யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/11/15

திருச்சி மாவட்டம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு வருகிற 18.11.2015 ( புதன்கிழமை ) திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ந.க.எண்.25202/2015/இ4    தேதி.16.11.2015
உள்ளூர் விடுமுறை - திருச்சி மாவட்டம் -  ஸ்ரீரங்கம் வட்டம் -  அரங்கநாதசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு  வருகிற 18.11.2015 (புதன்கிழமை ) நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை எனமாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


விடுமுறைக்கு பதிலாக வருகிற டிசம்பர் மாதம்  (05.12.2015) சனிக்கிழமை வேலை நாள் என அறிவிக்கப்படுகிறது

கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கக் கோரி, கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலச் செயலர் வெ.குமரேசன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் உ.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியலை கட்டாய பாடமாக்க வேண்டும். சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை நிகழாண்டிலேயே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கணினி பாடப் பிரிவு இல்லாத 800க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், அந்த பாடத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷமிட்டனர். மாவட்டத் தலைவர் தேனரசு, செயலர் சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்

மூவகை சான்றிதழ்; 'மூச்சு முட்டும்' ஆசிரியர்கள்: பயன்படுமா 'இ சேவை' மையம்

மதுரை;பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருவாய், இருப்பிடச் சான்றிதழ்கள் (மூவகை சான்று) வழங்குவதற்கு மாணவர் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, மின்னணு உபகரணங்கள் வசதி இல்லாததால் ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர்.அரசு சார்பில் வழங்கப்படும் 14 வகை நலத் திட்டங்களில், மூவகை சான்றும் ஒன்று. இதை டிசம்பருக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும், மாணவர் விவரத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணியை, கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது.
ஆனால், பதிவேற்றம் செய்ய தேவையான கணினி, ஸ்கேனிங், உட்பட உபகரணங்கள் எதுவும் இல்லை. இணையதளம் வசதி, கணினி ஆசிரியர் பெரும்பாலான பள்ளியில் இல்லை. இதனால் ஒரு மாணவருக்கு ரூ.30 செலுத்தி, தனியார் மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.இதற்குமுன் மாணவரிடம் ஆவணங்கள் பெற்று, அவை தாலுகா அலுவலகங்களில் வழங்கப்பட்டன. அதை பரிசீலித்து மாணவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது தலைமையாசிரியரே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவால் கூடுதல் பணிச்சுமையில் தத்தளிக்கின்றனர்.இதுகுறித்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக செயலாளர் சிவக்குமார், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது:
இது முற்றிலும் வருவாய்த்துறைக்கு உட்பட்டது. தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர் விவரப் பட்டியல், கல்வி உதவி தொகைக்கான வங்கி கணக்கு எண்கள், நலத்திட்ட விவரம் என பல்வேறு
பதிவேற்ற பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வதால் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
மூவகைச் சான்றிதழ் பணிகளை தாலுகா அலுவலகங்களில் செயல்படும் 'இ சேவை' மையங்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்,
என்றனர்.

பத்தாவது நாளாக பள்ளிகள் மூடல்: பல்கலை தேர்வுகள் மீண்டும் ரத்து

தொடர்ந்து, 10வது நாளாக, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, 6ம் தேதி சனிக்கிழமை முதல், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது; தீபாவளி முடிந்து, 11ம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், கனமழை காரணமாக கடலுார், விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், 11ம் தேதி பள்ளிகளை திறக்க முடியவில்லை; திறந்திருந்த பள்ளிகளும், பாதியில் மூடப்பட்டன.இதையடுத்து, தொடர் மழை பெய்ததால், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன.இன்றும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு டிசம்பர் முதல் வாரத்தில், அரையாண்டுத் தேர்வு; மற்ற வகுப்புகளுக்கு இரண்டாம் பருவ தேர்வு நடக்கவுள்ள நிலையில், தொடர்ந்து, 10வது நாளாக, பள்ளிகள் இயங்கவில்லை.

இன்றும் நாளையும்...:
சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்புக் கல்லுாரிகளில் நடக்கவிருந்த தேர்வுகள், இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.அண்ணா பல்கலை தேர்வுகள், நாளை வரை, ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 19ம் தேதி முதல், 21ம் தேதி வரையான தேர்வுகளும், ரத்து செய்யப்பட்டுள்ளதாக, பல்கலை பதிவாளர் கணேசன் அறிவித்துள்ளார்.சட்டப் பல்கலையிலும், நாளை வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 500 பள்ளிகள் சேதம்

கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையில் 500க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. 30 ஆயிரம் மாணவர்கள் பாட புத்தகங்களை பறிகொடுத்து இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத வகையில் பருவமழை கொட்டி தீர்த்தது. 


அதை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 400 கிராமங்கள், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. கனமழைக்கு இதுவரை கடலூரில் 55பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இதில் 15 ேபர் பள்ளி மாணவ, மாணவிகள். திடீர் வெள்ளத்தில் சிக்கிய மாணவ, மாணவிகள் தங்கள் உடமைகள், பாட புத்தகங்களை பறிகொடுத்து விட்டு பெற்றோருடன் ஓடி உயிர் தப்பினர். பலர் பாட புத்தகங்களை எடுத்து சென்றபோது மழையில் நனைந்து வீணாகின.  சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் பாட புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் சீருடைகளை இழந்துள்ளதாக கல்வியாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச கணினிகளும் சேதமடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் 500க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. 100க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழையால் சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்கள் குறித்து பள்ளி கல்வித்துறை கணக்கெடுத்து வருகிறது. விழுப்புரத்தில் கிராமங்கள் துண்டிப்பு: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த  கல்வராயன்மலை அடிவாரத்தில்  உள்ள கல்படை ஆற்று பாலத்தில் நேற்றுமுன்தினம் மாலை முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதையடுத்து அவ்வழியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெள்ளம்  காரணமாக மல்லிகைப்பாடி, பரங்கிநத்தம், மாயம்பாடி, பொட்டியம் ஆகிய 4   கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்க சட்டம் அமல்படுத்த நீதிபதிகள் ஆய்வு கமிட்டி : ஐகோர்ட் முடிவு

கட்டாய தமிழ் மொழி பாடப் பிரச்னைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அமைப்பின் பொதுச் செயலர், டாக்டர் சாதிக், தாக்கல் செய்த மனு:தெளிவான வழிமுறைகள்தமிழ்மொழி கற்றல் சட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டது. '1 முதல், 10ம் வகுப்பு வரை, கண்டிப்பாக தமிழ் மொழியை, ஒரு பாடமாகக் கற்க வேண்டும்' என, அந்த சட்டம் வரையறுத்துள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்த, தெளிவான வழிமுறைகள் மற்றும் விதிகளை உருவாக்கும்படி, தமிழக அரசுக்கு, 2014 மே மாதம், மனு அனுப்பினோம்; எந்த நடவடிக்கையும் இல்லை.

தற்போது, கல்வித் துறை அதிகாரிகள், '10ம் வகுப்பு வரை, தமிழை கட்டாயமாக கற்பிக்க வேண்டும்' என, வற்புறுத்துகின்றனர். மேலும், '2016 மார்ச் மாதம் நடக்கும் பொதுத் தேர்வில், தமிழ் பாடம் கட்டாயம் இருக்கும்' எனவும் கூறுகின்றனர். அதிகாரிகளிடம் இருந்து உத்தரவுகள் எதுவும் வராததால், இதுவரை, தமிழ் பாடத்தை எங்கள் பள்ளிகளில் கற்பிக்கவில்லை. மேலும், தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

தமிழ் மொழி கற்றல் சட்டத்தை அமல்படுத்தினால், மற்ற மொழிகளை கற்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். அவர்கள், படிப்பை பாதியில் விட்டுவிட வேண்டிய நிலை ஏற்படும். நாங்கள், தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால், 'சிறுபான்மை மொழிகளையும் கற்பிக்க வேண்டும்' என விரும்புகிறோம்.எனவே, நாங்கள் அனுப்பிய மனுவை பைசல் செய்யவும், அதுவரை, பள்ளி கல்வி உத்தரவுக்கு தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதுபோன்று, பல மனுக்கள், உயர் நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் தாக்கல் செய்த பதில் மனு:பொதுத் தேர்வு

தமிழ் ஆசிரியர்களை ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பு, பள்ளி நிர்வாகத்துக்கு உள்ளது. 2006 - 07 முதலே, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் மொழி கற்றல் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தை, பொதுத் தேர்வில் எழுத வேண்டிய விவகாரத்தில், மனுதாரர்கள் விதிவிலக்கு கோர முடியாது.

சட்டம் அமலுக்கு வந்து, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:தமிழ் பாடத்துக்கு விதிவிலக்கு கோருபவர்களின் பிரச்னையை, உரிய அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும். 2016 மார்ச் மாதம், பொதுத் தேர்வு வருவதால், இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும்.

எனவே, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பது உகந்ததாக இருக்கும் என, நாங்கள் கருதுகிறோம். இதுகுறித்து ஆலோசித்து, ஒரு வாரத்தில் தெரிவிப்பதாக, அட்வகேட் ஜெனரல் உறுதி அளித்துள்ளார். விசாரணை, நவ., 23க்கு தள்ளி வைக்கப்படுகிறது.

இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

குரூப் - 2ஏ' தேர்வு சிக்கல்: கூடுதல் அவகாச கோரிக்கை

பருவ மழையால், மின்வெட்டு பிரச்னை மற்றும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. எனவே, குரூப் - 2ஏ தேர்வுக்காக, விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. அரசின் பல துறைகளில், குரூப் - 2ஏ பிரிவில் அடங்கிய பதவிகளில், காலியாக உள்ள, 1,947 இடங்களுக்கு பணி நியமன தேர்வு, ஜனவரி, 24ம் தேதி நடக்க உள்ளது. 

விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம், நவ., 18ம் தேதி முடிகிறது. ஆனால், 10 நாட்களாக மழை கொட்டுவதால், பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் தேர்வு எழுத விரும்புவோர், மழை வெள்ளப் பாதிப்பால் மறு கட்டமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் மின் வினியோகம் மற்றும் இணைய செயல்பாடு பாதிப்பால், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க முடியவில்லை. இ - சேவை மையங்களிலும் மின் வினியோக பாதிப்பு மற்றும் இணைய பிரச்னையால் நிரந்தரப்பதிவு செய்யவோ, விண்ணப்பிக்கவோ முடியவில்லை. எனவே, விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க, டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

CPS ன் கோர முகம்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த
மாரியம்மாள் கணவர் திரு. குருசாமி அவர்கள் CPS ல் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதிய பலன்களை பெறமுடியாத நிலையிலே மரணம் அடைந்து விட்டார். குடும்ப ஓய்வூதியம் வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மாரியம்மாள் உடல் நலம் குன்றி போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அரசு மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.
இன்னும் எத்தனைn உயிர்களை CPS காவு வாங்க உள்ளதோ? சிந்தனை செய்வீர்.
எங்கெல்ஸ்.

16/11/15

நாளை முதல் அனைத்து சேவைகளுக்கும் சேவை வரி அரை சதவீதம் உயர்வு

'தூய்மை இந்தியா திட்டத்திற்காக உயர்த்தப்பட்ட சேவை வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது.தொலைபேசி கட்டணம், ஓட்டலில் சாப்பிடுவது மற்றும் தங்குவதற்கான கட்டணம், காப்பீடு தொகை போன்றவற்றுக்கு தற்போது 14 சதவீதம் சேவை வரி விதிக்கப்படுகிறது. 


கடந்த மே 31–ந்தேதி வரை 12.36 சதவீதம்தான் சேவை வரி விதிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ஜூன் 1–ந்தேதி முதல் சேவை வரி14 சதவீதமாக உயர்த்தப்பட்டது.அதன்பின்னர் தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காக, மக்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சேவைகள் மீது விதிக்கப்படும் சேவை வரியை மத்திய அரசு அரை சதவீதம் உயர்த்தியது. அதனால், சேவை வரி 14.5 சதவீதமாக இருக்கும்.இந்த அரை சதவீத சேவை வரி உயர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. எனவே, வருகிற 15–ந்தேதி முதல் சேவை வரியின் கீழ் வரும் அனைத்து பணிகள் மற்றும் சேவைகளுக்கும் 14.5 சதவீதம் சேவை வரி செலுத்த வேண்டும். இந்த கூடுதல் அரை சதவீத சேவை வரியின் மூலம் இந்த நிதி ஆண்டில் அரசுக்கு ரூ.400 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி உயர்வின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக செலவிடப்படும்.

'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டத்துக்கு புத்துயிர் தருமா கல்வித்துறை?

அரசு பள்ளிகளில் முடங்கியுள்ள, 'சஞ்சாயிகா' சிறுசேமிப்பு திட்டத்துக்கு புத்துயிர் அளிக்க கல்வித்துறை முன்வர வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளி குழந்தைகள் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு முன், பள்ளி கல்வித்துறை மூலம், 'சஞ்சாயிகா' என்ற சிறுசேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. 


மாணவர் மத்தியில் சேமிப்பு பழக்கம் வளர்ந்தது. துவக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இத்திட்டம், நாளடைவில் முடங்கியது. இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவியர் மத்தியில், பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. மொபைல் போன், சினிமா, சுற்றுலா என,வீணாக இப்பணத்தை செலவிடுகின்றனர். சிறு வயதில் மாணவ, மாணவியர் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

பள்ளிகளில், 'சஞ்சாயிகா' சிறுசேமிப்பு திட்டத்துக்கு புத்துயிர் தந்து, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இத்திட்டத்தை மீண்டும்செயல்படுத்த, கல்வித்துறை முன்வர வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா கூறினார்.குழந்தைகள் தின விழா, டாக்டர்எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமைநடைபெற்றது. 


இதில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சிறந்த நூலகர்களுக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதுகளையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.விழாவில் தலைமை வகித்து, டி.சபிதா பேசியது:பள்ளி மாணவர்களுக்கான 14 வகையான நலத்திட்டங்களுக்காக தமிழக அரசு இதுவரை ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.தரமான கல்வியை வழங்க எத்தகைய கட்டமைப்பு வசதிகள் தேவை என்பதை அறிந்து அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், சுற்றுச்சுவர்கள், கழிப்பறைகள் என உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டும் ரூ.3 ஆயிரம் கோடியை தமிழக அரசு வழங்கியது. இதனால், நல்ல உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.குக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களையும் பள்ளிகளுக்கு அழைத்து வருவதற்காக போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் பள்ளிகளுக்கு வராமல் இருந்த 57 ஆயிரம் மாணவர்களில் 48 ஆயிரம் பேர் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ்2010-11-ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 344 உயர்நிலைப் பள்ளிகளுக்கான கட்டடங்களைக் கட்ட ரூ.380 கோடியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தப் பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.இந்தத் திட்டத்தின்படி, தரம் உயர்த்தப்பட்ட மேலும் 810 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்காக மொத்தம் ரூ.1,268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்றார் அவர்.அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி: பாடப் புத்தகங்களை படிப்பதோடு நின்றுவிடக் கூடாது. நிறையப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளைக் கொண்டாடும் அதேவேளையில், நம்முள் உள்ள குழந்தைத் தன்மையையும் கொண்டாட வேண்டும் என்றார்.

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர்க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உள்ளிட்டோரும் பேசினர்.

RTI Letter:ஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு...RTI--அரசு கடித எண் ;41541/சி.எம்.பி.சி./2013.நாள்.20.8.2013.



10-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அறிவிப்பு

காலியிடங்களை நிரப்பாவிட்டால் வேலைநிறுத்த போராட்டம்: கூட்டுறவு ஊழியர் சங்க நிர்வாகி தகவல்

தமிழக கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை வரும் 40 நாட்களுக்குள் நிரப்பாவிட்டால், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய கூட்டுறவு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் 6-வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க வந்த பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 6,000 பணியிடங்களை நிரப்பிட அரசுக்கு பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அறிவிப்பை வரும் 40 நாட்களுக்குள் வெளி யிடாவிட்டால், தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட உள் ளோம். குறிப்பாக வேலைநிறுத்தத் துக்கு தயாராக உள்ளோம்.

கூட்டுறவு வங்கிகளில் பணிபுரி யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிடவேண்டும். இதற்காக அரசின் நிதியை செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.மாறாக வங்கிகளின் லாபத்தில் இருந்து 10 சதவீதம் கொடுத்தாலே போதுமானது என்றார்.முதல் நாள் மாநாட்டில் ‘நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்திடவேண்டும். கூட்டுறவு வங்கிகளில் தொழில் நுட்ப சேவையை விரிவு படுத்த வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு மாநில அரசு நிதி வழங்கிட வேண்டும். கூட்டுறவு வங்கி பணியாளர்களின் ஓய்வு வயதை 60 வயதாக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

11,000 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது

மதுரை சர்வேயர் காலனியில் உள்ள மகாத்மா மாண்டிச்சோரி பள்ளியில் குழந்தைகள்தின விழாவையொட்டி மகாத்மா பள்ளிகள், பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சார்பில் ஆந்திர மாநிலத்தின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ‘கலாம்காரி’ஓவியம் வரையும் போட்டி நேற்று நடைபெற்றது. இதற்கு மதுரை பாத்திமா கல்லூரி முதல்வர் பாத்திமா மேரி, உயர் நீதிமன்ற நோட்டரி வழக்கறிஞர் திரவிய நாதன் நடுவர்களாக இருந்தனர்.


இதில் மதுரையில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 11,156 மாணவ, மாணவியர் ஒரே இடத்தில் அமர்ந்து கலாம்காரி ஓவியம் வரைந்தனர்.இதற்கு முன் இவ்வளவு அதிகமான குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து இந்த குறிப்பிட்ட ஓவியத்தை வரைந்ததில்லை. அதனால், இந்த ஓவிய நிகழ்ச்சி லிம்கா சாதனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இது குறித்து இந்த ஓவியப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் பள்ளிகளுடைய சூப்பர் டீச்சர் சியாமளா தேவி கூறுகையில், “தமிழ்நாட்டுக்கு தஞ்சை ஓவியம் எவ்வளவு முக்கியவம் வாய்ந்ததோ அதுபோல், ஆந்திரத்துக்கு கலாம்காரி ஓவியம் கலாச்சார முக்கியம் வாய்ந்தது.

ஆண்டுதோறும் எங்கள் நிர்வாகம் ஒவ்வொரு மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு சார்ந்த ஓவியங்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள அவர்களுக்கு இந்த ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதற்கு முன் பிகார், ராஜஸ்தான், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுடைய ஓவியங்கள், கிளாசிக் பெயிண்டிங் உள்ளிட்டவை குறித்து 9 முறை ஓவியப்போட்டிகள் நடந்துள்ளன. இந்த 9 ஓவிய நிகழ்ச்சிகளும் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்றார்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன. மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:-

*.டிசம்பர் 7 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
*.டிசம்பர் 8 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
*.டிசம்பர் 9 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
*.டிசம்பர் 10 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள
*.டிசம்பர் 12 - சனிக்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்
*.டிசம்பர் 14 - திங்கள்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், விவசாயம், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில் கல்வி), நர்சிங் (பொது), கணக்குப் பதிவியல், கணக்குத் தணிக்கை
*.டிசம்பர் 16 - புதன்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராப்ட்ஸ்மென் சிவில், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை
*.டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல், பொது இயந்திரவியல் தாள்-2, எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் தாள் 2, தொழில்கல்வி மற்றும் தணிக்கை
*.டிசம்பர் 21 - திங்கள்கிழமை - உயிரியல், தாவரவயில், வரலாறு, வணிகக் கணிதம்
*.டிசம்பர் 22 -செவ்வாய்க்கிழமை - கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), புள்ளியியல், கணக்குப் பதிவியல்மற்றும் கணக்குத் தணிக்கை, செய்முறைத் தேர்வு, தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்)
*.தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிஷங்கள்வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணை:

*.டிசம்பர் 9 - புதன்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
*.டிசம்பர் 10 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
*.டிசம்பர் 12 - சனிக்கிழமை - ஆங்கிலம்முதல் தாள்
*.டிசம்பர் 14 - திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
*.டிசம்பர் 16 - புதன்கிழமை - அறிவியல்
*.டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல்
*.டிசம்பர் 21 - திங்கள்கிழமை - கணிதம்

தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

Flash News:தமிழகத்தில் கனமழை காரணமாக 24 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (16.11.2015)விடுமுறை

*ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*புதுக்கோட்டை  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*கன்னியாகுமரி  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*தர்மபுரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*நாமக்கல் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் மாவட்டபள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*வேலூர் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவண்ணாமலை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
*ராமநாதபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை
*திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
*அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
*கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை 
*சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

TNPSC : குரூப்-4 பதவிக்கான கலந்தாய்வு நாளை திட்டமிட்டப்படி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர் 16 ஆம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சிஅறிவித்துள்ளது.குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்த உள்ளது.


இந்தப் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 2014 டிசம்பர் 21 ஆம் தேித நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து பணியாளர் தேர்வுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நாளை 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது.இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் மூலமும், மின்னஞ்சல், குருந்தகவல் மூலமும் தகுதியானவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.கலந்தாய்வுக்கு வரத் தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் கனமழை; பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகம் மற்றும் பதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. 


சென்னையிலிருந்து 300 கிலோமீட்டருக்கு தொலைவில், இலங்கைக்கு அருகே நிலைகொண்டுள்ள இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணிநேரத்திற்குள், தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 25 செ.மீ. அளவிற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று மண்டல ஆய்வு வானிலை மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்:

தென்மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுநிலையின் காரணமாக அடுத்த 24 மணி நேரங்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தில் மழையளவு 35 சதவீதமாக உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.சென்னையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு:தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. சென்னை உட்பட மாநிலத்தின் பலபகுதிகளில் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு பகுதிகளில் மீட்புபணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஆந்திராவிலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் 140 பேர் சென்னை வந்துள்ளனர். இவர்கள், சென்னை, விழுப்புரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபட உள்ளனர்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
கனமழை காரணமாக
01.திருச்சி
02.நாமக்கல்
03.விழுப்புரம்
04.திருவண்ணாமலை
05.கடலூர்
06.நாகப்பட்டினம
்07.காஞ்சிபுரம
்08.கன்னியாகுமரி
09. வேலூர
்10.சென்னை11. திருவள்ளூர
்12.திருவாரூர
்13. புதுக்கோட்டைமாவட்டங்களில் நாளை (16ம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

01.தர்மபுரி
02.பெரம்பலூர்
03.கரூர்
04.அரியலூர
்05.தஞ்சாவூர
்06.நீலகிரி
07.கிருஷ்ணகிரி
08.சேலம்
09. ஈரோடு
10. திருப்பூர்
மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் 34 நிவாரண மையங்கள்:

தென் மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள புயல் காரணமாக , ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கு 34 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு, அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் விஜயகுமார் தெரிவித்தார் . இந்த முகாம்களை அமைச்சர் சுந்தர்ராஜன் பார்வையிட்டார்.

விமான சேவை பாதிப்பு:

சென்னையில் பெய்து வரும் மழையால் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கிருந்து கோவை வரும் விமானம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே போல் கோவை - சென்னை விமானமும் பறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் நாளை விடுமுறை:

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (16ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

ரூ.80க்கு 'செக்' மாணவர்கள் 'ஷாக்'

சேலம்:அனைவருக்கும் கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளில் பெண்கல்வி முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. அதற்கான பரிசுத்தொகை, 100 ரூபாய் மற்றும், 80 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டதால், பெற்றோர், மாணவ, மாணவியர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஒன்று முதல், ௮ம் வகுப்பு வரையிலான, மாணவ, மாணவியரிடையே, பெண்கல்வி முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டி, பள்ளி அளவில், நடத்தப்பட்டது.


இதில், ஒன்று முதல், 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஓவியப்போட்டியும், 4 மற்றும் 5ம் வகுப்புக்கு பேச்சுப்போட்டியும், 6 முதல், 8ம் வகுப்பு வரை, கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது.ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை, நடத்தப்பட்ட போட்டிகளில், முதல் பரிசாக, 100 ரூபாயும், இரண்டாம் பரிசாக, 80 ரூபாயும் வழங்கப்பட்டது. 6ம் வகுப்பு முதல், ௮ம் வகுப்பு வரை, முதல் பரிசாக, 150 ரூபாயும், இரண்டாம் பரிசாக, 100 ரூபாயும் வழங்கப்பட்டது.பரிசுத்தொகை, வங்கியில் செலுத்தி மாற்றத்தக்க வகையிலான, 'செக்'காக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, 80 ரூபாய்க்கான, 'செக்,' பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு, மாணவன் பெயரில் வங்கிக்கணக்கு துவக்க வேண்டும். அதற்கு குறைந்தது, 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை கட்ட வேண்டும். இதனால், பரிசுத்
தொகையாக வழங்கப்பட்ட, 'செக்' கை, பல பெற்றோர் பணமாக மாற்ற முயற்சிக்கவில்லை.