யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/12/18

8 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை

சென்னை உட்பட, எட்டு கடலோர மாவட்டங்களுக்கு, இன்று கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், துாத்துக்குடி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கன மழை பெய்யலாம்.நாளை, சில இடங்களில், லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யும். நாளை மறுநாள், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று லேசான மழை பெய்தது. மாலை முதல் அதிகாலை வரை, மலைப்பகுதி மாவட்டங்களில் பனி மூட்டம் காணப்பட்டது.இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக