யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/12/18

அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டவுடன் 40k வாங்கும் அவர்களுக்கு இன்னும் உயர்வா??என துடித்து எழும் நம் தோழர்களுக்கு இந்த பதிவு::-

உங்களுக்கு தெரியுமா? இந்த 40000 அவர்கள் எ ப்படி வாங்கினார்கள் என்று???? சிம்பிள்! ஆண்டாண்டு காலமாக இப்படி அழுது உண்ணாவிரதம் இருந்து சிறைக்கு சென்று ! வேலை நீக்கம் அடைந்து என படி படியாக ஆயிரம் ஐநூறு என சிறுக சிறுக வந்துதான் இன்று உங்கள் கண்களுக்கு விரியும் 40kஆனது! சரி உங்கள் பக்கத்து வீட்டிலோ தெரு விலோ ஒரு பண்ணை வீடு ! லக்சுரி கார் ! விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் என இருப்பவர்கள் யார் என பாருங்கள், அரசியல் வாதியோ தொழிலதிபரோ இருப்பார் ஆசிரியரோ வங்கி ஊழியரோ கிளார்க் கோ இருக்க மாட்டார் வருமான வரியை நாமெல்லாம் எவ்வளவு கட்டவேண்டும் என்று ஆடிட்டருடன் பேசி முடிவு 
செய்வோம் இவர்களுக்கு பிடித்து கொண்டு மீதியை கொடுக்கும் ! இன்று நாம் பாராட்டும் காவல் துறை அதிகாரிக்கு பொன்மாணிக்கவேல் அரசு அலுவலர் தான் டெல்லியில் சிறந்த அரசு அதிகாரி என பரிசு வாங்கிய சகாயம் ஐயா அரசு அதிகாரி தான்! இவர்கள் கேட்கும் ஆயிரம் ஐநூறு உங்கள் பாக்கெட்டுகளில் இருந்து பிடுங்குவது போல கோபமாக எதிர்க்கும் நீஙீகள்...கோடி கணக்கில் நம் வரிப்பணத்தில் கொள்ளையடிக்கும் அரசையோ அரசு காண்ட்ராக்ட்டர்களையோ ஏன் எதற்க்கு என கேட்க முடியாது! சரி இவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவோம் உங்களில் வேலை இல்லாத நண்பருக்கு அந்த வேலையை தருவோம்! யாராவது அரசுக்கு உதவ தயாரா? சம்பளம் கேட்காத, உயர்வு கேட்காத, விடுமுறை கேட்காத,  லோன் கேட்காத, அந்த நல்லவர்கள் யார் யார்??  அது சரி நாங்கள் வேலை இல்லாமல் இருக்கோம் இவர்களுக்கு சம்பள உயர்வா என கேட்கும் சகோதரர்கள் அரசு வேலைக்கான தரம் அறியும்  தேர்வில் ஏன் வெற்றி பெறவில்லை???  இன்று இவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் நம்ம தினசரி வாழ்க்கை பாதிக்கும் என நினைக்கும் நாம் அரசு நடத்தவேண்டிய பஞ்சாயத்து எலக்ஷனை நடத்தி ஊருக்கு ஒரு தலைவரை போடலைன்னு கொதிக்கலையே ஏன்? 19தொகுதில  MLAஇல்லையே அதனால் அந்த தொகுதி நல்லது கெட்டத எடுத்து சொல்லி கேட்டு பெற MLA வேண்டும்னு கதறலயே ஏன்? கஜா புயல் சுஜா புயல்னு வந்தா நாமெல்லாம் டிவி ல பார்த்து உச்ச கொட்டும் போது மழையில் மிண் கம்பத்தில் உட்கார்ந்து கொண்டு இறங்கிவந்து உணவருந்த நேரமின்றி கம்பியில் அமர்ந்து உணவருந்தும் மின் ஊழியரை பாராட்டினோம் ஆனால் ஊதிய உயர்வுன்னதும் நம்ம பீரோவில யாரோ கை விடாடார்போல துடிக்கிறமே எப்படி???? கல் குவாரியை தோண்டும் போது இரவாகி விட்டதால் அங்கேயே படுத்து கொண்டிருந்த அரசு அதிகாரியை பாராட்டினோமே இப்ப அவர் ஊதிய உயர்வு கேட்டதும் உட்காற்ற இடத்தில் சூடு வைத்த மாதிரி எரிகிறோமே அது ஏன்? பொண்டாட்டி புள்ளியை சென்னைல விட்டுட்டு போலீஸ் அதிகாரி எவன் வீட்டு நகையையோ பணத்தையோ மீட்க மொழி தெரியாத வட இந்தியாவில் சுடப்பட்டு இறந்தபோது அய்யோ பாவம் என்றோமே! அவரின் சக ஊழியர் ஆயிரம் ரூபாய் உயர்வு கேட்டதும் நம் அப்பா எழுதி வைத்த சொத்து பத்திரத்தை பிடுங்கியது போல பதறுகிறோமே ஏன்? ஒரு ஆக்ஸிடென்ட் கொலை என்றதும் பார்த்துவிட்டு பரிதாபப்பட்டு வீட்டில போய் படுத்துக் கொள்வோம்,  ஆனால் அந்த இடத்திலேயே அன்றைய இரவைக் கழிக்கும் காவலர் ஆகட்டும் தாசில்தார் மருத்துவ ஊழியர்கள் சாலை பணியாளர் போன்ற அனைவரும் அரசு ஊழியர்கள் என்பதை நாம் ஏன் சிந்திக்க மறுக்கிறோம்! 12 மாதங்களில் ஒரு மாதம் பள்ளி விடுமுறை விடுகிறார்கள் அந்த ஒரு மாதம் கூட நாம் நம் குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ளாமல் எங்காவது ஊருக்கு  அனுப்பலாமா விடுமுறை பள்ளியில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறோம் அந்தப் பதினொரு மாதங்கள் இந்த குழந்தைகளுக்காக வேலை செய்யும் அந்த ஆசிரியர்களை பற்றி நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா?? அவர்கள் ஊதிய உயர்வு கேட்டதும் நம் வீட்டில் பாதியை பிரித்துக்கொடுக்க கேட்டது போல் துடிக்கிறோமே ஏன்? இன்று நமது மாநில அரசும் மத்திய அரசும் உலக வங்கி அந்த வங்கி இந்த வங்கிகளிடம் கடன் வாங்கி நாட்டின் கடன் எத்தனை ஆயிரம் கோடி என்று கூறுகிறார்களே அதில் எத்தனை ஆயிரம் கோடியை இந்த அரசு ஊழியர்களிடம் கொடுத்து விட்டார்கள் என்று என்றாவது நீங்கள் கேட்டதுண்டா? அதனால் நாம் அவர்களுக்கு உதவி  செய்ய தேவை இல்லை அவசியமின்றி அவர்களை உதாசீனப்படுத்த வேண்டாம் என்பது எனது அன்பான வேண்டுகோள் , நம் குடும்பத்திலும் யாரோ ஒரு அரசு ஊழியர் இருப்பார்,  இல்லை நாளை வருவார் என்பதை மனதில் வைத்து நாம் நமது வேலையை பார்ப்போம்! அவர்கள் அவர்கள்  வேலையை பார்க்கட்டும் நன்றி  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக