யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/8/16

23/08/2010 முதல் 23/08/2016 வரை ! RTE act ல் சிக்கித் தவிக்கும் TET நிபந்தனை ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற எதிர்பார்ப்பு

2016 ஜுலைஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில்
நடந்துகொண்டுள்ள தமிழக சட்டப் பேரவையில்TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரிஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும் என்றுஎதிர்பார்த்து சுமார் மூவாயிரம் ஆசிரியர்கள்மற்றும் அவர்களின்
குடும்பங்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.



கடந்த3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு நீதிமன்ற வழக்குகள் காரணமாக தமிழகத்தில் நடத்தப்படாமல்இருந்த நிலையிலும் கூட அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில்23/08/2010 க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்களாகபணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள்தம் தகுதியை மாணாக்கர்களின் தேர்ச்சிவிழுக்காடு மூலம் தகுதியை முழுவதும்நிரூபித்துக் காட்டினர்.
ஆயினும்தமிழக அரசின் கருணைக் கடைக்கண்பார்வை படவில்லை என்ற மன கஷ்டத்தில்நடந்து கொண்டுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரில் மாண்புமிகுதமிழக முதல்வர் அம்மா அவர்களால் ஒருநல்ல விடியல் கிடைக்கும் எனகாத்துக் கொண்டு இருக்கின்றனர்.


காரணம்மத்திய அரசின் கட்டாயக் கல்விஉரிமைச் சட்டம் வெளிவந்த நாள்இதே ஆகஸ்டு 23 (2010)

தமிழகத்தில்2016 நவம்பர் 15 ஆம் நாளுக்கு பிறகுஇந்தவகை ஆசிரியர்களின் நிலையும் பணியும்....???
( கேள்விக்குறி)
என்பதைகடந்த பல நாட்களாக பலஊடகங்கள் நினைவுபடுத்தி வருகின்றன.


23/08/2010 க்குப்பிறகு
கடந்த ஐந்து ஆண்டுகளில் பணியில்சேர்ந்து (மன சங்கடத்திலும் கூட) நிறைவான தேர்ச்சி விழுக்காட்டினை தந்து கொண்டுள்ள இந்தஆசிரியர்கள் இன்றும் ஆசிரியர் தகுதித்தேர்வைக் காரணம் காட்டி நியாயமாககிடைக்க வேண்டிய பல உரிமைகள்மறுக்கப்பட்ட நிலையில் இன்றுவரை பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில்
பல கல்வி மாவட்டங்களில் இதுவரை...

ஒரு சில ஆசிரியர்களுக்கு...

* வளரூதியம்இல்லை.

* ஊக்கஊதியம் இல்லை.

* மேல்படிப்புக்கு அனுமதி இல்லை.

* தகுதிகாண்பருவம் முடிக்க ஒப்புதல் இல்லை.

* மருத்துவவிடுப்புக்கு அனுமதி இல்லை.

* பணிப்பதிவேடு(SR) துவங்கவில்லை.

* ஈட்டியவிடுப்பு பலன் இல்லை.

* பங்கீட்டுஓய்வு ஊதிய திட்ட எண்பெற இயலவில்லை.

* கடன்பெறக்கூட பள்ளி தலைமை ஆசிரியர்கள்ஊதிய சான்று தர மறுப்பு.

* வரையறைவிடுப்புகள் இல்லை.

₹ மிகவும்கொடுமை இதில் யாதெனில் பணியில்சேர்ந்த நாள் முதல் இன்றுவரை ஒரு சில ஆசிரியர்கள்ஊதியமே பெறாமல் இன்றும் பணியில்உள்ளனர்.

இவை எல்லாவற்றிலும் மேலாக தகுதியற்ற ஆசிரியர்கள்என ஒரு சில பள்ளிகளின்மூத்த ஆசிரியர்களால் எள்ளி நகையாடப்படும் சூழலும்உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.

மாண்புமிகு
தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கருணைஉள்ளத்தோடு, இவர்களின் பிரட்சனைகளை உள்ளார்ந்து பார்க்கும் நிலையில் 23/08/2010க்குப் பிறகு பணிநியமனம் பெற்றுள்ள அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளி பட்டதாரிஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழுவிலக்கு அளிப்பது மட்டுமே ஒரே தீர்வு.

இவர்களின்ஒட்டுமொத்த ஒரே நம்பிக்கை தமிழகஅரசின் கல்வி சார்ந்த கொள்கைமுடிவில் மறு பரிசீலனை செய்துபணியில் உள்ள இந்த 3300 பட்டதாரிஆசிரியர்களின் எதிர்காலத்தை கருணை உள்ளத்துடன் பார்த்து, ஒரு அரசாணை பிறப்பிக்க வேண்டும்என தமிழக முதல்வர் மாண்புமிகுஅம்மா அவர்களின் தனிப் பிரிவில் கடந்தஜனவரி மாதம் சுமார் ஐநூறுஆசிரியர்கள் மனு கொடுத்து இருந்தனர்.

முதன்மைஅமைச்சர்களின் மேலான கவனத்திற்கும் கொண்டுசென்றனர்.

2016 ஜுலைஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில்
நடக்கும்சட்ட மன்றக் கூட்டத் தொடரில்கல்வித் துறை சம்மந்தமான அறிவிப்புகளில்இந்த பணியில் உள்ள நிபந்தனைஆசிரியர்களுக்கு TET லிருந்து முழு விலக்கு தந்துஅரசாணை வெளிவரும் என எதிர் பார்த்துகாத்துக் கொண்டு இருந்த சுமார்மூவாயிரம் ஆசிரியர்களுக்கும் காத்து கொண்டு உள்ளனர்.


தமிழக அரசின் கல்வித் துறைஅரசாணை 181 ன் அடிப்படையில் எதிர்வரும் நவம்பர் 15 (2016) அன்றைய தினத்திற்கு முன்புஇந்த வகை நிபந்தனை ஆசிரியர்களின்பிரச்சினைகளுக்கு தீர்வாக  TET லிருந்துபணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்குமுழு விலக்கு அளிக்க தமிழகஅரசு முன் வந்தால் சுமார்3000 ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என பல்வேறு ஆசிரியர்சங்கங்கள் தமிழக அரசிடம் கோரிக்கையைவைக்கின்றனர்.

இந்த சட்ட மன்ற கூட்டத்தில்நல்ல தீர்வினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மாஅவர்கள் அறிவிக்கும் பட்சத்தில் இவ்வகை TET நிபந்தனை ஆசிரியர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி முழுமையானமன நிம்மதியுடன் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடாடி மகிழ்வர்.


செய்தி: தென்னகக் கல்விக் குழு. திருச்சி.
Chandru A <chandru.103air@gmail.com>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக