யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/4/17

காஷ்மீர் குகைபாதை: 10 அம்சங்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிக நீளமான குகைப்பாதையை வரும் ஞாயிறு (ஏப்ரல்2) பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த பாதையின் 10 முக்கிய அம்சங்கள்:

நேரம் குறையும்:

1.காஷ்மீரில் உத்தம்பூர் மாவட்டம் செனானி முதல் ரம்பன் மாவட்டம் நாஷ்ரி என்ற இடம் வரை ரூ.2,500 கோடி செலவில் இந்த குகைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
2. கடந்த 2011ல் துவங்கிய இந்த குகை பாதை அமைக்கும் பணி தற்போது முடிந்துள்ளது. சுமார், 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
3.இப்பாதையின் நீளம் 10.89 கிலோ மீட்டர்.அதாவது, ஆசியாவிலேயே நீளமான குகைப் பாதை என்ற பெயரைப் பெறுகிறது. 
3.இந்த பாதை மூலம், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் பயணம், 2 மணி நேரம் குறையும்.
4.இந்த பாதையால் தினமும் ரூ.27 லட்சம் அளவுக்கு எரிபொருள் சேமிக்கப்படும்.
 5. ஜம்மு பிராந்தியத்தில்உள்ள கிஸ்த்வர், தோடா, பதேர்வா பகுதிகளுக்கும் இணைப்பு வசதி கிடைக்கும்.

6. இந்த பாதையில்,ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
7.பாதையில் யார் நுழைந்தாலும் அவர்களை கண்டறிய முடியும்.
8.தீத்தடுப்பு சாதனங்கள், மின்னணு கண்காணிப்பு முறைகள் பாதை நெடுக பொருத்தப்பட்டுள்ளன.9.பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆட்படாமல் இருக்க பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன.
10.கடும் பனிப்பொழிவு, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாதவாறு, ஆண்டு முழுவதும் பயன்தரத்தக்க வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய பொறியாளர்களின் திறமைக்கு இக்குகை பாதை ஒரு சான்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக