றம் வட்டாரச் செயலாளர் திரு.ஸ்ரீனிவாசகன் மருத்துமனைக்கே நேரடியாக சென்று பிரிட்டோ அவர்களை சந்தித்து சில ஆலோசனைகளை வழங்கினார். அதன் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் அனுமதித்த தொகை சரிதானா என தகவல் சேகரித்தபொழுது 26.1.2018 அன்றே மருத்துமனையில் இருந்து விடுவிப்பு செய்யப்பட்டதாக பதிவு இருந்ததை கண்ட தோழர் பிரிட்டோ அதிர்ச்சிக்குள்ளானார். 26.1.2018 அன்று விடுவிப்பு செய்ததாக பதிவேற்றிவிட்டு 31.1.2018 அன்று சொந்த விருப்பத்தின் பேரிலேயே சிகிச்சை பெறுவதாக கடிதம் கோரிய மருத்துவமனையின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தோழர் பிரிட்டோ மாவட்ட மையம் மற்றும் தோழர் செல்வகனேஷ் அவர்களின் வழிகாட்டுதலின் படி தற்பொழுது மதுரை மாவட்ட சுகாதரத்துறை இணை இயக்குனர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் மருத்துமனையின் உள்நோக்கம் குறித்தும், தனக்கு முழுமையான பணத்தை விடுவிப்பு செய்வதோடு ஏற்கனவே மருத்துமனையில் செலுத்திய 20 ஆயிரத்தையும் மீட்டு தரவேண்டும் என மனு அளித்துள்ளார். மேலும் முழு தொகை விடுவிப்பு செய்யும் வரை மருத்துமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறவும் முடிவாற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட உரிமை மீட்பில் தொடர்ந்து உதவி வரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையத்திற்கும், விருதுநகர் மாவட்டப் பொருளாளர் திரு.செல்வகனேஷ் அவர்களுக்கும் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரச் செயலாளர் திரு.ஸ்ரீனிவாசகன் அவர்களுக்கும் சிவகங்கை மாவட்ட கிளை நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.
'பாதகம் செய்பவரை கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா – அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மட்டுமல்ல நாங்கள்
'நெஞ்சினை பிறந்தபோதும் நீதி கேட்க அஞ்சிடோம்
நேர்மையற்ற பேர்களின் கால்களை வணங்கிடோம்' என்ற வரிகளை நெஞ்சில் தாங்கும் சமரசமற்ற போராளி இயக்கமான தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அக்னி குஞ்சுகள் என்பதை அதிகார வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து இயக்க பணியில்
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மாவட்டம்

10ம் வகுப்புக்கு தேசிய கற்றல் அடைவுத்தேர்வு : பிப்., 5ல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது!!!
நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனை பரிசோதிக்க, தேசிய
கற்றல்அடைவுத்தேர்வு, வரும் 5ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து, 2,560 பள்ளிகளை
சேர்ந்த மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்கின்றனர்
.
மாநில வாரியாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், மாநில வாரியாக, மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்க, அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இத்தேர்வு நடத்தப்படுகிறது. 2015க்கு பின், வரும் 5ம் தேதி, தேசிய கற்றல் அடைவுத்தேர்வு, அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது. மாநில வாரியாக, ஒரு மாவட்டத்துக்கு, தலா, 80 பள்ளிகளில் இருந்து, அதிகபட்சம், 45 மாணவர்கள் மட்டுமே, இத்தேர்வை எழுதுகின்றனர். அனைத்து பாடங்களுக்கும், 'ரேண்டம்' முறையில், மாணவர்களை தேர்ந்தெடுத்து, மூன்று வகையான வினாத்தாள் வினியோகிக்கப்படும். ஒரு பாடத்தில் இருந்து, தலா 60 கேள்விகள் இடம்பெறும்.
குறைவான மதிப்பெண் இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாநிலத்தின் கல்வி குறியீடு தரவரிசைப்படுத்தப்படும். இதில், அந்தந்த மாநில பாடத்திட்டத்தின் படி, ஒவ்வொரு பாடத்தில் இருந்தும், 'அப்ஜெக்டிவ்' முறையில், 60 கேள்விகள் இடம்பெறும். ஓ.எம்.ஆர்., ஷீட்டில், விடைக்குறிப்புகள் அடையாளப்படுத்த வேண்டும். ஒரு மாணவன், ஒரு பாட வினாத்தாளுக்கு மட்டுமே விடையளிக்க முடியும். தமிழகத்தை பொறுத்தமட்டில், 2015ல், மாணவர்கள் சராசரியை விட, குறை வான மதிப்பெண் பெற்று இருந்தது தெரியவந்துள்ளது.
மொழிப்பாடங்களில் சராசரியாக, 500க்கு 225 மதிப்பெண் மட்டுமே, மாணவர்கள் பெற்று இருந்தனர். கணிதத்தில், 226; அறிவியலில், 229 மற்றும் சமூக அறிவியலில், 500க்கு, 215 மதிப்பெண், சராசரியாக பெற்றிருந்தனர்.

எந்த வங்கியிலும் ஆதாரை பதிய வசதி!!!
'வங்கிகளில் செயல்படும், ஆதார் மையங்களில், வேறு வங்கி வாடிக்கையாளர்கள்,
வங்கிக் கணக்கே இல்லாத பொதுமக்களும், ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை செய்யலாம்.
ஆதார் எண்ணை, வங்கிக் கணக்கு, மொபைல் போன், பான் கார்டு போன்றவற்றுடன் இணைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், ஆதார் பதிவு மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்டத்தை சமாளிப்பதற்காக, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலும், ஆதார் பதிவு மையங்களை துவக்க, மத்திய அரசு, நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, வங்கிக் கணக்குடன், ஆதார் இணைப்பது கட்டாயம் ஆகியுள்ளதால், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், தங்களின், 10 கிளைகளுக்கு, ஒரு கிளை வீதம், ஆதார் பதிவு மையங்களை அமைத்துள்ளன. ஆனால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு, எந்த கிளையில், ஆதார் மையம் செயல்படுகிறது என, தெரியாத நிலை உள்ளது. இதை, மக்கள் எளிதில் கண்டறியும் வசதியை, ஆதார் பதிவை மேற்கொள்ளும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனும், தனித்துவ அடையாள எண் மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது. இதன்படி, //appointments.uidai.gov.in/easearch.aspx என்ற வலைதள முகவரியை, 'டைப்' செய்தால், ஒரு திரை தோன்றும். அதில், எந்த மாநிலம், மாவட்டம், ஊர் போன்ற விபரங்களை குறிப்பிட்டதும், எந்த வங்கிக் கிளையில் ஆதார் மையம் செயல்படுகிறது, யாரை தொடர்பு கொள்வது என்பது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், பதிவு மையம் அமைந்துள்ள வங்கியில், கணக்கு வைத்திருக்காதவர்களும், வங்கிக் கணக்கே இல்லாதவர்களும் கூட, எந்த வங்கிக் கிளையிலும், ஆதார் விபரங்களை பதிவு செய்யலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியரை ஒழுக்க குறைவாக பேசக்கூடாது' : ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை!!!
மாணவ - மாணவியரை ஒழுக்க குறைவாக பேசினால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புகார் :
பள்ளி, கல்லுாரிகளில் குருகுல கல்வி முறை காலம் மாறி, குருவையே மாணவர்கள் மிஞ்சும் அளவுக்கு, கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.பள்ளிகளில் பாடம் நடத்தும் முறை, மாணவர்களிடம் பழகும் தன்மை ஆகியவையும் மாறியுள்ளது. மாணவர்களை பிரம்பால் அடிப்பது, கடுமையான வார்த்தைகளால் பேசுவது போன்றவற்றுக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது. நண்பர்களாக பழகி, மாணவர்களை நல்வழிப்படுத்துமாறு, கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், அரசு பள்ளிகள் சிலவற்றில், ஆசிரியர்களே, மாணவர்களிடத்தில் கோஷ்டியை உருவாக்கி, தவறாக வழிநடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தங்களுக்கு வேண்டாத பெற்றோரின் பிள்ளைகள், தங்களுக்கு பணிவிடை செய்யாத மாணவ - மாணவியரை, குறிப்பிட்ட மாணவர்களுடன் இணைத்து, ஒழுக்க குறைவாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. சென்னை, கோடம்பாக்கம், பதிப்பகச் செம்மல் கணபதி அரசு மேல்நிலை பள்ளியில், பட்டதாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர், மாணவ - மாணவியர் சிலரை தவறாக பேசி, அடித்துள்ளனர்.
நடவடிக்கை :
தேர்வுகளில், அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட, இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். மனதளவில் பாதிக்கப்பட்ட சில மாணவியர், தேர்வு துவங்க உள்ள நிலையில், பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளனர். இதுகுறித்து, பெற்றோர், சில தினங்களுக்கு முன், பள்ளியில் முற்றுகையிட்டு, ஆசிரியர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய ஆசிரியர்கள் சிலர், தரக்குறைவாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது.இதையடுத்து, ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
'மாணவர்கள், இளம் வயதினர் என்பதால், அவர்களை பக்குவமாக கையாண்டு, திருத்த வேண்டும். அதை செய்ய முடியாத ஆசிரியர்கள், பாடம் நடத்தி விட்டு, பெற்றோருக்கோ, தலைமை ஆசிரியரிடமோ, மாணவர்களின் நடத்தை குறித்து தகவல் அளிக்கலாம். 'மாறாக, மாணவ - மாணவியரை கிண்டல் செய்வது, அவர்களின் மனம் புண்படும்படி, தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. 'மீறினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளனர்.

தொழிற்கல்விக்கான உதவி ரூ.50 ஆயிரமாக உயர்வு!!!
தொழிற்கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி
உதவித்தொகை, 25 ஆயிரம்ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசாணை : தொழிற்கல்வி கற்கும்ஏழை மாணவர்கள், தங்கள் படிப்பை தொடர, முதல்வர் பொது நிவாரணநிதியிலிருந்து, நிதியுதவிவழங்கும் திட்டம், 2003ல், துவக்கப்பட்டது. இதன்படி, ஆண்டு தோறும், 100 மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் காலத்தில், ஒரு முறை மட்டும், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. பின், இந்த எண்ணிக்கை, 200 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின், பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு, 2015 - 16ல், 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம்ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வு : முதல் பட்டதாரி சலுகை பெற்றிருந்தும், தொழிற்கல்வி படிக்க முடியாமல், மிகவும் வறிய நிலையில் உள்ளோரும், தொழிற்கல்வி உதவித்தொகை பெறலாம். இந்த உதவித்தொகை, மாவட்ட கலெக்டரால் பரிந்துரைக்கப்பட்டு, சிறப்பினமாக கருதப்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, வழங்கப்படும்.

இன்ஜி., படிப்புக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங் உறுதி : பெட்டி, படுக்கையுடன் சென்னைக்கு வரவேண்டாம்!!!
இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும்'
என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இனி, மாணவர்களும், பெற்றோரும், பெட்டி, படுக்கையுடன், சென்னைக்கு வர தேவையில்லை.
அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், தமிழக அரசின் சார்பில், பொது கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒற்றை சாளர முறையில் நடக்கும் இந்த கவுன்சிலிங்கில், மாணவர்களின் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இதற்காக, சென்னையில் அண்ணா பல்கலை வளாகத்தில், கவுன்சிலிங் மையம் அமைக்கப்பட்டு, மாணவியர், அவர்களின் பெற்றோர் தங்குவதற்கு, இலவச விடுதி வசதி செய்யப்படும். மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் ஒரு நபருக்கு, அரசு பஸ்சில் சென்னைக்கு வர, இலவச கட்டண சலுகை தரப்படும்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைனுக்கு மாற்றப்படுகிறது. இதை, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன், நேற்று உறுதி செய்தார். இதற்கான ஏற்பாடுகள், முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவர் கூறினார்.
அண்ணா பல்கலையின் கணினி அறிவியல் துறை தலைவரும், ராமானுஜன் கணினி மைய இயக்குனருமான, பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், கவுன்சிலிங் கமிட்டி உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில், கவுன்சிலிங் பணிகள் நடந்து வருகின்றன. ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களின் வசதிக்காக, 32 மாவட்டங்களிலும், கவுன்சிலிங் உதவி கணினி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த மையங்களில், கணினியுடன், உயர்தர இணையதள வசதி செய்யப்பட்டிருக்கும். மாணவர்கள் அங்கு சென்று, சேர்க்கையில் பங்கேற்கலாம். மேலும், வீட்டில் இணையதளத்துடன் கூடிய, கணினி வசதியுள்ள மாணவர்கள், வீட்டில் இருந்தவாறே கல்லுாரியையும், பாட பிரிவையும் தேர்வு செய்யலாம்.
கவுன்சிலிங் மையத்தில், தனியார் கல்லுாரி தரகர்கள் முகாமிட்டு, மாணவர்களை தங்கள் கல்லுாரிகளில் சேர வைக்கும் பிரச்னைகளுக்கு, இனி இடம் இருக்காது. கவுன்சிலிங்கிற்காக, அண்ணா பல்கலையில் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளுக்கான செலவுகளும் குறையும் என, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FLASH:2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்
*விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும்
வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது*
*விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டம் மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கும் விரிவாக்கம்*
*விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் மீனவர்களுக்கும் வழங்கப்படும்*
*மூங்கில் பயிரிடுவோருக்கும் மத்திய அரசின் உதவிகள் நீட்டிக்கப்படும்*
*ஆபரேசன் க்ரீன் என்ற பசுமையாக்கும் திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு*
*இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை*
*விவசாயிகள் உற்பத்தி செலவில் 1.5 மடங்கு லாபம் ஈட்ட நடவடிக்கை*
*விவசாயிகளின் விளை பொருட்களுக்கான விலையை 150 விழுக்காடு உயர்த்த திட்டம்*
*உணவு பதப்படுத்தல் துறைக்கான முதலீடு 2 மடங்காக்கப்பட்டுள்ளது*
*இந்தியா முழுவதும் 42 ஹைடெக் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்*
*பட்ஜெட் இதுவரை: இதுவரை அருண் ஜேட்லி சமர்பித்த பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம்*
*விவசாயிகள் தங்கள் செலவை விட 1.5 மடங்கு அதிகமாக பணம் ஈட்ட வகை செய்துள்ளோம்*
*விவசாயிகளுக்கு ''அச்சே தின்'' வந்து கொண்டுள்ளது*
*விவசாயத்துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும்*
*உணவு தானிய உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது*

*மாநில அரசுகளுடன் இணைந்து கல்வியின் தரம் உயர்த்த நடவடிக்கை*
*விளை பொருட்களுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது*
*2020ல் விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக்குவோம்*

*இந்தியாவின் நேரடி வரிவிதிப்பு முறை உலகளவில் பேசப்படுகிறது*
*உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று*
*2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாய் 2 மடங்காக உயரும்*
*- அருண் ஜெட்லி*

மாற்றுத்திறனாளி, கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம்: அருண் ஜெட்லி உரை!!!
டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர்
அருண் ஜெட்லி, மாற்றுத்திறனாளிகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். வருங்கால வைப்பு நிதிக்கு பணியில் சேர்ந்த முதல் 3 ஆண்டுகளில் பெண்கள் 8% செலுத்தினால் போதும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.*

FLASH NEWS:வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை!!!
தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை; வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50
லட்சமாக தொடரும்-
* கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செஸ் வரி 4% அதிகரிப்பு- நிதியமைச்சர் அருண் ஜெட்லி*
பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 3% ஆக குறைப்பு: அருண் ஜெட்லி
டெல்லி : இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர்
அருண் ஜெட்லி, பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 8%ல் இருந்து 3% ஆக குறைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் புதிய ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் 12 சதவீதத்தை (பி.எப்) அரசே வழங்கும் என்று கூறினார்.

SSTA BREAKING NEWS: 2018-2019 மத்தியரசு பட்ஜெட்டின் முக்கியம்சங்கள்!!!
பாஜக அரசின் 5-வது முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வாங்கினார். அருண் ஜெட்லி இந்தியில் பேசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சுதந்திர இந்தியாவில் இந்தியில் பேசி பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் எந்த நிதி அமைச்சரும் இந்தியில் தாக்கல் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:-
* நிர்வாக சீர் திருத்தத்தால் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது.
* கூடுதல் மூலதனத்தால் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் உயர்வு.
*4 வது காலாண்டில் வளர்ச்சி 7.2%-ல் இருந்து 7.4% ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*உலகப்பொருளாதாரத்தில் 7 வது இடத்தில் இருந்து 5 வது இடத்துக்கு இந்தியா முன்னேறும் என்று அருண் ஜெட்லி கூறினார்.
*2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாயை 2 மடங்காக உயர்த்த செயல் திட்டம்
* ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும்.
*கிராமங்கள் வேளாண் சந்தைகளை இணைக்கும் சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
*இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.
* வேளாண் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த ரூ.1400 கோடி ஒதுக்கப்படும்.
*கல்வி தரத்தை உயர்த்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை
*பயிர் கடனுக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கபப்ட்டுள்ளது.
மீன்வள மேம்பாடு கால்நடை பெருக்க திட்டத்துக்கு ரூ.10000 கோடி ஒதுக்கீடு.
*மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
*8 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
*கிராமப்புறங்களில் கூடுதலாக 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்
* தேசிய வாழ்வாதாரத் திட்டத்துக்கு ரூ.5750 கோடி ஒதுக்கீடு.
* குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தனி நிதியம் அமைக்கப்படும்
*இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* இலவச நோய் பரிசோதனை மையம் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு
* மூங்கில் வளர்ப்பு திட்ட விரிவாக்கத்துக்கு ரூ.1200 கோடி ஒதுக்கீடு.
*குடும்பம் ஒன்றிக்கு ரூ.5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை செலவை அரசு ஏற்கும்
*10 கோடி ஏழை குடும்பங்களுக்கு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* புதிதாக 24 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.
* புதிதாக 1.5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்
* டெல்லியில் கற்று மாசை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம் உருவாக்கப்படும்.
* மாவட்ட மருத்துமனைகள், மருத்துவ கல்லூரிகளாக மேம்படுத்தப்படும்.
* தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்கு ரூ.56 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
*நடுத்தர, சிறு, குறுந்தொழில்களுக்கு தொழில் கடன் வழங்கும் முறை மேம்படுத்தப்படும்.
*சிறு தொழில்கள் செலுத்த வேண்டிய வங்கி கடன்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*4 கோடி ஏழை வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.16,000 கோடி செலவிடப்படும்.
*முழுமையான சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.9975 கோடி ஒதுக்கீடு.
*70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* 600 பெரிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்
*அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

* ரயில்வே துறையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும்.
* அனைத்து ரயில்களிலும் வைஃபை, கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
* 124 விமான நிலையகங்ளில் கூடுதல் பயணிகளை கையாள திட்டம்.
* ரயிலில் பயணிகள் பாதுக்காப்பு அதிகரிக்கப்படும்.
* ரயில்வே துறையில் ரூ.1,48,528 கோடி முதலீடு செய்யப்படும்.
*4000 கிமீ நீளத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.
*5160 ரயில் பெட்டிகள் வாங்கப்படும்.
*3600 கிமீ இரும்பு பாதை புதுப்பிக்கப்படும்.
*பெரம்பூரில் நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்க புதிய ஆலை தொடங்கப்படும்.
* அதிவேக ரயில்களை இயக்க குஜராத்தில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
* குடியரசு தலைவரின் ஊதியம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
* துணை குடியரசுத்தலைவரின் ஊதியம் ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.
*ஆளுநர் ஊதியம் ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்படும்.
* காந்தியின் கொள்கைகளை பிரச்சாரம் செய்ய ரூ.150 கோடி ஒதுக்கீடு.
* பயணிகள் விமானத்தின் சேவைகள் 5 மடங்கு உயர்த்தப்படும்.
* பயன்பாட்டில் இல்லாத 31 ஹெலிபேடுகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்
மீண்டும் வந்தது நிலையான கழிவு.. மாத சம்பளம் பெறுவோருக்கு பட்ஜெட்டில் கிடைத்தது இந்த ஒரே சலுகைதான்!
டெல்லி: மாத சம்பளம் பெறுவோருக்கு பெரும் வருமான வரி சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்த
நிலையில், ஒரே ஒரு சிறு சலுகை மட்டுமே பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதுதான் நிலையான கழிவு என்ற திட்டம்.
நிலையான கழிவு (Standard deduction) என்பது புதிய நடைமுறை கிடையாது. ஏற்கனவே அமலில் இருந்த ஒன்றுதான். 2006-07ம் நிதியாண்டு முதல்தான் இந்த நடைமுறை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தால் நீக்கப்பட்டது.
மீண்டும், நிலையான கழிவு திட்டம் மீண்டு(ம்) வந்துள்ளது.
நீக்கப்பட்டது
முந்தைய நடைமுறைப்படி மொத்த வருவாயில் அதிகபட்சம் ரூ.30,000 என்பது நிலையான கழிவாக வழங்கப்பட்டது. அதற்கு வருமான வரி கணக்கு காட்ட வேண்டிய தேவை இல்லை. இன்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள அறிவிப்புபடி, ரூ.40,000 நிலையான கழிவாக வழங்கப்பட்டுள்ளது.
ரூ.40,000 கிடைக்கும்
ஒரு தனி நபரின் சம்பளம் உள்ளிட்ட மொத்த வருவாயில் இருந்து இந்த ரூ.40,000 தொகையை கழித்துக்கொண்டு எஞ்சிய தொகைக்கு வரி செலுத்தினால் போதும். இது குறிப்பாக, மாத சம்பளதாரர்களுக்கு நன்மையளிக்க கூடியது. உதாரணத்திற்கு ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.2.80 லட்சம் என்றால், நிலையான கழிவு தொகை ரூ.40,000த்தை கழித்துவிட்டால் அவரது வருமானம் ரூ.2.40 லட்சம் என்ற அளவுக்கு குறைந்துவிடும். அவர் வரியே செலுத்த வேண்டிய தேவை இருக்காது.
இன்னொரு உதாரணம். ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.5.30 லட்சம் என்றால், இப்போதுள்ள வரி கட்டமைப்புபடி, அவர் 20 சதவீத வருமான வரி கட்ட வேண்டியுள்ளது. ஆனால், நிலையான கழிவு தொகை ரூ.40,000த்தை தனது மொத்த வருமானத்தில் இருந்து குறைத்துவிட்டால், அவரது ஆண்டு வருமானம் ரூ.4.90 லட்சமாக குறையும். அப்போது அவர் 5 சதவீத வருமான வரி கட்டும் பிரிவுக்குள் வந்துவிடுவார். அதுவும் அவருக்கு லாபம் தரும்.
மெடிக்கல் செலவு ஆதாரம்
2006ம் ஆண்டுவரை, நிலையான கழிவு தொகைக்கு ஆதாரம் (ப்ரூப்) காட்ட வேண்டிய தேவையில்லை. ஆனால் இப்போது மெடிக்கல் செலவீனத்திற்கான ஆதாரம் அல்லது போக்குவரத்து செலவீன ஆதாரம் காட்ட வேண்டும். உதாரணத்திற்கு, ரூ.40,000த்திற்கான மெடிக்கல் பில் தொகையை காண்பித்து இந்த சலுகையை அனுபவித்துக் கொள்ளலாம்.
வரி கட்டமைப்பில் மாற்றம் இல்லை
மத்திய அரசு பட்ஜெட்டில் மாத வருவாய் பிரிவினருக்கு கிடைத்த ஒரே சலுகை இதுதான். மற்றபடி வருமான வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரூ.2.50 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் பிரிவினருக்கு வரி கிடையாது என்பதும், ரூ.2.50 லட்சம் முதல், ரூ.5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு 5 சதவீதம் வரி, ரூ.5-10 லட்சம் வரையிலான பிரிவினருக்கு 20 சதவீத வரி, ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட வருவாய் பிரிவினருக்கு 30 சதவீத வரி என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

TAX - RTI : பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை.!!!
பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு வருமான வரி
கணக்கிட்டு பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என சான்றிதழ் வைத்தால் போதும்.
வருமானவரி கணக்கீட்டுத் தாள் மற்றும் பிடித்தம் செய்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவை Tax இருந்தால் 3 நகல்கள், Tax இல்லாவிடில் 2 நகல்கள் எல்லாம் வைக்க வேண்டிய தேவையில்லை.
அதில் குறை இதில் குறை என்று கருவூல அலுவலர்கள் குற்றம் கண்டறிவதும் பில் ஆடிட் போடுவது அதை சரிசெய்ய முயற்சிப்பது கவனிப்பது போன்றவற்றிற்கு இவ்வாண்டு முடிவுக்கு வந்துவிட்டது.
தமிழ்நாடு நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர். வருமான வரியைப் பொறுத்தவரை
சென்ற ஆண்டு 80CCD(1B)ல் கூடுதலாக 50000 Cpsல் கழித்துக் கொள்ள தெளிவுரை பெற்றுத் தந்தது.
அதே போல் இவ்வாண்டு கருவூலத்திற்கு Tax form தேவையில்லை தலைமையாசிரியர் சான்று அளித்தாலே போதும் என்ற தெளிவுரை பெற்றுள்ளது.

1/2/18
பள்ளி கல்வியின் திட்டங்களுக்கு ரூபாய் 4,000 கோடி நிதி பெற முடிவு
பள்ளிக்கல்வி தரத்தை உயர்த்தும் வகையிலான, கவர்ச்சி திட்டங்கள் உள்ளதால், பட்ஜெட்டில் கூடுதலாக, 4,000 கோடி ரூபாய் கேட்டு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, அமைச்சர் செங்கோட்டையன் தீவிரப்படுத்தி உள்ளார். புதிய பாடத்திட்டப்படி, தரமான புத்தகங்கள் தயாரிப்பது, சி.பி.எஸ்.இ.,க்கு இணையான பாடத்திட்ட அம்சங்களை, புத்தகங்களில் இடம் பெற செய்வது போன்ற, பணிகள் நடந்து வருகின்றன.
பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவது; புதிய கல்வி ஆண்டில் அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் என்ன என்பது குறித்தும், நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று, துறையின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.
முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், ராமேஸ்வர முருகன் உட்பட, பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆன்லைனில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் முறையை, ஆன்லைனுக்கு மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டத்துக்கு, மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெறுதல், பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டத்தை விரிவுபடுத்துவது என, பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
ஏற்கனவே, 26 ஆயிரம் கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிலையில், பாடத்திட்ட மாற்றம் உட்பட, புதிய திட்டங்கள் உள்ளதால், 30 ஆயிரம் கோடி வரை, நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)