யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/8/16

ஆசிரியர்களிடம், மாணவர்கள் அதிகப்பற்றுடன் நடந்து கொள்ள வேண்டும்: சகாயம் அறிவுரை

கம்மாபுரம்: 'நல்லாசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில் படிக்கும் மாணவர்கள்அனைவரும் தனியார் பள்ளிக்கு இணையாகதேர்ச்சி பெற முடியும்' எனஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசினார். கம்மாபுரம்அடுத்த இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில், மக்கள் பாதை இயக்கம்சார்பில்
மாணவர்கள் விழிப்புணர்வு மற்றும் நலத்திட்டம் வழங்கும்விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் பாலமுரளி, துணை சேர்மன் கனகசிகாமணி, ஊராட்சித் தலைவர் கதிரொளி, மக்கள்பாதை இயக்க நிர்வாகி கேசவபெருமாள்முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்வரவேற்றார். நிர்வாகிகள் சண்முகம், புஷ்பராஜ், கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


விழாவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், தலைமை தாங்கி, பேசியதாவது:
தமிழ்நாட்டில்எந்த மாவட்டத்தில் வேலை செய்தாலும் அரசுபள்ளிகளில் அனைத்து வசதிகளும் உள்ளதாஎன ஆய்வு செய்து, அங்குள்ளபிரச்னைகளை தீர்ப்பதையே கடமையாக கொண்டுள்ளேன். அரசுமூலம் கட்டப்படும் பள்ளி கட்டடங்கள் தரமாககட்டப்படுகின்றனவா, சாலைகள் தரமாக போடப்படுகின்றனவாஎன ஆய்வு செய்து, அவற்றைதரமாக அமைப்பதில் முழு வீச்சில் செயல்படுகிறேன்.
தனியார்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பெற்றோர்களை டாடி, மம்மி எனகூப்பிடும் போது மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் தமிழ்மண்ணில் பிறந்த குழந்தைகளுக்கு தமிழ்மொழியில் கற்பிக்க வேண்டும். அவர்களுக்கு தரமான கல்வி அரசுபள்ளிகளில் வழங்கப்படுகிறது. கடந்த 2011ல் மதுரையில் பணியாற்றியபோது, தனியார் பள்ளிக்கு இணையாகஅரசு பள்ளி தேர்ச்சியும், மதிப்பெண்இருக்க வேண்டும் என மாவட்ட கல்விஅலுவலருக்கு உத்தரவிட்டேன். அதன்படி, மாலை வகுப்புகள் நடத்தப்பட்டுதேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி, ஏழை எளிய மக்களின்குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டது.
அப்துல்காலம்'எனது உள்ளம் கவர் நாயகர்என்றால் எனக்கு ஆரம்ப காலபடிப்பில் பாடம் நடத்திய ஆசிரியர்கள்தான்' என்றார். எனவே, மாணவர்களாகிய நீங்கள்அதிகப்பற்றுடன் ஆசிரியர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெற்று டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., விஞ்ஞானிகளாகமாறும் சக்தியும், ஆற்றலும் உங்களிடம் உள்ளது. நானும் உங்களைபோல் அரசு பள்ளியில் படித்துதான் கலெக்டராக உள்ளேன்.
கடந்த2009ல் பொது தேர்வு முடிவுகள்வெளி வந்தபோது, அரசு பள்ளியில் படித்தமாணவர்கள் கதிர்வேல், ராஜ்கமல் இருவரும் 500க்கு 499 மதிப்பெண் எடுத்தனர். இருவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு அரசின் சிறப்பு திட்டத்தின்கீழ் 27 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், அவர்கள் விரும்பும்தனியார் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கலாம். ஆனால்அவர்கள் இருவரும் அந்த தொகையை வாங்கமறுத்துவிட்டனர். ஏன் என கேட்டதற்குநாங்கள் இருவரும் அரசு பள்ளியிலேயே படிக்கவிரும்புகின்றோம் என்றனர். அது எனக்கு மகிழ்ச்சியைதந்தது.
அவர்கள்அரசு பள்ளியில் மேல் படிப்பு படித்து, 2011ல் பிளஸ் 2 பொது தேர்வில்ராஜ்கமல் 1,171, கதிர்வேல் 1,167 மதிப்பெண் எடுத்தனர். நல்லாசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில் படிக்கும் மாணவர்கள்அனைவரும் தனியார் பள்ளிக்கு இணையாகதேர்ச்சி பெற முடியும். அதேபோல் மதிப்பெண் எடுக்க முடியும்.

மக்கள்பாதை என்பது ஏழை எளியமக்களுக்கு உதவி செய்யவும், தமிழ்வழியில் படிப்பதால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை போக்கஉருவாக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளிக்கு2 லட்சம் ரூபாய் மதிப்பில் கணினி, டேபிள், சேர், மின் விசிறிகள்வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக