பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைக்காவிட்டால், அவர்களுக்கு அதற்கான பணம் வழங்கப்பட வேண்டும்' என, புதிய, மதிய உணவு திட்ட விதிகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், 13 கோடி குழந்தைகள் மதிய உணவு சாப்பிடுகின்றனர். தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை, 55 லட்சம் பள்ளிக் குழந்தைகள், பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடுகின்றனர்.மதிய உணவு தயாரிக்கும் ஊழியர்கள் வராதது, உணவுப்பொருள் கிடைக்காதது, எரிபொருள் தீர்ந்து விட்டது போன்ற பல காரணங்களால், சில நேரங்களில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட முடியாமல் போகிறது.
அத்தகைய நிலைமை இனி ஏற்பட்டால், எத்தனை நாட்களுக்கு உணவு வழங்கப்படவில்லையோ, அந்த நாட்களுக்கான பணம், அடுத்த மாதம், 15ம் தேதிக்குள் மாணவர்களுக்கு ரொக்கமாக வழங்கப்படும்.
இதற்கான விதிமுறைகள், 2013ல், அப்போதைய மத்திய அரசு கொண்டு வந்த, உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ளன.அந்த விதிகளை இப்போதைய அரசு பின்பற்ற முடிவு செய்துள்ளது.இதற்கான அறிவிப்பை, மத்திய அரசு நேற்று முன்தினம்வெளியிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:மதிய உணவு திட்டத் தின் படி வழங்கப்படும் உணவு தரமாக இருக்கிறதா என்பதை, உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி, அறிக்கை அளித்த பிறகு தான், மாணவர்களுக்கு பரிமாற முடியும்.
இந்த நடைமுறையும் விரைவில் பின்பற்றப்பட உள்ளது.இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக