யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/1/17

நத்தம் அல்லது திண்டுக்கலில் ஜல்லிக்கட்டு.. தமிழக அரசு திடீர் திட்டம்?

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அருகில் வேறு ஏதாவது ஊரில் ஜல்லிக்கட்டை நடத்தி விட்டு கணக்கு காட்ட தமிழக அரசு முயன்று வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு நடந்ததாக பதிவாக வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதைச் செய்து விட்டு நாளை கூடும் சட்டசபைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அனேகமாக மதுரைக்கு அருகே நத்தம் அல்லது திண்டுக்கல்லில் முதல்வர் ஓ.பி.எஸ் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு நடைபெறலாம் என்று தகவல்கள்
தெரிவிக்கின்றன. மேலும் முரட்டுக்காளைகள் கிடைக்காமல் போனால் வாடிவாசல் வழியாக சாதாரண காளைகளை அவிழ்த்து விடலாமா என்றும் ஆலோசனை நடக்கிறதாம்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது மதுரை பாண்டியன் ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்கு வைத்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்.

பண மதிப்பு நீக்கம் காரணமாக ரொக்கமற்ற பரிவர்த்தனைகள் உயர்ந்து வருகின்றன. இதனை மேலும் உயர்த்தும் விதமாக பணப் பரிவர்த்தனைக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தற்போது 50,000 ரூபாயை ரொக்கமாக பரிவர்த்தனை செய்யும் போது வங்கிகளில் பான் எண் குறிப்பிடுவது அவசியமாகும். இனி 30,000 ரூபாய் பயன்படுத்தினாலே பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம் என திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் அதிக பண பரிவர்த்தனைகள் குறையும் என்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கடைகளில் தற் போது 2 லட்ச ரூபாய் பரிவர்த்தனை களுக்கு பான் எண் அவசியமாகும். அதனை குறைக்கவும் முடிவெடுக் கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக பணப் பரிவர்த்தனைகள் செய்பவர் களிடம் பான் எண் இல்லை என்னும் பட்சத்தில் ஆதார் எண் குறிப்பிடவேண்டியது கட்டாயமாகும் என்றும் விதிகள் மாற்றப்படலாம். தவிர குறிப்பிட்ட தொகைக்கு பணப்பரிவர்த்தனை செய்யும்பட் சத்தில், பணம் கையாளுவதற்கான கட்டணம் விதிக்கவும் திட்டமிடப் பட்டிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணப்பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் இந்த கட்டணம் விதிக்கப்படலாம் என தெரிகிறது. ரூ.10 லட்சம் டெபாசிட்: வரித்துறை புதிய விதி ஒர் ஆண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் வங்கி கணக்குகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் குறித்த விவரத்தை வங்கிகள் வருமான வரித்துறைக்கு ஒப்படைக்க வேண்டும் என வருமான வரித்துறை கோரியிருக்கிறது. முன்னதாக கடந்த நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரையில் 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கேட்டிருந்தது.

இப்போது ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தியவர்கள் மற்றும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் ஓர் ஆண்டில் டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை வங்கிகள் வருமான வரித்துறையிடம் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஓர் ஆண்டில் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவர்களின் தகவலையும் வருமான வரித்துறை கேட்டிருக்கிறது. 30 லட்ச ரூபாய்க்கு மேல் சொத்துகள் வாங்குதல் மற்றும் விற்றல் கணக்குகளையும் வருமான வருமான வரித்துறை கேட்டிருக்கிறது.

அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் ‘கற்றல் திறன் மதிப்பிடல் முறை’ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

பள்ளி மாணவர்களிடம் எதிர்நோக்கும் கற்றல் திறன்களை மதிப்பிடு வதற்கான அளவுகோல்களை வரைமுறைப்படுத்தும், 'கற்றல் திறன் மதிப்பிடல் திட்டம்' அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
வகுப்புவாரியாக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்த வளர்ச்சியை மதிப்பிட இதுபோன்ற கற்றல் குறியீடுகள் பயன்படுத்தப் படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது. 1 முதல் 8-ம் வகுப்பு வரையி லான மாணவர்களிடம்எதிர் நோக்கும் 'கற்றல் திறன் மதிப்பிடல் திட்டம்' தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள், பெற் றோர்கள் மற்றும் பொது மக்களிடம் கருத்துகளும் கோரப் பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம்இந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டு, 2017-18 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என, மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக, தொகுக் கப்பட்ட கற்றல் திறன் மதிப்பிடல் முறையை கல்வித் திட்டத்தில்இணைக்கும் வகையில், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வரைவு அறிக்கை, தொடக்க நிலை வரையிலான மொழிப் பாடங்கள், கணிதம், சுற்றுச்சூழல் கல்வி, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங் களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்்ஷா அபியான்) திட்டத்தை கண் காணிப்பதற்கான'ஷாகன்' எனப் படும் புதிய வலைதள அமைப்பை டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தபோது அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இத்தகவலை வெளியிட்டார். ஜவடேகர் மேலும் கூறும்போது, ''தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) வடிவமைத்த கற்றல் திறன் மதிப் பிடல் திட்டம், அந்தந்த வகுப்பு களில் ஆசிரியர்களுக்கு உதவுவ தோடு மட்டுமல்லாமல், மாணவர் களின் கல்வியை மேம்படுத்த திட்டமிடும் பெற்றோர், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அரசுத் துறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பயன்படும். பல்வேறு படிநிலைகளில் மாணவர்களின் நிலையைதனிப் பட்ட முறையிலும், ஒட்டுமொத்த அளவிலும் ஆசிரியர்கள் மதிப் பிட வசதி செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இந்தப் பதிவு D.S.P.செல்வத்தின் முகநூல் பதிவு.மிகவும் அற்புதமான சிந்திக்க வைக்கும் பதிவு.                                                 --------------------------------------------------------------------------

இனிய இளவல்களே,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நீங்களாகவே மெரினா கடற்கரையில் திரண்டுவந்து நின்ற காட்சியைப் பார்த்து மிகுந்த நம்பிக்கை கொள்கிறேன்.

தமிழ்மண்ணின் ஆணிவேரான கிராமங்கள் மீதும், மாடுகளோடு பின்னிப் பிணைந்த நமது பாரம்பரிய விவசாயம் மீதும் நீங்கள் கொண்டுள்ள அன்பின் அடையாளமாகவே உங்கள் மெரினா கடற்கரை நிகழ்வை நான் பார்க்கிறேன்.

விவசாயப் பின்னணியில் பிறந்துவளர்ந்த வேளாண்மைப் பட்டதாரி என்ற வகையிலும், விவசாயம் தழைக்கவேண்டும் என்ற வேட்கைகொண்ட ஊடகவியலாளன் என்ற முறையிலும், உங்கள் உணர்வை வியந்து போற்றுகிறேன். இதே உணர்வு சரியான திசையில் செலுத்தப்பட்டால் மகத்தான மாற்றங்கள் சாத்தியமே என்று எனக்குள் நம்பிக்கை பெறுகிறேன்.

இளைஞர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயமும் இப்போது புரிந்துகொள்ளவேண்டிய ஒரு முக்கியமான உண்மை, இன்று தமிழக விவசாயம், அழிவின் விளிம்பில் நிற்கிறது. ஆங்காங்கே நிகழும் விவசாயிகளின் தற்கொலைகள், நாம் எதிர்நோக்கும் பேரழிவின் முன்னறிவிப்புகள் மட்டுமே.

ஒரு பாலைவனத்தை எப்படி பசும் சோலைவனமாக மாற்ற முடியும் என்பதற்கு உலக அரங்கில் முன்னுதாரணம் இஸ்ரேல்.
ஒரு பசும் சோலைவனத்தை எப்படி பாலைவனமாக மாற்ற முடியும் என்பதற்கு உலக அரங்கில் முன்னுதாரணம் தமிழகம்.

மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடித்த பெருமைக்குரிய விவசாயிகள், இன்று கருகும் பயிர்களைப்  பார்த்து மனமுடைந்து தற்கொலைசெய்துகொள்கிறார்கள். இந்த பரிதாப நிலைமைக்கு, நம்மை ஆண்டவர்கள் மட்டும் காரணமல்ல, நமது அறியாமையும் காரணம். 

இந்த நிலைமை மாறவேண்டுமானால் - தமிழக விவசாயம் மீண்டும் தழைக்க வேண்டுமானால் - அது ஜல்லிக்கட்டு மூலமாக நடந்துவிடாது என்ற உண்மையை நாம் உணரவேண்டும். தமிழக விவசாயம் குறித்த விரிவான புரிதல் நமக்கு வேண்டும்.

கீழ்க்கண்ட 4 வகையான பணிகளை சாதித்தால், தமிழக விவசாயம், உலக அரங்கில் முன்னுதாரணமாக பேசப்படும் காலம் உருவாகும். 

1. மழைதரும் 100 கோடி மரங்கள் தேவை.
----------------------------------------------------- 
மேகத்தை குளிர்வித்து மழையாக ஈர்க்கும் மந்திர சக்தி மரங்களுக்கு மட்டுமே உண்டு. இஸ்ரேலியப் பாலைவனத்தை பசுமையாக்கிட அவர்கள் செய்த முதல் வேலை, மரங்கள் நடும் மாபெரும் தேசிய இயக்கத்தை நடத்தியதுதான். 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட அந்த நாட்டில், 25 கோடி மரங்கள் புதிதாக நட்டு வளர்க்கப்பட்டதால், அந்தப் பாலைமண் பூமியில் இப்போது ஆப்பிளும், தக்காளியும் நம்மைவிடப் பல மடங்கு விளைகிறது.

ஆனால் நாம், நம்மிடம் இருந்த பசுமை மாறாக் காடுகளை அழித்து எஸ்டேட்டுகளாகவும், சாமியார் மடங்களாகவும், தார்ச் சாலைகளாகவும் மாற்றிவிட்டோம். 1,30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தமிழ்நாட்டுக்கு மழைதரும் 100 கோடி மரங்கள் தேவை.

நமது இளைஞர்கள் களம் இறங்கினால், நமது 17,000 கிராமங்களில் ஒரு கிராமத்துக்கு 60,000 மரங்கள் வீதம் மழைதரும் மரங்களை நட்டு வளர்த்து 100 கோடி மரங்கள் வளர்ப்பது 100 சதம் சாத்தியமே.

வேலிக்கருவை என்ற நச்சுமரத்தை அப்புறப்படுத்தி, வேம்பு, மலைவேம்பு, புளி, பூவரசு, புங்கன், தேக்கு, செம்மரம், சந்தனம், செஞ்சந்தனம், சவுண்டல் உள்ளிட்ட மழைதரும் மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும்.

இந்த 100 கோடி இலக்கினை சாதித்தால், ஒவ்வொரு ஆண்டும் நாம் தண்ணீருக்காக கர்நாடகத்திடமும், கேரளத்திடமும் கையேந்தும் நிலைமை ஒருபோதும் வராது. விவசாயிகள் வானத்தை வெறித்துப் பார்த்து பெருமூச்சுவிடும் நிலைமை முற்றிலும் மாறிவிடும். மாதம் மும்மாரி பொழிவது இயற்கை நியதியாக மாறிவிடும். 

2. நீராதாரங்கள் பாதுகாப்பு
----------------------------------
தொழில்நுட்ப அறிவு பற்றி மேலைநாடுகளில் பேசப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிற நதியின் குறுக்கே பிரமாண்ட அணையைக் கட்டும் தொழில்நுட்ப அறிவை செயலில் காட்டி சாதித்தவன் தமிழன். ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் உருவாக்குவதையும், அவற்றைப் பேணிக்காப்பதையும் அரசின் தலைமைப் பணியாகக் கொண்டிருந்தவர்கள் நம் முன்னோர்கள்.

நீராதாரங்களை கூறுபோட்டுவிற்கும் கொலைபாதகர்களால்தான் நமது விவசாயம் சின்னாபின்னமானது. இருக்கிற ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் கால்வாய்களை போற்றிக் காப்பதையும், புதியனவற்றை சாத்தியமான அளவில் உருவாக்குவதையும் இளைய தலைமுறை தனது கடமையாக தோளில் ஏற்கட்டும்.

3. பல்லுயிர் சூழல் விவசாயத்தை மீண்டும் மலரச் செய்வோம்.
---------------------------------------------------------------------------
ஜல்லிக்கட்டு நமது முன்னோரின் வீர விளையாட்டாக இருந்தது உண்மை. அவர்கள் வாழ்வில் காளைகள் மட்டும் அல்ல - பசுக்கள், எருமைகள், ஆடுகள்,  முயல்கள், பன்றிகள், கோழிகள், கிளிகள், குருவிகள், புறாக்கள், மீன்கள், வண்ணத்துப் பூச்சிகள், தட்டான்கள், மண்புழுக்கள் என பல்லுயிர் சூழ்ந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தனர்.

இன்றைய விவசாயம் மீண்டும் பல்லுயிர் சூழ்ந்த விவசாயமாக மாறவேண்டும். அப்போதுதான் மலடாகிப்போன மண், மீண்டும் உயிர்பெற்று அதிக விளைச்சலை அள்ளித்தரும். நமது விவசாயிகளை பல்லுயிர் சூழல் விவசாயத்திலும், புதிய விவசாய தொழில் நுட்பங்களிலும் பயிற்றுவித்து அவர்களுக்குத் துணை நிற்பது அவசர அவசியம். 

பல்லுயிர் சூழ்ந்த விவசாயத்தின் ஓர் அடையாளமாக நமது முன்னோரின் ஏறு தழுவுதல் வீர விளையாட்டு இருந்தது என்று பெருமை கொள்வோம். அதற்காக இன்றைய கணினி யுக இளைஞர்கள் ஏறு தழுவுதல் வீர விளையாட்டில் இறங்கி ஒருகை பார்க்கவேண்டும் என்று சிந்திப்பது அறியாமை.

கணினி யுக இளைஞர்களில் வாய்ப்புள்ளவர்கள், பல்லுயிர் சூழ்ந்த விவசாயத்தில் ஈடுபடலாம். நாட்டுமாடு, நாட்டு ஆடு, நாட்டுக் கோழி வளர்ப்பதை பெரும் தொழிலாக செய்யலாம். ஒற்றை நெல் சாகுபடி, துல்லியப் பண்ணையம், ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தி விவசாயத்திலும் அதிக லாபம் ஈட்ட முடியும். அது மட்டுமல்ல, வேறு எங்கும் கிடைக்காத மன நிறைவும் இதில் பெறமுடியும்.

4. ஆலைத் தொழில்போல், திட்டமிடப்பட்ட விவசாயம்
--------------------------------------------------------------------
முதல் மூன்று பணிகளால் தண்ணீரும், மண் வளமும் உறுதிசெய்யப்பட்டு உயர் விளைச்சல் சாத்தியமாகும். ஆனால், அதிகமாக விளைந்த தக்காளியும், வெங்காயமும், வாழைக்காயும் சாலைகளில் கொட்டப்படுவது போன்ற நிலைமைகள் இனி வரவே கூடாது. அதற்கு ஒரே வழி, மாநில அளவிலும், வட்டார அளவிலும் விவசாய உற்பத்தி திட்டமிடப்பட்ட வேண்டும். ஆலைத் தொழில்போல், விவசாயத்தையும்  PROFESSIONAL VENTURE ஆக மதித்துப் போற்றவேண்டும். அதற்குரிய பயிற்சிகள் மானிய உதவிகள், மாதிரிகள் அனைத்தையும் வழங்க வேண்டும்.

மற்ற எல்லாவித ஆலை உற்பத்தி பொருட்களுக்கும், லாபத்துடன் கூடிய விலை நிர்ணயம் செய்யப்படுவதுபோல், விவசாய விளைச்சலுக்கும் கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதற்கான நிர்பந்தத்தை அரசுக்கு நாம் உருவாக்க வேண்டும்.

தமிழக விவசாயத்தில் உண்மையான புரட்சியை சாத்தியமாக்கும் இந்த 4 மகத்தான பணிகளையும் எந்த அரசாங்கமும் தானே செய்யாது. அதற்குரிய அக்கறையும் மனத்துணிவும் இளைய சக்தியிடம் பீறிட்டுக் கிளம்பினால் மட்டுமே இவை சாத்தியம்.

அன்பு இளவல்களே,
------------------------
ஜல்லிக்கட்டு ஆதரவு என்ற அடையாள போராட்டத்தில் நீங்கள் முடங்கிவிடவேண்டாம். பண்டிகைகால நிகழ்வுகள்போல் உங்கள் உணர்வுகள் முனைமழுங்கிப் போகவேண்டாம்.  

நமது கிராமங்கள் மீதும், மாடுகளோடு பின்னிப் பிணைந்த நமது பாரம்பரிய விவசாயம் மீதும் நீங்கள் கொண்டுள்ள அக்கறையை மேலும் வளர்த்தெடுங்கள். மேலே சொன்ன நான்கு விதமான பணிகளில் எது முதலில் சாத்தியமோ முதலில் அதைத் தொடங்குங்கள்.

ஆக்கபூர்வ ஊடகங்களும், நேர்மையாகச் சிந்திக்கும் வேளாண்மைத் துறை சார்ந்தவர்களும் உங்களுக்குத் துணை நிற்பார்கள்.

பசுமையான தமிழகம் மலரட்டும்! விவசாயிகள் வாழ்வில் விடியல் பிறக்கட்டும்!

ஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு !!

ஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய அரசின் ஆய்வு குழு பரிந்துரை

 ஆசிரியர்களுக்கு, கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களது நேரத்தை வீணடிப்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட, செயலர்கள் அடங்கிய ஆய்வு குழு பரிந்துரைத்து உள்ளது.


 இதையடுத்து, பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களை, புதிதாக வரையறுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாராகி வருகிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், கல்வி பணியை தவிர, பல்வேறு பணிகளையும் செய்து வருகின்றனர். பள்ளிகளிலும், கல்வி சாராத மற்ற பணிகளை செய்கின்றனர்; அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகள் போன்றவற்றில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், கல்வியில் ஆசிரியர்களின் கவனம் குறைவதாக, புகார் கூறப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்வதற்காக, பல்வேறு துறை சார்ந்த செயலர்கள் அடங்கிய குழு ஒன்றை, பிரதமர் மோடி அமைத்தார். இக்குழு தன் ஆய்வை முடித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அடிப்படை பணி : இது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி வழங்குவது மட்டுமே, பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை பணி. பாடம் நடத்துவது உட்பட, கல்வி தொடர்பான பணிகளில் மட்டுமே, அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் வேறு பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர். கால்நடை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, போலியோ ஒழிப்பு, ரேஷன் கார்டு சரிபார்ப்பு என, வெவ்வேறு அரசு மற்றும் பொது பணிகளில், பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நேரம் குறைந்து, கல்வியில் அவர்கள் கவனம் இருப்பதில்லை; மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும், இந்நிலை காணப்படுகிறது. ஆசிரியர்கள், கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். மேலும், பள்ளி நிர்வாகங்களின் கட்டளைப்படி, வேறு சில பணிகளையும் செய்கின்றனர்.

தடுக்க வேண்டும் : பல்வேறு துறை செயலர்களை கொண்ட குழு நடத்திய ஆய்வில், இந்த தகவல்கள் உறுதியாகி உள்ளன. பள்ளி ஆசிரியர்களை, கல்வி அல்லாத மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என, அக்குழு பரிந்துரைத்து உள்ளது.

கல்வியை தவிர மற்ற பணிகளில், ஆசிரியர்களின் கவனம் செல்லக் கூடாது என, அறிவுறுத்தி உள்ளது. இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், பள்ளி ஆசிரியர்களுக்கான பணி விதிமுறைகளை வகுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது; விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கல்வி உரிமை சட்டம் : கல்வி உரிமை சட்டத்தின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, பேரழிவு மீட்பு நடவடிக்கை, தேர்தல் பணிகள் ஆகிய மூன்று பணிகளுக்கு மட்டுமே, பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது; மற்ற பணிகளுக்கு, அவர்களை பயன்படுத்துவதை, அரசு நிறுத்த வேண்டும் என, அச்சட்டம் கூறுகிறது.

பஸ்களில் ஏற்றும் ஆசிரியர்கள்! : பிரதமர் மோடி அமைத்த குழு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் பற்றி கூறியுள்ளதாவது:அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும், ஆசிரியர்களும், கல்வி அல்லாமல், மற்ற பணிகளை செய்யும் சூழல் நிலவுகிறது. கட்டணம் வசூலிப்பது, குழந்தைகளை பள்ளி பஸ்களில் ஏற்றி அனுப்புவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.

இவ்வாறு அந்த குழு கூறியுள்ளது.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு இல்லை !!


மக்களை மதிக்காமல் ரேக்ளா பந்தயம்.. இளைஞர்கள் ஆவேசப் போராட்டம்.. கோவையில் பதட்டம் !!

மக்கள் எதிர்ப்பு காரணமாக பலத்த பாதுகாப்புக்கு நடுவே ரேக்ளா பந்தயம் கோவையில் நடைபெற்றது. ஆனால் மாணவர்கள் விரைந்து வந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும், அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. சுமார் 200 அதிக மாட்டு வண்டிகள் இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல வீரர்கள் போட்டியை புறக்கணித்தனர். இதனால் 3 வண்டிகள் மட்டுமே பங்கேற்றன.

இதற்கும் மக்கள் இடையூறு செய்ய வாய்ப்பிருப்பதாக கருதிய அரசு பந்தய பாதையின் இருபுறமும் போலீசாரை குவித்திருந்தது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற காளைகளை பயன்படுத்தும் விளையாட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கேட்டு மக்கள் போராடி வரும் நிலையில், எப்படியாவது இந்த *ஒற்றுமையை கலைத்துவிட வேண்டும்* என்ற நோக்கத்தில் இந்த போட்டி நடைபெற்றுள்ளது.
இதனால் கோபமடைந்த சுமார் ஆயிரம் மாணவர்கள் பைக்குகளில் அங்கு விரைந்து வந்து ரேக்ளா பாதையில் அமர்ந்து தர்ணா நடத்தி வருகிறார்கள். அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறார்கள். இதனால் போலீசாரால் என்ன செய்வது என தெரியவில்லை. அந்த இடமே பரபரப்பாக காட்சியளிக்கிறது.

TAMIL NADU GOVERNMENT CONDUCT RULES !!

13/1/17

ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று வெளியாகிறது தீர்ப்பு?

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனால் தமிழகத்தில் கடந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. இது தொடர்பான வழக்கு
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த 
நிலையில் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


அப்போது அனைத்து தரப்பும் தங்களது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இவ்வழக்கில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சார்பாக ஆஜரான பாஜக ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமியும் தமது வாதத்தை 11 பக்கமாக எழுத்துப்பூர்வமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

முன்னதாக நடைபெற்ற வாதத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் வலுவான வாதங்கள் முன் வைக்கப்பட்டது. பசுவிற்கு வலிக்கும் என்பதற்காக பால் கறக்காமலா இருக்கிறோம் என மத்திய அரசு வாதம் முன் வைத்தது. ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு கிடையாது, அது ஒரு திருவிழா என்றும் வாதம் செய்தனர்.
இந்த வழக்கில் இன்று அல்லது நாளை தீர்ப்பு வெளியாகும் என்று சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே கோர்ட் உத்தரவு வரும் வரை அவசர சட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது.

நேற்று முன்தினம் மாலை, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனில் மாதேவ் , 'தமிழ் மக்களின் கலாசாரத்திற்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுக்கப்படும் .ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக மத்திய அரசு காத்திருக்கிறது' என கூறிவிட்டார். எனவே அனவைரது எதிர்பார்ப்பும் சுப்ரீம் கோர்ட் மீது உள்ளது. காளையை காட்சி விலங்காக மாற்றிய சட்டத்தில் திருத்தம் செய்யாத நிலையில், உச்சநீதிமன்றம் வாதத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பை ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக வழங்குமா என்று தெரியவில்லை.

மருந்து சீட்டுகளை கைகளால் எழுத டாக்டர்களுக்கு தடை!!!

வங்கதேசத்தில், டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விவரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் எழுதி கொடுக்கும் மருந்துகளின் பெயர்கள் என்னவென்றே தெரியாத அளவிற்கு அவர்களின் கையெழுத்து உள்ளது. இதனால் மருந்து கடைக்காரர்களுக்கும் மருந்துகளின் பெயர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து வங்கதேச கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‛இனி டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விவரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும்.அதையும் மீறி எழுத வேண்டிய கட்டாயம் இருந்தால் மருந்து விவரங்களை ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளாக எழுத வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

மேலும் சுகாதார துறையினர் இதை கண்காணித்து 3 மாதத்துக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு செயல்முறை தேர்வு அறிமுகம்!!!

பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணக்குகளை போடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில், பின்தங்கி இருக்கும் மாணவர்கள், கற்றல் குறைபாடுள்ளவர்களாக பிரிக்கப்படுகின்றனர்.

’டிஸ்லெக்ஷியா’ - வாசித்தல் குறைபாடு, ’டிஸ்கிராபியா’- எழுதுவதில் குறைபாடு, ’டிஸ்கால்குளியா’ - கணக்கு போடுதல் குறைபாடு, ’டிஸ்பிராக்சியா’, ’டிஸ்பேசியா’ என ஐந்து வகையாக, கற்றல் குறைபாடுகள் உள்ளன.

இவற்றில், வாசித்தல், எழுதுதல், மற்றும் கணக்கு போடுதல் தொடர்பான குறைபாடுகளே பெரும்பான்மையாக பள்ளி மாணவர்களுக்கு உள்ளது. இதனைக் கண்டறிந்து, அதற்கான பயிற்சி அளித்து, மாணவர்களை, மேம்படுத்தவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கற்றல் குறைபாடுள்ளவர்கள், மற்ற மாணவர்களை ஒப்பிடுகையில், ஓரளவு மட்டுமே கல்வியில் பின்தங்கி இருப்பவர்களாக துவக்கத்தில் காணப்படுவர். இதனை சரிசெய்யாமல் விடுவதால், அடுத்தடுத்த வகுப்புகளில், அவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி சிந்திக்கும் திறனும் பாதிக்கப்படுகிறது.

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு, இக்குறைபாடுகளுக்கு போதியளவு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ’ஆல்பாஸ்’ முறையினால், இவ்வாறு கற்றலில் பின்தங்கும் மாணவர்கள் குறித்தும் பெரிதானதொரு விழிப்புணர்வு இல்லை. இதனால், பொதுத் தேர்வு வகுப்புகளில், மாணவர்களுக்கு அடிப்படை வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன் இல்லாமல், தேர்ச்சி விகிதம் சரிந்தது.

இக்குறைபாடுகளை துவக்கத்திலேயே கண்டறிந்து, அதற்கு முறையே பயிற்சி அளித்து, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, கல்வித்துறை பல்வேறு தேர்வுகளை, நடத்த துவங்கியது. மாணவர்களின், கல்வித்திறன் மட்டுமின்றி, பல்வேறு இணை செயல்பாடுகள் மூலம், அவர்களின் சிந்திக்கும் ஆற்றல் அளவிடப்படுகிறது. இந்த அளவுகளைக் கொண்டு, அம்மாணவர் கற்றல் குறைபாடுள்ளவரா என்பதை ஆசிரியர் பயிற்றுனர்கள் பதிவு செய்தனர்.

ஒருங்கிணைந்த கோவை, அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்குட்பட்ட, 22 வட்டாரங்களில் கடந்த 2014-15 கல்வியாண்டில் 40, 2015-16 ல் 39, நடப்பு கல்வியாண்டில், 43 குழந்தைகளும், கற்றலில் பின்தங்கியவர்களாக உள்ளனர்.

மாவட்ட திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், ”இதுவரை, ஆசிரியர் பயிற்றுனர்கள், மாணவர்களுக்கு அளித்த பயிற்சி அடிப்படையில், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்தனர்.

ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரை, கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் பட்டியல் தயார்படுத்தப்படவில்லை. ஒரு மாணவர் நுாறு சதவீதம் கற்றல் குறைபாடுள்ளவரா என்பதை துல்லியமாக கண்டறிய, ’சிறப்பு செயல்திறன் பயிற்சியை, கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் இதன்படி, குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நடப்பு கல்வியாண்டுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வருமென கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில், மாணவர்களுக்கு எழுத்து தேர்வு, செயல்திறன் என பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது, ” என்றார்.

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - விலங்குகள் நலவாரியம்!!!

தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தலைவர்களும் குரல்

கொடுத்துவருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அரசுக்கு நெருக்கடி தரப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, “பொங்கல் பண்டிகைக்குள் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க சாத்தியமில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பான வரைவு தீர்ப்பு தயாராக இருந்தாலும் வரும் சனிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்க சாதியமில்லை” என்றது. சுப்ரீம் கோர்ட்டு இவ்வாறு கூறியது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இன்றும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே தடை உள்ளநிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விலங்குகள் நலவாரிய உறுப்பினர்கள் கடிதம் எழுதிஉள்ளனர். தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்து வருவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிஉள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவது போலீசின் கடமை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஜாபர் சேட் சஸ்பெண்டு ரத்து - பணி வழங்க கோர்ட் உத்தரவு!

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட் கடந்த ஐந்தரை வருடங்களாக தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அரசின்

தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ததுடன் வரும் 18ஆம் தேதிக்குள் ஜாபர் சேட்டுக்கு பணி வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவு தெரிவிக்கிறது.

வேலைவாய்ப்பு: பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பணியிடங்கள்!

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர், அலுவலக உதவியாளர், டிரைவர், தோட்டக்காரர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 61


பணியின் தன்மை: உதவியாளர், அலுவலக உதவியாளர், டிரைவர், தோட்டக்காரர்.

பணியிடம்: தமிழ்நாடு

வயது வரம்பு: 18 - 30

விண்ணப்பக் கட்டணம்: உதவியாளர் ரூ.100, அலுவலக உதவியாளர் டிரைவர், தோட்டக்காரர்- ரூ.50

கடைசித் தேதி: 23.01.2017

மேலும், கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்களுக்கு http://www.bdu.ac.in/adv/bduntadvtapp2017_v2.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பாதுகாப்பு பணி தேர்வு : ஹால்டிக்கெட்!

நாடு முழுவதும், பிப்ரவரி 5ஆம் தேதி ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணி தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் சுமார் 41 மையங்களில் நடைபெறும். பாதுகாப்பு பணி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in என்னும் யுபிஎஸ்சி இணையதளத்தில் தங்கள் பதிவெண்ணை சமர்பித்து குறிப்பிட்ட ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட ஹால்டிக்கெட்டில் புகைப்படம் அச்சிடப்படாவிட்டால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் 3 பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டும் என யுபிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

செயல்படாத ரிசர்வ் வங்கி! : அமர்த்தியா சென் !!

பணமதிப்பழப்பு விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டு வருவதாகவும், ரிசர்வ் வங்கி எவ்வித முடிவையும் தன்னிச்சையாக மேற்கொள்ளாமல் செயலற்றுக் கிடப்பதாகவும், 1998ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பணமதிப்பழிப்பு விவகாரத்தில் ரிசர்வ் வங்கி தனது அதிகாரத்தில் தனித்து இயங்கவில்லை என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்களான ஒய்.வி.ரெட்டி மற்றும் பிமல் ஜலன் ஆகிய இருவரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் இதுகுறித்து இந்தியா டுடே ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘ரிசர்வ் வங்கி தனது அதிகாரத்தில் தன்னிச்சையாக செயல்படவில்லை. பிரதமர் மோடியின் கட்டளையின்கீழ் செயல்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் 30ஆம் தேதிக்குப் பிறகு பழைய நோட்டுகளை மாற்ற முடியாது என்ற கட்டுப்பாடு கூட மோடியின் பரிந்துரையாலேயே ரிசர்வ் வங்கி செயல்படுத்தியிருக்கும்.

கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டு புழக்கத்தையும் கட்டுப்படுத்தவே இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் முந்தைய காலங்களில் கள்ள நோட்டுகள் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் இதில் அவருக்கு பல்வேறு சிக்கல்கள் இருப்பதோடு பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. இந்த நடவடிக்கையால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது ஏழை மக்கள்தான்’ என்று கூறியுள்ளார்.

பாஸ்போர்ட் தொலைத்தால் அபராதம்!

மலேசியாவில் பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மலேசியா அரசு தெரிவித்துள்ளது.

மலேசியாவில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், சுற்றுலாவுக்காக லட்ச கணக்கானோர் மலேசியாவுக்கு வந்து செல்கின்றனர்.

இப்படி மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டினர் தங்களது பாஸ்போர்ட்டை தொலைக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

இதுகுறித்து துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹித் ஹமிடியும், மலேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஸ்தாபார் அலியும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து,மலேசிய குடிநுழைவுத்துறைத் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஸ்தாபார் அலி கூறுகையில், அவரவர் பாஸ்போர்ட்டை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். இதுவரை பாஸ்போர்ட்டை தொலைத்தவர்களுக்கென அபராதம் ஒன்றும் விதிக்கப்படவில்லை. மலேசியாவில், முதல் முறை அடையாள அட்டையைத் தொலைத்தவர்களுக்கு 100 ரிங்கிட்டு (1527.97ரூ), அபராதமும், இரண்டாவது முறை தொலைத்தால் 300 ரிங்கிட்டும் (4583.92ரூ) அபராதமும், மூன்றாவது முறை தொலைத்தால் 1,000 ரிங்கிட்டும் (15280.76ரூ) அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இதே முறையில்,பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஆண்டில் மட்டும் 44, 528 பாஸ்போர்ட்கள் தொலைந்ததாக புகார்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

இந்தியா முழுவதும் சுமார் 32 லட்சம் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொண்டு நிறுவனங்கள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாதான் முதன்மையாக இருக்கிறது. சுற்றுச்சூழல், மனித உரிமை, 
குழந்தைகள் நலன், எய்ட்ஸ், கல்வி என சகல துறைகளிலும் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதி உதவி கிடைக்கிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் ஆண்டுதோறும் வரும் வருமானக் கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்கவிட்டால், அந்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதி முறையாக கையாளப்படுகிறதா ? நிதியை கண்காணிக்க எந்த வழிமுறையையும் உருவாக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி ஒரு வழக்கில் கேள்வி எழுப்பியது. அதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.

அதில், அந்த நிறுவனங்கள், 2014-2015 ஆம் நிதி ஆண்டில் இருந்து தங்களின் ஆண்டு கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

2010-11ம் ஆண்டில் அதிக வெளிநாட்டு நிதி பெற்றிருப்பது டெல்லி (2,016 கோடி). இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு (1,557 கோடி). 2009-10ம் ஆண்டுக் கணக்கின்படி, இந்தியாவிலேயே என்.ஜி.ஓ-க்கள் மூலம் அதிகம் நிதி பெறுவதில் முதல் இடத்தில் இருக்கும் மாவட்டம் சென்னை. 871 கோடி நிதியுதவி பெற்றுள்ளது.

தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு எஃப்.சி.ஆர்.ஏ. (வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம்) உரிமம் பெற வேண்டும். கடந்த 2011-2012ஆம் ஆண்டு எஃப்.சி.ஆர்.ஏ. உரிமம் பெறாத தொண்டு நிறுவனங்களை மத்திய உள்துறை ரத்துசெய்து உத்தரவிட்டது.

கடந்த மாதம் வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் 33,000 தொண்டு நிறுவனங்களில், 20,000 தொண்டு நிறுவனங்கள் முறைகேடாக செயல்படுவது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவற்றின் நிறுவனங்களின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகளின் பற்றாக்குறையே காரணம்! – உச்சநீதிமன்ற நீதிபதி

இந்திய நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பற்றாக்குறையால் பல வருடங்களாக லட்சக்கணக்கான வழக்குகள் நீதிபெறாமல் தேங்கிக் கிடக்கின்றன என பலமுறை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிவந்துள்ளனர்.


இந்நிலையில், நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லாததால்,வழக்குகள் தேக்க நிலையில் உள்ளது. இது மிகவும் வேதனையளிக்கிறது என புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் வேதனை தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளை நியமிக்கும் ‘கொலீஜியம்' விவகாரத்தில் மத்திய அரசு அளித்த வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களுக்கு நீதிபதிகள் குழு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், அந்த விவகாரம் முடிவுக்கு வராமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், காலியிடங்களில் நீதிபதிகளை நிரப்ப முடியாத காரணத்தால் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மாநிலங்களுக்கு இடையேயான மேல்முறையீட்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவன், அந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதற்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கூறியதாவது, ’உச்சநீதிமன்றத்துக்கு 31 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போது 23 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், உச்ச நீதிமன்ற அலுவல் வேலைகள் முடிக்கப்படாமல் பாதிக்கப்படுகின்றன. இதனால், தினசரி வழக்குகளும் முடிக்கப்படாமல், கால தாமதமடைகின்றன. தற்போது,

நீதிபதிகளை விரைவில் நியமிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்த மாத இறுதிக்குள் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள்’ என நீதிபதி கூறினார்.

நாட்டில் உள்ள எட்டு மாநில உயர்நீதிமன்றங்களில் மட்டும் 80% வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. ஒட்டுமொத்த வழக்குகளையும் சேர்த்து பார்த்தால் உத்தரபிரதேசத்தில் மட்டும் 25% வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இதையடுத்து, மராட்டியம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதற்கு முன்பு, நீதிபதிகள் பற்றாக்குறை இருப்பது தேசத்துக்கு சவாலான பிரச்சனை மற்றும் உயர்நீதிமன்றங்களில் 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணியில் உள்ள நீதிபதிகள் அதிகளவில் பணிசுமைகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ்.தாகூர் வேதனையுடன் முன்பு பலமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நீதிபதி தாகூரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் 120 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ' சொத்து: வழக்கு தள்ளுபடி!

ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமையாக்க முடியாதென்று கூறி அதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.

அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானதையடுத்து அவரது சொத்துகள் அனைத்தும் யாருக்கு போய் சேருமென கேள்வி எழுந்தது. தற்போது ஜெயலலிதா வாழ்ந்த அவரது போயஸ் கார்டன் வீட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள வி.கே.சசிகலா வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டுமென்று தமிழக பொதுநலன் வழக்கு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கே ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

“ஜெயலலிதா கடந்த 2016-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அவர் தாக்கல் செய்த சொத்துக் கணக்கில், தனக்கு ரூ.10,63,83,945 வங்கி டெபாசிட், ரூ.27,44,55,450 மதிப்புள்ள முதலீட்டு பத்திரங்களும், ரூ.41,63,55,395 மதிப்புள்ள நகைகளும், ரூ.72,09,83,190 மதிப்புள்ள அசையா சொத்துகள் மற்றும் வாகனங்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. அவருக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தையும் அரசுடமையாக்கி, அந்த சொத்துகளில் இருந்து வரும் வருமானத்தை ஜெயலலிதாவின் விருப்பத்தின்படி ஏழைகளின் நலனுக்காக செலவிட வேண்டும்.

உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கவும், அந்த குழு ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துகளை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யவும், பின்னர் அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்கவும், அந்த சொத்துகளை நிர்வகிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமையாக்க முடியாதென்று கூறி ரமேஷின் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி, "பொதுநல வழக்குகள் எவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும், எது சம்பந்தமாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளது. ஜெயலலிதாவின் சொத்துகள் அவர் சினிமாவில் இருந்தபோது சம்பாதித்தது. அந்த வகையில் மனுதாரரின் மனு ஏற்புடையதல்ல" என வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "தனிநபர் சார்புடைய வழக்குகளை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது என உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளது. அதனால் இந்த வழக்கை ஏற்க முடியாது" எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள் மருத்துவ காப்பீட்டு அட்டை பெறலாம்

NHIS -2016 card for the period 01.07.2016 to 30.06.2020 can be downloaded online in the above link by entering your NHIS - 2012 card No. & password. Password is date of birth in (DD/MM/YYYY)format..

.http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/EmployeeLogin.aspx

12/1/17

PRESS RELEASE - பொங்கல் போனஸ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் செய்திக் குறிப்பு

PRESS RELEASE - பொங்கல் போனஸ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் செய்திக் குறிப்பு

DSE PROCEEDINGS- அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு நன்னெறி போதனை வழங்குதல் மற்றும் ஆலோசனைப்பெட்டி வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு

CPS க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஓர் ஒப்பீடு -நன்றி-திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ்

ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும்: அமைச்சர்-- ''ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு, இப்போது இல்லை,'' என, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில், 2011 முதல், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை, தர
பட்டியல்தயாரித்தல் போன்றவற்றில், சில பிரச்னைகள் ஏற்பட்டன.இது குறித்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கலான மனு, இரு மாதங்களுக்குமுன், தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், ஆசிரியர் தகுதித்தேர்வு, மூன்றாண்டுகளாக நடத்தப்படவில்லை.இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குமுடிவுக்கு வந்ததால், விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்என, பள்ளிக் கல்வி அமைச்சர்பாண்டியராஜன் கூறியிருந்தார்.இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றார்.

பின், அவர் கூறியதாவது:பள்ளிக்கல்வித் துறையில், ஆசிரியர் மற்றும் பணியாளர் பதவிக்கு, 8,000 காலியிடங்கள் உள்ளன; அவை விரைவில்நிரப்பப்படும். ஏற்கனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள்காத்திருப்பதால், அவர்கள் மூலம், காலிஇடங்கள் நிரப்பப்படும்.எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வை, உடனடியாக நடத்த வேண்டிய அவசியம்எழவில்லை. புதிதாக தேர்வை நடத்தினால், அதில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கும் வேலை இல்லை என்றுகூறுவர். எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பு, தாமதமாகவே வெளியாகும்.

17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி--

பதினேழு ஆண்டுகளுக்கு முன்கொண்டு வரப்பட்ட, பதவி உயர்வு விதிகளைமாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்விஅமைச்சரிடம், பட்டதாரி
ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடக்க பள்ளி பட்டதாரிஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கானவிதிகளில், குளறுபடி நீடிக்கிறது. அதாவது, 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி முடித்து பணியில்சேர்ந்தவர்கள், தொடக்க பள்ளிகளில் தலைமைஆசிரியராகவும், பின், பட்டதாரி ஆசிரியராகவும்பதவி உயர்வு பெறுகின்றனர். தொடர்ந்து, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக, பணிமூப்பு அடிப்படையில், பதவி உயர்வு பெறுகின்றனர்.ஆனால், ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம், மதிப்பெண் அடிப்படையில்தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்த பதவி உயர்வுஎதுவும் கிடைக்கவில்லை. 1999ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டஅரசாணைப்படி, பட்டம் பெறாமல் பணியில்சேர்ந்த ஆசிரியர்களுக்கே, பதவி உயர்வில் முன்னுரிமைவழங்கப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், பள்ளிக் கல்வி துறைஅமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து, இந்த குளறுபடிக்கு முற்றுப்புள்ளிவைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சங்க பொதுச்செயலர், பேட்ரிக்ரைமண்ட் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாததால், 1999ல், இடைநிலை ஆசிரியர்களுக்குமுன்னுரிமை வழங்கும் வகையில், பதவி உயர்வு விதிகள்ஏற்படுத்தப்பட்டன. அதே நேரம், 14 ஆண்டுகளாக, பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், பழைய விதிகளை மாற்றாமல், பதவி உயர்வு வழங்கப்படுவதால், நேரடிநியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்காமல், பாதிப்புஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் 4 ஆயிரம் உள்ளது அதை விரைவில் நிரப்புவோம் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

தமிழகத்தில்காலியாக உள்ள ஆசிரியர் மற்றும்ஆசிரியரல்லாத 8 ஆயிரம் காலி பணியிடங்களை, ஏற்கனவே தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களில் இருந்து நியமனம் செய்யப்படுவார்கள்என்று அமைச்சர்
பாண்டியராஜன் கூறினார். சென்னை டிபிஐ வளாகத்தில்நற்பண்புகள் தொடர்பான பயிற்சியை நேற்று தொடங்கி வைத்தும்பயிற்சி கையேட்டை வெளியிட்டும் பள்ளிக் கல்வி அமைச்சர்பாண்டியராஜன் கூறியதாவது: தற்போது பாடத்திட்டத்துடன் இணைத்துநற்பண்புகளைகளையும் மாணவர்களுக்கு கற்றுத்தர பயிற்சி கையேடு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கு மத சின்னங்களான விபூதி, குங்குமம் உள்ளிட்டவற்றை அணிந்து வருவது குறித்துஇதுவரை 4 புகார்கள் வந்துள்ளது.
அவற்றின்மீது விசாரணை நடத்தப்பட்டது. மாணவர்கள்அவர்கள் விரும்பிய மதச்சின்னங்களை அணிந்து வரத் தடையில்லை. சில இடங்களி–்ல மருதாணிபோட்டுக் கொண்டு வரக்கூடாது என்றும்அப்படி போட்டு வந்தவர்களுக்கு அபராதம்விதித்துள்ளனர். மதம் சார்ந்த கட்டுப்பாடுகளைகொண்டு வர பள்ளிக்கு உரிமைஇல்லை. பிரான்ஸ் நாட்டில் உள்ள கல்வி முறைதமிழகத்தில் இல்லை என்பதை பள்ளிகள்புரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளிகளில்ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதபணியிடங்கள் 8ஆயிரம் உள்ளன. இவற்றைநிரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றைஆசிரியர் தகுதித் தேர்வு மூலம்செய்ய வேண்டும் என்பதில்லை. தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் 30 ஆயிரம் பேர் உள்ளனர். அதிலிருந்து அவர்களை தேர்வு செய்வோம். மீண்டும் மீண்டும் தகுதித் தேர்வு நடத்திபட்டியல்போடுவதில் அர்த்தம் இல்லை. எனவே ஏற்கெனவேதேர்ச்சி பெற்றவர்களை வைத்து பணியிடம் நிரப்பிவருகிறோம். வெயிட்டேஜ் முறை குறித்து சிலர்நீதிமன்றம் சென்றுள்ளனர். அதற்கான தீர்ப்பு வரதுரிதப்படுத்தி வருகிறோம். ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்4 ஆயிரம் உள்ளது அதை விரைவில்நிரப்புவோம். இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன்தெரிவித்தார்.

ஒரே கல்வியாண்டில் 2 பட்ட படிப்பு ஆசிரியர் பணி கோரிய மனு தள்ளுபடி -உயர்நீதி மன்றம் உத்தரவு

Image may contain: text

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டுவிழாவை ஒட்டி, வரும் 17-ஆம்தேதியன்று அரசு விடுமுறை விடமுடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ
உத்தரவுவியாழக்கிழமை (ஜன.12) வெளியாகவுள்ளது.

அதிமுகநிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின்நூற்றாண்டு பிறந்த நாள் விழாவரும் 17-ஆம் தேதி கொண்டாடப்படஇருக்கிறது. இந்த தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும்கட்சியானஅதிமுக ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மேலும், ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தைக் கொண்டாடவும் அந்தக் கட்சி அறிவிப்புவெளியிட்டுள்ளது.

அரசு விடுமுறை: கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள்ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்ததினம் என்பதால் வரும் 17-ஆம் தேதியன்று அரசுவிடுமுறை விட தமிழக அரசுமுடிவு செய்துள்ளது. இது குறித்து, அரசுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

அரசு பொது விடுமுறை விடவேண்டுமென்றால், அதற்கான கோப்புகள் பொதுத்துறையின் மூலமாக தயார் செய்யப்பட்டுமுதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், இந்த பொது விடுமுறை என்பதுஊதியத்துடன் கூடியதாக இருக்கும். மத்திய-மாநில அரசுகளின்விடுமுறைப் பட்டியலில் இல்லாத தினங்களுக்கு ஊதியத்துடன்கூடிய விடுமுறை அளிக்க முடியாது. எனவே, இதற்கென தனியான உத்தரவு பிறப்பிக்கப்படும்பட்சத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கொடுக்கப்படும்.


இந்த விடுமுறையை விடுவதற்கான கோப்புகள் கையெழுத்திடப்பட்டு, அதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை(ஜன.12) அல்லது வெள்ளிக்கிழமை (ஜன.13) வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள்தெரிவித்தன.

11/1/17

உங்கள் வீட்டில் மின்தடை எப்போது? : 10 நாட்களுக்கு முன் தெரியும் வசதி

பராமரிப்பு பணி மின் தடை விபரத்தை, 10 நாட்களுக்கு முன்பே, தெரிந்து கொள்ளும் வசதியை, மின் வாரியம் துவக்கி உள்ளது. துணை மின் நிலையம், மின் வழித்தடங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, மின் வாரியம், குறிப்பிட்ட இடைவெளியில், அவற்றில் பராமரிப்பு பணி செய்கிறது. 


பராமரிப்பு பணி : இதற்காக, அந்த பணி நடக்கும் இடங்களில், காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும். அந்த விபரத்தை, மின் வாரியம், பத்திரிகைகள் மூலம், மக்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கிறது. தற்போது, தமிழகம் முழுவதும் பராமரிப்பு மின் தடை செய்யும் பகுதிகளை, 10 நாட்களுக்கு முன் தெரிந்து கொள்ளும் வசதியை, மின் வாரியம் துவக்கியது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், தினமும், பல இடங்களில் உள்ள மின் சாதனங்களில் பராமரிப்பு பணி நடக்கிறது. சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் வசிப்போருக்கு மட்டும், அந்த விபரம் தெரிகிறது; மற்ற நகரங்களில் வசிப்போருக்கு தெரிவதில்லை. 

இணையதளம்: தற்போது, 10 நாட்களுக்கு முன், பராமரிப்பு நடக்கும் துணை மின் நிலையங்கள்; அவற்றில் மேற்கொள்ளப்படும் பணிகள் போன்ற விபரங்கள், மின் வாரிய இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டு உள்ளன. அனைவரும், அதை பார்த்து, அதற்கேற்ப தங்கள் பணிகளை திட்டமிடலாம். இவ்வாறு அவர் கூறினார்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான "நீட்' நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் மாணவர்கள் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில பாடத் திட்டம், மெட்ரிக் பாடத் திட்டம் போன்ற பல்வேறு பாடத் திட்டங்களில் படிக்கின்றனர். ஆனால் நீட் தேர்வில் சிபிஎஸ்இ, என்சிஆர்டி ஆகிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டிருக்கும். இதனால் பிற பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவர். குறிப்பாக, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத சூழல் ஏற்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

மத்திய அரசு ஊழியர்கள் திருவள்ளுவர் தினம் கொண்டாட விடுமுறை அளிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மத்திய அரசு ஊழியர்கள் திருவள்ளுவர் தினத்தையும் கொண்டாட அனுமதிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களாலும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்படும் முக்கியமான அறுவடை பண்டிகைதான் பொங்கல் என்பது தங்களுக்குத் தெரியும். பொங்கல் பண்டிகையுடன் இணைந்து, ஜல்லிக்கட்டு உட்பட பல்வேறு சமுதாய, புத்துணர்வு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுவது உண்டு. இந்தப் பண்டிகை 3 அல்லது 4 நாள்கள் வரை நீடிக்கும். தமிழக அரசைப் பொருத்தவரை, இந்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதியிலிருந்து 16 ஆம் தேதி வரை (திங்கள்கிழமை) விடுமுறை தினங்களாகும். உழவர் திருநாள் என்பதற்காக இந்த நாள்களில் அரசு விடுமுறை அளிக்கிறது.
தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாளில் எப்போதுமே பொங்கல் தினம் வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி சனிக்கிழமை பொங்கல் தினம் கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் தின விழா: இந்த நிலையில், மத்திய அரசின் 12 விருப்ப விடுமுறை தினப் பட்டியலில் தெரிவு செய்யக்கூடிய 3 விடுமுறை தினத்தில் கூடுதலாக தசரா, பொங்கல் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். இதன் மூலம் திருவள்ளுவர் தினத்தையும் மத்திய அரசு பணியாளர்கள் நலன் ஒருங்கிணைப்புக் குழு விடுமுறை தினமாக அறிவிக்க முடியும். அதன்படி, பொங்கல் தொடர்புடைய அனைத்து விழாக்களையும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணியாளர்களும் கொண்டாட வழி வகுக்கும்.

தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வித் திட்டம் வேண்டும்: பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி

மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக கல்வித்திட்டம் அமைய வேண்டும் என பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியின் 21-ஆவது ஆண்டு கல்லூரி தின விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:

நம் நாட்டில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. தில்லியில் பாலியல் துன்புறுத்தலால் பெண் ஒருவர் கொல்லப்பட்டபோது, நமது நாட்டை விமர்சித்தும், இங்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனவும் பத்திரிகைகள் தெரிவித்தன. ஆனால், லண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகையில், இந்தியாவில் பல்வேறு பிரச்னைகள் இருப்பினும், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கதியால் நாடே ஸ்தம்பித்துவிட்டது. இதிலிருந்து இந்தியாவில் பெண்ணுக்குள்ள மரியாதையை அறிய முடியும் என எழுதப்பட்டிருந்தது.
நமது நாட்டின் பண்பாடு, கலாசாரம், பெற்றோருக்கு அளிக்கப்படும் மரியாதையை எடுத்துக் கூற யாரும் இல்லை. பெற்றோரை போற்றுதல், குடும்பமாக வாழ்தல் என்பது நமது வாழ்க்கையின் ஒரு பங்கு. ஆனால் இது வெளிநாட்டில் இல்லை.
குடும்பங்களை சட்டத்தின் மூலமாக உருவாக்க முடியாது. பிரிக்க மட்டுமே இயலும். சேர்ப்பதற்கு கலாசாரம், பாரம்பரியத்தால் மட்டுமே முடியும்.
நமது நாட்டில் படிக்காதவர்கள் வேலை அளிப்பவர்களாகவும், படித்தவர்கள் அவர்களிடம் வேலை பார்ப்பவர்களாகவும் உள்ளனர். இதற்கு அவர்களின் தன்னம்பிக்கையே காரணம். நமது நாட்டில் கல்விக்கும், தொழில்வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை.
மனிதனிடம் தன்னம்பிக்கை இல்லையென்றால் தொழில்வளர்ச்சி ஏற்படாது. தன்னம்பிக்கையே மனிதனை உயர்த்தும். மாணவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக கல்வித் திட்டம் அமைய வேண்டும் என்றார் அவர்.
விழாவுக்கு தலைமை வகித்து, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி பேசியது:
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின்போது, வங்கி அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன. அவர்களுக்கு நாட்டுப்பற்று இருக்கிறதா, நேர்மை உள்ளதா என்ற சந்தேகம் வருகிறது. இது மொத்த சமுதாயத்தையும் கெடுக்கும் செயலாகும். இன்றைய மாணவர்கள் சிறந்த குடிமகனாக, சமுதாயத்துக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றார்.
முன்னதாக, விழாவில் கல்லூரியின் செயலர் அம்மங்கி பாலாஜி வரவேற்றார். முதல்வர் ஜெ.ராதிகா ஆண்டறிக்கை வாசித்தார். ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் தலைவர் ராஜகோபால், மாணவ, மாணவிகள், அனைத்துத் துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

பான் கார்டு இல்லாதவர்கள் கவனத்துக்கு !

பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வங்கி கணக்கு வைத்திருப்போர் அனைவரும் பான் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்திருந்தது. ஏற்கெனவே பதிவு செய்திருப்போருக்கு பிரச்னை இல்லை. கறுப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பை தவிர்க்கவே இந்த நடவடிக்கை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வங்கி கணக்கு வைத்திருந்தாலும் இதுவரை பான்கார்டு இல்லாதவர்களுக்கு, Form 60-ஐ வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் Form-60 படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Form 60 படிவத்தில் முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களுடன் முகவரி தொடர்புடைய சான்றுகள் மற்றும் புகைப்படத்தையும் இணைத்து வங்கியில் சமர்பிக்க வேண்டும்.
ஆன்லைன் Form 60 படிவத்தை பெற, வங்கியின் பெயருடன் Form 60 என டைப் செய்தால் படிவம் PDF ஆக வரும்

பிளஸ் 2 வரை கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் : கல்வித் துறை உத்தரவு

தேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு முப்பருவமுறை நடைமுறையில் உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 


இது தவிர கீழ் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வாராந்திர, மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனும் கவனிக்கப்பட்டு வருகிறது. மேல் வகுப்புகளுக்கு திருப்பு தேர்வுகள் என்ற அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இருப்பினும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் போது சிரமப்படுகின்றனர். இதையடுத்து, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நவீன கருத்தியல், தொழில் நுட்ப அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் கருத்துருக்களை மாநில பாடத்திட்டத்தில் புகுத்தும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து, ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் வழக்கமாக இடம் பெறும் கேள்வித்தாளில் மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. வகுப்புவாரியாக மாணவர்களின் வயதுக்கேற்ற திறன்களை மேம்படுத்தும் வகையில் கேள்விகளை புகுத்தவும் முடிவு செய்துள்ளது.  குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு அந்த வயதில் 13 வகையான திறன்கள் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் கேள்வித்தாள்களை அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

இதன்படி, கேள்வித்தாளில் Higher, Lower, Middle order thinking மாணவர்களுக்கு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து இனி வரும் கேள்வித்தாள்களில் மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையிலான கேள்விகள் இடம் பெறும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்விலும் கேள்வித்தாள் மாற உள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு : தேர்வுத்துறை புது உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இவர்களுக்கு பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும். இதற்கிடையே, இந்த  ஆண்டு குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்
என்பதில் தேர்வுத்துறை முனைப்புக்காட்டி வருகிறது. அதனால் மார்ச் மாதமே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை நடத்தும் அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.


மேலும், செய்முறைத் தேர்விலும் பத்தாம் வகுப்பு பிளஸ் 2 மாணவர்கள் காலை, மாலை என பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை செய்முறைத் தேர்வில் 24 பேர் கொண்ட குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஒரு குழு என்ற வகையில் தேர்வு நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு விரைவாக செய்முறைத் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளதால், ஒரு குழுவில் 30 பேர் இடம் பெறும் வகையில் மாற்றங்களை கொண்டு வர தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக தேர்வு மையங்களையும் அதிகரிக்க உள்ளனர்.

ஜாக்டோ -ஜியோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்....

1).CPS ஐ நீக்கி GPFஐ  கொண்டுவர அடுத்த கட்ட போராட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது...இதற்காக நம் ஜாக்டோஜியோ பொறுப்பாளர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஐயா அவர்களை விரைவில் சந்திக்கவுள்ளனர்.


2).தமிழகத்தில்  நிலவும் விவசாய வறட்சி நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் அனைத்து அரசு ஆசிரியர்கள் மற்றும் அனைத்து விதமான அரசு ஊழியர்களும் பிடித்தம் செய்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

3)ஏழாவது ஊதிய குழு உடனடியாக அமல்படுத்தி இடைகால நிவாரண
நிதியாக 20% வழங்கவேண்டும்.

4)பொங்கல் போனஸ் அரசாணை நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.

தமிழக வறட்சி நிவாரணத்துக்கு தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவது என அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்களைக் கொண்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பு முடிவெடுத்துள்ளது.


 தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் மற்றும் பல்வேறு அரசு ஊழி யர் சங்கங்கள், ஆசிரியர் அமைப்பு கள் இணைந்து ஜாக்டோ - ஜியோ அமைப்பாக உருவாகியுள்ளது. இதன் பிரதிநிதிகள் கூட்டம், சென்னை பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.இதில், ஜாக்டோ - ஜியோவின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜெ.கணேசன் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து மாவட் டங்களும் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளன. வறட்சி நிவாரணத்துக் காக ஜாக்டோ -ஜியோ சங்கங் களில் உள்ள ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவெடுத்துள்ளோம். இது உத்தேசமாக ரூ.40 கோடி அளவுக்கு வரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்

BREAKING NEWS : விரைவில் தமிழகத்தில் காலியாக உள்ள 8 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் காலியாக உள்ள 8 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்
- பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

★ AB பிரிவுக்கு ₹1000 சிறப்பு மிகை ஊதியம்

 ★ CD பிரிவுக்கு ₹3000 என்ற உச்ச வரம்புக்கு உட்பட்டு 30நாட்கள் ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம்

★  ஓய்வூதியம்,  குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசு


★ உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெரும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம்.

★ பொங்கல் போனஸ் வழங்குவதன்மூலம் அரசுக்கு  ரூ.325.20 கோடி  செலவு ஏற்படும்.

பிளஸ் 2 வரை கேள்வித்தாள் என்ன மாற்றம்

🍎பிளஸ் 2 வரை கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் :

🍏 கல்வித் துறை உத்தரவு..

🌻தேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

🌻 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு முப்பருவமுறை நடைமுறையில்
உள்ளது.



🌻 பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

🌻இது தவிர கீழ் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வாராந்திர, மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனும் கவனிக்கப்பட்டு வருகிறது.

🌻மேல் வகுப்புகளுக்கு திருப்பு தேர்வுகள் என்ற அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

🌻 இருப்பினும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் போது சிரமப்படுகின்றனர்.

🌻 இதையடுத்து, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நவீன கருத்தியல், தொழில் நுட்ப அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் கருத்துருக்களை மாநில பாடத்திட்டத்தில் புகுத்தும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது.

🌻இதையடுத்து, ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் வழக்கமாக இடம் பெறும் கேள்வித்தாளில் மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது.

🌻 வகுப்புவாரியாக மாணவர்களின் வயதுக்கேற்ற திறன்களை மேம்படுத்தும் வகையில் கேள்விகளை புகுத்தவும் முடிவு செய்துள்ளது.

🌻  குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு அந்த வயதில் 13 வகையான திறன்கள் பெற்றிருக்க வேண்டும்.

🌻அந்த வகையில் கேள்வித்தாள்களை அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

🌻இதன்படி, கேள்வித்தாளில் Higher, Lower, Middle order thinking மாணவர்களுக்கு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது.

🌻 இதையடுத்து இனி வரும் கேள்வித்தாள்களில் மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையிலான கேள்விகள் இடம் பெறும்.

🌻பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்விலும் கேள்வித்தாள் மாற உள்ளது.

🌻இது தொடர்பாக அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. 

Breaking News: புதிதாக TET தேர்வு கிடையாது - ஏற்கனவே TET தேர்ச்சி பெற்றவர்கள் கொண்டு 8000 பணியிடங்கள் நிரப்பப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்.


🔷 தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் சென்னையில் இன்று (11.01.2017) நிருபர்களிடம் கூறியதாவது:-

📝 தமிழகத்தில் காலியாக உள்ள 8 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் உடனே நிரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

📝 ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணியிடங்களில் அமர்த்தப்பட உள்ளனர்.எனவே புதிதாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த தேவையில்லை.


🔵 மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்படும்.

🔴 மாணவர்கள் மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வருவதில் தவறில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்வியென்பது பதிவா? தெளிவா? - மஞ்சை வசந்தன்



கற்றல் என்பது இலக்கின்றி, பொருளின்றி, வரையறையின்றி, விவாதமின்றி, பயனின்றி மனனம் செய்து மதிப்பெண் பெறுதல்; ஏட்டில் உள்ளதை மூளையில் பதித்து, தேர்வுக் கூடத்தில் தாளில் பதித்தல்; தேர்வு முடிந்ததும் அனைத்தையும் மறத்தல் என்ற அளவில் இன்று _ குறிப்பாக இந்தியாவில் நடைபெறுகிறது.


கல்வியென்பது வல்லுனர்கள், அரசு, பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஆகியோரோடு பின்னிப் பிணைந்தது.

கல்வி எப்படியிருக்க வேண்டும் என்பதை கல்வியாளர்களும் அரசும் தீர்மானிக்க வேண்டும். அதைப் பொறுப்போடு மாணவர்க்குச் சேர்க்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்; அதைச் சரியாகப் பெற வேண்டியவர்கள் மாணவர்கள்; பெறச்செய்ய வேண்டியவர்கள் பெற்றோர்.

எனவே, கற்கும் கல்வி பயனுடையதாக இருக்க, ஆற்றல், அறிவு, வல்லன வளர்ப்பதாய் இருக்க பொறுப்பேற்க வேண்டியவர்கள் அரசும், கல்வியாளர்களுமே!
அரசு என்பது மக்கள் தேர்வு செய்கின்ற ஆட்சியாளர்களும், அரசு அலுவலர்களும் ஆவர். அரசு அலுவலர்கள், ஆட்சியாளர்கள் இடும் கட்டளையை அப்படியே நிறைவேற்ற வேண்டியவர்கள். எனவே, அவர்கள் கல்வியைத் தீர்மானிக்கக் கூடியவர்கள் அல்ல. கல்வியைத் தீர்மானிக்க வேண்டிய ஆட்சியாளர்களோ, அதில் தெளிவும், நுட்பமும், வல்லமையும், அதற்குரிய அறிவும் அற்றவர்கள் - விலக்காக ஓரிருவர் இருக்கலாம்.

எனவே, கல்வியை வகுத்தளிக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கல்வியாளர்களுக்கே உண்டு. ஆனால், அந்தக் கல்வியாளர்கள் வகுத்தளிக்கும் வல்லமையுடையவர்களேயன்றி, நிறைவேற்றும் அதிகாரம் உடையவர்கள் அல்ல.
ஆக, ஆட்சியாளர்கள் பொறுப்போடு, தொலைநோக்கோடு, கல்வியாளர்களை முறையாக, வெளிப்படையாக, தயக்கமின்றி கருத்துரைக்க வழிசெய்து கல்வியின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்து _ என்ன கற்பது, எப்படிக் கற்பது, எப்படிக் கற்பிப்பது என்பனவற்றை வரையறுத்து மாணவர்களைக் கற்கச் செய்வது மட்டுமே உண்மையான கல்வியாய் அமைந்து பயன் தரும்.

மாறாக, ஆட்சியாளர் தான்தோன்றித் தனமான விருப்பு வெறுப்புகளையெல்லாம் கல்வித் திட்டமாக்கினால், அது பயனற்றுப் போவதோடு சமூக எதிர்ச் செயலாயும் ஆகும்.

முதலில் அரசும் கல்வியாளர்களும் கல்வியென்பது பதிவா? தெளிவா? என்பதை முடிவுசெய்து கொள்ள வேண்டும்.

யார் ஒருவன் நினைவாற்றலோடு பதிவு செய்து தேர்வில் எழுதுகிறானோ அவனே உயர் மாணவன், சிறந்த கல்வி கற்றவன் என்பது எவ்வகையில் சரியாகும்? அது நினைவாற்றல் திறனை மட்டுமே வெளிப்படுத்தும்.

நவீன கருவிகள் இல்லாத காலத்தில் நினைவாற்றல் முதன்மையிடத்தில் இருந்தது. இன்றைக்கு அது கட்டாயம் இல்லை. நினைவாற்றல் இன்றியே சாதிக்க முடியும்!

திருக்குறளைத் தலைகீழாகச் சொல்லும் நினைவாற்றல் உள்ள ஒருவர், திருக்குறளில் புலமை உள்ளவர் என்றாவாரா? திருக்குறளை மனப்பாடமாகச் சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் திருக்குறளில் புலமை இல்லாதவர்கள் என்று ஆகுவரா?

இந்த நுட்பமான வேறுபாட்டைப் புரிந்துகொண்டால் கல்வித் திட்டம், பாடத் திட்டம், பயிலும் முறை எப்படியிருக்க வேண்டும் என்பது பளிச்செனப் புலப்படும்.
எனவே, புரிதலும் தெளிதலும்இன்றி கற்கும் கல்வி கல்வியே அல்ல. அது வெறும் மனனப் பயிற்சி மட்டுமே!

படித்தது அனைத்தும் பதிந்ததா? என்பதைவிட, படித்தது அனைத்தும் புரிந்ததா? என்பதே எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது! புரிதலும் தெளிதலும் இல்லாமல் எவ்வளவு செய்திகளை மூளையில் பதிவு செய்தாலும் என்ன பயன்? ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாடாவிற்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு?

படிப்பது அனைத்தும் புரிய வேண்டும், தெளிவாக வேண்டும் என்றால் கற்பிப்போர், கற்கும் மொழி இரண்டும் முதன்மைப் பங்கு வகிக்கும் நிலையில், இவற்றில் ஒரு தெளிவான கொள்கை முடிவு கல்வியாளர்களுக்கும் அரசுக்கும் வேண்டும்.

அதிலும் குறிப்பாக அடிப்படையான தொடக்கக் கல்வி எம்மொழியில் பயிலப்பட வேண்டும் என்பது மிக முதன்மையாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தாய்மொழி வழிக் கல்விதான் அதற்குச் சரியான தீர்வு என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, 5ஆம் வகுப்பு வரையில் தாய்வழிக் கல்வி என்பது மட்டுமல்ல, முடிந்தால் கல்லூரிக் கல்விவரை தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதும் அசைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை!

ஆனால், மக்களாட்சி நாட்டில், விரும்பிய மொழியில் கற்க உரிமையில்லையா? என்ற விவாதம் கட்டாயம் எழுகிறது.

விரும்பியதை உண்பது என்பதைவிட உகந்ததை, நலம் தருவதை உண்பது என்பதுதான் சரியாக இருக்க முடியும்! அது கல்வி கற்கும் பயிற்றுமொழிக்கும் பொருந்தும். எதன்வழி கற்பது சிறந்தது என்பதே கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.

அதேவேளையில் தொடர்பு மொழியான ஆங்கில அறிவு மாணவர்களுக்குக் கட்டாயம் என்பது உண்மை! ஆங்கிலத்தில் படிக்க, பேச, எழுத உரிய வல்லமை உருவாக்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயம். அதற்குரிய பயிற்சி அடித்தட்டு மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்; அதுவும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்

இங்கு ஓர் உண்மையை அனைவரும் ஆழமாய் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுதல் என்பது பழக்கத்தில் வருவதேயன்றி, படித்து வருவதன்று.

ஆங்கிலத்தில் மட்டுமே கட்டாயம் பேச வேண்டும் என்ற கட்டாயச் சூழலில் ஆங்கிலத்தை ஒருவர் சரளமாகப் பேச முடியும். மேல்நிலைக் கல்வி வரை தமிழில் படித்து, பின் பொறியியல் படிப்பை ஆங்கில வழியில் படித்து முடித்து, ஆங்கிலத்தில் பேச வராத கிராமப்புறத்து மாணவர்கள் எல்லாம், நிறுவனங்களில் பணியில் சேர்ந்த பின் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் பெற்றதெல்லாம் நடைமுறை உண்மை.

ஆங்கில வழியில் கற்றுத்தான் ஆகவேண்டும் என்று பிடிவாதமாய் கற்கும் மாணவர்கள், கற்பது எதுவாயினும் அதைத் தெளிவாய் தன் தாய்மொழியில் புரிந்து கற்க வேண்டும். காரணம், கற்றல் என்பது பதிவு அல்ல. தெளிவு!

தெளிவற்ற, விளங்காத கல்வி பயனற்றுப் பாழாகும்!

ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கான "பீம்' செயலி: 10 நாள்களில் 1 கோடி பேர் பதிவிறக்கம்.

ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைக்கான "பீம்' செயலி அறிமுகப்படுத்தப்பட்ட 10 நாள்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் அதைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். பிரதமர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களிடையே ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டில் வடிமைக்கப்பட்ட இந்தச் செயலியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி அறிமுகப்படுத்தினார்.


சட்ட மேதை பீம ராவ் அம்பேத்கரின் நினைவாக இந்தச் செயலிக்கு பீம் எனப் பெயரிடப்பட்டது.
ஆதார் எண் மற்றும் பயன்படுத்துபவரின் கைவிரல் ரேகைப்பதிவு ஆகியவற்றின் மூலம் மிகவும் பாதுகாப்பான ரொக்கமற்ற பணப் பரிமாற்றத்தை இந்தச் செயலி மூலம் மேற்கொள்ள முடியும்.
மேலும், பரிமாற்றம் எளிதாகவும், விரைவாகவும் நடைபெறும். இதனால் இளைஞர்கள், வர்த்தகர்கள் மத்தியில் இந்தச் செயலி குறுகிய நாள்களில் மிகவும் பிரபலமாகவிட்டது.
ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள செல்லிடப்பேசிகளில் "கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து இச்செயலியைப் பதிவிறக்கம் செய்ய முடியும். இப்போது ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டும் பயன்படுத்தும் வசதி இதில் உள்ளது. விரைவில் பிற மாநில மொழிகளும் சேர்க்கப்படவுள்ளன.

 இந்திய தேசிய செலுத்துகை நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கிய யுபிஐ தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், பரிமாற்றங்களை வேகமாகவும், எளிதாகவும் மேற்கொள்ள முடிகிறது.
இதில் மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றத்துக்கு கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால், வங்கிகள் அவற்றின் விதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது.
வங்கிக் கணக்கும், ஆதார் எண்ணும் உள்ள அனைவரும் இதனைப் பயன்படுத்த முடியும் என்பது சிறப்பம்சமாகும்.

கைவிடப்பட்ட 155 அரசு பள்ளிகள் : ஜெ., அறிவிப்பு; மரணத்தோடு 'காலாவதி'

தமிழகத்தில் 155 அரசு நடுநிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்
(ஆர்.எம்.எஸ்.ஏ.,) கீழ் 2011-12ல் ஆண்டு 700 அரசு நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டது. அரசியல் பின்னணி மற்றும் ஏற்கனவே தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலில் இணைத்தது உட்பட சில காரணங்களால் 155 பள்ளிகளை அங்கீகரிக்க மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை மறுத்து விட்டதாக புகார் எழுந்தது.இதனால் இப்பள்ளிகளுக்கு அத்திட்டத்தில் இருந்து கிடைக்க வேண்டிய நிதிகள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், 2016ல் சட்டசபையில் 110 விதியின் கீழ் இந்த 155 பள்ளிகளையும் மேம்படுத்த தலா 1.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு மீது கல்வி அதிகாரிகள் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வகுப்பறை, பெஞ்ச் வசதி இல்லாததால் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் சூழ்நிலை உள்ளது.

மதுரை ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:மாவட்டத்தில் வேடர்புளியங்குளம், மலைப்பட்டி, நிலையூர், அயன்பாப்பாகுடி ஆகிய நான்கு அரசு நடுநிலை பள்ளிகள் இந்த 155 பள்ளிகள் 'லிஸ்ட்'டில் உள்ளன. இப்பள்ளிகளுக்கு 2011 முதல் ஆர்.எம்.எஸ்.ஏ., நிதி கிடைக்கவில்லை.இதனால் போதிய வகுப்பறை, இருக்கைகள் வசதி இங்கு இல்லை. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். அரசு சிறப்பு உத்தரவு வெளியிட்டால், உலக வங்கி நிதியுதவியுடன் நபார்டு வங்கி சார்பில் இப்பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், இருக்கை வசதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஜெயலலிதா மறைந்ததை அடுத்து கல்வி அதிகாரிகள் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை, என்றார்.

கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்ப்பு - மத்திய அரசு அறிவிப்பு.

கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தசரா விடுமுறைக்கு பதிலாக கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து விருப்ப விடுமுறையிலிருந்து கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகையை மத்திய அரசு சேர்த்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக முதல்வர் அறிவிப்பு.

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மாத சம்பளகாரர்களே.. பட்ஜெட் 2017 உங்களுக்கு ஒரு ஜாக்பாட்!!!

பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், நாட்டின் வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கும் என்பதற்கான காரணங்களையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமின்றி மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லிபட்ஜெட் தயாரிப்பில் செய்து வரும் தவறுகளை நாம் ஏற்கனவே பார்த்தோம்.ஆனால் இந்தப் பட்ஜெட் 2017, மாத சம்பளகாரர்களுக்கு உண்மையிலேயே ஒரு ஜாக்பாட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
நல்ல காலம் பொறந்தாச்சு..

IRCTC INTRODUCES "NEW APP" FOR TRAIN TICKET RESERVATATION

ரயில் டிக்கெட் முன்பதிவு! ஐஆர்சிடிசி புதிய ஆப் அறிமுகம்!



ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய புதிய செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கிவைத்தார்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில், விமான டிக்கெட்டுகள்முன்பதிவு செய்யப்படுகிறது. பயனாளர்கள் மற்றும் ஏஜென்டுகளுக்கு தனித் தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஐஆர்சிடிசி புதியசெயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார். இந்த புதிய செயலில், டிக்கெட் முன்பதிவு, தட்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம்.

CPS : புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வுஅரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது.
அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது. ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப்பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.

Income tax section 80CCD(1B) -ன் விளக்கம்:

தற்போது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் CPS தொகையினை ரூ.50,000/- வரை கூடுதலாக கழித்துக் கொள்ளலாம். அதாவது, sec 80C- ல் ரூ.1, 50,000 மும் + sec 80 CCD(1B)-ல் ரூ.50, 000 மும் இரண்டையும் சேர்த்து ரூ.2,00,000 வரை கழிக்கலாம் என்ற செய்தி ஊடகங்களில் வலம்வருகிறது அல்லவா ?
அதற்கான விளக்கம்தான் இது.



நமது மாதச்சம்பளத்தில் CPSக்காக பிடித்தம் செய்யப்படும் 10% தொகையினை income tax section 80C யில் (LIC, Tuition fee, mutual fund, PLI, salary யில் பிடிக்கப்படும் CPS,...உள்ளிட்டவைகளை ) ரூ.1,50,000 வரை கழித்துக்கொள்ளலாம்.ஆனால் கூடுதலாக செலுத்தப்படும் ரூ.50,000/- த்தை உங்கள் கையிருப்பில் உள்ள தொகையினை புதிதாக NPS (National pension scheme or system தேசிய ஓய்வூதிய திட்டம்) திட்டத்தில் செலுத்தி income tax ல் வரிவிலக்கு பெறலாம்.

ஆக, section 80CCD(1B)ல் மாதச்சம்பளத்தில் பிடித்தம் செய்யும் CPS தொகையினை Income tax வரிவிலக்கில் கழிக்க முடியாது.

Apple Iphone 6 விலை ரூ.7,990 மட்டுமே - Flipkart அதிரடி தள்ளுபடி !

இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனம் இணைந்து ஆப்பிள் ஃபெஸ்ட் (Apple Fest) எனும் விற்பனை திருவிழா ஒன்றை நடத்தி வருகின்றன.



 இந்த விற்பனையில் பல்வேறு ஐபோன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 7 விலையில் 5000 ரூபாய் தள்ளுபடி மற்றும் பழைய போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

ஆப்பிள் ஐபோன் 7, ஐபோன் 6:

ஐபோன் 7 32GB, 128GB மற்றும் 256GB விலை முறையே ரூ.55,000, ரூ.65,000 மற்றும் ரூ.75,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பழைய போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் 23,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் உச்சகட்ட தள்ளுபடியினை பெற ஐபோன் 6s  பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு கிடைக்கிறது. இந்த சலுகை நீங்கள் எக்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போன் சார்ந்து மாறுபடுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளுடன் கூடுதலாக 5 சதவிகித தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் 6s எக்சேஞ்ச் சலுகை:

  ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் எவ்வித தள்ளுபடியும் வழங்கப்படவில்லை, எனினும் ஐபோன் 6s ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.23,000 வரை தள்ளுபடி பெற முடியும். விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் ஐபோன் 6s பிளஸ் ஸ்மார்ட்போனுடன் எக்சேஞ்ச் செய்யலாம். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

ஐபோன் 6 ரூ.7,990 மட்டுமே:

  ஐபோன் 6 16GB ஸ்பேஸ் கிரே நிறம் கொண்ட மாடல் வாங்கும் போது ரூ.5,000 தள்ளுபடியும் பிளிப்கார்ட் எக்சேஞ்ச் சலுகையில் ரூ.24,000 வரை தள்ளுபடியும் பெற முடியும். எக்சேஞ்ச் சலுகையில் அதிக தள்ளுபடி பெற ஐபோன் 6s பிளஸ் தகுதியுடையதாக உள்ளது. முழுமையான எக்சேஞ்ச் சலுகையில் தள்ளுபடி பெறும் போது ஐபோன் 6 போனினை ரூ.7,990 என்ற விலையில் வாங்க முடியும்.

ஐபோன் 5s ரூ.4,999 மட்டுமே:
 ஆப்பிள் ஐபோன் 5s 16GB ரூ.19,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் எக்சேஞ்ச் சலுகையில் ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் ஐபோன் 5s ஸ்மார்ட்போனினை ரூ.4,999 விலையில் வாங்க முடியும். ஐபோன்களை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 விலையும் குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வங்கிகள் வழங்கும் தள்ளுபடியும் சீரிஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்களுக்கு கிடைக்கிறது.   

அக்சஸரீகளுக்கு தள்ளுபடி:

ஆப்பிள் நிறுவனத்தின் அக்சஸரீகளுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடியும், ஆப்பிள் கீபோர்டு மற்றும் மைஸ் உள்ளிட்ட சாதனங்களுக்கு 25 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆப்பிள் மற்றும் பிளிப்கார்ட் வழங்கும் சிறப்பு விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

10/1/17

தி இந்து: தலையங்கம்:: புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?



அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.

ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.

அமைச்சர்களின் உறுதிமொழி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.

அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.

ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.

எப்படி வந்தது?

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.

இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.

தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே? இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே

தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால் அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் - 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்திய அரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.

எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.

தமிழகத்தால் முடியும்

பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே. இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.

எனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.

புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.

விருப்பம் இல்லையா?

மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.

புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.

சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு.

2017-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொது தேர்வு தேதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன

இது தொடர்பாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாவது, 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10-ம் தேதி முடிகிறது. இதில் 16,67,673 பேர் எழுதுகின்றனர். 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 29-ம் தேதி முடிகிறது. இதனை 10, 98, 420 பேர் எழுதுகின்றனர்.