யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/11/16

இல்லந்தோறும் இணையம்' விண்ணப்பிக்க அவகாசம்

இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில், மார்ச், 1 முதல், மாவட்ட தலைநகரங்களில், அகண்ட அலைவரிசை இணைய சேவைகளை வழங்கி வருகிறது. 
இரண்டாம் கட்டமாக, அனைத்து நகராட்சி பகுதிகளுக்கும், திட்டத்தை விரிவுப்படுத்த உள்ளது. இதில் சேர்ந்து, இணைய சேவை வழங்க விரும்புவோர், நிறுவனத்தின் இணைய தளத்தில் இருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்; வரும், 15க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இதுவரை, 7,317 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் பலர், கால அவகாசத்தை நீட்டிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும்,www.tactv.inஎன்ற இணையதளத்தில், 14ம்தேதி முதல் தெரிந்து கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் இருந்தால், 1800 425 2911 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

TN திறந்த நிலை பல்கலையில் 24ல் பட்டமளிப்பு விழா.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, வரும், 24ல் நடக்கிறது.இது தொடர்பாக, பதிவாளர், எஸ்.விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, வரும், 24, காலை, 11:00 மணிக்கு, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. 
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர், டாக்டர் சாந்தா பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கிறார்.

விழாவில், 3,397 முதுநிலை, 7,520 இளநிலை, 2,719 டிப்ளமோ மற்றும், 152 முதுநிலை டிப்ளமோ மாணவர்கள் என, 13 ஆயிரத்து, 788 பேர், பட்டம் மற்றும் சான்றிதழ் பெறுகின்றனர். பல்கலை அளவில் முதலிடம் பெற்ற, 142 பேர் தங்கப் பதக்கமும், 256 பேர் இரண்டு, மூன்றாம் இடம் பெற்றதற்கான சான்றிதழும் பெறுகின்றனர். இளநிலை மாணவி முத்துவுக்கு, கனடா காமன்வெல்த் கல்வி கழகத்தின், பாராட்டு சான்றிதழும், 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கணக்குக்கு இனி இல்லை பிணக்கு!:அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்.

பூஜ்ஜியத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு மதிப்புண்டு என, உலகத்திற்கு உரக்க சொன்னவர்கள் தான் நம் முன்னோர்கள்.ஆனால் இன்று, சிறுவண்டுகளுக்கு சின்ன வாய்ப்பாட்டில் கூட, எக்கச்சக்க திணறல். 3*2 என்றால் கூட, விரல் விட்டு எண்ணி, பதில் சொல்றாங்க.இப்படியிருக்கும் நிலையில், 'கணக்கு பார்முலா வர்றதுக்கு, ஸ்பெஷல் மில்க் ரிடிங்ஸ் எல்லாம் குடிக்கதேவையில்ல. 
எளிய முறையில், அடிப்படை தகவல்களை சொல்லி கொடுத்தாலே போதும். சதம் அடிப்பது எளிது' என, அசால்ட்டாய் சொல்கிறார்,கோவை தீத்திப்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ரகோத்தமன். வகுப்பறைக்குள் நுழைந்ததும், தலையை குனிந்தபடி, ஏதோ போர்டுக்குள் மூழ்கியிருந்தனர் மாணவர்கள். கூட்டல், கழித்தலில், எவ்வளவு பெரிய எண்களை கூறினாலும், கண் இமைக்கும் நேரத்தில், கோரஷாக பதில் வந்தது. ஆச்சரியத்துடன் பார்த்த போது, கணித ஆசிரியர் ரகோத்தம்மன் கூறியதாவது:தொடக்கப் பள்ளிகளில் இருந்தே, கணிதம் சார்ந்த புரிதல்ஏற்படுத்துவது அவசியம். ஏனெனில், கணிதம் இல்லாமல், அன்றாட பிழைப்பை நகர்த்துவது கடினம். படிக்காத பாட்டிகூட, கூட்டல், கழித்தல் தெரிந்து வைத்திருப்பார். ஏனெனில், கணிதம் வாழ்க்கை கல்விக்கு தொடர்புடையது.இதை எளிமையாக, மாணவர்களுக்கு புரியும் விதத்தில் சொல்லி கொடுக்க, 'பெக் மேட்' என்ற, செயல்வழி கணித போர்ட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதைப் பயன்படுத்தி, ஒற்றை எண், இரட்டை எண் வேறுபாடு, பகு எண், பகா எண், காரணிகள், மீ.பொ.வ., - மீ.சி.ம., என, பல்வேறு அடிப்படை விசயங்களை அறியலாம்.

 பத்து நாணயங்கள் கொடுத்து, வேறுபாடுகளை அறிய சொன்னால், எளிதில் விளங்கிவிடும். இதேபோல், கூட்டல், கழித்தலை போர்டிலே செய்யலாம்.வட்டம், சதுரம், செவ்வகம் என, வடிவங்கள், அதன் தன்மை, அளவுகளை சொல்லி கொடுக்க லாம். என்னதான் கரும்பலகையில்வரைந்து சொல்லி கொடுத்தாலும், ரப்பர் பேண்டு கொண்டு, மாணவர்களே போர்ட்டில், வடிவங்கள் உருவாக்கும் போது, நிறைய கற்றுக் கொள்வர்.நான்கு புறமும் சமமாக இருந்தால் சதுரம் என, நீளமாக நீட்டி முழக்கி, சொல்லி கொடுப்பதற்கு பதில், செய்ய பழக்கினால், மனதில் பதிந்துவிடும்.

இதுமட்டுமல்ல, பத்தாம் வகுப்பு வரை,தேற்றங்கள், வரையறை என, கணிதம் சார்ந்த அனைத்து பார்முலாக்களுக்கும், கற்பித்தல்கருவிகள் உள்ளன.மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், கணித கற்பித்தல் உபகரணங்களை, அனைவருக்கும்இடைநிலை கல்வி திட்டம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இது, மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதால், மற்ற பள்ளிகளுக்கும் வளங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

HSE : OCTOBER 2016 EXAM ANSWER SCRIPT SCAN COPY DOWNLOAD INSTRUCTIONS














சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு டிசம்பர் 3–ந்தேதி முதல் 9–ந்தேதி வரை நடக்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டு தோறும் நடத்துகிறது.
இந்த வருடம் 1,079 பணிகளுக்கு முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு முடிவு கடந்த செப்டம்பர் மாதம் 16–ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் இருந்து 9 லட்சம் பேர் எழுதினார்கள். தமிழகத்தில் இருந்து 17 ஆயிரம் பேர் மட்டுமே எழுதினார்கள். இந்த தேர்வில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வை எழுத தகுதி பெற்றனர். மெயின் தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர் ) 3–ந்தேதி தொடங்குகிறது. அந்த தேர்வு டிசம்பர் 9–ந்தேதி வரை நடக்கிறது. ஹால் டிக்கெட் இணையதளத்தில் (www.upsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளுக்கு வர்த்தக பிரிவுக்கான மின் கட்டணம் வசூலிப்பதா?- உயர் நீதிமன்றம் கண்டனம்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் தாக்கல் செய்த பதில் மனு மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மாநில அரசு சுகாதாரம், கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை. கழிப்பறை இருந்தால் அது பயன்பாட்டில் இல்லை. மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறைகளை பூட்டி வைத்து ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகி ன்றனர்.

அரசு பள்ளிகளில்கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுக்கு மத்திய அரசு 60 சதவீத நிதி வழங்குகிறது. மாநில அரசு 40 சதவீத நிதி வழங்காவிட்டால் எந்தப் பணியும் நடைபெறாது. கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஏதாவது செய்தால் அரசை பாராட்டலாம். எதுவும் செய்யாமல் இருந்தால் எப்படி பாராட்டுவது?துப்புரவுப் பணியாளர்களைப் பெற்றோர்-ஆசிரியர்கள் கழகம் நியமனம் செய்கின்றனர் என அரசு சொல்கிறது. பெற்றோர்-ஆசிரியர் கழகத்துக்கு எங்கிருந்து நிதி வருகிறது. துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.750 முதல் ரூ.1500 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்திற்கு இந்த காலத்தில் யார் வேலைக்கு வருவர்.மின்சார கட்டணம் செலுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.1500வழங்குவதாக அரசு கூறுகிறது.

கட்டணம் அதிகமாக வந்தால் தலைமை ஆசிரியர் சரி செய்து கொள்வார் என்கின்றனர். தலைமை ஆசிரியர் பணத்துக்கு எங்கு போவார். ஒவ்வொரு பள்ளிக்கும் இரு மாதத்துக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வருகிறது. அரசு பள்ளிகளுக்கு வர்த்தகப் பிரிவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. பள்ளி என்ன தொழிற்சாலையா? பள்ளிகளுக்கு வீட்டுக்கான மின் கட்டணம் நிர்ணயம் செய்தால் என்ன ஆகி விடும்.வழக்கறிஞர்கள் குழு பள்ளிக ளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி நாப்கின் வழங்கும் இயந்திரம் செயல்படவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் பதில் மனுவில் நாப்கின் இயந்திரம் செயல்படுகிறது எனக் கூறப் பட்டுள்ளது. இது நம்பும்படியாக இருக்கிறதா? என்றனர்.

அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, பள்ளிகளில் படிப்படியாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நாப்கின் இயந் திரத்தை பயன்படுத்த மாண விகள் தயங்குகின்றனர்.இதனால் அந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்றார்.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து குறைபாடுகளும் களையப்பட வேண்டும் என்றனர். பின்னர் விசாரணையை நவ.18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

DIGITAL SR : டிஜிட்டல் பணிக்கு செல்லும் முன் நம் பணிப்பதிவேட்டில் நாம் சரிபார்க்கப்பட வேண்டியவை.

1) நம் சுய விவரம் மற்றும் புகைப்படம்
2)பணிநியமன ஆணையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட விவரம்
3)பணி வரன்முறை
4)தகுதிகாண் பருவம்
5)அனைத்து கல்வி விவரங்கள்
6)கல்வித்தகுதிகளின் உண்மைத் தன்மை

7)துறைத்தேர்வு தேர்ச்சி விவரங்கள்
8)FBF
9)SPF
10)GPF/CPS
11)பணிக்காலம் சரிபார்ப்பு
12)உயர் கல்வி பயில முன் அனுமதி
13)பதவி உயர்வு சார்பான பதிவுகள்
14)பணியிட மாறுதல் சார்பான விவரம்
15)ஊதிய நிர்ணயம் மற்றும் கால முறை ஊதிய நிர்ணயம் பற்றிய விவரம்
16)ஊக்க ஊதியம்/உண்மைதன்மை பெற்றதன் விவரம்
17)தேர்வு நிலை விவரம்
18)சிறப்பு நிலை விவரம்
19)சரண் விடுப்பு விவரம்
20)ஈட்டா விடுப்பு விவரம்
21)மருத்துவ விடுப்பு விவரம்
22)மகப்பேறு விடுப்பு விவரம்
23)கருச்சிதைவு விடுப்பு விவரம்
24)ஈட்டிய விடுப்பு இருப்பு விவரம்
25)ஈட்டா விடுப்பு இருப்பு விவரம்
26)அசாதாரணவிடுப்பு விவரம்
27)குடும்ப விவரங்கள்
28)SPF, FBF,GPF/CPS, DCRG, போன்றவற்றிற்கு வாரிசு நியமிக்கப்பட்ட விவரம்.

டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறையில்லை: சென்னை மண்டல ரிசர்வ் வங்கி.

வரும் டிசம்பர் மாதம் 30ம்  தேதி வரை வங்கிகள் விடுமுறையின்றி செயல்படும் என்று சென்னை மண்டல ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வசதியாக, மக்களின் வசதிக்காக அனைத்து வங்கிகளும் விடுமுறை இன்றி இயங்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 30ம் தேதி வரை விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களும் வங்கிகள் செயல்படும் என்று சென்னை ரிசர்வ் வங்கியின் மண்டல மேலாளர் சதகத்துல்லா தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மக்கள் சிரமமின்றி, வங்கிகளுக்கு வந்து பணத்தை மாற்றிக் கொள்ள வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

விடுமுறையின்றி வேலை செய்ய முடியாது என வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின்,தன்னிச்சையான முடிவைஏற்க முடியாது என வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.


குரூப்-1 தேர்வு: அதிரடி நிபந்தனைகள்!!!

தமிழகத்தில் காலியாகவுள்ள 85 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று தெரிவித்துள்ளது.துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், பல்வேறு துறைகளில் உள்ள உதவி ஆணையர்கள் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 
அதன்படி விண்ணப்பிக்க விரும்புவோர் நேற்றிலிருந்து டிசம்பர் 8ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து தேர்வெழுதுவோருக்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.‘தேர்வர்கள் யாரும் சிபாரிசுக்காக தேர்வாணைய தலைவர், செயலர், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரைச் சந்திக்கக்கூடாது.

சந்திக்க முயற்சித்தால், அவர்கள் தேர்வு எழுத தடை. விடைத்தாளில் பெயர், பதிவெண் போன்றவற்றை நேரடியாகவோ, குறிப்பாகவோ தேவையற்ற இடங்களில் எழுதினால் எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை.அனுமதிக்கப்பட்ட பேனாவை தவிர, பென்சில், வண்ண பென்சில், வண்ண பேனா கிரயான்கள், ஒயிட்னர், ஸ்கெட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது. வினாத்தாள் மற்றும் விடைத்தாளில், பொது அறிவுரையில் குறிப்பிட்டபெயர், சுருக்கொப்பம், முகவரி தவிர மற்ற பெயர், கையொப்பம், சுருக்கொப்பம், தொலைபேசி, மொபைல் போன் எண்,முகவரி மற்றும் மதம் சார்ந்த குறியீடு இடுதல் கூடாது.விடைத்தாளில், பரிவு தேடும் விதத்தில் கெஞ்சி கேட்டு எழுதுவது கூடாது. கேள்விக்கு தொடர்பில்லாத பாடம், பதில்கள் மற்றும் தன் அடையாளத்தை வெளியிடும் வகையில்எழுதக்கூடாது. கறுப்பு அல்லது நீலம் இரண்டு வகை பேனாவில், ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இரண்டிலும், மாற்றி மாற்றி எழுதினால் அந்த விடைத்தாள் தகுதி நீக்கம் செய்யப்படும். தேர்வர்கள் மின்னணு தகவல்கள் அடங்கிய ஸ்மார்ட் வாட்ச், மோதிரம், கம்யூனிகேஷன் சிப், மொபைல்போன், பல விவரங்கள் உடைய கால்குலேட்டர்களை தேர்வில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்வர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரர் பெண்ணாக இருந்தால், ஏற்கனவே மனைவியுடன் வாழும் ஒருவரை திருமணம் செய்திருக்கக் கூடாது’ என்று டிஎன்பிஎஸ்சி அதிரடியாக பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்த நிபந்தனைகளை கடைபிடிக்காதவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.

TNPSC:பிப்., 19ல் 'குரூப் - 1' தேர்வு

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 85 இடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வு, பிப்., 19ல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழக அரசுத்துறையில், 29 துணை கலெக்டர்கள், 39 முதல் நிலை, டி.எஸ்.பி.,க்கள், எட்டு வணிக வரித்துறை உதவி கமிஷனர்கள், ஒரு மாவட்ட பதிவாளர், ஐந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் எட்டு மாவட்டங்களில், தீயணைப்பு அதிகாரி என, குரூப் - 1 பதவிகளில், 85 காலியிடங்களுக்கு, பிப்., 19ல், முதல் நிலை தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், ஆன்லைன் பதிவு துவங்கியுள்ளது; டிச., 12ல் முடிகிறது. விண்ணப்ப கட்டணத்தை, கிரடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம், ஆன்லைன் வங்கி கணக்கு மூலமும் செலுத்தலாம்.

 கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளில், அதிகம் பேர் விண்ணப்பிக்கும் போது, ஆன்லைனில், தொழில்நுட்ப பிரச்னைகள் எழலாம். இதனால், விண்ணப்பங்களை கடைசி நாளில், சமர்ப்பிக்க முடியாமல் போனால், அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது.

இதற்கான தகுதி உட்பட, மேலும் விபரங்களை, 044 - 2533 2855, 2533 2833 மற்றும் 1800 425 1002 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

மறுப்பு செய்தி: வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்தி ரிசர்வ் வங்கி மறுப்பு

வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்திக்கு ரிசர்வ் வங்கி மறுப்புத் தெரிவித்துள்ளது.

விடுமுறை தினங்களில் வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு சனி (நவ.12), ஞாயிறு (நவ.13) ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டுமே பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


செல்லாத 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள டிசம்பர் மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதுவரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி செயல்படும் என்று ஊடகங்களில் சனிக்கிழமை மாலை செய்தி வெளியானது.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகப் பொறுப்பாளர் வி.ஜி.வெங்கடாசலபதி வெளியிட்ட செய்தியில், விடுமுறை நாள்களில் வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

எனவே, டிசம்பர் மாதம் வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்ற செய்தியை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளின் செயல்பாடு என்பது தேவைக்கேற்ப முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மறுப்பு செய்தி: வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்தி ரிசர்வ் வங்கி மறுப்பு

வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்திக்கு ரிசர்வ் வங்கி மறுப்புத் தெரிவித்துள்ளது.

விடுமுறை தினங்களில் வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு சனி (நவ.12), ஞாயிறு (நவ.13) ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டுமே பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


செல்லாத 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள டிசம்பர் மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதுவரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி செயல்படும் என்று ஊடகங்களில் சனிக்கிழமை மாலை செய்தி வெளியானது.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகப் பொறுப்பாளர் வி.ஜி.வெங்கடாசலபதி வெளியிட்ட செய்தியில், விடுமுறை நாள்களில் வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

எனவே, டிசம்பர் மாதம் வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்ற செய்தியை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளின் செயல்பாடு என்பது தேவைக்கேற்ப முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

12/11/16

பள்ளிகளில் கழிப்பறை வசதி எப்படி : விரிவான அறிக்கை கேட்கும் ஐகோர்ட்

தமிழக பள்ளிகளில் கழிப்பறை வசதி எப்படி உள்ளது, என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல்செய்யும்படி, தமிழக பள்ளி கல்வித்துறை
செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  இந்தவழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:

பள்ளிகளில்கழிப்பறை வசதி எப்படி உள்ளதுஎன்பது குறித்து, ப்ள்ளி கல்வித்துறை செயலர்தாககல் செய்த அறிக்கை போதியஅளவில் இல்லை. 44 லட்சம் மாணவர்களுக்கு 42 ஆயிரம்கழிப்பறைகள் எப்படி போதுமானதாக இருக்கும். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளி கல்வி செயலர் விரிவானஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வரும், 18ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடக்கக் கல்வி - பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு - பேரிடர் மேலாண்மைக் குழு அமைப்பு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்ந்த செயல்முறைகள்


 

7 லட்சம் மாணவர்களை தொழிலதிபர்களாக்க இலக்கு; மத்திய அரசு புதிய திட்டம்!

மத்தியஅரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 7 லட்சம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து, தொழிலதிபர்களாக உருவாக்கும் நோக்கில், ‘பிரதான் மந்திரி யுவயோஜனா’ என்ற புதிய திட்டத்தைஅறிமுகப்படுத்தி
உள்ளது. டில்லியில், நேற்றுமுன்தினம், திறன் மேம்பாடு மற்றும்தொழில் முனைவு துறை அமைச்சர்ராஜீவ் பிரதாப் ரூடி தலைமையில், ‘தரமான ஆற்றல்’ என்ற தலைப்பில், மாநாடு நடைபெற்றது.


பெரும்பான்மைமாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்றஇந்த மாநாட்டில், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோருக்கான தொழில் முனைவோர் பயிற்சித்திட்டத்தை, ராஜீவ் பிரதாப் ரூடிஅறிவித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:

இளைஞர்களுக்குதொழில் முனைவோர் பயிற்சி அளிக்கும் புதியதிட்டத்தின் கீழ், அடுத்த ஐந்துஆண்டுகளில், 7 லட்சம் மாணவர்களுக்கு, தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, 499.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாநில அரசுகளுடன் இணைந்து, 3,050 கல்வி மையங்களில், இந்தபயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, என்.ஐ.இ.எஸ்.பி.யு.டி., மற்றும் ஐ.ஐ.இ., பயற்சி மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இவை, 125 நாடுகளைச் சேர்ந்த, 2,600 பேர் உட்பட, 7 லட்சத்திற்கும்அதிகமானோருக்கு, தொழில் முனைவோர் பயிற்சியைவெற்றிகரமாக வழங்கியுள்ளன.

இதையொட்டி, உள்நாட்டில் இளைஞர்களுக்கு, மேலும் அதிக வேலைவாய்ப்புகளைஉருவாக்கும் நோக்கில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின்கீழ், 2,200 கல்லுாரிகள், பல்கலைகள், 300 பள்ளிகள், 500 இந்திய தொழிற்கல்வி மையங்கள், 50 தொழில்முனைவோர் மேம்பாட்டு மையங்கள் ஆகியவற்றின் மாணவர்களுக்கு, வலைதளம் வாயிலாக தொழில்முனைவோர் பயிற்சி வழங்கப்படும்.

அத்துடன், தொழில் விபரங்கள், தொழில் முன்னோடிகளின் ஆலோசனைகள்உட்பட, தொழில் துவங்குவதற்கான அனைத்துஉதவிகளையும், இளைஞர்கள் பெறலாம். தேசிய மற்றும் சர்வதேசதரத்திலான தொழில் முனைவோர் கல்விப்பயிற்சி, இளைஞர்களுக்கு வழங்கப்படும்.

அமைச்சகம், 2020க்குள், ஒரு கோடி பேருக்குதிறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க இலக்குநிர்ணயித்துள்ளது. இதற்காக, பிரதமர் திறன் மேம்பாட்டுதிட்ட நிதியில் இருந்து, 3,000 கோடி ரூபாய், மாநிலஅரசுகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, மாநிலங்களில் அமைக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிமையங்கள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் பயிற்சி சாதனங்களின்தரம் உள்ளிட்டவை தொடர்பான வழி­காட்டு நெறிமுறைகள், தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. மத்திய அரசின்திட்டங்கள், அதகளவில், முதல் தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்க உதவும். இவ்வாறு அவர்கூறினார்.

முதல் தலைமுறையினர்:

சிறப்பாகசெயல்படும், 30 வயதிற்கு உட்பட்ட, முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு, 2017 ஜன., 16ல், மத்தியஅரசின் தொழில்முனைவோர் விரு­துகள் வழங்கப்படும்என, மத்திய திறன் மேம்பாட்டுஅமைச்சகம் அறிவித்துள்ளது.

பணியில் உள்ள ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு கேட்டு மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சரைச் சந்தித்து மனு.

23/08/2010  க்குப் பிறகு அரசுமற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளிகளில்முறையான கல்வித் தகுதிகளுடன் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் கட்டாயக்கல்வி உரிமை சட்ட
அடிப்படையில்TET நிபந்தனைகளை கூறி பணியை தொடரஅனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒருசில பணப் பயன் மறுக்கப்பட்டநிலையில்  பணியில்உள்ள இந்த ஆசிரியர்கள் பணிநிபந்தனை காலம் வரும் நவம்பர்15 ஆம்  தேதியுடன்முடிகின்றது.

ஆசிரியர்தகுதித் தேர்வில் இவர்களுக்கு முழுவதும் விலக்கு கொடுக்கும் பட்சத்தில்  சுமார்மூவாயிரம் ஆசிரியக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தமிழக அரசால் பாதுகாக்கப்படும்.


இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று மதுரையில் மாண்புமிகுதமிழக கல்வித்துறை அமைச்சரை TET நிபந்தனைகளுடன் பணி புரியும் ஆசிரியர்களின்மாநிலம் தழுவிய பிரதிநிதிகள் சந்தித்துமனு கொடுத்து  உள்ளனர்.


இந்த சந்திப்பின் போது தமிழக தொழிற்கல்விஆசிரியர்கள் சங்க ஆசிரியர்களும் அவர்களின்ஊதிய முரண்பாடு தொடர்பான மனுவைக் கொடுத்தனர்


மிகவும்பொறுமையாக இவர்களில் பிரச்சினைகளைக் கேட்டு மனுவை பெற்றுக்கொண்டதாகவும் அவ்வாசிரியர்கள் கூறினர்.


மாண்புமிகுதமிழக முதல்வர் அம்மாவின் கவனத்தில் இந்த மனு கொண்டுசெல்லப் பட்டு விரைவில் பணியில்உள்ள ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதும் விலக்கு என்ற நல்லதீர்வு கிடைக்கும் என இந்த பாதிக்கப்பட்டஆசிரியர்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

TNPSC : Group 1 syllabus

200% PENALTY என்பது எவ்வளவு : வங்கிகளில் ரொக்கமாக பணம் செலுத்தும்போது எவ்வளவு தொகைக்கு எவ்வளவு வரி பிடித்தம் செய்வார்கள் ..???

SR verification form for digitalization of SR