புதுடில்லி,: மொபைல் போன்களில், பேசும்போதே, அழைப்பு துண்டிக்கப்பட்டால், அதற்காக இழப்பீடுவழங்குவதற்கான திட்டத்தை, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' விரைவில் அறிவிக்கவுள்ளது. தொலைபேசி அல்லது மொபைல் போன்களில் பேசும்போது, திடீரென, அழைப்பு துண்டிக்கப்படுவது அதிகம் நிகழ்கிறது; இதை, 'கால் டிராப்' என்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு இதனால் பண இழப்பு ஏற்படுகிறது.
சம்பந்தப்பட்ட தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக வலியுறுத்தப்படுகிறது. ஆனால், அந்த நிறுவனங்கள் இதை ஏற்க மறுத்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு, டிராய் சார்பில், நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள்,அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும், டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது:அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதம், 15க்குள், கால் டிராப்புக்காக, வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளோம்.அந்த பரிந்துரையில் இதுபற்றிய விரிவான விவரங்கள் இடம்பெறும். இதுகுறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகவுள்ளது. கால் டிராப்புக்கான காரணம் குறித்தும், தரமான சேவையை வழங்குவது குறித்தும், விரிவான அறிக்கையை, அடுத்த சில நாட்களுக்குள் தாக்கல் செய்யும்படி, தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக