யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/6/17

பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு !!

பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு
பி.ஆர்க்., 'அட்மிஷன்' விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியாகின. அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 53 ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகளில், 2,760 பி.ஆர்க்., இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.


இதற்காக, அண்ணா பல்கலை பேராசிரியர், இந்துமதியை உறுப்பினர் செயலராக கொண்ட, மாணவர் சேர்க்கை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி, 'பி.ஆர்க்., இடங்களுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன், 25ல் துவங்கும்' என, அறிவித்தது. ஆனால், இதற்காக அறிவிக்கப்பட்ட, barch.tnea.ac.in என்ற இணையதளம், முதல் நாளே செயல்படவில்லை. மேலும், அட்மிஷன் குறித்த தகவல், அண்ணா பல்கலை மற்றும் தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி இணைய தளத்திலும் இடம் பெறவில்லை.

எனவே, பி.ஆர்க்., விண்ணப்ப பதிவு அறிவிப்பு, பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலை இணையதளம் மற்றும் இன்ஜி., மாணவர் சேர்க்கை இணையதளத்தில், பி.ஆர்க்., பதிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பி.ஆர்க்., இணையதள தொழில்நுட்ப கோளாறும் சரி செய்யப்பட்டது.

இந்த இணையதளத்தில், மாணவர் சேர்க்கை விதிகள், கல்லுாரிகளின் பெயர் விபரங்கள், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.பி.ஆர்க்., பதிவுக்கு, www.annauniv.edu, barch.tnea.ac.in மற்றும் www.tnea.ac.in என்ற இணையதளங்களிலும், மாணவர்கள் விபரங்களை பெறலாம்.

முதுகலை மருத்துவ மாணவர்கள் தகுதி பட்டியல் ரத்துக்கு எதிரான தமிழக அரசு மேல்முறையீட்டு மனு!!!

முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ஐகோர்ட்டு ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை 4–ந் தேதி நடைபெறுகிறது.

முதுகலை மருத்துவ படிப்பில் சேரும் அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மாதம் 6–ந் தேதி அரசாணை வெளியிட்டது. இதில், முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 9–ன்படி, தொலைதூர கிராமங்கள், மலை கிராமங்கள் மற்றும் கடினமான பகுதிகளை வரையறை செய்தது.
இந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், முதுகலை மருத்துவ படிப்பில் சேரும்போது அவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. மேலும், அரசாணைகளின்படி முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலையும் மறுநாள் வெளியிட்டது.

இதை எதிர்த்து பிரணிதா என்ற டாக்டர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜிவ் ‌ஷக்தேர், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர், முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ரத்து செய்தும், புதிய தகுதி பட்டியலை 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கடந்த 16–ந் தேதி உத்தரவிட்டனர்.
மேலும் தொலைதூர கிராமம், கடினமான பகுதி என்று வரையறை செய்த தமிழக அரசின் அரசாணையையும் ஐகோர்ட்டு ரத்து செய்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு அமல்படுத்தப்பட்டால் ஏற்கனவே மருத்துவ படிப்பில் முதுகலை பட்டப்படிப்புக்கு சேர்க்கை பெற்ற 973 மருத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள். மருத்துவ மேல்படிப்புக்கான சேர்க்கை ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இந்த இடங்கள் அனைத்தும் நிரப்ப முடியாமல் காலியாக இருக்கும்.

அது இந்த நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பை உருவாக்கும். எனவே, ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.சப்ரே, சஞ்ஜய் கி‌ஷன் கவுல் ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வு முன்பு தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே ஆஜராகி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வருகிற 4–ந் தேதியன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தனர்.

நல திட்டங்களுக்கு 'ஆதார்' கட்டாயம்; தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!!!

மதிய உணவு திட்டம் உட்பட, பல்வேறு சமூகநலத் திட்டங்களின் பலனை பெறுவதற்கு, 'ஆதார்' எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கும், மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.
பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு, கல்வி உதவித்தொகை உட்பட, மத்திய அரசின் பல்வேறு சமூகநலத் திட்டப் பலன்களை பெறுவதற்கு, வரும், 30க்குள், ஆதார் எண் குறிப்பிடுவதை 
கட்டாயமாக்கும் வகையில், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள், நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், நவின் சின்ஹா அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன.

அவகாசம்

'ஆதார் இல்லாதவர்கள், அரசின் சமூகநலத் திட்டங்களை பயன்படுத்தமுடியாத நிலை ஏற்படும் என்பதால், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்' என, மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, தன் வாதத்தின் போது, ''ஆதார் இல்லாதவர்கள், அதன் விபரங்களை தாக்கல் செய்வதற்கு, செப்., 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆதார் உள்ளவர்கள், வரும், 30க்குள் பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு:வருமான வரி கணக்கு தாக்கல்செய்வதற்கு, 'பான்' கார்டை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். புதிய 'பான் கார்டு' வாங்க, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்ற வருமான வரி சட்டத்திருத்தத்தை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஒத்திவைப்பு

அந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், 'ஆதார் உள்ளவர்கள், அதை குறிப்பிடுவது கட்டாயம்; அதே நேரத்தில், ஆதார் இல்லாதவர்களை கட்டாயப் படுத்தக் கூடாது' என, கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குக்கும், அது பொருந்தும். அதனால், இந்த வழக்கில் இடைக்கால தடை ஏதும் விதிக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கின் விசாரணை, ஜூலை, 7க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறி உள்ளது.

நெருக்கடியில் காரைக்குடி நகராட்சி பள்ளி திணறல்:கோப்புகளை கிடப்பில் போட்ட வருவாய்த்துறை!!

காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட ராமனாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால், தமிழ், ஆங்கில வழி பிரிவு மாணவர்கள் ஒரே கட்டடத்துக்குள் நெருக்கடியில் படிக்கும் நிலை தொடர்கிறது.
காரைக்குடி டி.டி.நகர் சர்ச் 7-வது வீதியில் நகராட்சிக்கு உட்பட்ட ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளி மற்றும் தொடக்க பள்ளி செயல்பட்டு 
வருகிறது. நடுநிலை பள்ளியாக இருந்த இப்பள்ளி, கடந்த 2013--14-ம் கல்வி ஆண்டில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்வு பெற்றது.ஒரே பள்ளி இரண்டாக பிரிக்கப்பட்டது. உயர்நிலை பள்ளியில் 2013-ம் கல்வி ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 200 ஆக இருந்தது. 2014--15-ல் 318, 2015--16-ல் 478, 2016--17-ல் 650, இந்த ஆண்டு 954 ஆக உயர்ந்துள்ளது. தமிழ் வழியில் 317 மாணவர்களும், ஆங்கில வழியில் 637 மாணவர்களும் படிக்கின்றனர்.
கட்டட வசதி இல்லாத நிலையில் நகராட்சி சார்பில் ரூ.ஒரு கோடிக்கு கட்டடங்கள் கட்டப்பட்டு ஓரளவு நெருக்கடி சமாளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், நடப்பாண்டில் இட நெருக்கடியால் பல மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய கழிப்பிட, கைகழுவும் வசதி, மைதான வசதி இல்லை.தொடக்க பள்ளியை பொறுத்தவரை கடந்த 2014--15-ல் 217, 2015--16-ல் 350, 2016--17-ல் 460, நடப்பாண்டில் 500 மாணவர்கள் என ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கட்டட வசதி இல்லாததால், மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து படிக்கின்றனர்.ஒரு வகுப்பில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.
ஆசிரியர்கள் மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். தொடக்க பள்ளிக்கு கட்டடம் கட்ட தாலுகா அலுவலக பின்புறம் உள்ள 42 சென்ட் இடத்தை தேர்வு செய்து, வருவாய் துறை அமைச்சரின் ஒப்புதலுக்கு நகராட்சி நிர்வாகம் அனுப்பி வைத்தது.அப்போதைய நகராட்சி தலைவர் கற்பகம் இதற்கான அனுமதி பெற முழு முயற்சியை எடுத்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவி காலமும் முடிவடைந்ததால், இதற்கான கோப்பு நில நிர்வாக இயக்குனரகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பெற்றோர் ஒருவர் கூறும்போது: நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்தபோதும், போதிய அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை. தொடக்க பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டடம் கட்டுவதற்குரிய அனுமதியை காரைக்குடி எம்.எல்.ஏ., ராமசாமி மற்றும் தற்போதைய நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஒப்புதல்: ஜெட்லி!!!

7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஒப்புதல் உள்ளிட்டபல்வேறு அறிவிப்புகளை மத்திய
அரசு வெளியிட்டது.

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது:

* 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

* பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்திய நிறுவனம் தனியார்மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அதன் பங்குகள் முழுவதும் விற்கப்படும்.

* உ.பி.,யில் சாக்ரி-அலகாபாத் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* ஒய்வூதியதாரர்களுக்கான மாதாந்திர மருத்துவ படி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

* மிக உயர்ந்த பனி பிரதேசமான காஷ்மீரில் உள்ள சியாச்சினில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கான படி ரொக்கமாக வழங்கப்படும். என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை ஜெட்லி தெரிவித்தார்

28/6/17

விரைவில் (WhatsApp) வாட்ஸ்ஆப் செயலியிலும் பணம் அனுப்பும் வசதி !!

தகவல் அனுப்பப் பயன்படும் செயலியான வாட்ஸ்ஆப் பண யூபிஐ மூலமாகப் பணப் பரிமாற்றம் செய்வதற்காக இந்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்தி வருகின்றது.

இந்தயூபிஐ சேவையின் மூலமாக மொபைல் இயங்குதளத்தைப் பயன்படுத்தி உடனடியாக இரண்டு வங்கி கணக்கு இடையில் பணப் பரிமாற்ற செய்ய முடியும். எஸ்பிஐ வங்கியுடன் பேச்சுவார்த்தை
அமெரிக்காவைச் சேர்ந்த இந்தத் தகவல் பரிமாற்ற செயலி நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இப்போது இந்தியாவில் பணப் பரிமாற்ற சேவையை அறிமுகப்படுத்துவதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்திய தேசிய பரிவர்த்தனை கார்ப்ரேஷன் மற்றும் சில நிதி நிறுவனங்களுடன் வாட்ஸ்ஆப் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. எளிதான பணப் பரிமாற்ற சேவை
2016-ம் ஆண்டு முன்னால் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அவர்களால் தேசிய பணப் பரிவர்த்தனை கார்ப்ரேஷன் உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி தான் யூபிஐ. இந்தச் செயலியின் உதவியுடன் எளிதாக இரண்டு வங்கி கணக்குடன் பணப் பரிமாற்ற செய்ய முடியும்.
யூபிஐ செயலியை அனைத்து முக்கிய வங்கிகளும் தங்களது இணையதளச் செயலிகள் மட்டும் இல்லாமல் தனியாக ஒரு செயலியாகவும் வழங்கி வருகின்றன. வாட்ஸ்ஆப் நிறுவனம் வங்கிகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு இந்தச் சேவையைத் தங்களது பயனர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.

இதுஎப்படி வேலை செய்யும்?


எப்படி ஒரு செய்தி இரண்டு மொபைல் எஙளுக்கு இடையில் அனுப்பப்படுகின்றதோ அதே போன்று யூபிஐ செயலி மூலமாக இரண்டு வங்கி கணக்கு இடையில் மொபைல் எண், மின்ஞ்சல் முகவரி போன்ற விர்ச்சுவல் முகவரி பயன்படுத்திப் பணத்தை உடனடியாக அனுப்ப முடியும்.

ட்ரூகாலர்

வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த முயலும் அதேபோன்ற ஒரு சேவையை ட்ரூகாலர் நிறுவனம் ஏற்கனவே ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து வழங்கி வருகின்றது.

ஹைக்

ஹைக்மெசெஞ்சர் செயலியும் யெஸ் பேங்க் நிறுவனத்துடன் இணைந்து யூபிஐ பணப் பரிமாற்ற சேவையை வழங்கி வருகின்றது  SBI வங்கியின் வால்லெட் உரிமம் மூலமாக இந்தச் சேவை வழங்கப்படுகின்றது.
பாதுகாப்பு குறித்து அச்சம்  மொபைல் மூலமாகத் தகவல் அனுப்பும் செயலிகளும் பணப் பரிமாற்ற செய்யும் சேவையை அளிக்கும் போது பாதுகாப்புப் பிரச்சனைகள் ஏதேனும் எழ வாய்ப்புள்ளது என்று வங்கி நிறுவனங்கள் அச்சப்படுகின்றன.

எவ்வளவு பாதுகாப்பானது இது?

வாட்ஸ்ஆப் போன்ற தகவல் பரிமாற்ற செயலிகள் மூலமாகப் பரிவர்த்தனை செய்யப்படும் போது பேமெண்ட் கேட்வே பொன்றப் பாதுகாப்பு வழிகளின் உதவியுடன் நடைபெறுமா என்று விவாதிக்கப்பட்டு வருகின்றது.

கூடுதல் விவரங்கள் 2016-2017 நிதி ஆண்டில் மட்டும் 17.8 மில்லியன் யூபிஐ பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும், அதன் மதிப்பு 7,000 கோடி ரூபாய் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. வாட்ஸ் ஆப் நிறுவனத்தில் 200 மில்லியன் பயனர்கள் இந்தியாவில் இருக்கும் நிலையில் யூபிஐ பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டால் வேகமாக இதன் வளர்ச்சி இருக்கும்.

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...!

2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்.

2017-2018ஆம் ஆண்டிற்கு தமிழ் நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயநிதி (தனியார்) மருத்துவம், பல் மருத்துவம் பட்டப்படிப்பிற்கு ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படுகின்றன.

அரசுகல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாகும்.

மருத்துவம் / பல்மருத்துவம் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேடுகள் கீழ்க்ண்ட அனைத்து அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பதாரர்களின் மனுவின் பேரில் 27.06.2017 முதல் 07.07.2017 வரை எல்லா நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை உட்பட) காலை 10..00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 08.07.2017 மாலை 5.00 மணிவரை
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்
விண்ணப்பம் வழங்கப்படும் நாட்கள் - ஜூன் 27 காலை 10 மணி முதல் ஜூலை 7 மாலை 5 மணி வரை வழங்கப்படும்.
விண்ணப்பம் பூர்த்தி செய்து அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி - 08.07.2017 மாலை 5 மணி வரை
1. சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.
2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை - 600001.
3. மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை - 625020.
4. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் - 613004.
5. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600010.
6. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு - 603001.
7. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி - 627011.
8. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் - 641014.
9. அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் - 636030.
10. அரசு கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, திருச்சி - 620001.
11. அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி - 628008.
12. அரசு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, ஆசாரிபள்ளம், கன்னியாகுமரி மாவட்டம் - 629201.
13. அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, அடுக்கம்பாறை, வேலூர் - 632011.
14. அரசு தேனி மருத்துவக் கல்லூரி, தேனி - 625531.
15. அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி - 701.
16. அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் - 610004.
17. அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் - 601.
18. அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை - 630561.
19. அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை - 606604.
20. அரசு மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் எஸ்டேட், சென்னை - 600002.
21. அரசு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை
22. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.

விண்ணப்பப்படிவங்கள் தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்கம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10ல் வழங்கப்படமாட்டாது

தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ? ஐகோர்ட் கேள்வி

அரசுபள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியிலே சேர்க்க வேண்டும் என்பதை ஏன் கட்டயாமாக்கப்படவில்லை என தமிழக அரசுக்கு சென்னை
உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பள்ளி நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் "அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்க 2012 தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளை தமிழ் வழி பாடம் நடத்தும் ஆசிரியர்களே நடத்துவதாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடத்தை தொடங்க மறுப்பது பாரப்பட்சமானது" என கூறப்பட்டுள்ளது.

இந்தவழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில்,  "கல்வி மிகப்பெரிய ஆயுதம். அதை கொண்டு உலகையே மாற்றலாம் என நெல்சன் மண்டேலா கூறியதை மேற்கொள் காட்டியுள்ளார். இந்தியா கிராமங்களால் வாழ்கிறது. ஆனால் கல்வியில் கிராமப்புற மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். தமிழ் வழி ஆசிரியர்களே ஆங்கில வழி பாடத்தை நடத்துவதால்,ஆங்கில வழி வகுப்புகளுக்கு அனுமதியளித்ததில் உபயோகம் இல்லை.  கிராமப் புற மாணவர்களை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என கவலை தெரிவித்துள்ளார்.
மேலும்,அரசு பள்ளி ஆசிரியர்கள்  குறித்த நேரத்தில் பள்ளிகளை திறக்காதது, முறையாக வகுப்புகளை நடத்ததாது, ஆசிரியர் பணி அல்லாமல் பகுதி நேர தொழில் செய்வது போன்ற நடவடிக்கைகளில் அரசு பள்ளி ஆசிரிர்கள் ஈடுபடுவது குறித்து நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

அரசுபள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, 2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன, அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார்? தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ? ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்ச பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா ? அரசு பள்ளியை விடுத்து பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் நாட காரணம் என்ன ? பள்ளிகளுக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா  ?

ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்ய கூடாது ? ஊரக பகுதிகளில் அரசு பள்ளிகளை  நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க கூடாது ? பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது??

உள்ளிட்ட 20 கேள்விகளை எழுப்பிய நீதிபதி, அரசு இது குறித்து ஜூலை 14-ம் தேதி பதிலளிக்க  உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி


அரசுஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் தனியார்பள்ளிகளில் சேர்க்கின்றனர்அரசு ஆசிரியர்கள்குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்ககட்டாயப்படுத்தாதது ஏன்பெற்றோர் தனியார்பள்ளிகளை நாட காரணம்
என்ன
Image may contain: screen
ஆங்கிலவழி கல்வி தொடங்க அனுமதி மறுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.


2012க்கு பின் எத்தனை ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன? ஆங்கிலவழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஆசிரியர்கள் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக் கூடாது? குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடைசெய்ய கூடாது? அனைத்து கேள்விகளுக்கும் ஜூலை 14க்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது.

காலம் தவறி வரும் ஆசிரியர்களை கண்காணிக்க CCTV அமைக்காதது ஏன்?உயர்நீதி மன்ற நீதிபதி திரு.கிருபாகரன் சரமாரி கேள்வி அரசு பதில் அளிக்க உத்தரவு.

அரசுஊழியர்களின் குழந்தைகளை அரசுபள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயம் ஆக்கக்கூடாது?
நேரந்தவறி வரும் ஆசிரியர்களை கண்காணிக்காதது ஏன்?

காலம் தவறி வரும் ஆசிரியர்களை கண்காணிக்க CCTV அமைக்காதது ஏன்?
ஆசிரியர் சங்கங்கள் தொடங்க தடைவிதிக்காதது ஏன்

உரியநேரத்திற்கு வராத ஆசிரியர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடக் காரணம் என்ன?

ஆங்கில வழிக் கல்வி அரசு பள்ளியில் நடக்கிறதா?

தமிழ்வழி ஆசிரியர்களே ஆங்கில வழிக் கல்வியை நடத்துகின்றனரா?

BREAKING NEWS : 6,7,8 வகுப்புகளை கையாளாத மற்றும் பட்டதாரிகளை விட குறைந்த தரநிலை ஊதியம் பெறும் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு தரக்கூடாது - மதுரை உயர்நீதிமன்றம் ஆணை - JUDGEMENT COPY

ஆசிரியர்கள் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக் கூடாது?

No automatic alt text available.

NEET - MBBS Reservation 85% G.O



தமிழாசிரியர் தகுதிபெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் B.Ed.,M.A./M.Sc.,ஊக்க ஊதியம் சார்பாக சில விளக்கங்கள்!!



நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd ஊக்க ஊதியம் வழங்குவது குறித்த அனைத்து ஆவணங்களின் தொகுப்பு Posted: 27 Jun 2017 08:30 PM PDT CLICK HERE-INCENTIVE TO MIDDLE SCHOOL H.M - FULL DETAILS. தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசு பள்ளி Posted: 27 Jun 2017 08:22 PM PDT பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிகள் மற்றும் விடுமுறை தொடர்பான RTI பதில்கள். Posted: 27 Jun 2017 08:35 PM PDT Epayslip இல் Financial Year 2017-18 in Annual Income Statement, Pay Drawn Particulars. Update செய்யாமல் இருந்தது. அதற்கு CM CELL க்கு மனு அனுப்பி பதில் பெற்ற விவரம் Posted: 27 Jun 2017 08:15 PM PDT பிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்?.. கேள்வித்தாள் குழு தலைவர் அறிவிப்பு Posted: 27 Jun 2017 07:24 PM PDT சென்னை : எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2, வினாத்தாள் குழு அரசால் நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக அரசு தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர், கு.தேவராஜன் நியமிக்கப்பட்டார். குழுவின் உறுப்பினராக, தேர்வுத்துறை முன்னாள் இணை இயக்குனர் ராமராஜன், பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர்கள் பூபதி, வாசு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சமீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தவருடம் புதிதாக 11ம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு வருகிறது. எனவே முதலில் 11ம் வகுப்புக்கு கேள்விகள் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த குழு உறுப்பினர்கள் 11ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு கேள்விகள் வடிவமைக்க கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பாட நிபுணர்களுடன் பேசி வருகிறார்கள். இந்தகேள்விகள் மாணவர்களின் திறனை பரிசோதிக்கும்படி இருக்கும். மாணவர்கள் புரிந்து படித்திருப்பதை ஆய்வு செய்யும். அதே நேரத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் கேள்விகள் இருக்கும். இன்னும் ஒரு மாதத்திற்குள் கேள்விகள் வடிவமைப்பு தயாராகி விடும். அதன்பிறகு அரசின் ஒப்புதல் பெறப்படும். காலாண்டு தேர்வு வர இருக்கிறது. வினாத்தாள் வடிவமைத்து கொடுத்து அதன்பிறகுதான் தேர்வுத்துறை அதை அச்சடிக்க கொடுக்கும். அதனால் தான் விரைவில் கேள்விகளை வடிவமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள் !! Posted: 27 Jun 2017 07:21 PM PDT அரசுபள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில். *தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள். 1)அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ? 2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ? 3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ? 4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ? 5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். 6)பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ? 7)ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ? 8)ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ? 9)பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ? 10)இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது. 11)ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ? 12)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ? 13)ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric) பொருத்தக்கூடாது ? 14)ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ? 15)கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார். 16)கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ? 17)கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ? 18)கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ? 19)மாறி வரும் கல்வி கற்பிக்கும் முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ? 20)அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ? என்றும் நீதிபதி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார். Flash News: கோவை மாவட்ட - வால்பாறை வட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. Posted: 27 Jun 2017 07:18 PM PDT வால்பாறையில் கனமழை - கோவை மாவட்ட வால்பாறை வட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பிழக்கிறது பிளஸ் 2 மதிப்பெண் Posted: 27 Jun 2017 07:17 PM PDT 'நீட்' தரவரிசை பட்டியலின்படி மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு, மவுசு அதிகரித்துள்ளது. 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துளளது. அதனால், பிளஸ் 2 மதிப்பெண், 'கட் - ஆப்' மதிப்பெண்கள் மட்டுமே, மருத்துவ இடங்களுக்கு உதவாது. 'நீட்' தேர்வு மதிப்பெண் அதிகமாக இருந்தால் மட்டுமே, தர வரிசையில் முன்னிலை பெற்று, அரசு ஒதுக்கீடு பெற முடியும். தமிழக அரசின் புதிய முடிவின்படி, பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கான மவுசு குறைந்து, 'நீட்' மதிப்பெண்ணுக்கான மவுசு அதிகரித்துள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகத்தினரும், தனியார் பள்ளி மாணவர்களும், பிளஸ் 2 சிறப்பு பயிற்சிகளை குறைத்து, 'நீட்' தேர்வுக்கான பயிற்சிக்கு, முன்னுரிமை அளிக்க துவங்கி உள்ளனர். அதனால், தனியார் பள்ளிகளிலேயே நேரடியாக, 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகள் துவங்கி உள்ளன. அதேபோல, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களுக்கு, கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது. பல புதிய பயிற்சி மையங்களும், சாதாரண டியூஷன் மையங்களும், 'நீட்' தேர்வு பயிற்சிக்கு தயாராகி உள்ளன. பயிற்சிக்கான கட்டணம், ஓர் ஆண்டுக்கு, 20 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் Posted: 27 Jun 2017 08:13 AM PDT தமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கல்வித் துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்று வதற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளோம். இது வரை47 அறிவிப்புகள் வெளியாகி யுள்ளன. மேலும் பல அறிவிப்புகள் வெளியாக உள்ளன.‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் பல்வேறு பொதுத் தேர்வு களிலும் வெற்றிபெறும் வகை யில் தமிழக மாணவர்களின் திறனைமேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு உதவும் வகையில் 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் மற்றும் வரை படங்கள் அடங்கிய தொகுப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. சிபிஎஸ்சி பாடத் திட்டத்துக்கு சமமான கல்வியை மாநில அரசு கல்வித் திட்டத்திலும் அமல்படுத்த விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அரசுப் பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைப்பது தொடர்பான உத்தரவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களில் இதற்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கும்.பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் ரூ.7,700-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் 1-ம் தேதியே பகுதி நேர ஆசிரி யர்கள் சம்பளம் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பகுதி நேர ஆசிரியர் களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையின் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் பள்ளிகளில் வசூலிக் கப்படும் கல்விக் கட்டணம் தொடர்பாக, நீதிமன்றத் தீர்ப்புக் குப் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனினும், மிக அதிக அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட் டுள்ள குழுவிடம் புகார் தெரிவித்து, உரிய தீர்வு காணலாம்.குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக ஒவ்வொருவரும் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. எனினும், அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை. மதுரையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்பார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். பணி வரன்முறை , தகுதிகான் பருவம் முடித்திட கல்வித்தகுதி உண்மை தன்மை வேண்டும் என்று நாளது தேதி வரை எவ்வித ஆனையும் வெளியிட வில்லை என்று P&R dept RTI கடிதம் Posted: 27 Jun 2017 08:00 AM PDT தகுதிகாண் பருவம் முடித்த முடித்த அரசு ஊழியர் ஒருவருக்கு அதற்கான ஆணை 6 மாதங்களுக்குள் வழங்கப்படவில்லை எனில் தகுதிகாண பருவம் முடிந்ததாக கருதப்படும்..... த.நா.மாநில மற்றும் சார்நிலை விதி 72(b) & அரசுக்கடிதம் 906271/79-1 பணியாளர் துறை நாள் 8.1.80

பணி வரன்முறை , தகுதிகான் பருவம் முடித்திட கல்வித்தகுதி உண்மை தன்மை வேண்டும் என்று நாளது தேதி வரை எவ்வித ஆனையும் வெளியிட வில்லை என்று P&R dept RTI கடிதம்



பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

'தமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.கோவையில் செய்தியாளர்களிடம் அவர்
நேற்று கூறியதாவது:
 கல்வித் துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்று வதற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளோம். இது வரை47 அறிவிப்புகள் வெளியாகி யுள்ளன. மேலும் பல அறிவிப்புகள் வெளியாக உள்ளன.‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் பல்வேறு பொதுத் தேர்வு களிலும் வெற்றிபெறும் வகை யில் தமிழக மாணவர்களின் திறனைமேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு உதவும் வகையில் 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் மற்றும் வரை படங்கள் அடங்கிய தொகுப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. சிபிஎஸ்சி பாடத் திட்டத்துக்கு சமமான கல்வியை மாநில அரசு கல்வித் திட்டத்திலும் அமல்படுத்த விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அரசுப் பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைப்பது தொடர்பான உத்தரவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களில் இதற்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கும்.பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் ரூ.7,700-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் 1-ம் தேதியே பகுதி நேர ஆசிரி யர்கள் சம்பளம் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பகுதி நேர ஆசிரியர் களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையின் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தனியார் பள்ளிகளில் வசூலிக் கப்படும் கல்விக் கட்டணம் தொடர்பாக, நீதிமன்றத் தீர்ப்புக் குப் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனினும், மிக அதிக அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட் டுள்ள குழுவிடம் புகார் தெரிவித்து, உரிய தீர்வு காணலாம்.குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக ஒவ்வொருவரும் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. எனினும், அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை. மதுரையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்பார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்

நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பிழக்கிறது பிளஸ் 2 மதிப்பெண்

நீட்' தரவரிசை பட்டியலின்படி மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கை
நடத்தப்படுவதால், 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு, மவுசு அதிகரித்துள்ளது. 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துளளது.

அதனால், பிளஸ் 2 மதிப்பெண், 'கட் - ஆப்' மதிப்பெண்கள் மட்டுமே, மருத்துவ இடங்களுக்கு உதவாது. 'நீட்' தேர்வு மதிப்பெண் அதிகமாக இருந்தால் மட்டுமே, தர வரிசையில் முன்னிலை பெற்று, அரசு ஒதுக்கீடு பெற முடியும். தமிழக அரசின் புதிய முடிவின்படி, பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கான மவுசு குறைந்து, 'நீட்' மதிப்பெண்ணுக்கான மவுசு அதிகரித்துள்ளது.

பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகத்தினரும், தனியார் பள்ளி மாணவர்களும், பிளஸ் 2 சிறப்பு பயிற்சிகளை குறைத்து, 'நீட்' தேர்வுக்கான பயிற்சிக்கு, முன்னுரிமை அளிக்க துவங்கி உள்ளனர். அதனால், தனியார் பள்ளிகளிலேயே நேரடியாக, 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகள் துவங்கி உள்ளன.

அதேபோல, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களுக்கு, கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது. பல புதிய பயிற்சி மையங்களும், சாதாரண டியூஷன் மையங்களும், 'நீட்' தேர்வு பயிற்சிக்கு தயாராகி உள்ளன. பயிற்சிக்கான கட்டணம், ஓர் ஆண்டுக்கு, 20 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

தமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள் !!

அரசுபள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில்.

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்.
1)அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ?

2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ?

3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ?

4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ?


5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.


6)பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?


7)ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ?


8)ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ?


9)பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?


10)இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது.


11)ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ?


12)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ?


13)ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric) பொருத்தக்கூடாது ?


14)ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ?


15)கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.


16)கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ?


17)கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?


18)கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

19)மாறி வரும் கல்வி கற்பிக்கும் முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ?



20)அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ? என்றும் நீதிபதி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

பிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்?.. கேள்வித்தாள் குழு தலைவர் அறிவிப்பு

சென்னை : எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2, வினாத்தாள் குழு அரசால்
நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக அரசு தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர், கு.தேவராஜன் நியமிக்கப்பட்டார்.
குழுவின் உறுப்பினராக, தேர்வுத்துறை முன்னாள் இணை இயக்குனர் ராமராஜன், பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர்கள் பூபதி, வாசு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சமீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்தவருடம் புதிதாக 11ம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு வருகிறது. எனவே முதலில் 11ம் வகுப்புக்கு கேள்விகள் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த குழு உறுப்பினர்கள் 11ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு கேள்விகள் வடிவமைக்க கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பாட நிபுணர்களுடன் பேசி வருகிறார்கள்.
இந்தகேள்விகள் மாணவர்களின் திறனை பரிசோதிக்கும்படி இருக்கும். மாணவர்கள் புரிந்து படித்திருப்பதை ஆய்வு செய்யும். அதே நேரத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் கேள்விகள் இருக்கும்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் கேள்விகள் வடிவமைப்பு தயாராகி விடும். அதன்பிறகு அரசின் ஒப்புதல் பெறப்படும். காலாண்டு தேர்வு வர இருக்கிறது. வினாத்தாள் வடிவமைத்து கொடுத்து அதன்பிறகுதான் தேர்வுத்துறை அதை அச்சடிக்க கொடுக்கும். அதனால் தான் விரைவில் கேள்விகளை வடிவமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.