விருதுநகர்: எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கி, ஏப்.12ம் தேதிக்குள் முடியுமென கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் (மார்ச் 30) முடிவடைந்தது. இதேபோல, பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.
பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள்களை திருத்துவதற்கு, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும், தலா ஒரு திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று மொழி விடைத்தாள் திருத்தப்படும். 4ம் தேதி பிற பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். எஸ்எஸ்எல்சி விடைத்தாள்களை ஏப்.12ம் தேதிக்குள்ளும், பிளஸ் 2 விடைத்தாள்களை ஏப்.24ம் தேதிக்குள்ளும் திருத்தி முடிக்க, பள்ளி தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக