யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/9/16

முதலில் Cps ல் சேர்ந்தவர்களுக்கு Cps Number Allotment Letter தந்திருக்கமாட்டார்கள். அவர்கள் தற்போது Cps கணக்கில் login செய்து   Allotment letter  என்பதை click செய்து download செய்துகொள்ளுங்கள். உங்கள் கணக்குத்தாளையும் download செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்..
இதனை கிளிக் செய்து login செய்யுங்கள்.
 http://cps.tn.gov.in/public/

தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்ய அரசு உயர் அலுவலர்கள் குழுவை அமைக்கும் .அரசு கடித எண் ;-40050/சி.எம்.பி.சி./2016-1/நாள் ;-27.07.2016

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட எந்த மையினைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான அரசின் கடிதம்.

மத்திய அரசு - கல்வி கடன் வட்டி மானியம் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது?

2009 பின் கல்விக்கடன் பெற்றவர்கள் அறிந்துகொள்ள:-

கல்விக்கடன் வட்டி மானியம் தொடர்பான அறிவிப்புக்கள் அறிந்துகொள்ள :-http://www.iba.org.in/circularnew.asp


http://www.iba.org.in/HRD.asp

ஆசிரியர்களை ஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும் உயர்ந்திட முடியும்-கலைஞர்

ஆசிரியர்களைஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும்உயர்ந்திட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன். அவர்ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால்சிறந்து, குடியரசுத் தலைவராக விளங்கிப்
புகழ்படைத்தவர்! அவர் பிறந்த நாள்- செப்டம்பர் 5ஆம் நாள், “ஆசிரியர்தினம்” என ஆண்டுதோறும் எழுச்சியுடன்கொண்டாடப்படுகிறது.
இந்நன்னாளில்வருங்காலத் தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும்சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுதும் தொண்டுகளாற்றிடு
ம் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தப
்படுகிறது.
ஆசிரியர்சமுதாயம் மகிழும் வகையில், “நல்லாசிரியர்விருது” என வழங்கப்பட்ட அந்தவிருதின் பெயரை, 1997இல், “டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் விருது” எனப் பெயர்மாற்றம் செய்து வழங்கிட வகைசெய்தது தி.மு.க. அரசு!
அத்துடன், ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்வு கருதி உயர்கல்விக்கு ஊக்கஊதியம்; ஈட்டிய விடுப்பு நாட்களைச்சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வுநிலை ஊதியம்;
20 ஆண்டுகள்பணி முடித்தால் சிறப்பு நிலை ஊதியம்; தமிழாசிரியர்களிடையே இருநிலை நீக்கம்; தமிழாசிரியர்களின்‘புலவர்’ பட்டயம் ‘பி.லிட்’ பட்டமாகமாற்றம்; தமிழாசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு; ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு மத்தியஅரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்கள்; அகவிலைப்படிகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப்பணிப் பாதுகாப்பு; நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களாக்கியது; பதிவுமூப்பு அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்தது; தொகுப்பூதியஆசிரியர் நியமன முறையை அடியோடுரத்து செய்தது என எண்ணற்றசலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது தி.மு.க. அரசு!
இவைமட்டுமல்லாமல், 19 ஆண்டுகால தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நான்கு முறை ஊதியக்குழுக்களை அமைத்து; ஆசிரியர் சமுதாயமும், அரசு ஊழியர்களும் உயர்ந்தஊதியங்களைப் பெற்று மகிழ்ந்திடவும் ஆசிரியர்-அரசு ஊழியர் குடும்பங்களின்வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவும் வழிவகைசெய்ததும் தி.மு.க. அரசே என்பதனை இந்நாளில் நினைவுபடுத்திடவிரும்புகிறேன்.
ஓர் ஆசிரியருக்கு வேலை கொடுத்தால் அவர்குடும்பம் உயரும்; அவரைச் சுற்றியுள்ளஉறவினர்கள் மகிழ்வர்; அவர்கள் குடும்பத்தில் வறுமைவிரட்டப்படும்; சமுதாயம் முன்னேற்றம் காணும் என்ற அடிப்படையில்திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும்காலங்களில் எல்லாம் அதிக அளவில்ஆசிரியர் நியமனங்களைச் செய்துள்ளது.
ஆனால், ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கழகஆட்சியில் அளிக்கப்பட்ட சலுகைகளையெல்லாம் பறித்ததுடன்; அந்தச் சலுகைகளைகளை மீண்டும்வழங்கிடக் கோரிப் போராடிய ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் நள்ளிரவு நேரத்திலும், பெண்கள் என்று பாராமலும், வீடு புகுந்து கைது செய்தும், ஏறத்தாழ1 லட்சத்து 71 ஆயிரம் ஆசிரியர்-அரசுஊழியர்களை வேலை நீக்கம் செய்தும்கொடுமை புரிந்தது இந்தியாவிலேயே அ.தி.மு.க. அரசு ஒன்றுதான்என்பதையும் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.
அத்துடன், அண்மைச் சில ஆண்டுகளாக, ‘தகுதித்தேர்வு’ என்ற ஒன்றைப் புகுத்தி, அதையும் ஆண்டுதோறும் நடத்திடாமல், ஆசிரியர் பயிற்சி பெற்ற பலர்வேலை கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் நிலையைஇன்றைய அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆசிரியர் சமுதாயம் அடைந்திடும் இன்னல்களை எண்ணி வேதனைப்படாமல் இருந்திடமுடியவில்லை.

இந்நிலையில்ஆசிரியர் சமுதாயத்திற்கு எந்த நாளிலும் அரணாகவிளங்கிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்சார்பில் தமிழக ஆசிரியர் அனைவர்க்கும்எனது ‘ஆசிரியர் தின’ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துமகிழ்கிறேன்.

CPS - திட்டத்தில் மரணம் / ஓய்வு பெற்றவர்களுக்கு 537 க்கு மட்டுமே கட்டிய பணம் திரும்ப வழங்கியுள்ளதாக கருவூலக கணக்கு இயக்குனரகம் அறிவிப்பு

நாடு முழுவதும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகள் மீதான தடையை நீக்கியது யுஜிசி

நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப்பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும்பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்குவிதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நீக்கியுள்ளது.


வரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளைமீண்டும் தொடங்க
அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக நாட்டின் 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி கடந்த வாரம்ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் கடந்த 2009 முதல்திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புக்குவிதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாகக்கூறியுள்ளது. என்றாலும் இந்த ஆய்வுப் படிப்புகளில் மற்ற முழுநேரப் பல்கலைக்கழகங்கள் கடைபிடிக்கும் விதி முறைகளில் சிலவற்றைப்பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.
உதாரணமாக, இந்த ஆய்வுப் படிப்புகளுக்குத் திறந்தநிலைப்பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத்தேர்வு செய்யவேண்டும். இது வன்றி, மாணவர்கள்ஆய்வு செய் யும் பாடங்களைஒட்டி மூன்று யூனிட் அளவிலாகபாட வகுப்பு களும் அவர்களுக்குநடத்தப்பட வேண்டும். இதில் தேர்வு நடத்திஅதில் வெற்றி பின்னரே ஆய்வுகளை தொடர அனுமதிக்க வேண்டும்எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பிடெக், எம்டெக்படித்த மாணவர் களுக்கான ஆய்வுமற்றும் தொழில் வகுப்புகள் கொண்டபாடங்களில் மாணவர் சேர்க்கை கூடாதுஎன்றும் உறுதியாகக் கூறியுள்ளது.
இந்த உத்தரவால், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகளில் அடுத்தஆண்டு முதல், மொழிப் பாடங்கள்மற்றும் வரலாறு, புவியியல், அரசியல்அறிவியல், உளவியல், சமூகவியல் உள்ளிட்ட இதர பாடங் களில்மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள 15 திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பல்வேறு பாடப்பிரிவு களில்பட்டம் மற்றும் பட்டமேற் படிப்புகள்உள்ளன. இதில் எம்.பில்மற்றும் பிஎச்.டி ஆய்வுப்படிப்புகளில் பல்வேறு சிக்கல்கள் எழுவதாகவும், இதனால் அதில் தவறுகள் நடப்பதாகவும்மத்திய அரசுக்குப் புகார்கள் வந்தன.
அப்போதுதிறந்தநிலை பல் கலைக்கழகங்களை மத்தியதொலைதூரக் கல்வி கவுன்சில் நிர்வகித்துவந்தது. இந்தப் புகார் களைஆராய்ந்த கவுன்சில் திறந்தநிலை பல்கலைக்கழகங் களில் ஆய்வுப் படிப்புகளுக்கு2009-ம் ஆண்டு தடை விதித்தது. எனினும், மத்திய அரசின் இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மட்டும் ஆய்வுப்படிப்புகளை நடத்தி வந்தது. 2012-ல்திறந்தநிலை பல்கலைக்கழகங்களும் யுஜிசி வழிகாட்டுதலின் கீழ்கொண்டு வரப்பட்ட பின் இது முழுமையாகநிறுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில்திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மற்ற முழுநேரப் பல்கலைக்கழகங்களின்கல்விச் சட்டப்படியே தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருவதாகவும், இதனால் முன்புபோல் ஆய்வுப்படிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும்என்ற கோரிக்கை எழுந்தது. இது தற்போது ஏற்கப்பட்டுஆய்வுப் படிப்புகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

770 அரசு மேல்நிலை பள்ளிகளில் தொடுதிரை கற்றல் வகுப்பறைகள்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம்கற்பிக்கும் வகையில், 'விர்சுவல் கிளாஸ் ரூம்' என்றதொடுதிரை கற்றல் வகுப்பறை அமைக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில், 770 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதற்கட்டமாக, 8.93 கோடி ரூபாயில் இத்திட்டம்செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக
மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது. அதில், 'தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில்கம்ப்யூட்டர், ஹார்டுவேர்ஸ், கேமரா, புரொஜக்டர், ஸ்பீக்கர், மைக் சிஸ்டம் பொருத்தும் பணிகளைஅவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தொடுதிரை வகுப்பறைக்கு என, பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளஇணையதள வசதியை அதற்கு மட்டுமேபயன்படுத்த வேண்டும்.
பிற அலுவலக பணிக்கு பயன்படுத்தவோ, மின்னஞ்சல் பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ கூடாது' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி முதன்மை கல்விஅலுவலர் வாசு கூறியதாவது: தேனிமாவட்டத்தில், ஆண்டிபட்டி, கெங்குவார்பட்டி, சிலமலை, கொடுவிலார்பட்டி, தெப்பம்பட்டி, லட்சுமிபுரம் உட்பட, 22 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொடுதிரை கற்றல்வகுப்பறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையானகம்ப்யூட்டர் உள்ளிட்ட தளவாட பொருட்களை பொருத்தும்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம்தோறும் தலா, 1,000 ரூபாய் வீதம் இணையதளபயன்பாட்டிற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
மாணவர்கள்பாடத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், 'சிடி' மூலம் வகுப்பறையில்பாடம் நடத்த சம்பந்தப்பட்ட பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர், முதல் வாரத்தில் பணிகள்நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

மாநில நல்லாசிரியர் விருதுக்கு சேலம் மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் தேர்வு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்குத்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2015-16 ஆம்ஆண்டுக்கான உயரிய டாக்டர் ராதாகிருஷ்ணன்விருதுக்கு, சேலம் மாவட்டத்தில் உள்ள13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநிலநல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்விவரம்:
1. ந.பாஸ்கரன், தலைமை ஆசிரியர், ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளி, இருசனாம்பட்டி, வீரபாண்டி. 2. யா. ஜான் லூர்தாஸ், தலைமைஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, கொண்டலாம்பட்டி, பனமரத்துப்பட்டி. 3. பி.ஸ்ரீவித்யா, தலைமைஆசிரியர், மாநகராட்சி தொடக்கப் பள்ளி, அம்மாப்பேட்டை.
4. கை.சண்முகவள்ளி,தலைமை ஆசிரியர், ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி, சாமிநாயக்கன்பட்டி, ஓமலூர்.
5. மு.செல்வி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோணங்கியூர், கொங்கணாபுரம். 6. க.மேகலா, தலைமைஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, எம்.பழக்காரனூர், மேச்சேரி.
7. இரா.ஜெயந்தி, தலைமை ஆசிரியர், நகரவைமகளிர் மேல்நிலைப் பள்ளி, அம்மாப்பேட்டை. 8. பெ. சுசீந்திரன், தலைமை ஆசிரியர், நகரவைஉயர்நிலைப் பள்ளி,
புதுத்தெரு, கிச்சிப்பாளையம். 9. பெ.சுமதி, தலைமைஆசிரியர், அரசினர் மேல்நிலைப் பள்ளி, நட்டுவம்பாளையம், சேலம். 10. எ.மரியமெர்லின், தலைமைஆசிரியர், அரசினர் (ம) மேல்நிலைப் பள்ளி, ஜலகண்டாபுரம்.
11. இரா.செல்லதுரை, முதல்வர், சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுப்பாளையம்.

12. சு.பியூலா ஞானபூஷனம், முதுகலைஆசிரியர், குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம். 13. க.கண்ணகி, முதுநிலைவிரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் கல்விமற்றும் பயிற்சி நிறுவனம், உத்தமசோழபுரம். இந்த விருதுகள் சென்னை சாந்தோம் செயின்ட்பீட்ஸ் பள்ளி வளாகத்தில் செப்டம்பர்5 ஆம் தேதி மாலை 4 மணிக்குநடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது என மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி தெரிவித்துள்ளார்.

‘ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. எந்த நாளிலும் அரணாக விளங்கிடும்’ கருணாநிதி – ஆசிரியர் தின வாழ்த்து.

 ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. எந்த நாளிலும் அரணாக விளங்கிடும் எனகருணாநிதி தனது ஆசிரியர் தினவாழ்த்து செய்தியில் கூறி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில்கூறியிருப்பதாவது:–


 ஆசிரியர்களுக்கு விருது ஆசிரியர்களை ஏணிப்படிகள்என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர
கலசங்களாகவும்உயர்ந்திட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். அவர்ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால்சிறந்து, குடியரசுத் தலைவராக விளங்கிப் புகழ்படைத்தவர்! அவர் பிறந்த நாளானசெப்டம்பர் 5–ம் நாள், ‘‘ஆசிரியர்தினம்’’ என ஆண்டுதோறும் எழுச்சியுடன்கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் வருங்காலத் தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும்சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுவதும் தொண்டுகளாற்றிடும் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்படுகிறது. எண்ணற்ற சலுகைகள் ஆசிரியர் சமுதாயம் மகிழும் வகையில், ‘‘நல்லாசிரியர்விருது’’ என வழங்கப்பட்ட அந்தவிருதின் பெயரை, 1997–ல், “டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் விருது“ எனப் பெயர்மாற்றம் செய்து வழங்கிட வகைசெய்தது தி.மு.க. அரசு. அத்துடன், ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்வு கருதி உயர்கல்விக்கு ஊக்கஊதியம்; ஈட்டிய விடுப்பு நாட்களைச்சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வுநிலை ஊதியம்; 20 ஆண்டுகள் பணி முடித்தால் சிறப்புநிலை ஊதியம்; தமிழாசிரியர்களிடையே இருநிலைநீக்கம்; தமிழாசிரியர்களின் ‘புலவர்’ பட்டயம் ‘பி.லிட்’ பட்டமாக மாற்றம்; தமிழ் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு; ஆசிரியர்–அரசு ஊழியர்களுக்கு மத்தியஅரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்கள்; அகவிலைப்படிகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப்பணிப் பாதுகாப்பு; நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களாக்கியது; பதிவுமூப்பு அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்தது; தொகுப்பூதியஆசிரியர் நியமன முறையை அடியோடுரத்து செய்தது என எண்ணற்றசலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது தி.மு.க. அரசு.  ‘ஆசிரியர்தின’ நல்வாழ்த்துகள் இவைமட்டுமல்லாமல், 19 ஆண்டுகால தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நான்கு முறை ஊதியக்குழுக்களை அமைத்து; ஆசிரியர் சமுதாயமும், அரசு ஊழியர்களும் உயர்ந்தஊதியங்களைப் பெற்று மகிழ்ந்திடவும் ஆசிரியர்–அரசு ஊழியர் குடும்பங்களின்வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவும் வழிவகைசெய்ததும் தி.மு.க. அரசே என்பதனை இந்நாளில் நினைவுபடுத்திடவிரும்புகிறேன். ஓர் ஆசிரியருக்கு வேலைகொடுத்தால் அவர் குடும்பம் உயரும்; அவரைச் சுற்றியுள்ள உறவினர்கள் மகிழ்வர்; அவர்கள் குடும்பத்தில் வறுமைவிரட்டப்படும்; சமுதாயம் முன்னேற்றம் காணும் என்ற அடிப்படையில்தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்கும் காலங்களில் எல்லாம் அதிக அளவில்ஆசிரியர் நியமனங்களைச் செய்துள்ளது. இவ்வாறு ஆசிரியர் சமுதாயத்திற்குஎந்த நாளிலும் அரணாக விளங்கிடும் தி.மு.க.வின்சார்பில் தமிழக ஆசிரியர் அனைவருக்கும்எனது ‘ஆசிரியர் தின’ நல்வாழ்த்துகளை தெரிவித்துமகிழ்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3/9/16

பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் சட்டசபையில் மசோதா தாக்கல்

அரசுப் பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் கொண்ட சட்டமசோதாவை நிதி, பணியாளர் மற்றும்நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.

அதன் விவரம் வருமாறு:

அரசுப் பணிகள் மற்றும் பதவிகளுக்கு பணியமர்த்தப்படும் நபர் களின் நியமனம் மற்றும் பணி வரன்முறை ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன. தற்போது சட்டமன்றத்தின் சட்டம் ஒன்றினால் அத்தகைய பணிகள் மற்றும் பதவிகளுக்கு பணியமர்த்தப்படும் நபர் களின் நியமனம், பணி வரன்முறையை ஒழுங்குமுறைப்படுத்தும் வகைமுறை களைச் செய்வது என்று அரசு முடிவு செய்திருக்கிறது. அதனுடன் செயல்படும் வகையில் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகள் விதிகளின் பகுதி-1, பகுதி-2 ன் வகைமுறைகளை உள்ளடக்கும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் அரசால் வகுத்துரைக்கப் பட்டுள்ள சுழற்சி முறையிலான தெரிவுக்கிணங்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது பிற நியமன முகமைகள் அல்லது பதவி யமர்த்தும் அதிகார அமைப்புகளால் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பணிமூப்புக்காக வகை செய்யும் பொருட்டு, ஒரு பணியில் பதவியமர்த்தம் செய்யப்பட்டதற்கான நபர்களின் பணிமூப்புக்கென தனியாக சட்டம் கொண்டு வருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.பிரிவு அல்லது இனம் அல்லது தரம் ஒதுக்கீட்டின் விதி மற்றும் சுழற்சிமுறை ஆணைப்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது பிற நியமன முகமைகள் அல்லதுபதவியமர்த்தும் அதிகார அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரிசையிடத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண் டும் என்று சட்டமசோதாவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை நடைபெறும் பள்ளி தேர்வுகளை நடத்தும் பொறுப்பு மேல்நிலை உதவி தலைமையாசிரியரே - தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல்

ஆசிரியர் கவுன்சிலிங் விதிமுறையில் மாற்றம்

தமிழகத்தில், இன்று துவங்கும் பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இன்று மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. நாளை, மாவட்டங்களுக்கு இடையே நடக்கிறது. 


இரு கவுன்சிலிங்குகளும் கடந்த ஆண்டு வரை, 'ஆன்லைன்' மூலம் நடத்தப்பட்டன. மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங்கை, 'ஆன்லைனில்' நடத்துவதால், 'சீனியர்' ஆசிரியர்கள் முன்னுரிமை அடிப்படையில் இடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. 'ஜூனியர்' ஆசிரியர்களே அதிக பலன் அடைந்தனர். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங்கை, 'ஆன்லைனில்' இல்லாமலும், மாவட்டங்களுக்கு இடையே, 'ஆன்லைனிலும்' நடத்த பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜூ கூறுகையில், “ புதிய நடைமுறையால் சீனியர் ஆசிரியர்கள் இடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் இருக்காது.

அதேபோல் மாவட்டங்களுக்கு இடையே, 'ஆன்லைனில்' நடத்தும்போது, ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு அலைவது தவிர்க்கப்படும்,” என்றார்.

புதிய ஓய்வூதியத் திட்டம் : அரசு ஊழியர் வலியுறுத்தல்

முதல்வர் ஜெ., 110 விதியின் கீழ் அறிவித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்' என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியது.



மதுரையில் சங்க மாநில செயலாளர் செல்வம் கூறியதாவது: நேற்று நடந்த வேலை நிறுத்தத்தில், அரசு ஊழியர்கள் நான்கு லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக முதல்வர் கடந்த பிப்., 19ல் சட்டசபையில் அறிவித்தார்.


அந்த அறிவிப்பு இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள் என நான்கு லட்சம் ஊழியர்கள் தொகுப்பூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் நலனை கருதி மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும். எட்டாவது சம்பளக்குழுவை அமைக்க வேண்டும், என்றார்.

ஆசிரியர் கற்பித்தல் பயிற்சியில் : கல்வித்துறை உத்தரவால் குழப்பம்

தொலைதுார கல்வி மூலம் பி.எட்., படிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சி பெறும் விஷயத்தில், கல்வித் துறையின் முரண்பட்ட உத்தரவால் குழப்பம் அடைந்துள்ளனர்.


பி.எட்., படிக்கும் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள் விடுப்பு எடுத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கற்பித்தல் பயிற்சி பெற்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதையடுத்து விடுப்பு எடுக்காமலேயே, அவரவர் பணி புரியும் நடுநிலை பள்ளிகளிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள, 2015 மார்ச், 13 ல் பள்ளிக் கல்வி செயலர் உத்தரவிட்டார். இதே நிலை தான் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் உள்ளன.


கடந்த ஆக., 11 ல் தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில், 'அவரவர் பணிபுரியும் பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுத்தாலும் விடுப்பு எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி செயலர் விடுப்பு எடுக்க தேவையில்லை எனவும்; தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் விடுப்பு எடுக்க வேண்டும் எனவும் கூறியிருப்பது ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜன் கூறியதாவது:

கல்வித்துறையின் முரண்பட்ட உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தற்போது தொலைதுார கல்வியில் கற்பித்தல் பயிற்சியை, 90 நாட்களாக பல்கலைகள் அதிகரித்துள்ளன. அதிக நாட்கள் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே, பள்ளி கல்வி செயலரின் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்

இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதிய 'சாப்ட்வேர்'

சிவகங்கை: பள்ளியில் சேர்க்கப்பட்ட இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதிய 'சாப்ட்வேர்' செயல்படுத்தப்பட உள்ளது. ஆறு முதல் 14 வயதுடைய இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி செல்லாத அல்லது இடைநிற்றல் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
2011--12 ல் 63,178 இடைநிற்றல் குழந்தைகள் இருந்தன. 2015--16 ல் 43,455 ஆக குறைந்துள்ளது. இதில் 42,443 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகளை கண்காணிக்க அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் புதிய 'சாப்ட்வேர்' செயல்படுத்தப்பட உள்ளது. இதில் இடைநிற்றல் குழந்தைகளின் முழு விபரம், தொடர் மதிப்பீடு, அதிகாரிகளின் ஆய்வு போன்றவை பதிவு செய்யப்பட உள்ளன. இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய முடியும். படிப்பை கைவிட்டாலும், அவர்களை எளிதில் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

"மாணவர்கள் அறிவு தேடலில் இருந்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளிவரும்

மாணவ, மாணவிகள் அறிவு தேடலில் இருந்தால் மட்டுமே பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரமுடியும் என, தமிழ்நாடு கடலோரக் காவல் படை கூடுதல் இயக்குநர் சி. சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.


விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சைலேந்திர பாபு மேலும் பேசியதாவது:

பிளஸ் 2 தேர்வில் 6 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்தாலும், சுமார் 2 லட்சம் பேர் மட்டுமே உயர் கல்வி கற்கும் வாய்ப்பை பெறுகின்றனர். மாணவர்கள் அறிவு தேடலில் ஆர்வம் காட்டினால், அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர முடியும். இந்தியா வல்லரசாக வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். ஒவ்வொருவரும் அவரவர் கடமையைச் செய்தாலே இந்தியா வல்லரசாகி விடும். ஆசிரியர்கள் அதிக புத்தகங்கள் வாசித்தால் மட்டுமே மாணவர்களின் திறனுக்கேற்ற அறிவு தேடலை கொடுக்கமுடியும்.

மாணவ, மாணவியர் வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால், மகிழ்ச்சி, உழைப்பு, வெற்றி என்ற தாரக மந்திரத்தை மனதில் வைத்து கடினமாக உழைக்க வேண்டும். இந்திய ஆட்சிப் பணி, குடியுரிமை தேர்வுகளுக்கு இலவசமாக ஆலோசனை மற்றும் உதவிகள் செய்து வருகிறேன். எனவே, என்னை இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

பின்னர், மாணவ, மாணவிகள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை தலைவர் கதிர்வளவன் வரவேற்றார். முடிவில், சுயநிதிப் பாட பிரிவு இயக்குநர் அசோக்குமார் நன்றி கூறினார்.

"ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் முதல்வர் பரிசு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்'

பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவியர் முதல்வர் பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, அத்துறை அலுவலர் தனலிங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று, தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பயின்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தைச் சோóந்த தலா 1000 மாணவ, மாணவியருக்கு முதல்வர் பரிசுத் தொகை ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதன்படி, 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 1073 மதிப்பெண் களுக்கு மேல் எடுத்த மாணவர்கள், 1,101-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, மாணவ, மாணவியர் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் சாதிச் சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் தங்களது கல்லூரி மூலம் முதல்வர் பரிசுத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

21 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினிகள்: தணிக்கை அறிக்கையில் தகவல்

தமிழகத்தில் 2011-15 காலக்கட்டத்தில் ரூ.3,231 கோடியில் 21,29,196 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிதி, வருவாய், பொது-சமூகப் பிரிவு என தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கணக்காய்வு, தணிக்கை குறித்த அறிக்கை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பொது-சமூகப் பிரிவு கணக்காய்வு, தணிக்கை அறிக்கையில் மடிக் கணினி விநியோகம் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் விவரம்:-

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ""விலையில்லா மடிக் கணினிகள் வழங்குதல்'' எனும் திட்டத்தை ஜூன் 2011-இல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டதா, மடிக் கணினிகளைப் பயன்படுத்த போதுமான ஆதரவு சேவைகள் அளிக்கப்பட்டனவா என்பதை மதிப்பீடு செய்ய கடந்த ஆண்டு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 21,90,683 மடிக்கணினிகளில் 21,69,196 மடிக்கணினிகள் விநியோகம் செய்யப்பட்டதுபோக, 21,487 மடிக்கணினிகள் மாவட்டங்களின் வசம் உள்ளன.

கல்வி ஆண்டு முடிந்த பின்னர்...தமிழ்நாடு மின்னணு நிறுவனத்துக்கு ("எல்காட்') நிதிகள் தாமதமாக விடுவிக்கப்பட்டதால், மாணவர்களுக்கு மடிக் கணினிகள் கல்வி ஆண்டு முடிந்த பின்னரே விநியோகிக்கப்பட்டன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதி படிப்புப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், அவர்கள் திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்களாக இருந்தும் மடிக் கணினிகள் வழங்கப்பட்டன.

பள்ளிகள், கல்லூரிகளில் நடந்த மடிக் கணினிகள் திருட்டு காரணமாக ஏற்பட்ட இழப்பு, மடிக்கணினிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் இருந்த குறைபாட்டை சுட்டிக்காட்டுகிறது என்று இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

பணி நிரவலில் முறைகேடு: அதிருப்தியில் ஆசிரியர்கள்

திருவள்ளூர் மவாட்டத்தில், கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த பணி நிரவல் கலந்தாய்வில் பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றதாக பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கடந்த மாதம் 27, 28 }ஆம் தேதிகளில் நடைபெற்றது.


திருவள்ளூரில் முகமது அலி தெருவில் உள்ள தனியார் பள்ளியில் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில், பல்வேறு குழப்பங்களுடன் கலந்தாய்வு நடந்து முடிந்ததாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:

சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்குமாறு 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று மாலை 4.30 மணி வரை தகவல் தெரிவிக்கப்படாததால், சிலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். சிலருக்கு செல்லிடப்பேசியில் தொடர்பு கிடைக்காததால், தகவல் தெரிவிக்க முடியவில்லை.

இதற்கான கடிதமும் முறைப்படி வழங்கப்படவில்லை. இருப்பினும், தகவலறிந்த ஆசிரியர்கள் சனிக்கிழமை காலை அங்கு வந்தனர்.

இதில், பாட வாரியாக கலந்தாய்வில், ஒரு பாடத்துக்கு அரை மணி நேரம் வீதம் ஒதுக்கப்பட்டு காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

பள்ளிகள் அமைந்திருக்கும் இடம், பல ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து அறிந்து கொள்ளவும், கலந்தாலோசிக்கவும் நேரம் வழங்கப்படவில்லை.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அளித்திருந்த புள்ளிவிவரங்கள் பெரும்பாலானவை தவறாக இருந்தன.

பணியில் சேர்ந்த தேதி, தற்போது பணிபுரியும் பள்ளியில் சேர்ந்த தேதி வெவ்வேறாக இருந்தும், பணியில் சேர்ந்த தேதியை தற்போது பள்ளியில் சேர்ந்த தேதியாக தவறுதலாக தலைமை ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். மாற்றுத் திறனாளிகள் குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியர்கள் குறிப்பிடவில்லை.

இந்த பணி நிரவலில் வெளியகரம், வெள்ளியூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, போரூர், திருமுல்லைவாயல், பொதட்டூர்பேட்டை, திருவாலங்காடு, பாண்டேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், செல்வாக்குள்ள சில ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணைகளை ரத்து செய்துகொண்டு, தேவையான பள்ளிக்கு மாற்றுவதற்கான ஆணையை திங்கள்கிழமை வாங்கிச் சென்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, கல்வித் துறை அதிகாரிகள் இக்கலந்தாய்வு குறித்து உரிய விசாரணை நடத்தி மீண்டும் பணி நிரவலை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.