யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/4/17

TET

  கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல்  மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் - ரூபாயாத் –பாரசீக மொழி
282.  கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்
283.  கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்
284.  கவிராஜன் கதையாசிரியர்    - வைரமுத்து
285.  கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை
286.  கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
287.  கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி                    
288.  கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்
289.  கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்
290.  கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்
291.  காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்
292.  காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
293.  காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்
294.  காந்தியக் கவிஞர்                     -  நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை                     
295.  காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
296.  காரி  (கலுழ்ம்)  – காரிக்குருவி
297.  காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை
298.  காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
299.  காளக்கவி எனப்படுபவர் - காளமேகம்                                                     
300.  காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்
301.  கிரவுஞ்சம் என்பது – பறவை
302.  கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ  1750 
303.  கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி
304.  கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்
305.  குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
306.  குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்
307.  குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72
308.  குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி
309.  குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம்
310.  குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
311.  குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்
312.  குறிஞ்சிக் கிழவன் - முருகன்                                                                            
313.  குறிஞ்சித் தேன் ஆசிரியர் - நா.பார்த்தசாரதி                                             
314.  குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர்
315.  குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்
316.  குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்
317.  குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400
318.  குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள்
319.  குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309
320.  குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம்  பெறும் புலவர்கள் – 18 பேர்
321.  குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்
-குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்
322.  குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்
323.  குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்
324.  குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440
325.  குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ
326.  குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205
327.  கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர்  - அடியார்க்கு நல்லார்
328.  கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்
329.  கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்
330.  கைவல்ய நவ நீதம் எழுதியவர்            - தாண்டவராயர்
331.  கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் –  இறையனார்
332.  கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை
333.  கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்
334.  கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு
335.  கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்
336.  கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி
337.  சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன்
338.  சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்
339.  சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்
340.  சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை
341.  சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
342.  சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
343.  சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்
344.  சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்
345.  சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்                       

347.  சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர்
348.  சங்கப்பாடல்  இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30
349.  சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்
350.  சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
351.  சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்
352.  சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்
353.  சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் -  நம்மாழ்வார்          
354.  சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் - செய்குத் தம்பிப் பாவலர்
355.  சதுரகராதி ஆசிரியர் -  வீரமாமுனிவர்
356.  சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் - கவிஞர் தமிழழகன்
357.  சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
358.  சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் - வச்சிர நந்தி சங்கம்
359.  சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914
360.  சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்
361.  .   சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்
362.  .   சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் -  மாயூரம் வேத நாயகர்
363.  சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்
364.  சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்
365.  சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்
366.  சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்
367.  சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்
368.  சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி
369.  சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்
370.  சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்
371.  சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் - படிக்காசுப் புலவர்
372.  சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் - தாழை நகர்
373.  சிவப்பு ரிக்‌ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்
374.  சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64
375.  சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்
376.  சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்
377.  சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள்
378.  சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்
379.  சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
380.  சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்
381.  சிறுமுதுக்குறைவி – கண்ணகி
382.  சின்ன சங்கரன் கதையாசிரியர்  - பாரதியார்
383.  சின்னூல் எனப்படுவது  -  நேமி நாதம்
384.  சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு  - 1705
385.  சீகாழிக்கோவை எழுதியவர்  –  அருணாசலக் கவிராயர்
386.  சீதக்காதி என அழைக்கப்படுபவர் - செய்யது காதர் மரைக்காயர்
387.  சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க
388.  சீறாப்புராணம் ஆசிரியர்  -  உமறுப்புலவர்
389.  சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975
390.  சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர்  –  மு.கதிரேசன் செட்டியார்
391.  சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
392.  சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
393.  சுமைதாங்கி ஆசிரியர் –  நா.பாண்டுரங்கன்
394.  சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
395.  சுரதாவின் இயற்பெயர்  -  இராசகோபாலன்
396.  சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
397.  சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
398.  சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்
399.  சூடாமணி நிகண்டின் ஆசிரியர்  - மண்டல புருடர்
400.  செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் - மறக்கள வழி- வாகைத்திணை

401.  செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு  - 1903
402.  செந்தாமரை நாவல் ஆசிரியர்  -  மு.வரதராசன்
403.  செம்பியன் தேவி நாவலாசிரியர்    -  கோவி.மணிசேகரன்
404.  செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
405.  செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
406.  சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
407.  சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
408.  சேயோன்  - முருகன்
409.  சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
410.  சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
411.  சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
412.  சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
413.  சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
414.  சைவசமயக் குரவர்கள்  - நால்வர்
415.  சைவத் திறவுகோல்  நூலாசிரியர் – திரு.வி.க
416.  சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
417.  சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும                      

   417.  சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
418.  சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
419.  சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள
420.  சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
421.  சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
422.  சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
423.  சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
424.  சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா
425.  ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
426.  ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
427.  ஞானக் குறள் ஆசிரியர்  -  ஔவையார்
428.  ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
429.  ஞானவெண்பாப் புலிப்பாவலர்  –   அப்துல் காதீர்
430.  டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
431.  டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை
432.  தக்கயாகப் பரணி ஆசிரியர்  –  ஒட்டக்கூத்தர்
433.  தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர்  -   சோமசுந்தரபாரதியார்
434.  தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்
435.  தண்டி ஆசிரியர்  -  தண்டி
436.  தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை  –  35 அணிகள்
437.  தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்
438.  தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்
439.  தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
440.  தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர்
441.  தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
442.  தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
443.  தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்
444.  தம் மனத்து எழுதிப்  படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார்
445.  தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி
446.  தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
447.  தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்
448.  தமிழ் நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்
449.  தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா
450.  தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம் பிள்ளை
451.  தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
452.  தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
453.  தமிழ் மொழியின் உப நிடதம் -  தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
454.  தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
455.  தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
456.  தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
457.  தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
458.  தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
459.  தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி
460.  தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு
461.  தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
462.  தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
463.  தமிழ்த்தாத்தா - உ.வே.சா
464.  தமிழ்த்தென்றல் -  திரு.வி.க
465.  தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
466.  தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
467.  தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
468.  தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
469.  தமிழ்மொழி - பின்னொட்டு மொழி
470.  தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
471.  தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்
472.  தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
473.  தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
474.  தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா
475.  தமிழில் பாரதம் பாடியவர்  – வில்லிபுத்தூரார்
476.  தமிழில் முதல் சதக இலக்கியம்  –  திருச்சதகம்
477.  தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
478.  தமிழின் முதல் நாவல் -  பிரதாப முதலியார் சரித்திரம் -  மாயூரம் வேத நாயகர்
479.  தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை -  பாரதிதாசன்
480.  தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு
481.  தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் -  புறநானூறு 366
482.  தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
483.  தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
484.  தலைமுறைகள் நாவலாசிரியர் –  நீல .பத்மநாபன்
485.  தலைவன் பிரிந்த நாளை  ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
486.  தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்                         488.  தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
489.  தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்  - த.நா.குமாரசாமி
490.  தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
491.  தாமரைத் தடாகம் நூலாசிரியர்  -  கார்டுவெல் ஐயர்
492.  தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
493.  தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர்  -  வள்ளலார்
494.  தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
495.  தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
496.  தானைமறம் – தும்பை
497.  தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர்  –  நா.காமராசன்
498.  தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
499.  திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
500.  திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் – கணிமேதாவியார்

501.  திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
502.  திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
503.  திரமிள சங்கம் தோற்றுவித்தவர்  - வச்சிர நந்தி
504.  திரமிளம்  என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
505.  திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை
506.  திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
507.  .   திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள்  -   பாலி,பிராகிருத மொழிகள்,
508.  திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
509.  திராவிட வேதம் - திருவாய் மொழி
510.  திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
511.  திரிகடுகம்  -  சுக்கு,மிளகு,திப்பிலி
512.  திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
513.  திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
514.  திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
515.  திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
516.  திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர்
517.  திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
518.  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
519.  திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
520.  திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்
521.  திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
522.  திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
523.  திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்
524.  திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் -  திருச்செந்தூர்
525.  திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
526.  திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் -  பெ.சுந்தரம் பிள்ளை
527.  திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
528.  திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்  -  நம்பியாண்டார் நம்பி
529.  திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா
530.  திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன்
531.  திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
532.  திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்
533.  திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
534.  திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் -  டாக்டர் கார்டுவெல்
535.  திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
536.  திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720
537.  திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
538.  திருப்புகழ் பாடியவர்  - அருணகிரி நாதர்
539.  திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
540.  திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
541.  திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
542.  திருமழிசைஆழ்வார் இயற்பெயர்      - பக்திசாரர்
543.  திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி
544.  திருமுருகாற்றுப்படை ஆசிரியர்  – நக்கீரர்
545.  திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)
546.  திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
547.  திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
548.  திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
549.  .திருவாசகப் பாடல் எண்ணிக்கை        - 656
550.  .திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்                        

551.  . திருவாவடுதுறை  ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
552.  .திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்
553.  .திருவெங்கை உலா ஆசிரியர் -  சிவப்பிரகாச சுவாமிகள்
554.  .திருவேரகம் –  சுவாமிமலை
555.  .திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
556.  .தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
557.  .தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
558.  .திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் –  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
559.  .தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
560.  .துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
561.  .தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
562.  .தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
563.  .தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
564.   தென்னவன் பிரமராயனெனும்
565.  தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
566.  தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
567.  தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
568.  தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
569.  தேரோட்டியின் மகன்   நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
570.  தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
571.  தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்
572.  .   தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
573.   தேன் மழைக் கவிதைத்தொகுப்பு       - சுரதா
574.  தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
575.  தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் -   தமிழி
576.  தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
577.  தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
578.  தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
579.  தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
580.  தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
581.  பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
582.  தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்-
சி.புன்னைவன நாத முதலியார் – 1922
583.  தொல்காப்பிய மெய்ப்பாடுகள் –  8
584.  தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்
585.  தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
586.  தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
587.  தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
பொருளதிகாரம்  இறுதி நான்கு இயல்கள்-
588.  தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை-
     அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
589.  தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
590.  தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
591.  தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
592.   தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
593.  தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
594.  தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
595.  தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்--க.வெள்ளைவாரனார்
596.  தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும்  கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது  – கண்கள்
597.  தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
598.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
599.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
600.  தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக