யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/2/18

மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் போராட்டம் அறிவிப்பு!

                                                 

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததைத் 
தொடர்ந்து வரும் பிப்ரவரி 16ஆம் தேதி, மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மின்வாரிய ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு 2015ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வும், நிலுவைத் தொகையும் இதுவரை வழங்கப்படாத நிலை உள்ளது. இதையடுத்து, மின்வாரியத் தொழிற்சங்கங்கள் கடந்த 23ஆம் தேதியன்று வேலைநிறுத்தம் அறிவித்திருந்தன. வேலைநிறுத்த அறிவிப்பு வெளியானதும் உடனடி நடவடிக்கையாகக் கடந்த மாதம் 22ஆம் தேதி அன்று தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மின்வாரிய உயர் அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது வரும் 12ஆம் தேதி ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் காணப்படும் என்று முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல், மின்சார வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, வரும் 16ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்ய 10 சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகாரிகள், ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரிவித்த ஊழியர்கள் திட்டமிட்டபடி 16ஆம் தேதி வேலைநிறுத்தம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நீட்' தேர்வுக்கு புதிய விதிகள் அறிவிப்பு; தனித்தேர்வர், தொலைநிலை படித்தவருக்கு தடை!!!

                                              
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு விதிகள் திருத்தப்பட்டுள்ளன. தனித்
தேர்வர்கள், தொலைநிலை படித்தவர்கள், நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகள், மீண்டும் திருத்தப்பட்டுள்ளன. அவற்றில், நீட் தேர்வு குறித்த, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 'இவை, இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறைகள் - 2017 என்ற பெயரில் அழைக்கப்படும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த விதிகள், நீட் தேர்வை நடத்தும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, தேர்வை நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய விதிகள் வருமாறு:

● பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்ட விதிகளின்படி, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

● இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேரும் ஆண்டின், டிச., 31ல், 17 வயது நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வு நடக்கும் நாளில், 25 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க கூடாது. இதில், பொது பிரிவு தவிர, மற்ற இனத்தவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு, அதிகபட்ச வயதில், ஐந்து ஆண்டுகள் கூடுதல் சலுகை வழங்கப்படும்

● பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1, பிளஸ் 2 என, பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் தொலைநிலை கல்வியான, திறந்தநிலை பள்ளியில் படித்தவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத தனித்தேர்வர்கள், நீட் தேர்வு எழுதஅனுமதிக்கப்பட மாட்டார்கள்

● இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' பாடப்பிரிவுகளில் படித்திருத்த வேண்டும். பிளஸ் 2வில் வேறு பிரிவுகளில் படித்து, உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகளை கூடுதலாக எடுத்திருந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது

● பொது பிரிவு மாணவர்கள், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் ஆகிய பாடங்களில், பிளஸ் 2 தேர்வில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர், குறைந்தபட்சம், 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். மாற்று திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத இடங்கள் தனியாக ஒதுக்கப்படும்.இவ்வாறு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமலர் நாளிதழின் ஆசிரியர்களை கேவலமாக நடத்தும் போக்கை கண்டித்து நாளிதழ்களை எரிக்கும் ஆசிரியர்கள்

                                              
                                             
மேலும் தெரிந்தவர்களிடமும் அண்டை அயலாரிடமும் பேசி இது போன்ற ஆசிரியர் விரோத நாளிதழை புறக்கணிக்க ஆசிரியர்கள் வேண்டுகோள்*

 *அனைத்துப் பள்ளிகளிலும் இதனை  வாங்குவதை நிறுத்த ஆசிரியர்கள் கோரிக்கை*

FLASH NEWS:TN SCHOOL EDUCATION-மாணவர் தினசரி வருகை மற்றும் மாதாந்திர அறிக்கை Android Mobile Appல் வருகிறது,...

                                          
                                                                                                                                                                                                                                                                                                                                                                                   
 CLICK HERE PLAY STORE LINK FOR APPS DOWNLOAD

வெளியானது நீட் தேர்வுக்கான தேதி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

                                             


மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு வரும்
மே 6 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், தேசிய அளவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளதோடு விலக்கு அளிக்க முடியாது என வெளிப்படையாக தெரிவித்தும் விட்டது.

இதையடுத்து கடந்த முறையை போல தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மாணவர்களுக்கு அரசு சார்பில் நீட் தேர்விற்கு பயிற்சியளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வரும் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ ஏற்கனவே அறிவித்திருந்தது.

நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும். அதேபோல் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் நீட் தேர்வு வினாத்தாள் கொடுக்கப்படும். நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 180 கேள்விகள் மட்டுமே இடம்பெறும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வரும் மே 6 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீட் தேவுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆன் லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மேலும் வரும் மார்ச் 9 ஆம் தேதியே கடைசி நாள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

High school Hm Incharge Additional Allowance. .... Karur DEO proceedings. ..

பி.எட்.மாணவர் சேர்க்கைக்கு "நுழைவுத் தேர்வுமுறை" ரத்து!!!

வீடு வீடாக சென்று பெற்றோர்களை கெஞ்சும் தலைமை ஆசிரியர்!!!

அரசு ஆணை எண்.307. நாள்.13.10.2017ன் படி மாற்றுதிறனாளிக்குரிய ஊர்தி படி ரூபாய்.2500.தான். சில கருவூலங்களில் ரூபாய்.2000 என கூறி அரசு ஆணையினை மறுக்கும் செயல் தவறு. RTI தகவல்.



முடங்கியது சி.பி.எஸ்.இ. இணையதளம்!!!

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு 
தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.*

*தேர்வுக்காக இன்று(பிப்.,8) முதல் மார்ச் 9 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.*

*விண்ணப்ப கட்டணம், பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 1,400 ரூபாய் எனவும், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 750 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு கட்டணத்தை செலுத்த கடைசி நாள் மார்ச் 10. இந்நிலையில் நீட் நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கூறிய சில மணி நேரங்களில் சி.பி.எஸ்.இ., இணையதளம் முடங்கியது.*

7/2/18

ஊதிய முரண்பாடு களையப்படவில்லை' - போராட்டத்தை அறிவித்தது இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்

ஆசிரியர்கள் தங்கள் ஊதிய உயர்வு குறித்துப் போராட்டங்கள் நடத்தும்போது, 'இந்த வாத்தியாருகளுக்கெல்லாம் என்ன கேடு. வருசத்துல பாதிநாள்தான் வேலை.

  கை நிறைய சம்பளம். அதையும் வாத்தியார்கள் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறாங்க" என்றெல்லாம் பொதுப்புத்தி மக்களின் மனதில் ஊடுறுவிக்கிடக்கிறது.
ஆனால், இடைநிலை ஆசிரியர்களின் புலம்பலும் வேதனையும் வேறுமாதிரியாக இருக்கின்றன. இடைநிலை ஆசிரியர்கள் என்பவர்கள், 1-ம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்கள். இப்படி வேலை செய்யும் இந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது என்று இவர்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். அதுபற்றிய விவரங்களை இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) என்ற அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் நம்மிடம் விவரித்தார்.
"2009-க்குப் பிறகு, நியமனம் செய்யப்பட்ட 21,000 இடைநிலை ஆசிரியர்கள் இருக்கிறோம். எங்களில் 1.6.2009-க்கு முன் வேலையில் சேர்ந்தவர்களுக்கு அடிப்படை ஊதியம் 11,170 என்றும் 1.6.2009-க்குப் பின்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,000 என அடிப்படை ஊதியத்தில் 3,170-ஐ குறைத்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரே பதவி, ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி இருந்தும் இருவேறுபட்ட அடிப்படை ஊதியங்களை இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வருகிறோம். இந்த ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் ஆரம்பித்து இந்த வருடம் ஜனவரி

மாதம் வரை பல்வேறு போராட்டங்களைச் சென்னையிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்திவிட்டோம். அரசும் எங்களை அழைத்து 8 நாள்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. முடிவில், 2009-க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்ய பரிந்துரைக்கப்படும் என எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்தது.
ஆனால், இன்றுவரை உத்தரவாதத்தை நிறைவேற்றாமல் 8 ஆண்டுகளாகத் தொடர்ந்த அதே ஊதிய முரண்பாடுகளை இந்த ஊதியக் குழுவிலும் தொடர்ந்துள்ளது. இதனால் ஒரு நாள் இடைவெளியில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு 12 ஆண்டுகள் வருடாந்தர ஊதிய வித்தியாசம் ஏற்படுகிறது. இந்தத்தொகை முரண்பாடு பல லட்சங்களைக்கொண்டதாக இருக்கிறது. தற்போது தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு துப்புரவுப் பணியாளர்கள் பெறும் ஊதியமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் ஊதிய முரண்பாட்டைக் களையவும் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டியும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கடந்த 6.1.2018 அன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தோம். ஆனாலும், அரசு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையவில்லை. இதனால், அடுத்தகட்டப் போராட்டங்களை நடத்துவதற்குத் தயாராகிவிட்டோம். வருகிற மார்ச் மாதம் துப்புரவு பணியாளர்கள் ஊதியத்தைப் போன்றே இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதை மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உணர்த்தும் வகையில் DPI வளாகத்தில் துப்புரவு செய்யும் போராட்டமும் இரண்டாம் கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் தலைமைச் செயலக முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம்" என்றார் ஜே.ராபர்ட்

நீட்' தொடர்பான தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திங்களன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எந்த மாற்றமம் இல்லை. இவ்வாண்டு 'நீட்' தேர்வில் அரசின் பயிற்சி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட வாரியாக பயிற்சி மையங்களில் தேர்வு செய்யப்படும் 2000 மாணவர்களுக்கு சென்னையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் மூலம் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களின் மதிப்பெண்களை வைத்து மதிப்பீடு செய்கிறோம்; மத்திய அரசின் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் மாணவர்களுக்கு மொபைல் ஆப் மூலம் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

இன்ஜி., முதல் பருவ தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு கணிதம், இயற்பியலில் 50 சதவீதம் பேர், 'அவுட்'

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் முதல் பருவ தேர்வில், கணிதம் மற்றும் இயற்பியலில், 50 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன.
அண்ணா பல்கலை இணைப்பு அந்தஸ்தில் உள்ள, 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் பி.ஆர்க்., கல்லுாரிகளில், தன்னாட்சி கல்லுாரிகள் தவிர, மற்ற கல்லுாரிகளில், அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அண்ணா பல்கலையின் வினாத்தாள்கள் கடினமாகவும், மாணவர்களின் சிந்தனை திறனை சோதிக்கும் வகையிலும் தயாரிக்கப்படுகின்றன. அதனால், அண்ணா பல்கலை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், எந்த போட்டி தேர்வையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.

இந்நிலையில், 2017ல், பிளஸ் 2 படிப்பை முடித்து, இன்ஜினியரிங் மற்றும் ஆர்கிடெக்ட் படிப்பில் சேர்ந்த மாணவர்கள், நவம்பரில் நடந்த முதல் பருவ தேர்வில் பங்கேற்றனர். அண்ணா பல்கலையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு நடந்த, முதல் தேர்வு இது.முதல் பருவதேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு முடிந்து, தேர்வு முடிவுகளை, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஜி.வி.உமா நேற்று அறிவித்தார்.



அண்ணா பல்கலையின் இணையதளம் மட்டு மின்றி, மாணவர்களின் மொபைல்போன் எண்களுக்கும் நேரடியாகவே, மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டன. பகல், 2:00 மணி முதல், 'ரிசல்ட்' வெளியிடப்பட்டது.இந்த தேர்வு முடிவில், கணிதத்தில், 43.67; இயற்பியலில், 52.77 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக, ஆங்கிலத்தில், 80.48 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடல்சார் இன்ஜி., வேதியியல் பாடத்தில், 71.59; பொது வேதியியலில், 59.08; சிக்கலான கணக்குகளை தீர்க்கும் வகையிலான, 'ப்ராப்ளம் சால்விங்' பிரிவில், 61.7; இன்ஜி., கிராபிக்ஸ், 63.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுஉள்ளனர். இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகளுக்கு உதவும், தொழில்நுட்ப ஆங்கிலத்தில், 55.68 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

கணிதம் மற்றும் இயற்பியலில், 50 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறாததால், அந்த பாடங்களில் மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க, இன்ஜி., கல்லுாரிகள் முடிவு செய்து உள்ளன.இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில், 'பிளஸ் 2வில், மனப்பாட முறையில் படித்து வந்த பல மாணவர்கள், கணிதம், இயற்பியலில் சிக்கலான கணக்குகளை தீர்க்க சிரமப்பட்டுள்ளனர்.'அவர்களுக்கான பயிற்சிகள் தொடர்கின்றன. இரண்டாவது பருவ தேர்வுகளில், இந்த நிலைமை மாறிவிடும்' என்றனர்.

தமிழ் வழியில் மதிப்பெண் குறைவு தமிழ் வழி மாணவர்கள், ஆங்கில வழி மாணவர்களை விட, குறைந்த தேர்ச்சி பெற்றுள்ளனர். வேதியியலில், 37.24; இன்ஜி., கிராபிக்ஸ், 62.46; 'ப்ராப்ளம் சால்விங்' 64.52; கணிதம், 26.39; இயற்பியல், 33.14 சதவீதம் பேர் தேர்ச்சியாகி உள்ளனர். 'ப்ராப்ளம் சால்விங்' பிரிவில், ஆங்கில வழி மாணவர்களை விட, தமிழ் வழியில், 2.82 சதவீதம் பேர் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மொபைல்போனில், 'ரிசல்ட்' வழக்கமாக இணையதளத்தில் மட்டுமே, அண்ணா பல்கலையின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முறை, மாணவர்களின் மொபைல்போன் எண்ணுக்கு, நேரடியாக மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டது. பெரும்பாலான மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோரின் மொபைல்போன் எண் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவர்களுக்கு பிள்ளைகளின் மதிப்பெண் தெரிய வந்தது. புதிய விதிகளின் படி, ஆங்கிலத்தில், 'ஓ' பிரிவு முதல் வகுப்பாக கருதப்படுகிறது. 'ஏ, ஏ பிளஸ், பி, பி பிளஸ்' ஆகிய தர வரிசை எண்களில் உள்ளவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள். அதற்கு குறைவான மாணவர்கள் தேர்வை, மீண்டும் எழுத வேண்டும்.

தமிழக அரசில் ஆய்வக உதவியாளர் பணி!!!

சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான். ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்'' என்றார்.
மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றான்.
''கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்'' என்றார்.

''கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான் மாணவன்.

''கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத்  தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார் சாக்ரடீஸ்.

''அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே...''

''ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்'' என்றார்.

''எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான்.

''மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்'' என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.

அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.

7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : எல்லை விரிவாக்க அரசாணை வெளியீடு!!!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை விரிவாக்க அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சில கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் அரக்கோணம், நெமிலி தாலுகாவில் உள்ள சில கிராமங்களும் சிஎம்டிஏ உடன் இணைக்கப்பட்டுள்ளது. தரமான உள்கட்டமைப்பு மற்றும் சீரான வளர்ச்சி ஆகியவற்றை இலக்காக கொண்டு சென்னை நகரத்தின் எல்லையில் விரிவாக்கப்படும் என்று சென்ற ஆண்டு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முன்னதாக சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படுவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, சென்னை மாவட்டம் இனி 122 வருவாய் கிராமங்கள், 16 வட்டங்கள், 3 கோட்டங்களுடன் சுமார் 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக இருக்கும். மேலும் தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட வடசென்னை கோட்டத்தில் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களும், அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மத்திய சென்னை கோட்டத்தில் அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களும், கிண்டியை தலைமையிடமாகக் கொண்ட தென்சென்னை கோட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


1974-ம் ஆண்டு சிஎம்டிஏ செயல்பட தொடங்கிய போது சென்னை பெருநகர எல்லை 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. 40 ஆண்டுகளாக சென்னை பெருநகர எல்லையில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது சென்னை பெருநகரத்துடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களும் அரக்கோணம் தாலுக்காவும் இணைக்கப்படவுள்ளன.

இதனால் சென்னையின் எல்லை 8,878 சதுர கிலோமீட்டராக பிரம்மாண்ட வடிவம் பெற இருக்கிறது. சென்னை பெருநகர விவரிவாக்கத்தின் முறையான திட்ட அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ம் ஆண்டில் சென்னையின் மக்கள் தொகை 1.30 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக பெருநகர விரிவாக்கம் பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய வல்லுநர் குழு தலைவராக ஸ்ரீதர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வல்லுநர் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சாந்தா ஷீலா நயார் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்க 26.02.2016 அன்று உத்தரவிடப்பட்டது. இந்த ஆணையின்படி குழு அமைக்கப்பட்டு பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. அதன்படி 26.06.2016, 15.09.2016, 16.09.2016, 22.09.2016, 6.10.2016, 2.12.2016 மற்றும் 9.03.2017 ஆகிய நாட்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டது.


இந்நிலையில் மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய 21.10.2016 அன்று ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைகளையும் பரிசீலித்து வல்லுநர் குழு அறிக்கை தயாரிக்க இருந்த நிலையில் சாந்தா ஷீலா நாயர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில் தமிழ்நாடு அரசு அமைத்த வல்லுநர் குழு தனது பணியினை தொடர்ந்து விரைவாக அறிக்கை சமர்பிக்க ஏதுவாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.தர் வல்லுநர் குழுவின் தலைவராக தமிழக அரசு நியமித்து 3ம் தேதி (நேற்று) உத்தரவிட்டுள்ளது. இந்த குழு, அரசு அலுவலர்களின் ஓய்வூதியம் குறித்த அறிக்கையை வருகிற நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் 140000மாணவர்கள் ஒரே ஆண்டில் அரசுப்பள்ளியை நோக்கி வந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் 140000மாணவர்கள் அரசுப்பள்ளிக்கு ஒரே ஆண்டில் அரசுப்பள்ளியை நோக்கி வந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் முதல் வகுப்பிலிருந்தே கணினி கல்வி மற்றும்  கணினி வழிக்கல்வி அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுவதால் புதிய மாணவர் சேர்க்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றது.
கல்வியில் கணினி அறிவியல் பாடம்.
இதற்காக, 8 - 10ம் வகுப்புமாணவர்களில், ஐ.டி., நெட்வொர்க் உருவாக்கப்பட்டு, அதில், ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். கேரள கல்வி கட்டமைப்புக்கான தொழில்நுட்பம் என்ற பெயரில், மாநில அரசின் சார்பில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், தொழில்நுட்ப கல்வி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.  இதற்காக , 30 ஆயிரம் மாணவர்களுக்கு, 'மொபைல் ஆப்' உருவாக்கம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, அவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் வகையில், 'ஹார்டுவேர், அனிமேஷன், சைபர் சேப்டி, எலக்ட்ரானிக்ஸ்' மற்றும் மலையாளம் கம்ப்யூட்டிங் உள்ளிட்டவை குறித்து, கற்றுக் கொடுக்கின்றனர்.

கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலம்.
2016-ம் ஆண்டுக்கான கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் கணினிக் கல்வி பயின்றவராக உள்ளனர்.
கேரளாவில் 49 சதவீதத்தினர் அதாவது 39.17 லட்சம் குடும்பங்களில், தலா ஒருவர் கணினி அறிவு பெற்றிருப்பதால் அம்மாநிலம் கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலமாக உள்ளது. பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.
கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற மற்ற பாடங்களைப் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், அம்மாநிலத்துக்கு முன்னோடியாக 2011-ம் ஆண்டே அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை தமிழக அரசு தொடங்கியது. ஆனால், தற்போது தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தை பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் இன்று பல புரட்சிகளை செய்தாலும், கணினி கல்விக்கு முக்கியத்துவம் தராதது வேதனைக்குரியது. மத்திய அரசின் மூலம் கிடைக்கப் பெறும் நிதியை முறையாக செயல்படுத்தி அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை முறையாக மாணவர்களுக்கு கற்பிக்க மாநில அரசும், பள்ளி கல்வித்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் 
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655 /2014

தலைமை ஆசிரியருக்கு கத்திக்குத்து எதிரொலி: ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு நிதியுதவி பெறும் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் பாபு (57). இவர் மாணவரை செய்முறை ேதர்வுக்கு செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர், தலைமை ஆசிரியரை கத்தியால் சரமாரி குத்திவிட்டார். இதில் படுகாயம் அடைந்த தலைமை ஆசிரியர், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் செங்கல்பட்டுக்கு வருகை தந்தார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்தியது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். அவர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். கத்திக்குத்துப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமை ஆசிரியருக்கு மருத்துவ செலவாக ரூ.20 லட்சம் அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

5-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுடன் தரையில் அமர்ந்து பாடம் கேட்ட திருவண்ணாமலை ஆட்சியர்

திருவண்ணாமலை அடுத்துள்ள மலப்பாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளான பூஜா, மற்றும் வைஷ்ணவி ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்புற சூழல் குறித்து தங்களிடம் சில நல்ல திட்டங்கள் இருப்பதாகவும் அதை மாவட்ட ஆட்சியர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி கடிதம் எழுதினார்கள்.
இதை படித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அந்த மாணவிகளை அழைத்து திட்டங்களை முழுவதுமாக கேட்டறிந்தார். அவர்களின் திறமையை பாராட்டும் விதமாக தன்னுடைய ஆட்சியரின் இருக்கையில் அமர வைத்தும் அழகு பார்த்தார். அத்தோடு மட்டுமில்லாமல் இன்று அம்மாணவிகளை அழைத்து திருவண்ணாமலை வேங்கிகால் புதூரில் உள்ள அரசு தொடக்கபள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பூஜாவையும், வைஷ்ணவியையும் தங்களின் சுற்றுச் சூழல் குறித்த திட்டத்தை மாணவர்களுக்கு பாடம் எடுக்க சொல்லி பெருமைப்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் ஆகிய இருவரும் ஒன்றாக தரையில் அமர்ந்து கைத்தட்டி மாணவர்களின் பாடத்தை கேட்டறிந்தனர்.
பள்ளி மாணவிகள்தானே என்று அலட்சியமாக இல்லாமல் மாணவர்களளின் திறமைகளையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற ஆட்சியரின் இச்செயல் பாராட்டுக்குரியது என ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.