புதுச்சேரியில் நடைபெறவுள்ள மேல்நிலை எழுத்தர் தேர்வுக்கான நுழைவு சீட்டுக்களை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பணியாளர் நலத்துறை செயலாளர் டாக்டர் எஸ்.சுந்தரவடிவேலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் 500 மேல்நிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் 25.10.15 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 முதல் 12 மணி வரை நடக்கிறது.
இப்போட்டித் தேர்வில் பங்கேற்க மொத்தம் 33,617 பேர் விண்ணப்பித்துள்ளனர். மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலை, குறித்து புதுச்சேரி அரசு ஆள்சேர்ப்பு இணையதளம் https:recruitment.puducherry.gov.in என்ற இணையதள முகவரியில் அறியலாம்.
மேலும் தகுதியான மனுதாரர்கள் தங்கள் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை மேற்கூறிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் சுந்தரவடிவேலு.