வருகின்ற (2018-2019) பட்ஜெட்டிலாவது கணினி கல்விக்கும் கணினி ஆசிரியர்களுக்கும் வாய்பப்பு வழங்குமா தமிழக அரசு?
40000 பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு (வாழ்வு)கொடுக்குமா தமிழக அரசு!
தமிழக அரசு ஆதாரித்தால் தான் தனியார் பள்ளிகளில் கூட பணி புரியும் வாய்ப்பு கணினி ஆசிரியர்களுக்கு கிடைக்கும் இதற்க்கான
புதிய வரண்முறையும் அரசானையும் தமிழக அரசு விரைவில் உருவாக்கித் தர வேண்டும்..
தனியார் பள்ளிகள் கூட கணினி ஆசிரியர்களை உரிய கல்வித் தகுதிகள் இருந்தும் புறக்கணிக்கப்படும் அவலம் நிடித்து வருகின்றது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU)மூலம் இதுவரை 40000பேர்.
கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் எங்கும் பணிக்கு செல்ல முடியாத அவல நிலை உள்ளது.
காரணம் தமிழக அரசு நடத்தும் எந்த ஒரு தகுதி தேர்வாக இருந்தாலும் ஆசிரியர்கள் பணிநியமனமாக இருந்தாலும் கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை பி.எட் படித்த ஆசிரியர்களுக்கு வாயப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன எதனால்.?
இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசுதான் மற்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் போன்று கணினி ஆசிரியர்களுக்காக உரிய பணி வரண்முறையை தமிழக அரசு உருவாக்கி தரவில்லை இதனால் அரசுப்பள்ளிகள்,அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி கணினி ஆசிரியர்கள் பணிக்கு செல்ல முடியாத அவல நிலை
இன்றாளவும் உள்ளது.
அரசே தனியாரே அவை எங்கு இருந்தாலும் அங்கு பணி புரியும் மற்ற தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் பட்டதாரி ஆசரியர்கள் என்றால் இளங்களை பட்த்துடன் பி.எட் ,பட்டம் கட்டாயம்,முதுகலை ஆசிரியர்கள் என்றால் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் பட்டம் கட்டாயம்.
ஆனால் தமிழகத்தில் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடத்திற்கு என முறையான கல்வி தகுதி எங்கும்
பின்பற்ற படுவதில்லை எனவே கணினி அறிவியல் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று உரிய பணிபுரிய வரண்முறையும் அரசானையும் உருவாக்கி தந்தால் தான் 40000 கணினி ஆசிரியர்களுக்கு வாழ்வு .
எங்கும் கணினி எதிலும் கணினி என்று நோக்கி செல்லும் கால கட்டத்தில்
கணினி கல்விக்கும் கணினி ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு தொடர்ந்து மெத்தன போக்குடன் செய்படுவது ஏன்?
இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கணினி அறிவியல் பாடம் அரசு பள்ளியில் கட்டாயம் நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்.
தமிழகத்தில் 2011ம் ஆண்டு 6ம் வகுப்பிலிருந்து 10வகுப்பு வரை
கணினி அறிவியல் பாடபுத்தகம் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கும் வழங்கப்படாத நிலையில் உள்ளது.
தற்போது அதன் நிலை குப்பையில் தொட்டியில் போடப்பட்டது
என RTI தகவல் அளிப்பது வேதனைக்குறியது.
கணினி அறிவியல் பாடம் நடைத்தப்படுவது எதற்க்காக.
அரசு பள்ளியில் பணி புரியும் மற்ற பாட ஆசிரியர்களுக்கு அரசு பல ஆண்டு காலமாக பல கோடி ரூபாயை
செலவு செய்து பயிற்சி கொடுத்தம் பலன் இல்லை காலங்கள் மாறி வரும் போதே அதற்கு ஏற்ப பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட வேண்டும் பாடங்களுக்கு தகுந்து ஆசிரியரகளை நியமிக்க வேண்டும்.
அந்தந்த பாடங்ளுக்கு தனித்தனியாக பி.எட் பட்டம் எதற்க்காக உருவாக்க வேண்டும்.இதற்கு தான் தமிழக அரசு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) 40000 பிஎட் கணினி அறிவியல் ஆசிரியர்களை வேலையின்றி உருவாக்கியுள்ளது .
எந்த ஒரு பணிக்கும் தாங்கள் கொடுக்கும் பி.எட் பட்டம் செல்லகாசக உள்ளது.தாங்கள் கொடுக்கும் பிஎட் பட்டத்தினால் தனியார் நிறுவனங்களில் கூட வேலைக்கு செல்ல முடிய நிலை இன்றாளவும் உள்ளது அப்படி பணிக்கு செல்ல நான் படித்த பட்டத்தை மறைத்து பணிக்கு செல்லும் நிலை ஏன்?
தமிழக அரசு !
இனியாவது தமிழக பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் முறையான கல்வி தகுதி பின்பற்ற படவேண்டும்
ஆகவே கணினி அறிவியல் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று பணிபுரிய வரண்முறை உருவாக்கி அதற்க்கான அரசானையை விரைவில் வெளியிட வேண்டும்.
செல்வி நா.ரங்கநாயகி,
மாநில மகளிர் அணி தலைவி,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.