வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்கிறது. இதற்கெல்லாம் காரணம், காற்றழுத்த தாழ்வு நிலைதான் என்றாலும், இது வலுவடைந்து அடுத்த சில நாட்களில் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது. காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருவதால், 3 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும், 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, வங்கக்கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை, 6ம் தேதிவாக்கில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரம் அடைகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய பிறகு அது மேலும் தீவிரம் அடைந்து அடுத்த 4 நாட்களில் அதாவது டிசம்பர் 10ம் தேதி வாக்கில், புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக