யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/10/15

புதிய ரயில் கால அட்டவணையில் குமரி மாவட்டத்துக்கு புதிய ரயில்கள் இல்லை: பயணிகள் ஏமாற்றம்

ரயில்வே துறை அக்டோபர் 1ஆம் தேதி வெளியிட்ட புதிய ரயில் கால அட்டவணையில் புதிய ரயில்கள் அறிவிக்காததால் குமரி மாவட்ட ரயில் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கச் செயலர் பி. எட்வர்ட் ஜெனி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


நிகழாண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், ஆய்வுகள் முடிந்த பிறகு புதிய ரயில்கள் பற்றி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் ரயில் கால அட்டவணையில் புதிய ரயில்கள் அறிவிப்பு வெளியிடப்படும் என பயணிகள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் ரயில்கால அட்டவணையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படாததால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இன்டர்சிட்டி ரயில் நீட்டிப்பு: நாகர்கோவில் - திருநெல்வேலி - மதுரை வழித்தடத்தில் பகலில் பத்து மணி நேரத்துக்கு ரயில் இல்லாத குறையைப் போக்க திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.ரயில்கள் நின்று செல்லும் ரயில் நிலையங்கள்: நாகர்கோவில் - காந்திதாம், திருநெல்வேலி - ஹாபா, கன்னியாகுமரி திப்ரூகர் விரைவு ரயில்கள் மற்றும் நாகர்கோவில் - ஷாலிமர், திருநெல்வேலி - பிலாஸ்பூர்ஆகிய ரயில்கள் குமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை ரயில் நிலையத்தில்நிற்காமல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் கொங்கன் வழித்தடத்தில் மும்பை வழியாக செல்லும் இரண்டு விரைவு ரயில்களை குழித்துறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை குறித்தும் அக். 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட கால அட்டவணையில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதைப்போன்று நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு ரயில் இரணியல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை பற்றியும் அறிவிப்பு இல்லை.

சிறப்பு ரயில்களாக இயக்கம்:

தெற்கு ரயில்வேயில் புதிய ரயில்கள் அறிவிக்காத காரணத்தால் பழனி - பொள்ளாச்சி, சென்னை - ஹூப்ளி, எர்ணாகுளம் - அங்கமாலி உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதே போன்று திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை திருவனந்தபுரம் வரையிலும், திருவனந்தபுரம் - மங்களூர் ரயிலை கன்னியாகுமரி வரையிலும் நீட்டித்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக