யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/10/15

காலியாக உள்ள 218 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்ப முடிவு: 4-ம் கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம் - அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் திருப்பி ஒப்படைப்பு

அரசு மற்றும் தனியார் கல்லூரி களில் காலியாக உள்ள 218 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான 4-ம் கட்ட கலந் தாய்வு வரும் 4, 5-ம்தேதிகளில் நடைபெற உள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,655 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத் துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. 


இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (15 சத வீதம்) 398 எம்பிபிஎஸ் இடங்களும், 15 பிடிஎஸ் இடங்களும் ஒதுக்கப் பட்டன. மீதம் இருந்த 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 85 பிடிஎஸ் இடங்கள், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட 69 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட 597 எம்பிபிஎஸ் இடங்கள் 3 கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டன.

இந்நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திருப்பி அளிக்கப்பட்ட 67 எம்பிபிஎஸ் இடங்கள், 8 பிடிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மாநில அரசுக்கான 143 பிடிஎஸ் இடங்கள் 4-ம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.சென்னை அண்ணாசாலை ஓமந் தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத் துவமனையில் கலந்தாய்வு நடை பெற உள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்கக மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக