யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/4/17

நீட்' தேர்வு எழுத வயது வரம்பு தளர்வு

புதுடில்லி: 'இந்த ஆண்டு நடக்கும், 'நீட்' தேர்வை, 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் எழுதலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 'பிளஸ் 2க்குப் பின், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை, 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சி.பி.எஸ்.இ., நிர்ணயித்த வயது வரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: நடப்பு, 2017ல் நடக்கும் நீட் தேர்வில், 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம். தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை, அடுத்த ஆண்டு முதல் நிர்ணயித்து கொள்ளலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஏப்., 5 வரை நீட்டிக்கப்படுகிறது.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக