யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/8/16

மொத்தம் 5.82 கோடி வாக்காளர்கள் பட்டியலில் 3.75 லட்சம் இரட்டை பதிவுகள் கண்டுபிடிப்பு: வீடுவீடாக ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.

தமிழக வாக்காளர் பட்டியலில் 3.75 லட்சம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அலுவலர்களைக் கொண்டு வீடுவீடாக சரிபார்க்கும் பணியை தேர்தல் துறை தொடங்கியுள்ளது.தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த மே மாதம் முடிந்துள்ளது.
அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதில், 5.82 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.தேர்தல் நெருங்கிய நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர்கள் பெயர், இரட்டைப்பதிவுகள் அதிகளவில் இருப்பதாக புகார் தெரிவித்தன.

தேர்தல் ஆணையத்துக்கும், தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடமும் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. 19 முதல் 23 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் பதிவு எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்ததால், புதிய வாக்காளர்கள் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்காக வீடு, வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.இதனால், 3.70 லட்சத்துக்கும் மேற்பட்ட இரட்டை பதிவுகள், இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. தொடர்ந்து, மே 16-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்த அடுத்த மாதத்தில் இருந்து வழக்கமாக புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல், மாநில தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. சட்டப்பேரவை தேர்தல் போல், வாக்காளர் பட்டியல் தொடர்பான குழப்பம் இதிலும் வந்துவிடக் கூடாது என்பதால், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிகாரி தகவல்

இது தொடர்பாக, தேர்தல் துறை அதிகாரி ஒருவர் ‘ தி இந்து’விடம் கூறியதாவது:தற்போது தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் 3.75லட்சம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பட்டியல், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி அலுவலர்கள், இந்த பட்டியலில் உள்ள பெயர்களை மீண்டும் வீடுவீடாக சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர் எந்தஇடத்தில் தற்போது இருக்கிறார் என்பதை உறுதி செய்து, மற்றொரு இடத்தில் இருக்கும் பெயர் அவரது அனுமதியுடன் நீக்கப்படும். தொடர்ந்து இந்த பணிகள் நடக்கும். புதிய வாக்காளர்கள் வழக்கம் போல், இணையதளத்தில் தங்கள் பெயர்களை சேர்க்கலாம். அதுபோல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவை தொடர்ந்து நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்களுக்கு இன்று கட்டாய இடமாறுதல்

அரசு பள்ளிகளில், இன்று துவங்கும் பணி நிரவல் கலந்தாய்வில், தமிழ், ஆங்கில ஆசிரியர்கள், கட்டாய இடம் மாற்றப்பட உள்ளனர். தமிழக அரசின் பல பள்ளிகளில்,மாணவர் எண்ணிக்கை விகிதாச்சாரத்தை விட, 2,500க்கும் மேலான ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்.
இவர்களை, பணி நிரவல் என்ற பெயரில், வேறு பள்ளிகளுக்கு கட்டாய இடமாற்றம் செய்யும் கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. ஆசிரியர்களின் அதிருப்தியை சமாளிக்க, மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

l பள்ளியில், 9 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கு, முறையே தலா, ஒரு ஆசிரியர் என, ஐந்து பேர் இருக்க வேண்டும். வகுப்புகளில், 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால், 35 மாணவர்களுக்கு ஒருவர் என, கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார்.

l ஆறாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, வகுப்புக்கு, 35 மாணவர்கள் வீதம், 105 மாணவர்களுக்கு, மூன்று ஆசிரியர்கள் பணியில் இருப்பர். மாணவர்கள் அதிகம் இருந்தால், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கூடுதலாக நியமிக்கப்படுவார்.

கூடுதல் ஆசிரியர்களில், ஒரே பாடத்தில் இரு ஆசிரியர்கள் இருந்தால், அவர்களில் கடைசியாக பணியில் சேர்ந்தவர் மாற்றப்படுவார். பின், தமிழ் ஆசிரியர், அடுத்து ஆங்கில ஆசிரியர்களும், அடுத்தடுத்து மாற்றப்பட உள்ளதால், மொழி புலமை பெற்ற ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

TRB:ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வு: 194 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 272 இளநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 15 முதல் 30-ம் தேதி வரை வழங்கப்பட்டன.
இந்த நிலையில், இப்பணி களுக்கு விண்ணப்பித்தவர்களில் 194 பேரின் விண்ணப்பங்கள் உரிய கல்வித் தகுதியின்மை, அதிக வயது, விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்யாமை உட்பட பல்வேறு குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டுள் ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நிராக ரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் பட்டியலை பெயர் மற்றும் நிரா கரிப்புக்கான காரணம் உள்ளிட்ட விவரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கெடு.

பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் எம்.பரமேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழங்குடியின நலத்துறை சார்பில் பி.எட் முடித்த பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யும் நோக்கில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் 40 நாள்கள் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பயிற்சி நடைபெறும் 40 நாள்கள் உணவு வழங்கப்படுவதுடன், பயிற்சிக்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பத்துடன் பிறந்த தேதி, ஜாதி, பட்டப்படிப்புக்கான சான்று, ஆதார் அடையாள அட்டை எண் உள்ளிட்ட சான்றுகளுடன் பாஸ்போர்ட் புகைப்படம் ஒட்டி மின் அஞ்சல் மூலம் tntribalwelfare@yahoo.com என்ற முகவரிக்கு வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?

கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய போது பலரும் ப்ரைவசி குறித்த தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர். அதற்கு பதிலாக வாட்ஸ்அப் தரப்பு பயனலார்களின் தகவல்கள் ஒரு போதும் விளம்பர தேவைகளுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் எப்போதும் போலவே அவர்களின் பிரைவசிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.
தற்போது இதற்கு நேர் மாற்றமாக வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது. இதில் ஒருவரது வாட்ஸ்அப்அலைபேசி எண், அவரது நண்பர்கள் மற்றும் அவரது தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்குடன் பகிரப்படும். பின்னர் ஃபேஸ்புக் இந்த தகவல்களை பயன்படுத்தி தனது பக்கத்தில் ஒருவருக்கான விளம்பரங்கள், நட்புப் பட்டியல் ஆகியவற்றைக் காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பாக ஃபேஸ்புக் பிரவசி பாலிசியின் மாற்றத்தை பயனாளர்களிடம் காட்டி ஒப்புதல் வாங்குகிறது வாட்ஸ்அப். இதில் தங்களது வாட்சைப் தகவல்களை ஃபேஸ்புக்கோடு பகிர விருப்பமில்லை என்று தேர்வு செய்தவர்களுக்கு இப்போது பிரச்சனை இல்லை.

 எபோதும் போல எதையும் படிக்காமல் “I Agree” என்று தேர்வு செய்தவர்களுக்கு 30 நாள் கேடு கொடுத்துள்ளது ஃபேஸ்புக்.இதற்குள் தங்களது தேர்வை மாற்றிக்கொள்ளலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

உங்களது தெரிவை மாற்ற வேண்டுமென்றால்:

Whatsapp > Settings > Account > சென்று “Share My Account Info” தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கிவிடுங்கள்.

இருந்தாலும் ஃபேஸ்புக்கின் இந்த நிலை பலருக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. பலர் வாட்ஸ்அப் இல் இருந்து விலகி டெலிகிராம் செயலிக்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

27/8/16

சனிக்கிழமை பள்ளி வேலைநாள்- முழு நாள் செயல்படவேண்டுமா?

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஓய்வுகால பணிக்கொடை- மத்திய அரசு முடிவு



கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு திட்டம்

டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வுநடத்தி தேசிய வேலையுறுதி திட்டகம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை பணிநிரந்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய வேலையுறுதி திட்டம் துவங்கிய போது, ஊரக
வளர்ச்சித்துறையில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதில் தொழில்நுட்ப உதவியாளர்கள் ஒன்றிய மேற்பார்வையாளர்களாக பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை. தற்போது அவர்கள் தொகுப்பூதியமாகமாதம் ரூ.11 ஆயிரம் பெற்றுவருகின்றனர்.

மாநில முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் உள்ளனர். பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர்ந்துஅவர்கள் போராடி வருகின்றனர்.


மேலும்ஊரக வளர்ச்சித்துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு உள்ளதால் ஆப்பரேட்டர்களுக்கு பணிப்பளுவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., மூலம்தேர்வு நடத்தி பணிநிரந்தரம் செய்யஅரசு திட்டமிட்டுள்ளது

DIRECT RECRUITMENT OF SENIOR LECTURER / LECTURER / JUNIOR LECTURER IN SCERT 2016 - REJECTION LIST

உபரி ஆசிரியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல் செய்ய தர்மபுரி CEO உத்தரவு - பணிநிரவல் - இல் கலந்து கொள்ளாத ஆசிரியர்களை பணியில் சேர அனுமதிக்க கூடாது செயல்முறைகள் - செயல்முறைகள்

ஆதார் எண்ணை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்புதியம் இன்னும் தரப்படவில்லை-எதிர்பார்ப்பில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள்

கடந்த சனவரி மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் ஆதார் எண்ணை சேர்க்கும்பணியில் ஈடுபட்ட  ஆசிரியர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில்இப்பணிக்கான மதிப்புதியம் இன்னும் தரப்படவில்லை. சட்டமன்ற  தேர்தலுக்கு 
பின் வழங்கப்படும் என்றுஅதிகாரிகள் தரப்பில் கூறிவந்தனர்.. ஆனாலும் வழங்கப்படவில்லை. தற்போதுஉள்ளாட்சித் தேர்தலும் வர இருப்பதால் அதற்குள்தக்க நடவடிக்கையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர்.

நன்றி-பாலமுருகன்-திருச்சி  

விபத்தில் மூளைச்சாவு அடைந்து 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த அரசுப்பள்ளி மாணவன் - உருவப்படத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி மாணவிகள் கண்ணீர் விட்டு கதறல்

விபத்தில்மூளைச்சாவு அடைந்து 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த அரசுப்பள்ளி மாணவன்அவினாஷின் உருவப்படத்திற்கு பள்ளியில் ஆசிரிய–ஆசிரியைகள் மற்றும்மாணவ–மாணவிகள் அஞ்சலி செலுத்தினர். அப்போதுமாணவிகள் கண்ணீர் விட்டு கதறிஅழுதனர்.
  
விபத்தில்மூளைச்சாவு
நாகர்கோவில்கோட்டார் வாகையடி தெற்கு தெருவைசேர்ந்தவர் சுவாமிநாதன். இவருடைய மனைவி லதா. இவர்களது மகன் அவினாஷ்
(வயது12).



நாகர்கோவில்கோட்டார் ஏழகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில்அவினாஷ் 7–ம் வகுப்பு படித்துவந்தான். கடந்த சில தினங்களுக்குமுன்பு கடைக்கு சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம்ஒன்று மோதியது. இந்த விபத்தில் சுயநினைவிழந்தஅவினாஷ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார்ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். ஆனால் மாணவன் மூளைச்சாவுஅடைந்ததால் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால்மாணவனை உயிர் பிழைக்க வைக்கமுடியாது என டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்களால் கைவிரிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக அவரது பெற்றோர் நெல்லையில்உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர். அங்கும் உடல் நிலையில்முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவினாஷ்இதயம், சிறுநீரகங்கள் போன்றவை தொடர்ந்து இயங்கிவந்ததால், மகனை இழந்தாலும் அவனதுஉடல் உறுப்புகளாவது வேறு சிலர் மூலம்உயிர் வாழட்டும் என்று எண்ணிய அவரதுபெற்றோர் உடல் உறுப்புகளை தானம்செய்ய முன்வந்தனர்.

தகனம்
இதனைத்தொடர்ந்துசிறப்பு மருத்துவர் குழு அமைக்கப்பட்டு அதேமருத்துவமனையில் மாணவனின் இதயம், 2 சிறுநீரகங்கள், கல்லீரல், 2 கண்கள் ஆகிய உறுப்புகள்அவினாஷ் உடலில் இருந்து அகற்றப்பட்டன. இதில் இதயம் சிறப்பு ஆம்புலன்சுமூலம் போலீஸ் பாதுகாப்போடு நெல்லையில்இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம்சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு மற்றொருவருக்குபொருத்தப்பட்டது.

இதேபோல்சிறுநீரகம் ஒன்று மதுரைக்கும், கல்லீரல்திருச்சிக்கும் கொண்டு செல்லப்பட்டன.

மற்றொருசிறுநீரகம், உறுப்புகள் தானம் பெறப்பட்ட ஆஸ்பத்திரியில்உள்ள ஒரு நோயாளிக்கு வழங்கப்பட்டது. 2 கண்கள் நெல்லையில் உள்ள ஒரு கண்மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவன் அவினாஷின் உடல்ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னர் நெல்லையில்இருந்து நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட அவினாஷின்உடலுக்கு அந்த பகுதி மக்கள்திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாணவனின் உடல் தகனம் செய்யப்பட்டது.



அஞ்சலி
இந்தநிலையில்அவினாஷ் படித்த அரசு பள்ளியில்அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதையொட்டி பள்ளி மைதானத்தில் அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த அவினாஷின் உருவப்படத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியைகலாதேவி, ஆசிரிய–ஆசிரியைகள், மாணவ–மாணவிகள் ஆகியோர் மலர்தூவி அஞ்சலிசெலுத்தினர்.

அவினாஷின்ஆத்மா சாந்தி அடைய ஒருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது அஞ்சலி செலுத்திய ஒருமாணவி திடீரென மயங்கி விழுந்தார். உடனே ஆசிரியர்கள் அவரது முகத்தில் தண்ணீர்தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர். சில மாணவ–மாணவிகள் கண்ணீர்விட்டு கதறி அழுதபடியே அஞ்சலிசெலுத்தினர்.

அதைத்தொடர்ந்துபள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ. ஆறுதல்
இந்தநிலையில்நேற்று காலை மாணவன் அவினாஷ்வீட்டுக்கு நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் சென்றார். அங்கு அவினாஷின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போதுவக்கீல் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டுமற்றும் பலர் உடன் சென்றனர்.

2 பேரிடம்விசாரணை
இதற்கிடையேமாணவன் அவினாஷ் விபத்திற்கு காரணமானவாகனத்தை தேடிக்கண்டுபிடிக்கும் பணியில் நாகர்கோவில் கோட்டார்போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்டவிசாரணையில் ஒரு மோட்டார் சைக்கிள்தான் மாணவன் மீது மோதியதுதெரியவந்துள்ளது. சந்தேகத்திற்கு இடமான 2 பேரை போலீசார்பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திறமையானமாணவனை இழந்து விட்டோம்‘ பள்ளிதலைமை ஆசிரியை உருக்கம்

மாணவன்அவினாஷ் குறித்து பள்ளி தலைமை ஆசிரியைகலாதேவி உருக்கமாக கூறியதாவது:–

எங்களதுபள்ளியில் படித்து விபத்தினால் இறந்தஅவினாஷ் திறமையான மாணவன். பல்வேறு திறமைகள்அவனிடம் இருந்தது. கடந்த பள்ளி ஆண்டுவிழாவில் கூட அவினாஷ் நடனபோட்டியில் பங்கேற்று பரிசு பெற்றான். அவனுக்குமரக்கன்றுகள் நடுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு.

ஓவியம்வரைவதிலும் கைதேர்ந்த மாணவன். பாரதிதாசன், பாரதியார்போன்றோரின் ஓவியங்களை சிறப்பாக வரைவான். ஒரு புகைப்படத்தை பார்த்தஒரு சில மணித்துளிகளில் அதுபோலவே வரையும் வல்லமை உடையவன். நல்ல திறமையான மாணவனை எங்களது பள்ளிஇழந்து விட்டது. பள்ளி மாணவ–மாணவிகள்சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பெற்றோரும் தங்களது குழந்தைகளை சாலைகளில்அழைத்து செல்லும்போது கவனமாக அழைத்துச்செல்ல வேண்டும்.


இவ்வாறுஅவர் கூறினார்.

SPD PROCEEDINGS-நாள்:26/8/16-ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு தேர்வு நிலை ஊதியம் அளித்தல் சார்பு

DEE PROCEEDINGS- Date:24/8/16- RBSK Medical Scheme-Nodal officer for Students-Teacher details Called



DEE:பொது மாறுதல் மூலம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன் ஊதியச்சான்று வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தொடக்கக்கல்வி செயல்முறைகள்- நாள்:24/8/16-ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங்கிலம்,கணக்கு, அறிவியல்,மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்



ஐ.டி. துறையில் நெருக்கடி ஆசிரியர் பணியை விரும்பும் பெண் பொறியியல் பட்டதாரிகள்

ஐ.டி. துறையில் பணி நெருக்கடியால் ஏற்படும் மனஉளைச்சல், குடும்பத்தை கவனிக்க முடியாத பரிதாப நிலை ஆகிய வற்றின் காரணமாக, பெண் பொறியியல் பட்டதாரிகளின் கவனம் தற்போது ஆசிரியர் பணியின் மீது திரும்பத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்களில் தாங்கள் பார்க்கும் வேலையை உதறிவிட்டு அவர்கள் பி.எட். படிப்பில் சேர்ந்து வருகிறார்கள். 
பொறியியல் பட்டதாரிகள் பி.எட். படிப்பில் சேரும் புதிய முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த ஆண்டு பி.எட் படிப்பில் அறிவியல், கணித பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடங் களுக்கு 154 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான கலந்தாய்வு சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடந்தது. தகவல் தொழில்நுட்பத்துறையில் (ஐ.டி.) பணி நெருக்கடியின் காரணமாக ஏற்படும் மனஉளைச்சல், குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியாத நிலை போன்ற காரணங்களால் ஆசிரியர் பணியை விரும்புவதாகவும் அதற்காக பி.எட் படிப்பில் சேருவதாகவும் கலந்தாய் வுக்கு வந்திருந்த பெரும்பாலான பெண் பொறியியல் பட்டதாரிகள் தெரிவித்தனர். பி.எட் படிப்புக்காக நிறைய பேர் முன்னணி ஐடி நிறுவனங்களில் பார்க்கும் வேலையை உதறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள ஆசிரியர் பணிதான் பெண்களுக்கு ஏற்ற பணி என்று அவர்கள் கருதுகின்றனர். வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பி.டெக். பட்டதாரி மொழியரசி கூறும்போது, “ஐடி வேலையில் இரவுப் பணி இருக்கும். திருமணம் ஆவதற்கு முன்பு ஷிப்டு முறையில் வேலை செய்வதில் சிரமம் இருக்காது. ஆனால், திருமணம், குடும்பம் என்று ஆன பிறகு இத்தகைய பணிச்சூழல் சரிப்பட்டு வராது. ஆசிரியர் வேலை, நிம்மதியான பணி” என்றார். முன்னணி ஐடி நிறுவனம் ஒன்றில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பி.எட் படிப்பதற்காக வந்துள்ள சென்னை யைச்சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் ஒருவர் கூறும்போது, “ஐடி துறையில் மனஅழுத்தம் அதிகமாக இருக்கும். வேலையும் பார்க்க வேண்டும். குடும் பத்தையும் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டு்ம என்று நினைக்கும் பெண் களுக்கு அருமையான பணி ஆசிரியர் பணிதான்” என்றார். சென்னை குரோம் பேட்டையைச் சேர்ந்த பிஇ (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பட்டதாரியான சிவகாமி சுந்தரியும் இதே கருத்தை சொன்னார். நாகப்பட்டினம் மயிலாடுதுறையைச் சேர்ந்த பி.டெக் (இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) பட்டதாரியான சுருதியின் தந்தை எஸ்.நாராயண பிரசாத் கூறும்போது, “முன்னணி ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய எனது மகள் பணியில் திருப்தி இல்லாத காரணத்தினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். ஐடி பணியுடன் ஒப்பிடும்போது ஆசிரியர் பணி பாதுகாப்பானது, எந்தவிதமான நெருக்கடியும் இன்றி பணியாற்றலாம்” என்றார். திருநின்றவூரைச் சேர்ந்த வி.யாமினி என்ற பிடெக் பட்டதாரி கூறும்போது, “நான் பிளஸ்2 முடித்துவிட்டு பொறியியல் படிப்பில் சேரப்போகிறேன் என்றபோது ஆசிரியர் பயிற்சியில் சேருமாறு பெற்றோர் அறிவுரை சொன்னார்கள். ஆனால், நான் அதையெல்லாம் கேட்காமல் பொறியியல் படிப்பை தேர்வுசெய்தேன். எனக்கு குழந்தை பிறந்த பின்னர்தான் பெற்றோர் சொன்ன அறிவுரை புரிகிறது. எனவே, ஆசிரியர் வேலைக்காக பி.எட் படிப்பில் சேரப்போகிறேன்” என்றார். அம்பத்தூரைச் சேர்ந்த அனுப்பிரியா, பி.எட் படிப்புக்காக ஐடி வேலையை உதறிவிட்டார்.

டெல்லி கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த அவர், “திருமணம் முடிந்த பிறகு குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள அருமையான பணி ஆசிரியர் பணிதான்” என்றார். பூந்தமல்லி அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த பிஇ பட்டதாரி ரேவதி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பிடெக் பட்டதாரி திவ்யா பிரேம்குமார் ஆகியோரும் இதே கருத்தை தெரிவித்தனர்.

ஜெ.கு.லிஸ்பன் குமார் சென்னை

NHIS-Nhis subscription deducted in your spouse salary should submit this form to drawing officer . No need to submit form with photos.

3 ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது

தமிழகத்தில், மூன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட, 34 பேருக்கு, சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.  அந்நாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக விருதுகள் அறிவிக்கின்றன.இதில், சி.பி.எஸ்.இ., விருது கள், நேற்று அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும், 34 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.   தமிழகத்தில், சென்னை, அடையாறு இந்து சீனியர் செகண்டரிபள்ளி துணை முதல்வர் ஏ.காசி விஸ்வநாதன்; ஈரோடு மாவட்டம், திண்டல், வேளாளர் வித்யாலயா முதல்வர் ஏ.வி.புவனேஸ்வரி; சேலம் மாவட்டம், ஜாகிரம்மா பாளையம், செந்தில் பப்ளிக் பள்ளி முதல்வர் சி.சீனிவாசன் ஆகியோர், விருது பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் படிவம்*

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்காக ரூ.270 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைகளுக்காக ரூ.270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக குடும்பநலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை செம்மைப்படுத்துவதற் கான 2 நாள் கருத்தரங்கம் நேற்று மாமல்லபுரத்தில் தொடங்கியது.இம்மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்று சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:
751 மருத்துவமனைகள்:

தமிழகத்தில் முதல்வரின் விரி வான மருத்துவக் காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. மருத்துவத் துறையில் ஒரு சிறந்த நகரமாக சென்னை விளங்கி வருகிறது. இங்கு சிகிச்சை பெறுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர்.இதேபோல் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் உயர்தர சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 1.58 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் 159 அரசு மருத்துவமனைகள் உட்பட 751 மருத்துவ மனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.இத்திட்டத்தை சிறப்பாக செயல் படுத்த அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள நிரந்தர வைப்பு நிதி ரூ.35 கோடியும், அறுவை சிகிச்சைகளுக்காக ரூ.270 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை செம்மைப் படுத்தும் நோக்கில் மருத்துவர்கள், இன்சூரன்ஸ் நிறுவன அலுவலர் கள் மற்றும் பலர் பங்கேற்கும் இந்த 2 நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்றார்.சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் பேசும்போது, “மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் ஏழை மக்கள் பயன்பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும்” என்றார்.இந்திய மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையின் ஆணையர் மோகன் பயாரி பேசும்போது, தமிழக அரசு விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இந்திய மருத்துவ முறைகளையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இக்கருத்தரங்கில் பங்கேற்க வந்தவர்களை தேசிய சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் தார்ஸ் அஹமது வரவேற்றார். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஏ.ஹோடா, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் திட்ட இயக்குநர் எஸ்.நடராஜன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சிறப்புச் செயலர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குநர் அபூர்வா, தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணைச் செயலர் ராஜேஸ்வரராவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அரசுப் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமனம்: மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தகொளத்தூர் அருகே அரசுப் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதால், மாணவர்களின் போராட்டம் புதன்கிழமை முடிவுக்கு வந்தது.சேலம் மாவட்டம், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கத்திரிப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்கள் இல்லை என்று கூறப்பட்டது.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பெற்றோர்கள், கல்வித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பாமல் திங்கள்கிழமை முதல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் புதன்கிழமை இரண்டு ஆசிரியர்களை நியமிக்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஒப்புதல் அளித்தார். மேலும் கூடுதலாக ஒரு ஆசிரியரை கிராம மக்களே நியமித்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். இதனால் கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

புதிய பள்ளி துவக்கம், தரம் உயர்வு : தமிழக அரசின் அறிவிப்புக்கு ஆசிரியர்கள் சங்கங்கள் வரவேற்பு.

மிழகத்தில் புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் தொடங்குவது, பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு அறிவிப்புகளை ஆசிரியர்கள் சங்கங்கள் வரவேற்றுள்ளன. அதேசமயம், பயோ மெட்ரிக் வருகை முறையை அனைத்து அரசுத்துறைகளுக்கும் கொண்டு வர வேண்டும் என்றுஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 
சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் 110 விதியின் கீழ் முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், நடப்பாண்டில் தமிழகத்தில் புதியதாக 5 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும். 3 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.  தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும்.நடப்பாண்டில் ரூ.60 கோடியே 79 லட்சம் செலவில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்வரின் இந்த அறிவிப்பை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளதுடன், நன்றியும் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் தாஸ் கூறியதாவது: முதல்வர் அறிவிப்பில் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் மாணவர் வருகை பயோ மெட்ரிக் முறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார். இது ஆசிரியர்களை குறிவைத்து செய்வதுபோல உள்ளது. இந்த முறையை அனைத்து அரசுத்துறைகளுக்கும் கொண்டு வர வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பணியல்லாமல் பல பணிகள் கொடுக்கப்படுவதால், பயோ மெட்ரிக் முறை பொருத்தமாக இருக்காது.மேலும், தமிழகத்தில் 355 உதவி தொடக்க கல்வி அலுவலகங்களிலும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களிலும்உதவியாளர்கள் இல்லை. 1000 எழுத்தர் பணிகள் காலியாக உள்ளன.

இதனால் ஆசிரியர்கள் இலவச பொருட்களை எடுத்து செல்வது உள்ளிட்ட பல பணிகளை செய்கின்றனர். ஆதார் அட்டை தொடர்பான பணிகளையும், தேர்தல் ப ணிகளையும் செய்ய வேண்டியுள்ளதால் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். ஆசிரியர் நலனில் அக்கறை கொண்ட அரசு, நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். 7வது ஊதியக் குழுவில் கூறப்பட்டதை நிறைவேற்ற முன்வர வேண்டும்.  இவ்வாறு தாஸ் தெரிவித்தார்.

NMMS - தேர்வு ஏன் எதற்கு என்பது குறித்த சின்ன விளக்கம்

பள்ளி மாணவ-மாணவிகளின் படிப்புக்கு உதவும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன. ஒருபுறம் மாணவர்களின் பொருளாதார, சமூக நிலையைக் கருத்தில் கொண்டும், இன்னொரு புறம் தகுதி அடிப்படையிலும் கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கப்படுகிறது.

_*தேசிய திறனாய்வுத் தேர்வு என்பது 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வு. இதில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்குகிறது. ஆராய்ச்சிப் படிப்பு (பி.எச்டி.) வரை இந்த உதவித்தொகைகிடைக்கும்.

_இந்த தேர்வை 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களே எழுத முடியும். 9ஆம் வகுப்பு முழுப் பாடத்திட்டத்திலும், 10ஆம் வகுப்பில் நவம்பர் வரையிலான பாடத்திட்டத்திலும் (சி.பி.எஸ்.இ. தரம்) கேள்விகள் கேட்கப்படும்.

__முதலில் மாநில அளவில் ஒரு தேர்வும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய அளவில் இறுதித் தேர்வும் நடத்தப்படுறது. தமிழக அரசு நடத்தும் முதல் கட்டத் தேர்வு மூலம் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேசிய தேர்வில் மெரிட் பட்டியலில் முதல் ஆயிரம் இடங்களுக்குள் வந்துவிட்டால் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதில் தமிழகத்துக்கான ஒதுக்கீடு 40 இடங்கள். குறிப்பிட்ட மாநிலங்களில் தகுதியான மாணவர்கள் கிடைக்காதபட்சத்தில், அதிக மதிப்பெண் பெற்றுள்ள மற்ற மாநில மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

__இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்க எளிதாக இடம் கிடைக்கும் என்பது இந்தத் தேர்வின் சிறப்பு அம்சம்

கூடுதல் ஆசிரியர்களை வடமாவட்டங்களுக்கு மாற்ற முடிவு ,ஆசிரியர்கள் பதற்றம் !

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.
கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள்
மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும், 27 முதல், 29ம் தேதி வரை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பணி நிரவல் எனப்படும், கட்டாய இடமாற்றம் செய்யப்படுகிறது.

அதிக அளவில்... : ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறி, சில மாவட்டங்களில், அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை கணக்கெடுத்து, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றுவதே, பணி நிரவல் கலந்தாய்வு என, கூறப்படுகிறது.
அதன்படி, பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரை, சில மாவட்டங்களில், கூடுதலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர் இடங்களை, ஆசிரியர் தேவைப்படும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில், காலியிடங்கள் அதிகமாக உள்ளன. எனவே, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், வரும், 27ம் தேதி முதல், எந்த மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்படலாம்.

அதேநேரம், பள்ளிக் கல்வித் துறையில் அதிகமாக பணியாற்றும் தென் மாவட்ட ஆசிரியர்கள், எப்படியாவது, சொந்த மாவட்டம் அல்லது அதையொட்டிய பகுதிகளுக்கு செல்ல, அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால், சிபாரிசு கூடாது என, அரசிடமிருந்து கண்டிப்பான உத்தரவு உள்ளதால், அதிகாரிகளுக்கு நெருக்கடியான நிலையும், ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது.

Manonmaniam Sundaranar University Last date for remitting examination fee of DD&CE COURSES UG/PG/B.ED/ Diploma & Certificate Courses- December 2016

DEE:பொது மாறுதல் மூலம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன் ஊதியச்சான்று வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தொடக்கக்கல்வி -பள்ளி ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டில் எவ்வாறு எழுத வேண்டும் என-காஞ்சிபுர மாவட்ட தொடக்கக் அலுவலரின் செயல்முறைகள்

தொடக்கக்கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும்சமூகஅறிவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும்பதவி உயர்வு வழங்கப்படும் - பிற பாடங்கள் படித்தால் ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க கூடாது - இயக்குனர் செயல்முறைகள் (நாள்: 24/08/2016)


மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார்.



நாமினி!

"முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம்.  வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது  பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.

பென்ஷன்!

பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.

மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது  வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.

இடையில் பணம் எடுத்தல்!

பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும்.    இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின்   திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.

மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.

பிஎஃப் கணக்கை முடிப்பது!

பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.

இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)

பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.

அனைத்தும் ஆன்லைன்!

பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.

எதற்கு எந்தப் படிவம்?

பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தை http://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

புகார் தெரிவிக்க!

பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும். http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx?csession=2b4n9lQYhr1& என்ற இணையதளத்தில் பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.

டிடிஎஸ்!

பிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ்  (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில்  உள்ளது. டிடிஎஸ் குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே செல்லவும்.
http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10541

நிரந்தரக் கணக்கு எண்!

பிஎஃப் அமைப்பு UAN(Universal  Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான் பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.

இந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே  வாங்க முடியும். இந்த எண்ணை http://uanmembers.epfoservices.in/uan_reg_form.php என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.

இதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரச் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.”

#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க

'டயட்' என்ற பெயரில் காலை உணவை தவிர்க்க வேண்டாம்!

Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை

Cellphone Doubts Sensors!

PGTRB- TAMIL தேவாரத் திருமுறைகள்

TNPSC GROUP 4, TET எட்டாம் வகுப்பு தமிழ் பகுதி 2

TNPSC GROUP-4 பொதுத்தமிழ் பகுதி-3

TNPSC TET PDG TRB கம்பராமாயணம்

TNPSCGroup-IV பொதுத் தமிழ் - 10

TNPSCகுரூப்_4 பகுதி -5

TRB PG TAMIL திருநாவுக்கரசர்

ஆபத்தான உணவுக் குழாய் கேன்சர்

ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அழியாத மையின் சுவையான வரலாறு

உங்களுக்கு என்ன நோய்?

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை

உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்

எளிதாக உடல் எடையை குறைக்க முடியாது

காய்கறி வாங்குவது எப்படி?

குரூப் 4 பகுதி 7

குரூப்-4 பகுதி -6

கோபத்தை தவிருங்கள்

சமத்துவம் சமதர்மம் என்ற வார்த்தைகள் மிகவும் அழகானவைகள்

சமையல் எரிவாயு மானியம் பெறுவது எப்படி?

சில பயனுள்ள இனையத்தளங்கள்!

சுப்ரமணிய பாரதி எனும் ஒரு தமிழ் வேள்வி தீ

26/8/16

தொடக்கக்கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும்சமூகஅறிவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் - பிற பாடங்கள் படித்தால் ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க கூடாது - இயக்குனர் செயல்முறைகள் (நாள் : 24/08/2016)

ராகிங்' தடுக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து : இன்ஜி., கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை

ராகிங்'கை தடுக்காவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்லுாரி, பல்கலைகளில், 'ராகிங்'கை தடுக்க, உச்ச நீதிமன்றம், வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது; அதன்படி, ஒவ்வொரு கல்லுாரி மற்றும் பல்கலையிலும், ராகிங் தடுப்பு குழு, விசாரணை கமிட்டி போன்றவை அமைக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

● ராகிங் தடுக்க, தனி கமிட்டி அமைக்க வேண்டும்; ராகிங் புகார்களை விசாரிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும்; ராகிங் தடுப்பு பறக்கும் படையும் அமைக்க வேண்டும்
● மாணவர் சேர்க்கையின் போது, 'ராகிங்கில் ஈடுபட மாட்டேன்' என, கல்லுாரியிலும், விடுதியிலும் உறுதிமொழி எழுதி வாங்க வேண்டும்; விடுதிகளில், தனியாக ராகிங் தடுப்பு வார்டன் நியமிக்கப்பட வேண்டும்
● புதிய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர, உரிய நிபுணர்களை நியமிக்க வேண்டும்
● ராகிங் என்ற கிரிமினல் குற்றத்தை விளக்கி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை, மாணவர்கள் கூடும் இடங்களில் வைக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ராகிங் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க தவறினாலோ, விதிகளை பின்பற்ற தவறினாலோ, சம்பந்தப்பட்ட கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதலாண்டு மாணவர்களுக்கு தனி விடுதி : கல்லுாரி மற்றும் பல்கலைகளில் ராகிங் தடுப்புக்கான மாநில கண்காணிப்பு கமிட்டியின் கூட்டம், கவர்னர் ரோசய்யா தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பேசும்போது, ''தமிழகம், ராகிங் இல்லாத மாநிலமாக தொடர, அரசுத்துறை அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார்.

''ராகிங் தொடர்பாக மாணவர்களை அழைத்துப் பேசி, அவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும். ராகிங்கில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கினால் மற்றவர்கள் அதில் ஈடுபட மாட்டார்கள்,'' என, கவர்னர் ரோசய்யா தெரிவித்தார்.

உள்துறை செயலர் அபூர்வ வர்மா கூறுகையில், ''ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், கல்வி நிறுவனங்களுக்கு தரவரிசை நிர்ணயிக்கலாம். வெளிமாநில மாணவர்களுக்கு தனியாக, மாணவர் விவகார கமிட்டி அமைக்கலாம்,'' என்றார்.

''ராகிங்கை தடுக்க, புதிய மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களை மட்டும் தனி விடுதியில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கலாம்,'' என, போலீஸ் டி.ஜி.பி., அசோக்குமார் கருத்து தெரிவித்தார்.

என்.எம்.எம்.எஸ்., தேர்வு பாட திட்டம் வெளியாகுமா?

ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, உதவித்தொகை பெற்று தரும் தேர்வு குறித்த, பாடத் திட்டத்தை தற்போதே வெளியிட வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகைக்கான என்.எம்.எம்.எஸ்., தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தேர்ச்சி பெறுவோருக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதம்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை, மத்திய அரசால் வழங்கப்படும்.
ஏழாம் வகுப்பின் முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருந்தால், இந்த தேர்வு எழுதலாம். ஆண்டுதோறும் பிப்ரவரியில் நடக்கும் இத்தேர்வில், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், தேர்வுக்கான பாடத்திட்டம், வினாக்களின் வகை, மாதிரி வினாக்கள் போன்றவற்றை, அரசு தேர்வுத்துறை தற்போதே அறிவித்தால், கிராமப்புற மாணவர்கள், தேர்வுக்கு தயாராக முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கான அடிப்படை திறன் மேம்பாட்டுப் பயிற்சி: 29இல் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நாகர்கோவிலில் திங்கள்கிழமை (ஆக. 29) தொடங்கி 4 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கணித உபகரணப் பெட்டியைப் பயன்படுத்தி அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல் பயிற்சி, வட்டார வளமைய அளவில் நடைபெறவுள்ளது.


இம்மாதம் 29, 30 ஆகிய நாள்களில், 31, செப். 1 ஆகிய நாள்களில் என, 2 கட்டங்களாக 1,055 ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறவுள்ளது.

இதற்கான மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி நாகர்கோவிலில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலக பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது.

அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் பயிற்சியைத் தொடக்கிவைத்தார். அப்போது அவர், தொடக்கப் பள்ளியில் கணிதத் திறனில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டியைப் பயன்படுத்தி சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார். இதில், ஆசிரியர் பயிற்றுநர், ஆசிரியர்கள் என 30 பேர் கலந்துகொண்டனர்.

கருத்தாளர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் அஜிதகலா, மெர்சிஜெபா ஏஞ்சல், ஸ்ரீவித்யா, ஜாஸ்மின் ஷீபா ஆகியோர் பயிற்சியளித்தனர். ஏற்பாடுகளை மாவட்ட உதவித் திட்ட அலுவலர் வில்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயாளன் ஆகியோர் செய்தனர்.

சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வரிகளை நீக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் நாடார் சங்கம் வலியுறுத்தல்

மத்திய பள்ளிக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம் பெற்றுள்ள நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வரிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.


இது தொடர்பாக தில்லியில் பிரகாஷ் ஜாவடேகரை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை காலையில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த தங்கம் செல்வராஜ், ராஜகுமார், வழக்குரைஞர் ரவீந்திர துரைசாமி, ஆலந்தூர் கணேசன், டி. கண்ணன், பரப்பாடி ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜன், ஏலங்குளம் எட்வின், ஏ. முத்துகுமார் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 12 பேர் சந்தித்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அனைவரையும் பிரகாஷ் ஜாவடேகரிடம் அழைத்துச் சென்றார்.

இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் வழக்குரைஞர் ரவீந்திர துரைசாமி கூறியதாவது: சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தின் 168, 169 ஆகிய பக்கங்களில் நாடார் சமுதாய வரலாறு தொடர்புடைய பத்திகளில் "இடம் பெயர்ந்த சமூகம்' எனக் குறிப்பிடும் வரிகள் உள்ளன. நாடார் சமுதாயம் இடம் பெயர்ந்த சமூகமாக இருக்க முடியாது. அந்தப் புத்தகத்தை எழுதிய மலையாள எழுத்தாளர் உள்நோக்கத்துடன் அக்கருத்தைப் பதிவு செய்துள்ளதாகக் கருதுகிறோம். சர்ச்சைக்குரிய அந்த வரிகளை நீக்கக் கோரி நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தில்லியில் மத்திய அமைச்சர் ஜாவடேகரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம்.

மேலும், தமிழகத்தில் பெண்கள் மார்பகப் பகுதிகளை மறைக்கும் வகையில் தோள் சீலை அணியும் போராட்டத்தை அக்காலத்தில் முன்னெடுத்த வைகுண்டர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை பாட புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக் கொண்டோம்.

ஒரு முதலமைச்சராகவும் இதர பிற்படுத்த மக்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தவருமாகவும் திகழ்ந்த காமராஜரின் பெயரை மதிய உணவுத் திட்டத்துக்கு வைக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்த்து நிறைவேற்றும் என்று நம்புகிறோம் என்றார் ரவீந்திர துரைசாமி.

தமிழிசை நம்பிக்கை:

இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் தமிழசை கூறியது: சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் காமராஜர் பற்றி இடம் பெற்றுள்ள பிழையான தகவலை நீக்கவும், மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். சரித்திரத்தில் இடம் பெற்ற வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மாநிலங்களில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எதிர்கால தலைமுறைக்கு மறைக்காமலும் இருட்டடிப்பு செய்யாமலும் மக்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே பாஜகவின் நிலைப்பாடு. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சுதந்திர போராட்டத் தியாகிகள் பலரின் வரலாறும் தியாகங்களும் மறைக்கப்பட்டன. அதற்கு பாஜக ஒருபோதும் இடம் கொடுக்காது என்றார் தமிழிசை.

"க்ரீமி லேயர்' முறையை ஒழிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

நாட்டில் "க்ரீமி லேயர்' முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாமக இளைஞர் அணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

மண்டல் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஐக்கிய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற "சமூக நீதிக்கான உரிமைகள்' தொடர்பான கருத்தரங்கில் அவர் பேசியதாவது:


"இடஒதுக்கீடு' என்பது அரசியலமைப்பு நம் அனைவருக்கும் அளித்துள்ள உரிமை. ஆனால், சமூகம், கல்வி ரீதியாக இடஒதுக்கீடு அளிப்பதற்குப் பதிலாக பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு அளிக்க நடைபெறும் முயற்சி அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது. இதற்கு வகை செய்யும் "க்ரீமி லேயர்' முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

இந்தியாவில் 1931-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்திய விசாரணையின் முடிவில் மண்டல் கமிஷன் அதன் அறிக்கையை 1981-இல் அளித்தது. அப்போதே பிற்படுத்தப்பட்டோர் 51-54 சதவீதமாகவும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 20-22 சதவீதமாகவும் இருந்தனர்.

இத்தகைய சூழலில் இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதமாக இருப்பதை ஏற்க முடியாது. அதற்குப் பதிலாக சுமார் 85 சதவீதம் வரையிலாவது இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை. இது தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அன்புமணி ராமதாஸ்.து.

0, 12-ம் வகுப்பு காலாண்டுத் தேர்வுகள்: செப்டம்பர் 8-ல் தொடக்கம்

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 8-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பெறவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கிலும், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.


அதன்படி, இயக்குநரகத்தில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களில் வினாத்தாள் அச்சிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும்.

இந்நிலையில், 2016-17 கல்வியாண்டுக்கான 10, 12-ஆம் வகுப்புகளின் காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்குநரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். வினாத்தாளைப் படிக்க 10 நிமிஷங்களும், விடைத்தாளில் விவரங்களை நிரப்ப 5 நிமிஷங்களும் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 12.45 மணி வரையிலும் நடைபெறும். இவர்களுக்கும் கூடுதலாக 15 நிமிஷங்கள் வழங்கப்படும்.

பிளஸ் 2 பொதுப் பிரிவு, தொழிற்கல்வி பிரிவு, தட்டச்சு (தமிழ் - ஆங்கிலம்) உள்ளிட்ட பாடப் பிரிவினருக்கான செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கும் முன்னதாகவே நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ள

சிறுபான்மையின பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு பொருந்தாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத சிறுபான்மையின  பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவு பொருந்தாது  மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்,  தமிழக அரசு கடந்த 2011 நவம்பர் 15-இல் அரசாணை பிறப்பித்தது.


அதன்படி,அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக புதிதாக நியமிக்கப்படுபவர்கள், தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதே போன்று, 2010-ஆம் ஆண்டு ஆகஸ்டு 28-ஆம் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும், 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.இந்த அரசாணை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர்கள் சேவியர் அருள்ராஜ், அஜ்மல்கான், காட்சன் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:  ஆசிரியர்களி்ன் தகுதியை உயர்த்துவதற்காக, இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும், இதுபோன்ற தேர்வுகளை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், அரசின் தலைமை வழக்குரைஞர் தனது வாதத்தின் போது எடுத்துரைத்தார்.

ஆனால், உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டம், சிறுபான்மையின பள்ளிகளுக்கு பொருந்தாது  என்று மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.இதேபோன்று, உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகளை கருத்தில் கொள்ளும் போது, பொது நலனை கருத்தில் கொண்டு சிறுபான்மை கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விதிகளை கொண்டு வரலாம்.அதற்காக, அந்த பள்ளிகளின் தன்மையை பாதிக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது.

மேலும் ஆசிரியர்களை நியமனம் செய்யும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரத்தில் வேறு யாரும் தலையிட முடியாது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.எனவே, அரசு உதவி பெறும், உதவி பெறாத சிறுபான்மையின  பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வி்ல் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அவர்களுக்கு பொருந்தாது. மேலும் 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, ஆசிரியர்களுக்கு  ஊதியத்தை அரசு வழங்காமல் உள்ளது. அந்த ஊதியத் தொகையை 2 மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழக அரசைப்போல, புதுச்சேரி அரசும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து, கடந்த 2015-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையும், புதுச்சேரியி்ல் உள்ள சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொருந்தாது.ஆசிரியரின் தரத்தை மேம்படுத்துவதை உறுதிப்படுத்த, சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் ஆண்டு விடுமுறை காலங்களில் புத்தாக்க பயிற்சிகள், விவாதங்களையும் நடத்திக் கொள்ளலாம் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ஆயிரம் கண்கள் உன்னை உன்னிப்பாகக் கவனிக்கும் . ஏனென்றால், நீ ஒரு ஆசிரியர்.”


இன்றைய கல்வி வந்தடைந்திருக்கும் இடத்துக்கும் பொதுக்கல்விக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் இப்படி எவ்வளவோ காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் என்றால், எல்லாவற்றையும் தாண்டி ஒரு
பள்ளிக்கூடத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்த ஒருவரால் முடியும் என்றால், அவர் ஆசிரியர்.
நான் பணியில் சேர்ந்த முதல் நாள் காலை எனது தலைமை யாசிரியர் எனக்களித்த அறிவுரை மறக்க இயலாது. “உனக்கு இரண்டு கண்கள். ஆனால், உன்னை ஆயிரம் ஜோடிக் கண்கள் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள். வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் மட்டும் அல்ல; சாலையிலும் பொது இடங்களிலும் வீட்டிலும்கூட நீ எப்படி நடந்துகொள்கிறாய் என்பதை எல்லோரும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். ஏனென்றால், நீ ஒரு ஆசிரியர்.”

உண்மைதான். வேறு தொழில் செய்பவர் யாரும் இந்த அளவு சமூகத்தின் பார்வையில் சிக்க மாட்டார்கள். எப்போதுமே கல்வித் தகுதிக்கு மேல் ஆசிரியர்களிடம் ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கான நியாயமும் இருக்கிறது. நான் ஆசிரியப் பணியை ஒரு சின்ன கிராமத்தில் தொடங்கினேன். தினமும் கடைவீதி வழியாகப் பள்ளிக்குச் செல்வேன்.
பல வணிகர்களும் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். அப்போது எனக்கு வயது 19. அவர்களுக்கோ என் தந்தை, தாத்தா வயது. சங்கடப்பட்டுக்கொண்டு வேறு வழியாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, ஏன் இப்படிச் சுற்றிக் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் காரணத்தைச் சொன்னேன். அப்போது ஒரு பெரியவர் சொன்னார்: “உங்களைப் பார்க்கும்போதெல்லாம் வெறும் ஆசிரியராகப் பார்ப்பதில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருபவராகப் பார்க்கிறோம். அதனால்தான் வணங்குகிறோம்.”
பெற்றோரின், சமூகத்தின் இந்த நம்பிக்கைதான் ஒரு ஆசிரியர் எதிர்கொள்ளும் பெரிய சவால். ஒரு ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டியது இந்த நம்பிக்கைக்குத்தான். இந்த நம்பிக்கைக்கு ஒரு ஆசிரியர் நேர்மையாக நடந்துகொள்ளும்போது ஒரு பள்ளிக்கூடம் தானாக தலைநிமிரும்!
- ச.சீ. இராஜகோபாலன், மூத்த கல்வியாளர்,

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE)

*.5+ மாணவர்கள் பெயர் பட்டியல்...

#கல்வியின் நிலை இன்று!



"இன்றைய மாணவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து அவர்களுக்கு
தூண்டுகோலாக இருக்க வேண்டிய ஆசிரியர் மற்றும் பெற்றோர்களே
இன்றைய கல்விமுறையின் தூண்டிலில் சிக்கியுள்ளனர்.என்றால்
அது மிகையாகாது.
ஆம்,
'மதிப்பெண்"எனும் மாயை வலையில் சிக்கி அதற்காக மாணவர்களை
கசக்கி எடுக்கிறார்கள்.

#இன்றைய மாணவர்களின் பிரச்னைகள்!

       *பெருபாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களை அந்தகாலத்தில் நாங்க எல்லாம் எப்படி படிப்போம் தெரியுமா?
என்று கேள்வி கேட்டே கொல்கிறார்கள்.

        அன்றைய சூழல் வேறு என்பதை மறந்து,
    அன்று,
 நான் விளக்கொளியில் படித்து இன்று பெரிய பதவியில்
இருக்கிறேன்.என்று சொல்லும் நீங்கள்,
   
     இன்றைய மாணவர்களின் பிரச்சனையை உணராதது தான்
பெரும்  பிரச்சனையே!

      *அன்று நீங்கள் படிக்கும் காலத்தில் மின்சார வசதி இல்லாமல் இருந்திருக்கலாம்,ஆனால்

    இன்று அந்த மின்சார வசதி உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் கிடைத்திருக்கலாம்,
       மின்சாரவசதி கிடைத்தும் படிக்கவில்லை என்று கூறும்
நீங்கள் அந்த வசதியே அவனுக்கு பெரும் இடையூராக உள்ளது
என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்.

    *இன்று அறிவியல் துறையின்  அபரீத  வளர்ச்சியால் தொலைக்காட்சி,செல்பேசி,இணையம்,மற்றும் பல தகவல் தொடர்பு வளர்ச்சியின் காரணமாக

       *ஒரு மாணவன் தகவல்களை சேகரிப்பது மட்டும் கல்வியாக இருந்தால் அவனுக்கு ஆசிரியரே தேவையில்லை.

* விவேகானந்தரின் கூற்றுப்படி,
கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர,
வெறும் தகவல்களைச் சேகரிப்பதல்ல...

      அவனை மீட்டு எடுக்க வேண்டிய ஆசிரியர்களே
தொலைக்காட்சியால் அவனையே அவன் தொலைக்கிறான் என்பதையும்,செல்லிடபேசியால் அவன் செல்கள் செயல் இழக்கின்றன
என்பதை உணர்த்தாமல் பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களை
குறைக்கூறுவதையே பெரும் குறையாக வைத்துள்ளனர்.
  அதற்கு அவர்கள்
              கூறும் காரணங்கள் "எதுவாக"இருந்தாலும்-அது
              மாணவர்களுக்கு "ஏதுவாக" இல்லை என்பதே
என் வருத்தம்.        

குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை
உருவாக்குவதை விட, மகிழ்ச்சியான
நிகழ் காலத்தைத் தருவது நம் கடமை!
என்பதை மறுக்காமலும், மறக்காமலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

#நமது கல்விமுறை

*இன்றைய கல்வி முறையின் அவல நிலை?

*வெறும் எண்ணிக்கையால் உயர்ந்ததில்ல "வாழ்க்கை"
நல்லெண்ணங்களால் உயர்ந்ததே "வாழ்க்கை"..

   . என்பதை சொல்ல மறந்த இன்றைய கல்வி முறையால் ஆசிரியர்கள் வெறும் "calculator" ராக மாறிவிட்டன இவர்களின் பார்வையில் மாணவர்கள் ஒரு புள்ளி விவரங்களாகவே உள்ளனர்.
இது 95, இது 90, இது 80, இது 60,இது தேராது....
இத மாத்தி சொல்லணும் என்றால் A1,A2,B1,B2,C1,C2
D, E1,E2 GRADE -இவ்வாறாக அடையாளும் காணும்

கல்வியால் என்ன பயன்?

ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?

             #நமது கல்விமுறை 100% தகவல்களை அளிப்பதாகவே இருக்கிறது.
                     அது ஒரு தூண்டுகோலாக,ஊக்கம் கொடுப்பதாக இல்லை ஊக்குவிப்பவர் இல்லையென்றால்,ஒரு மனிதன் அவனுடைய
எல்லைகளை தாண்டி உயர முடியாது.
வெறும் தகவல் தேவை என்றால்,
 ஓர் ஆசிரியர் சிறந்தவராக இருக்க முடியது.
புத்தகங்களும்  ,இணையத்தளமும் இந்த வேலையை
இன்னும் சிறப்பாக செய்யும்.

      #ஓர் ஆசிரியரின் பங்கு,ஒரு மாணவனை கற்க தூண்டுவதாக
இருக்க வேண்டும்.அறிவுக்கான தாகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.அப்போது தான் ஆசிரியரின் பங்கில் ஏதாவது பொருள் இருக்கும்.
                  -சத்குரு            

ஆசிரியர்-மாணவர் உறவு மேம்பட!

இன்றயை மாணவர்களின் பிரச்சனை!

இன்று நேரத்தை மாணவர்கள் "useless" ஆக பயன்படுத்துவதற்கும்,

"usedless" ஆக பயன்படுத்துவதற்கும்,

வாய்ப்புக்கள் அதிகம் என்பதை உணர்த்தும் வகையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் போதிக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை ஒரு நல்ல ஆசிரியர், என்பவர் வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் போது, தான் ஒரு முன்னாள் மாணவன் என்பதை மனதில் வைத்துகொண்டு பாடம் கற்பிக்க வேண்டும்!

ஒரு நல்ல மாணவன் என்பவர் பின்னாளில் தானும் ஆசிரியர் ஆகலாம் என்ற எண்ணத்தோடு பாடத்தை கற்க வேண்டும்!

#யார் சிறந்த ஆசிரியர்?

சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிகொள்பவர்கள்- சாதரணமானவர்கள்!
சூழ்நிலையை தனக்கு சாதக்கமாக பயன்படுத்திக்கொள்பவர்கள்-புத்திசாலிகள்!
சூழ்நிலையை தங்களுக்கு  ஏற்றவாறு மாற்ற நினைப்பவர்கள்-போராளிகள்!
சூழ்நிலையை தங்களுக்கு ஏற்றவாறு  மாற்றியவர்கள்-சாதனையாளர்கள்!  

இன்றைய கல்விமுறையால் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் உறவில்
உள்ள சிக்கலுக்கான காரணம் புரிதல் இல்லாததே என்பதை என் மன நெருடலாக பதிவு செய்துள்ளேன்!  

   இந்த பதிவு ஆசிரியர்-மாணவர்-பெற்றோர்  உறவை மேம்படுத்த உதவும்
என்ற நமிக்கையோடு!

   உங்கள் வாத்தியார் நண்பன்
        அருள் .பி.ஜி

தடய அறிவியல் பணி: விண்ணப்பிக்க 3 நாளே அவகாசம்

இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.தமிழக அரசின், தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள, 30 இளநிலை தடய அறிவியல் அதிகாரி பணியிடங்கள், நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. 
இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் குற்றவியலில், முதுநிலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அக்., 16ல் எழுத்து தேர்வை நடத்துகிறது.இதற்கு, ஜூலை, 29ம் தேதி, விண்ணப்ப பதிவு துவங்கியது. வரும், 28ம் தேதியுடன் விண்ணப்பங்களை பதிவு செய்யும்அவகாசம் முடிகிறது. விடுபட்ட பட்டதாரிகள், மூன்று நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் விடுதிகள்: காலியாகவுள்ள சமையலர் பணிக்கு செப். 9-க்குள் விண்ணப்பிக்கலாம்.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்பட்டுவரும் விடுதிகளில் காலியாகவுள்ள சமையலர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 9-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இது குறித்த விவரம்: 
சென்னை மாவட்டத்தில் காலியாகவுள்ள ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் விடுதிகளில் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக, நேர்காணல் மூலம்தகுதியுள்ள ஆண், பெண் இருபாலரும் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடத்துக்கு சம்பளமாக ரூ.4800-10,000, தர ஊதியமாக ரூ.1,300 அளிக்கப்பட உள்ளது.இதற்காக, சென்னை மாவட்டத்தில் வசித்து, 18 முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். அதோடு, சைவ, அசைவஉணவு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த, ஆதிதிராவிடர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.இதற்கென, உரிய தகுதிகளுடன் விடுதிகளில் சமையலர் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் பெயர், தந்தை-கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, கல்வித் தகுதி, சாதி உள்ளிட்டவையோடு, முன்னுரிமை விவரம் (மாற்றுத் திறனாளி, விதவை, முன்னாள் ராணுவத்தினர், கலப்பு திருமணம், மொழிப்போர் தியாகி போன்றவை) அளித்திட வேண்டும்.

அத்துடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின், அதன் பதிவு எண், குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், இருப்பிடச் சான்று ஆகிய விவரங்கள், உரிய சான்று நகல்களுடன், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2-ஆவது தளத்தில் இயங்கும் சென்னை மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் செப்.6-ஆம் தேதியன்றுமாலை 5 மணிக்குள் நேரில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரா.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மாணவர் உதவித்தொகை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்.

சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும், முஸ்லிம், கிறிஸ்துவ, பார்சி, ஜெயின், புத்த மற்றும் சீக்கிய இனத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாணவ, மாணவியர், http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி, ஆக., 31 என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, செப்.,30 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, ஒரு மாத அவகாசம் தரப்பட்டுள்ளது

பி.ஏ.பி.எட்., - பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு : கல்வியியல் கல்லூரிகளில் இந்தஆண்டு அறிமுகம்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாக, பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல், கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.சட்டசபையில், 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
●பொறியியல் மாணவர்கள், இந்திய பொறியியல் பணித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, சென்னை, தர்மபுரி, கோவை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்

●ஆண்டுதோறும், 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில் படிக்கும், 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெற, வெளிநாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்; இத்திட்டம், 1.50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்

●உலகப் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளை, மாணவர்கள் கேட்டு பயன் பெற, 'வீடியோ கான்பரன்ஸ்' ஒலி ஒளியக மையம், சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில், 75 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்

●மதுரையில் உள்ள, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரியில், பொருள் சேதமில்லா தரச்சோதனை பயிற்சி மையம், 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்; இங்கு, ஆண்டுக்கு, 100 பேருக்கு, செய்முறை பயிற்சி அளிக்கப்படும்

●கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்; காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில், தலா, 8 கோடி ரூபாய் செலவில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்படும்

●அனைத்து பல்கலை மற்றும் இணைவுக் கல்லுாரிகள், மேகக் கணினியத்தில் இணைக்கப்பட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சேவை வழங்கும் மையம், 160 கோடி ரூபாய் செலவில், அண்ணா பல் கலையில் நிறுவப்படும்; இத்திட்டம், 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்

●அண்ணா பல்கலையில், 50 கோடி ரூபாய் செலவில், மோட்டார் வாகன தொழில்நுட்ப மையம், மோட்டார் வாகன தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்படும். மேலும், 5,000 பேர் அமரும் வசதி கொண்ட, ஒரு பெருங்கூட்டரங்கமும், 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்

●அண்ணா பல்கலையில், சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சி மையம், 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்

●தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையின் மண்டல மையங்கள், விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், 12.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்

●தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், நான்காண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள், இந்த ஆண்டு கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்

●மதுரை காமராஜர் பல்கலையில், நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கூடிய, ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மாணவர்கள் நலன் கருதி, 7 கோடி ரூபாய் செலவில், உள் விளையாட்டரங்கம், நுாலகம் கட்டப்படும்.

சூரிய மின் ஒளி, நிலத்தடி நீர் சேமிப்பு திட்டம், 'வைபை' வசதி, 5 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.விடுதி மேம்பாட்டு பணிகள், 1 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு முதல்வர்அறிவித்தார்.

ஒரே நாளில் 3 தேர்வு: பட்டதாரிகள் குழப்பம்.

உயர் நீதிமன்றம், மின் வாரியம் மற்றும் தொழில்நுட்ப துறை தேர்வு என, ஒரே நாளில் மூன்று தேர்வுகள் நடக்கின்றன. இதனால், மூன்றுக்கும் விண்ணப்பித்தவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
மின் வாரியம் சார்பில் இளநிலை உதவியாளர், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும், 27 மற்றும், 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.தமிழக தொழில்நுட்ப கல்வித்துறையின் சார்பில் தட்டச்சு தேர்வும், 27 மற்றும், 28ல் நடக்கிறது. அதே நாட்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.இந்த மூன்று தேர்வுகளுக்கும், பலர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், எந்த தேர்வை எழுதுவது என தெரியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: மின் வாரிய தேர்வு பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வித்துறை தேர்வும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தான் மிக குறுகிய காலத்தில் அறிவித்து நடத்தப்படுகிறது.டி.என்.பி.எஸ்.சி.,யை பொறுத்தவரை, மற்ற துறைகளின் தேர்வுகளை கணக்கிடாமல், தேர்வு தேதியை குழப்பமாக அறிவிப்பது தொடர்கிறது. சில குறிப்பிட்ட துறைகள் தேர்வை அறிவித்து விட்ட நிலையில், அதேநாளில் டி.என்.பி.எஸ்.சி.,யும் தேர்வை அறிவிக்காமல் தவிர்த்தால், அது தேர்வர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ளஸ் 2வுக்கு செப்டம்பர், 8ல் காலாண்டு தேர்வு.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி பொதுத் தேர்வை போல, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை, அனைவருக்கும் பொதுவான வினாத்தாளுடன் நடத்த, பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்., 8ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்குகிறது.

பிளஸ் 2வுக்கு, செப்., 8 முதல், 12 வரை, மொழி பாடங்களுக்கும்; மற்ற தேர்வுகள், செப்., 14 முதல், 23 வரையிலும் நடத்தப்பட உள்ளன. பத்தாம் வகுப்புக்கு, செப்., 8 முதல், 14 வரை மொழி பாட தேர்வுகளும்; மற்ற தேர்வுகள், செப்., 15 முதல், 23 வரையிலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

REPCO வங்கியில் கிளார்க் & அதிகாரிப் பணி

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியில் 75 ஜூனியர் அசிஸ்டன்ட், கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயதுவரம்பு: 01.08.2016-ஆம் தேதியின்படி 21 - 28,30க்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcobank.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மத்திய அரசுத் துறைகளில் பல்வேறு பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) தற்போது பல்வேறு அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 146

பணி - காலியிடங்கள் விவரம்:

குடும்ப நலத் துறையில் பேராசிரியர் (ஸ்பெஷலிஸ்ட்– அனஸ்தீசியா) - 75மெடிசின் ஸ்பெஷலிஸ்ட் - 30இதேபோன்று வேளாண்மைத்துறை, வர்த்தகத்துறை, பாதுகாப்புத் துறை, மனிதவளத் துறை, மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அனஸ்தீசியா, மருந்து, பார்மகாலஜி, பிசியாலஜி, ரேடியோ டயக்னாசிஸ் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பை முடித்தவர்களும், பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மெட்டலர்ஜிகல், ஐ.டி., டெக்ஸ்டைல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கோபத்தை தவிருங்கள்

குரூப்-4 பகுதி -6

குரூப் 4 பகுதி 7

காய்கறி வாங்குவது எப்படி?

எளிதாக உடல் எடையை குறைக்க முடியாது

உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை

உங்களுக்கு என்ன நோய்

ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அழியாத மையின் சுவையான வரலாறு

ஆபத்தான உணவுக் குழாய் கேன்சர்

TRB PG TAMIL திருநாவுக்கரசர்

TNPSCகுரூப்_4 பகுதி -5

TNPSC TET PDG TRB கம்பராமாயணம்

TNPSC GROUP-4 பொதுத்தமிழ் பகுதி-3

'டயட்' என்ற பெயரில் காலை உணவை தவிர்க்க வேண்டாம்!

Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை

Cellphone Doubts Sensors!

PGTRB- TAMIL தேவாரத் திருமுறைகள்

TNPSC GROUP 4, TET எட்டாம் வகுப்பு தமிழ் பகுதி 2

பள்ளிக்கூடம் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?

பாரதி பிறந்த தினம்

புதியதாக மொபைல் போன்

பெண்களின் பருவ மாற்றங்களும்

பெண்கள் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்

பேய் உண்டாஇல்லையா?

வங்கி இருப்பு குறித்து அறிய !!! அனைவரும் பயன் உள்ள தகவல்