யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/4/17

TET

221.  ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
222.  ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
223.  ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி
224.  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
225.  ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
226.  ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
227.  ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
228.  ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
229.  ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ
230.  ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
231.  கங்கை மைந்தன் – தருமன்
232.  கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
233.  கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
234.  கடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 449
235.  கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 49
236.  கடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  - 1850
237.  கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை
238.  கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு சுந்தரம்
239.  கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
240.  கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா
241.  கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
242.  கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார்
243.  கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு
244.  கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா
245.  கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் -  இராமவதாரம்
246.  கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்
247.  கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர்
248.  கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்
249.  கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்
250.  கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை
251.  கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்
252.  கரந்தை - ஆநிரை மீட்டல்
253.  கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ
254.  கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
255.  கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
256.  கருப்பு மலர்கள் ஆசிரியர் -  நா.காமராசன்
257.  கல்கியின் முதல் நாவல் - விமலா
258.  கலம்பக உறுப்புகள்  - 18
259.  கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
260.  கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
261.  கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
262.  கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்
263.  கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
264.  கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
265.  கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
266.  கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
267.  கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
268.  கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
269.  கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
270.  கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
271.  கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்
272.  கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை
273.  கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
274.  கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்
275.  கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை
276.  கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்
277.  கவரி வீசிய காவலன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
278.  கவிஞர் துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி
279.  கவிஞர் மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன்
280.  கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல்  மொழிபெயர்ப்பு – லைட் ----ஆஃப் ஆசியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக