யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/2/17

TNTET சமூக அறிவியல் பாடத்தில் 60 க்கு 60 பெறுவது எப்படி?Mr. Alla Baksh

TNTET சமூக அறிவியலில் 60 க்கு 60 எடுப்பது எப்படி

கலைபட்டய படிப்புகளான BA History, English, Tamil போன்ற படிப்புகள் படித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - II ல் பெருமளவு கேள்விகள் (60/150) சமூக அறிவியல் பாடத்திலிருந்தே
கேட்கப்படுகின்றன.
வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு இப்பகுதி மிகவும் எளிதாகப்பட்டாலும், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற கலைத்துறை மாணவர்களுக்கு இது ஒரு சோதனையாகவே இருக்கிறது. கசப்பான மருந்தாக உள்ள சமூக அறிவியல் பாடத்தை இனிப்பாக மாற்றி வரலாறு படிக்காத பிற கலைத்துறை மாணவர்களையும் சமூக அறிவியல் பகுதியில் அதிக மதிப்பெண் பெறச்செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.
மேல்நிலைப்பள்ளியானாலும் சரி, கல்லூரிப் படிப்பானாலும் சரி பொதுவாக வரலாற்றுத்துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்களை மற்ற பிரிவு மாணவர்கள் "அசோகர் மரம் நட்டார் என்பதை படிக்க மூன்று வருடமா?" எனக் கேலி செய்வதை பார்த்திருப்பீர்கள். ஏன் இதை படிக்கும் நீங்களே உங்கள் நண்பர்களை கேலி செய்திருக்கலாம். ஆனால் இப்போது புரிந்திருப்பீர்கள் இங்கும் சில கடினமான விசயங்கள் இருக்கிறது என்று. B.A., B.Ed., ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு (+2 வில் கணிதம்-உயிரியல்) சென்ற முறை நல்ல மதிப்பெண்ணுடன் ஆசிரியர் தகுதித்தேர்வை முழுமை செய்து தற்போது வேலையில் இருக்கும் நண்பர் ஒருவருடன் சமீபத்தில் உரையாடும் போது, அவர் சில பயனுள்ள தகவல்களை தந்தார். அவற்றை கோர்வையாக சேர்ந்து இங்கே உங்களுக்கு வழங்குகிறேன்.
TNTET தேர்வுக்கு தயாராவதற்கான 6 வது முதல் 10 வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடம் கீழ்கண்ட நான்கு பிரிவுகளில் இருக்கும்.
வரலாறு (History)
புவியியல் (Geography)
குடிமையியல் (Civics or Polity)
பொருளாதாரம் (Economics)
1.இனிக்கும் வரலாறு :
"உங்கள் எதிர்காலத்தை நிங்களே தீர்மானிக்க வேண்டுமென்றால், வரலாற்றைப் படியுங்கள்" - கன்ஃபூசியஸ்
வரலாறு என்றாலே காலங்கள், நிகழ்வுகள் மற்றும் பெயர்கள் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். உண்மையும் அது தான். ஆனால் உண்மையான ஆர்வத்துடன் படித்தால் வரலாறு போல் இனிப்பது ஒன்றுமில்லை.
வரலாறு =கதை :
ஒருவரலாறு பாடப் பகுதியை படிக்க துவங்கும் முன்னர் "அதிலுள்ள வருடங்களையும், பெயர்களையும் எப்படி மனப்பாடம் செய்வது?" என்று பதட்டப்படாமல், ஒரு கதையை படிப்பது போல் படிக்கத் துவங்குங்கள்.
உதாரணமாக, 6 ஆம்வகுப்பிலுள்ள சிந்து சமவெளி நாகரிகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நாகரிகம் இருந்தது , அந்த மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களின் உணவு முறை, நகர வாழ்க்கை, கடவுள் வழிபாடு, வணிகம் இவைதான் சாராம்சம். மொத்தமாக ஒரு முறை வாசித்து விட்டு இப்போது ஒரு முறை வாசித்தவற்றை அசை போடுங்கள். இரண்டாவது முறை வாசிக்கும் போது "லோத்தல் - துறைமுக நகரம் - தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது" , "காளிபங்கன் -என்ன சிறப்பு ?" என பல உண்மைகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். இப்படியே பல்வேறு அரசுகள், அரசர்கள், போர்கள் போன்றவற்றையும் கதையைப் போல படிக்கத்துவங்கினால். வரலாற்றில் இன்னொரு M.A., பண்ணுவதற்கு கூட ஆர்வம் வருமளவிற்கு வரலாற்றை நீங்கள் ரசித்து ருசித்து படிப்பீர்கள்.
காலக்கோடுகளின் மந்திரம்
வரலாற்றில் வரும் வருடங்களை எளிதாக நினைவு கூற "காலக்கோடு முறை" மிக சிறந்தது. ஒவ்வொரு பகுதிக்கும் தனிதனி காலக்கோடுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். கடைசியாக பார்க்கும் போது "சிந்து சமவெளி முதல் அ.தி.மு.க ஆட்சி 2017 வரை" வருடங்களை மிகவும் எளிதாக உங்களால் கூற முடியும்.
உதாரணமாக 'இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை" கீழ்க்கண்ட காலக்கோட்டின் மூலம் விளக்கலாம்.
1885 - இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்
1905-வங்கப்பிரிவினை
1906 - முஸ்லிம் லீக் தோற்றம்
1907-சூரத் பிளவு (காங்கிரசுக்குள்)
1909-மின்டோ-மார்லி சீர்திருத்தம்
1919-மாண்டேக்-செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
1920 -கிலாபத் இயக்கம்
-- இப்படி நீங்களே ஒரு காலக்கோட்டை தயாரித்து, ஒவ்வொரு வருடத்தோடும் தொடர்புடைய நிகழ்வுகளை, பெயர்களை மிகவும் எளிதாக நினைவில் கொள்ளலாம்.
2. புதுமையாகும்புவியியல்
புவியியல் பாடப்பகுதியை பார்த்தாலே பலருக்கு கசப்பாக இருக்கும். ஆனால் சில முக்கியமான உபகரணங்களுடன் படிக்கும் போது அது மிகவும் எளிதாக மாறிவிடும். அந்த உபகரணங்கள் Atlas மற்றும் Maps தான். உதாரணமாக கண்டங்களைப் பற்றி படிக்கிறீர்கள் எனில், நிச்சயமாக ஒரு உலக வரைபடத்தை கையில் எடுத்துக்கொண்டு அமெரிக்கா, ஆசியா என ஒவ்வொரு கண்டங்களையும் நீங்களே கண்டுபிடியுங்கள். அது போல, எந்த ஒரு இடத்தின் பெயரை படிக்கும் போதும் அவற்றை உலக அல்லது இந்திய வரைபடத்தில் பாருங்கள். உலகில் உள்ள நாடுகள், நதிகள், கால நிலைகள் எல்லாமே இந்த வரைபடங்களில் உள்ளடக்கம். புவியியல் பகுதியில் நீங்கள் பெறவிருக்கும் மதிப்பெண்கள் உட்பட.
3.குடிமக்கள் அறிய வேண்டிய குடிமையியல் :
ஒருசாதாரண குடிமகன் அறிநதிருக்க வேண்டிய தகவல்களான, அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், தேசிய சின்னங்கள், அரசியல் முறை, பாராளுமன்றம், சட்டமன்றம், குடியரசு தலைவர், பிரதமர் என அனைத்தும் ஆர்வமூட்டும் விசயங்களே இருப்பதால். குடிமையியல் பகுதிக்கு தயாராக உங்களுக்கு தனியே ஆலோசனைகள் தேவையில்லை.
4. புரிந்து படிக்க வேண்டியதுபொருளாதாரம் :
முதலில் பொருளாதாரத்தைப் பற்றிய அடிப்படை கருத்துக்களை சந்தேகமின்றி புரிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக Inflation, NDP, NGP, FDI போன்ற வார்த்தைகளை படிக்கும் போது சரியான புரிதல் இன்றி படிப்பீர்கள் எனில் உங்கள் மொத்த நேரமும் முயற்சியும் வீணாகி விடும். எனவே பொருளாதார பாடப்பகுதியை படிக்கும் போது அவற்றில் வரும் முக்கியமான concept ஐ புரிந்து கொண்டு படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

British council English Training !!

 DISTRICT LEVEL TRAINING*

_UPPER PRIMARY TEACHERS_

1 Day 1 & 2     

Set I            16.02.2017 &17.02.217

2 .Set II            20.02.2017&21.02.207


3.Set III            22.02.2017 &   23.02.2017


DISTRICT LEVEL TRAINING:  PRIMARY TEACHERS

1 Day 1 & 2.   Set I   27.02.2017&28.02.2017

2 .  Set II                      01.03.2017&02.03.2017

3.  Set III                      06.03.2017&07.03.2017

4. Day 3 & 4   Set I      09.03.2017&10.03.2017

5.Set II                     13.03.2017&14.03.2017


&6. Set III                     15.03.2017&16.03.2017.

வாங்கும் சம்பளத்தை விட கூடுதலாக வரி கட்ட நேர்ந்தால் challan no 280 ஐ நிரப்பி வங்கியில் செலுத்திய பின் IT Formல் இணைக்கவும்.

ஒரு ஒன்றியத்தில் பல பேருக்கு வாங்கும் சம்பளத்தை விட கூடுதலாக வரி கட்ட challan no 281 ஐ நிரப்பி வங்கியில் செலுத்திய பின் IT Formல் இணைக்கவும்.

I.T : FORM 12 BB

2/2/17

வருகிற கல்வியாண்டிலாவது கணினிக் கல்வி அரசுப்பள்ளிகளில் கொண்டுவரப்படுமா.......?CM-CELL -REPLY

No automatic alt text available.

மாத ஊதியம் பெறுவோருக்கான

ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை
வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக குறைப்பு*

*ரூ. 3 லட்சம் வரையிலான மாத வருமானத்துக்கு வருமான வரி
விலக்கு*

*அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க ஜேட்லி அதிரடி அறிவிப்பு*

*ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலான மாத வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரி*

*ரூ. 1 கோடிக்கு அதிகமான மாத வருவாய் மீதான 15% கூடுதல் வரி தொடரும்*

*தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை*

*வருமான வரி விகிதம் குறைப்பு:*
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 சதவீதமாகஇ ருந்த வருமான வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருமான வரிச்சலுகைகளை கருத்தில் கொண்டால் ரூ.3 லட்சம் வருமானத்திற்கு வரி இருக்காது.

#ரூ.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு தலா ரூ.12,500 கழிவு அனுமதிக்கப்படும்.
வரிவிகித குறைப்பால் அரசுக்கு ரூ.15,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.


மேலும் ஒரே ஒரு பக்கத்தில் வருமான வரி விண்ணப்ப படிவம் வழங்கப்படும் .

IT - 12C FORM

TNPSC 2017 ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு

பள்ளிக்கல்வி செயல்முறைகள் நாள்:20/01/17- TET - சிறுபான்மையினர் பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பு




பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்

நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த மத்திய பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பினால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் போன் தயாரிப்பில் முக்கிய பணியாற்றும் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் மீது 2% கூடுதல் சுங்கத்தீர்வை விதிக்கப்படவுள்ளதால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கவுள்ளது.

இந்தபுதிய வரிவிதிப்பினால் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளின் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பயன் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட போர்டுகளைப் பயன்படுத்தும் மொபைல் போன்களின் விலை 1% வரை இதனால் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் இறக்குமதிசெய்யப்பட்ட சர்கியூட் போர்டுகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுசெல்போன்கள் தயாரிப்பு செலவில் 25-30% தாக்கம் செலுத்துவதாகும்.

மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரி காரணமாக புகையிலை உள்ளிட்ட சில பொருட்கள் விலை உயர உள்ளன. அதேநேரம் சூரிய மின்சக்தி தகடுகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விலை குறைய உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:

விலைஉயரும் பொருட்கள்:

சிகரெட், பான் மசாலா, பீடி, சுருட்டு, புகையிலை.

எல்.இ.டி. விளக்குகள்

வறுத்த முந்திரி பருப்பு

அலுமினிய தாதுக்கள்

பாலிமர் எம்.எஸ். டேப்புகள்

வெள்ளி நாணயங்கள், பதக்கங்கள்

செல்போன் சர்க்கியூட் போர்டுகள்

விலைகுறையும் பொருட்கள்

ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள்

வீட்டு உபயோக ரிவர்ஸ்டு ஆஸ்மாசிஸ் தகடுகள்.

திரவஎரிவாயு

சூரிய மின் சக்தி தகடுகள்

காற்றாலை ஜெனரேட்டர்

பி.ஓ.எஸ். இயந்திரங்கள், விரல் ரேகை பதிவு இயந்திரங்கள்


பாதுகாப்பு துறை சேவைகளுக்கான குழு காப்பீடு

TNTET: ஆசிரியர் தகுதி தேர்வு எப்படி படிப்பது? எங்கு துவங்குவது?

TET தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ள இக்கால கட்டத்தில்
அனைவரின் கேள்வியும் அதுவே.

அதற்கான பதிவு பதில் இங்கே...
ஆசிரியர் தகுதி தேர்வு தயாராகும் முன் தெளிவாக பாட திட்டம் அறிதல் அவசியம்
பாடதிட்டம் :
தாள்1:
வகுப்பு 1 முதல் 8 வரைஅனைத்து சமச்சீர் புத்தக பாடம் + உளவியல் = 120 + 30
தாள்2 :
வகுப்பு 6 முதல் 10 வரை(தமிழ், அறிவியல் 12 வரை படிக்கலாம்)
தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பட்டதாரிகள்
தமிழ் : 30
ஆங்கிலம் : 30
ச.அறிவியல்: 60
உளவியல் : 30
அறிவியல், கணித பட்டதாரிகள் :
தமிழ்: 30
ஆங்கிலம் : 30
கணிதம் : 30
அறிவியல் : 30
உளவியல் : 30
இதற்கான தயாரிப்பு எங்கு எப்படி துவங்குவது?
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது பாட வாரியான தோராய கால அட்டவணை
உதாரணமாக
தமிழ் வகுப்பு 6 : அரை நாள்
7 : அரை நாள்
8 : ஒரு நாள்
9 : ஒரு நாள்
10: ஒரு நாள்
மொத்தமாக 4 அல்லது 5 நாட்கள். அனைத்து பாடத்திற்கும் மொத்த கால அளவு தோராயமாக 25 முதல் 30 நாட்கள்.
இந்த30 நாட்களும் தங்களது பங்களிப்பு உழைப்பு பொறுத்தே வெற்றி அமையும்.
மீதமுள்ள 30 நாட்களில் 2 திருப்புதலும் சில சுய தேர்வுகளும் நமக்கு நாமே செய்து கடின பகுதியை மீள்பார்வை செய்யலாம்
தமிழில் இலக்கண, செய்யுள் பகுதிகள்
கணிதம் நடைமுறை கணக்குகள்
அறிவியல் உயிரியியல் பகுதிகள்
சஅறிவியல் வரலாற்று பகுதிகள் கடினமானவை. இவற்றில் கூடுதல் பயிற்சி தேவை.

புத்தக வாசிப்பே சால சிறந்தது. சுய குறிப்புகளும் திருப்புதலில் உதவும். கூடுமான வரை மொபைல், கணினி வழி படிப்பதை தவிர்க்கவும். அவை உடல் சோர்வை உண்டாக்கும்.
மேலும் படிக்கும் போது மொபைல் பயன்பாட்டை குறைக்கவும். நேரத்தை அது உண்டுவிடும். வேண்டுமெனில் காலை மாலை அரை மணி நேரம் இணைய பகிர்வுகளை காணலாம்.
முக்கியமாக ஒரு பாடம் பாதியில் விட்டு விட்டு அடுத்த பாடம் செல்ல வேண்டாம். தொடர்ச்சியாக பாடங்களை தொடர்பு படுத்தி படியுங்கள்.

தேர்விற்கான கால இடைவெளி குறைவு . எனவே மற்ற அலுவல்களை தவிர்த்து முழு நேர பயிற்சியில் ஈடுபடுங்கள்.
கோச்சிங் செல்ல வேண்டுமா?
அதுஅவரவர் தனிப்பட்ட திறன் சார்ந்தது.
கோச்சிங் செல்வது அவசியமில்லை. எனினும் மற்றவரை காணும் போது தன்முனைப்பும் உத்வேகமும் உண்டாகும்.
எதிர் நிற்பது இறுதி வாய்ப்பு என நினைத்து முயலுங்கள் ....
முயலும் எந்த ஆமையும் இங்கு தோற்பதில்லை

வாழ்த்துக்களுடன் - பிரதீப் பட்டதாரி ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.

1/2/17

EMIS -LATEST NEWS..... (30/01/2017)

மருத்துவ நுழைவு தேர்வுக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

மருத்துவ படிப்பிற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ‛நீட்' எனப்படும் அகில
இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மே-7 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் நடத்தப்படும் இத்தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TET தேர்வு என்றால் என்ன?யார் எழுதலாம்?எப்படி படிக்கலாம்? விரிவான பதில் பதிவு

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயம் முடித்த பட்டதாரிகள் அம்மாநில அரசால் நடந்தபடும்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

இவ்வகையில் ஆசிரிய பணியில் சேர்ந்த ஆசிரியர் எதிர்வரும் 7 ஆண்டுகளில் இத்தேர்வில் வெற்றி பெற வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இவ் விதி பொருந்தும்.

ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை இத்தேர்வு மாநில / மத்திய அரசால் நடத்தபடும்
(சட்ட சிக்கல் காரணமாக தமிழகத்தில் 2 வருடமாக தேர்வு நடத்தப்படவில்லை )

அரசுபணி இவ்வகையில் தேர்ச்சி பெறும் தேர்வரை கொண்டு நிரப்பப்படும்

TET தேர்வு முறை என்ன?
தேர்வு முறை:
கோள்குறி வினாக்கள் 150 இடம்பெறும். தவறான வினாவிற்கு மதிப்பெண் குறைக்கபடாது
* DTEd முடித்தவர் தாள் 1
* B.Ed. முடிந்தவர் தாள் 2 எழுத வேண்டும்
பாடதிட்டம் யாது?
பாடதிட்டம் :
தாள்1: 1 முதல் 8 வரை
அனைத்து பாடம் -120
உளவியல் - 30
தாள்2: 6 முதல் 10 வரை
தமிழ், ஆங்கில, சமூக அறிவியல் பட்டதாரிகளுக்கு
தமிழ் - 30
ஆங்கிலம் - 30
சமூகஅறிவியல் - 60
உளவியல் - 30
கணித, அறிவியல் பட்டதாரிகளுக்கு
தமிழ் - 30
ஆங்கிலம் - 30
அறிவியல் - 30
கணிதம் -30
உளவியல் - 30
B.Ed. இரண்டாம் ஆண்டு படிப்பவர் இத்தேர்வை எழுதலாம் ( அதிகார பூர்வ தகவல் தேர்வாணய தகவலில் தெரியும்)
B.E., B.Sc. (CS) , M.Com., B.Ed பட்டதாரிகள் இத்தேர்வை எழுத முடியமா?
தேர்வாணய அறிவிப்பில் அறிவிக்கப்படும்
எப்படி படிக்கலாம்?
சமச்சீர் புத்தகம் 1 முதல் 10 வரையில் வரி வரியாய் புரிந்து படித்தல் அவசியம்
உளவியல் - நகராஜன், மீனாட்சி சுந்தரம் புத்தகம் 95% துணை புரியும்
குறிப்பேடுகளை (மெடி ரியல் ) சார்ந்து மட்டுமே இருப்பதை தவிர்க்கவும். இவை துணை கருவியே.
சுயகுறிப்புகள், நாள் தோறும் திருப்புதல், புத்தக முழு வாசிப்பு இவையே வெற்றி இரகசியம்
தேர்ச்சி மதிப்பெண்:
தேர்ச்சி பெற 90 மதிப்பெண் தேவை
MBC /BC / SC / ST 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி
தேர்வு செய்யும் முறை :
தமிழகத்தில் வெயிடேஜ் முறை அடிப்படையில் அரசு பணியில் தேர்வர் தெரிவு செய்யபடுவர்
டெட்மதிப்பெண் x 60%
HSC×10%
Degree×15%
B.ed×15%
மாற்றத்திற்கு உரியது *
விண்ணப்பம் மாவட்டம் தோறும் வழங்கபட்டு முறைப்படி வாங்கப்படும். இந்த ஆண்டு 2017 TET தேர்வு ஏப்ரல் இறுதியில் நடக்க இருக்கிறது. இதற்கான அறிவிக்கை ஆசிரிய தேர்வாணயம் மூலம் அறிவிக்கபடும்.
மேலும் தகவலுக்கு www.tn.trb.nic.in
வலைதளத்தை பார்வையிடலாம்
முயற்சி செய்பவர் அனைவரும் வெற்றி பெறுவதில்லை
ஆனால் ஒவ்வொரு முயற்சிக்கும் பின்னும் ஒரு கடின முயற்சி உள்ளது

வாழ்த்துகளுடன் - பிரதீப் பட்டதாரி ஆசிரியர், பூங்குளம்

2017-2018 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி /மேல் நிலைப்பள்ளிகளில் முதுகலையாசிரியர் பதவி உயர்வு மூலம் நியமனம் -01.01.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியாராகப் பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்த உதவியாசிரியர்கள் ,ஆசிரியர் பயிற்றுநர்கள் & பள்ளி துணை ஆய்வாளர்கள் -முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் விவரங்கள் கோருதல்

PAY ORDER FOR THREE MONTHS FROM 01.01.2017 FOR VARIOUS GO'S

TNTET-வெற்றி உங்களுக்கே! உங்களால் முடியும்....Mr-Alla Baksh-Article

முதல் தாளாக இருந்தாலும் சரி, இரண்டாம் தாளாக இருந்தாலும் சரி, இரண்டுக்குமே அரசின் பாடப்புத்தகங்களை யாரெல்லாம் முழுமையாகப் படித்துக் கொள்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவது நிச்சயம். முதல் தாளுக்காக படித்துக்
கொண்டிருப்பவர்கள், ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை ஒரு வரி விடாமல் முழுமையாகப் படித்துக் கொள்ள வேண்டும். இப்பாடங்கள் எல்லாம் குழந்தைகள் படிக்கும் பாடங்கள் என்பதால், படிப்பதில் சிரமம் ஏதும் இருக்காது. புரிந்து கொண்டு, குழந்தைகளைப் போல் மகிழ்ச்சியாக படித்துக்கொண்டாலே, பாடங்கள் அனைத்தும் மனதில் பசுமரத்தாணி போல் பதியும். முக்கியமான வாக்கியங்களை, வார்த்தைகளை தனியே குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பாடத்திலிருந்தும் இதுபோல குறிப்பெடுத்து வைத்துக்கொண்டால், உங்களுக்கென்று தனி நோட்ஸ் தயார். அதை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டால். எளிதில் மறக்காது. எப்போதும் மறந்து போகாது. டீச்சர் டிரெயினிங்கின்போது, படித்துக்கொண்ட சைக்காலஜி பாடங்களை மீண்டும் படித்துக்கொள்ளுங்கள். முதல் தாளை வெற்றிகரமாக எழுதி விடலாம்.

இரண்டாம் தாளுக்காக தயாராகிக் கொண்டிருப்பவர்கள் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பாடப் புத்தகங்களையும் முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும். பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களை ஓரளவு பார்த்துக் கொள்வதும் பலன் தரும்.

தமிழ் பாடத்தைப் பொருத்தவரை, இலக்கணத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்க வாய்ப்புள்ளது. வேர்ச் சொல், வினைச்சொல், குற்றியலிகரம், குற்றியலுகரம் போன்றவற்றைப் படித்துக்கொள்ள வேண்டும். செய்யுள் எழுதிய ஆசிரியர்கள் பெயர், அடைமொழிகள் போன்றவற்றைப் படித்துக்கொள்ள வேண்டும். பாடலின் வரியைக் கொடுத்து, இப்பாடலை எழுதியவர் யார் என்றும் கூட கேட்பார்கள். உரைநடைப்பகுதிகள், துணைப்பாடக் கதைகள் போன்றவற்றையும் படித்துக் கொள்ளுங்கள். கதை எழுதிய ஆசிரியர் யார்? இந்த ஆசிரியர் எழுதிய கதை பெயர் என்ன என்றும் கேட்க வாய்ப்புண்டு. தமிழ் எண்கள் பற்றி படித்துக்கொள்ளுங்கள்.

ஆங்கிலப் பாடத்தைப் பொருத்தவரை, பாடல் எழுதிய ஆசிரியர்கள் பெயர், அவர்கள் எழுதிய நூல்கள் போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்பார்கள். பாடத்தின் பின்புறம் உள்ள பொருள் தருக, எதிர்ச்சொல், முன் சேர்க்கும் சொல், பின் சேர்க்கும் சொல் போன்றவற்றைப் படித்துக்கொள்ளுங்கள். அடிப்படை இலக்கணத்திலிருந்து கேள்விகள் கேட்பார்கள்.

குழந்தைகள் மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் பாடத்தைப் பொருத்தவரை பி.எட். படித்தபோது இருக்கும் புத்தகத்தைப் படித்துக்கொள்ளுங்கள். ஒரு சூழ்நிலையைக் கொடுத்து, நீங்கள் அந்நிலையில் என்ன செய்வீர்கள் என்பது போலவும் கேள்விகள் கேட்பார்கள். அதற்கு தர்க்க ரீதியாக சிந்தித்து பதிலளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.சைக்காலஜி பாடங்களில் உள்ள கோட்பாடுகள், அதை வரையறுத்துச் சொன்ன ஆசிரியர்கள் போன்றவற்றைப் படித்துக்கொள்ளுங்கள்.

ஆறுமுதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல் பாடங்களை ஒருவரிவிடாமல் தரவாகப் படித்துக் கொள்ள வேண்டும். 11, 12-ஆம் வகுப்புப் பாடங்களை ஓரளவு பார்த்துக்கொள்ள வேண்டும். வரலாறு என்பது நம் முன்னோர்களைப் பற்றிய பாடம் ஆகும். ஆதலால், விருப்பத்தோடு, புரிந்து கொண்டு படிக்க வேண்டியது அவசியம். கலிங்கப்போர் நடைபெற்ற ஆண்டு? முதலாம் பானிபட் போர் யார் யாருக்கு இடையே நடந்தது? என்று கேள்விகள் அமையும். ஆகவே, முக்கியமான போர்கள் நடைபெற்ற ஆண்டு, யார் யாருக்கு இடையே நடைபெற்றது, அதன் விளைவுகள் என்ன? போன்றவற்றையெல்லாம் தனியே எழுதி வைத்துக் கொண்டுகூட படிக்கலாம். இப்படிப் படித்தால் போதும்.

செய்தித்தாள்கள், வார இதழ்கள் போன்றவற்றில் வருகின்ற டெட் மாதிரி வினாக்களைப் படித்துக் கொள்ளலாம். அதுவும் நமக்கு தேர்வு நேரத்தில் உதவும்.


அரசுவழங்கியிருக்கும் பாடப் புத்தகங்களை புரிந்துகொண்டு முழுமையாகப் படித்தாலே போதும், தேர்வில் வெற்று பெற்றுவிடலாம். இதற்காக கைடும் தேவையில்லை. பயிற்சி வகுப்பும் தேவையில்லை. உங்களால் முடியும் என்று நம்பிப் படியுங்கள், வெற்றி உங்களுக்கே!

ஆசிரியர் தகுதி தேர்வு, மூன்று ஆண்டுகளாக நடத்தப் படவில்லை ,''சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி

ஏப்., 29, 30ல் 'டெட்' தேர்வு
சென்னை: ''தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், நேற்று பேசும்போது, ''ஆசிரியர்
தகுதி தேர்வு, மூன்று ஆண்டுகளாக நடத்தப் படவில்லை,'' 

அதற்கு, பதில் அளித்த அமைச்சர், ''தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில், 'டெட்' தேர்வு நடத்தப்படும்,'' என்றார்.

TNTET-இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பின்பற்றக்கூடிய சமூக நீதிக்கு எதிரான வெயிட்டேஜ் முறையை கைவிட வேண்டும் -சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்

ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தரவு வழங்குதல், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்
நியமனத்தில் பின்பற்றக்கூடிய சமூக நீதிக்கு எதிரான வெயிட்டேஜ் முறையை கைவிடுதல், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வாய்ப்பு போன்றவற்றை அக்கறையோடு கவனிக்கவில்லை.

மத்திய அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியம் மாநில அரசு பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு 7 வது ஊதியக்குழு நியமித்து அதன் பரிந்துரைகளை நடைமுறைக்கு உட்படுத்திய பிறகும், மத்திய
அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியம் மாநில அரசு பணியாளர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை;

அரசுபோக்குவரத்து தொழிலாளர்களின் 13 வது ஊதிய ஒப்பந்தம் இன்னும் நடைமுறைக்கு வந்திடவில்லை;

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை;

சத்துணவு பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று 2011 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றீர்கள். அது என்ன ஆயிற்று என்ற கேள்வியை தான் நான் கேட்க விரும்புகிறேன்;

அதேபோல மக்கள் நலப்பணியாளர்களுக்கு மறு நியமனம் வழங்க மனம் வரவில்லை;

அரசுதுறையில் 4 லட்சம் காலிப் பணியிடங்களை வைத்துக் கொண்டும், வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இல்லை.

முறைப்படுத்தப்படாத SSA, RMSA பள்ளி கல்வி துறையில் உள்ள பணியிடங்கள் : சம்பள பிரச்னையால் நிதித்துறை அதிருப்தி

 முறைப்படுத்தப்படாத எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும்
பள்ளி கல்வி துறையில் உள்ள பணியிடங்கள் : சம்பள பிரச்னையால் நிதித்துறை அதிருப்தி

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் புதிதாக உருவாக்கப்பட்ட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, சம்பளம் வழங்குவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இப்பணியிடங்கள் முறைப்படுத்தப்படாததால், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்குவதற்கு, அரசாணை நீட்டிப்பு (எக்ஸ்பிரஸ் பே ஆர்டர்) வழங்க வேண்டியுள்ளதால், நிதித்துறை அதிருப்தி தெரிவித்துள்ளது. மாநிலத்தில் வருவாய், கல்வி, பொதுப்பணி, மருத்துவம், கூட்டுறவு உட்பட பல்வேறு அரசு துறைகளில் தேவைக்கு ஏற்ப 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள், புதிதாக உருவாக்கப்பட்டன.


இவற்றில் மாற்றுப்பணி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு, நிதித்துறை சார்பில் தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை ஒப்புதல் வழங்கிய நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒப்புதல் வழங்க நிதித்துறை உத்தரவிட்டது. இதனால் 'பே ஆர்டர்' பெற்று உரிய மாதத்தில் சம்பளம் பெற முடியாமல், 10 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இதுகுறித்து நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள் குறித்து, பல்வேறு குளறுபடிகள் நீடிக்கின்றன. குறிப்பாக திட்டப் பணிகளுக்கு தற்காலிக அடிப்படையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாற்றுப்பணியாக நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு சம்மந்தப்பட்ட திட்ட நிதி மூலம் சம்பளம் வழங்க வேண்டும். குறிப்பாக கல்வி துறையில் 875 உருவாக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் பள்ளி கல்வி துறையில் உள்ளவர்களுக்கு, எந்த திட்டங்கள் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது என்பதில், பல்வேறு நடைமுறை குளறுபடிகள் நீடிப்பதாக, நிதித்துறை சார்பில் தொடர்ந்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வருகிறது.


ஆனால் திட்ட நிதியை மாநில அரசுக்கு ஒப்படைப்பு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. நிதித்துறை ஒப்புதலும் விரைவில் கிடைப்பதில்லை. அதேபோல் மாற்றுப்பணி நியமிக்கப்பட்டவர்களின் பழைய பணியிடங்கள் 'சரண்டர்' செய்யப்படாமலும் இழுத்தடிக்கப்படுகின்றன, என்றார். புதிய உருவாக்கப்பட்ட பணியிடங்களை முறைப்படுத்தவும், அரசு துறைகளில் தேவை அடிப்படையிலான தற்காலிக பணியிடங்களை நிரந்தரப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி
ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் சம்மேளனம் ஆகியவை சார்பில் 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யவிருப்பதாக அறிவித்து இருந்தது.

இந்தநிலையில் 9 வங்கி ஊழியர்கள் சங்கம் இதே கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 28-ந்தேதி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதனால் 7-ந்தேதி நடக்க இருந்த வேலைநிறுத்தம் 28-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.


இவ்வாறு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தில் தமிழ்நாடு பொதுசெயலாளர் கிருஷ்ணன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுசெயலாளர் வெங்கடாச்சலம் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

வருமான வரி விலக்கு உயருமா ?

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடத்த கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் ஓய்வு பெற்று உள்ளனர்.
அந்தபணியிடங்களை நிரப்பாததால் 1,060 பணியிடங்கள்  காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்ப ஆசிரியர்களை  தேர்வு செய்து தருமாறு பள்ளி கல்வித்துறை இயக்குனர்  ச.கண்ணப்பன் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடந்த வருடம்  கடிதம் அனுப்பினார்.
இந்தஇடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தித்தான் தகுதியானவர்களை நிரப்ப வேண்டும்.  ஆனால் இதுவரை எழுத்து தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு  வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்தநிலையில் முதுநிலை படிப்புடன் பி.எட். முடித்து  வேலைக்காக காத்திருக்கும் சிலர் நேற்று சென்னை டி.பி.ஐ.  வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்தனர். அவர்கள் கூறுகையில், உடனடியாக முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை நடத்தவேண்டும் என்று  தெரிவித்தனர்.

இன்றைய #TET வெற்றி டிப்ஸ்*

*பாடவாரியாக நாட்கள் ஒதுக்கி முழு முயற்சியுடன் படிக்கவும்
* தேர்வு காலம் அருகில் உள்ளதால் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 14-15
மணி நேரம் படிப்பது பயனளிக்கும்
* ஆன்லைனில் காலம் செலவழிப்பதை குறையுங்கள். காலை மாலை 1 மணி நேரம் மட்டும் மொபைலை பயன்படுத்தி படியுங்கள்
* முழு புத்தக வாசிப்பு அவசியம்
*எந்நிலை வந்தாலும் மனம் தளராதீர் . உழைபிற்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் உண்டு

*நன்றி*-Alla Baks

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணியிடங்கள், நிர்வாக அலுவலர் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதால் ஊக்க ஊதியம் வழங்க இயலாது என அரசு அறிவிப்பு

EMISல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்காணும் முறையைப் பயன்படுத்தலாம்.

Step-1.
ஒருபள்ளியை Open செய்த பிறகு அதில் வகுப்பு வாரியாக
மாணவர்களின் Total இருக்கும்.

Step-2.
அதில் ஒரு வகுப்பை Click செய்யவும்.
Open ஆன வகுப்பிற்கு மேலே Download Child Profile என்று இருக்கும்.

Step-3.
அதைClick செய்யவும்.
Save செய்யவா என்று கேட்கும் பிறகு OK கொடுக்கவும்.

Step-4.

Save ஆன File யை Open செய்யவும் Excel Format இருக்கும். அதில் ஒரு வகுப்பில் நாம் செய்த அனைத்து மாணவர்களின் தகவல்களும் இருக்கும். அதை சரி பார்த்து மீண்டும் Update செய்யலாம். இதேபோல் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்பையும் Print எடுத்து சரிபார்த்து Update செய்தால் நம்மால் சரியான புள்ளி விவரங்களை கொடுக்க முடியும்.

FLASH NEWS : 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி
* வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு கோடி குடும்பங்களைஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.
* இந்தியாவை தொழில்நுட்ப பலமிக்க நாடாக மாற்றுவதே அரசின் இலக்கு.
* விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டில் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்காக நபார்டு மூலம் ரூ.8000 கோடி வழங்கப்படும்.
* கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்படும்.
* சிறுகுறு விவசாயிகள் தடையின்றி எளிதாக கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* 2018, மே ஒன்றாம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தப்படும்.
விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி
* நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 361 பில்லியன் டாலராக உள்ளது.
* ரயில்வேத்துறை சுதந்திரமாக இயங்கும்
* வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க வழி ஏற்படும்.
* விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்கு இலக்கு (கடந்த ஆண்டு சுமார் 9 லட்சம் கோடி)
* உலக பொருளாதார வளர்ச்சி 2017ல் 3.4 ஆக இருக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது.
* உலக பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும் இந்திய பொருளாதாரம் நிலையாக உள்ளது.
* பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13,000 கோடி இலக்கு.(கடந்த ஆண்டு ரூ.5,500 கோடி)
* கச்சா எண்ணெய் விலையில் நிச்சயமற்ற நிலை நிலவுவது சவாலாக உள்ளது.
* பல்லாண்டு வரி ஏய்ப்பை தடுக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கை உதவியுள்ளது.
* பணமதிப்பு நீக்க பாதிப்பை நீக்க புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம் அதிகரிக்கும்.

அமெரிக்காவால் பாதிப்பு
* அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
* இரண்டரை ஆண்டுகளில் பாஜக அரசு நிர்வாக சீர்திருத்தங்களை எடுத்துள்ளது.
* நாட்டின் முக்கியமான பொருளாதார காரணிகள் திருப்திகரமான உள்ளன.
* பணமதிப்பு நீக்கத்தின் விளைவு அடுத்த ஆண்டு தெரியவரும்.
* ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்தது.
* கறுப்புப் பணத்திற்கு எதிரான பணமதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது.
* வேலைவாய்ப்பை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம்.
* பணமதிப்பு நீக்கம் என்ற முக்கியமான முடிவை அரசு செயல்படுத்தியுள்ளது.
* ஜிஎஸ்டியில் ஒருமித்த கருத்தை எட்ட உதவிய அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி.
* பண  மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டிற்கு நீண்ட கால பலனளிக்கும்.
* கடந்த ஓராண்டில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
* அரசின் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
* வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் 2016ல் 36 சதவீதம் உயர்ந்துள்ளது.
* இளைஞர் நலன், வேலைவாய்ப்புக்கு அரசு முக்கியவத்தும் கொடுத்து வருகிறது.
* மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
* உலகப் பொருளாதாரம் நிலையாக இல்லாத நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
* நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

2016-2017-ஆம் ஆண்டின் வருமான வரி விகிதங்கள் விவரம்..!

நடப்பு நிதியாண்டில், அதாவது 2016-17ஆம் ‌ஆண்டில் தனிநபர்
வருமான வரி விகிதங்களை தெரிந்து கொள்வோம். இதில் இன்று மாற்றம் செய்யப்பட்டால், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், அதாவது அடுத்த நிதியாண்டில் அமலுக்கு வரும். தற்போதைய நிதியாண்டில்,

*ஆண், பெண் இருபாலருக்கும் ஆண்டு வருமானம் இரண்டரை லட்ச ரூபாய் வரை வரி இல்லை.
*இரண்டரை லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை வருமானத்துக்கு 10 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. 5 லட்சத்தில் இருந்து 10 லட்ச ரூபாய் வரை வருமானத்துக்கு 20 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.

*10 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள வருமானம் முழுவதற்கும் 30 சதவிகித வரி செலுத்த வேண்டும்.

*இந்த 3 பிரிவுகளில் செலுத்தப்படும் வரித் தொகை மீது 2 சதவிகித கல்வி வரி, 1 சதவிகித கல்விக் கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது.

*60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை வரி இல்லை.

*3 லட்சத்துக்கு மேல் 5 லட்ச ரூபாய் வரை 10 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.

*5 லட்சத்துக்கு மேல் 10 லட்ச ரூபாய் வரை 20 சதவிகிதமும், 10 லட்ச ரூபாய்க்கு மேல் 30 சதவிகிதமும் வருமான வரி செலுத்த வேண்டும். வரித் தொகை மீது 2 சதவிகித கல்வி வரி, 1 சதவிகித கூடுதல் உயர்கல்வி வரி ஆகியவை மூத்த குடிமக்களுக்கும் பொருந்தும்

*80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கு 5 லட்ச ரூபாய் ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது

*5 லட்சம் முதல் 10 ‌லட்ச ரூபாய் வரை 20 சதவிகித வரியும், 10 லட்ச ரூபாய்க்கு மேல் 30 சதவிகிதமும் வரி செலுத்த வேண்டும். கல்விக்கான வரிவிதிப்புகள் இவர்களுக்கும் பொருந்தும்

வருமான வரி விகிதங்கள் இவ்வாறு இருப்பிலும், மொத்த வரித் தொகையில் 5 ஆயிரம் ரூபாய் வரை வரிக்கழிவு அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகும் வரி செலுத்த வேண்டியிருப்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் ஒன்றரை லட்ச ரூபாய் வரை பல்வேறு சேமிப்பு மற்றும் செலவுக்கான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. காப்பீடு பிரீமியம், குழந்தைகளின் கல்விக் கட்டணம், மியூச்சுவல் ஃபண்ட், வருங்கால சேமிப்பு நிதி, பொது வருங்கால வைப்பு, அஞ்சலக பத்திரங்கள் மற்றும் வீட்டுக் கடனில் திருப்பிச் செலுத்தும் அசல் தொகை ஆகியவை இதில் அடங்கும்.

தவிர, மருத்துவக் காப்பீடு பிரீமியம், தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றுக்கும் முறையே 30,000 மற்றும் 50,000 வரை வரிவிலக்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும், வீட்டு வாடகையை கழித்துக் கொள்ளவும், வீட்டுக் கடன் வட்டிக்கு 2 லட்ச ரூபாய் வரையும் வரிவிலக்கு அனுமதிக்கப்படுகிறது.


இந்தவரிவிலக்குகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வோருக்கு 6 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டிய தேவையில்லாத நிலை உள்ளது.

RTI - IT - SCHOOL FEES DEDUCTION

கற்பிக்கும் வேலை செய்யவிடுங்கள்.. ஆசிரியர்கள் குமுறல்

தயவுசெய்து மாணவர்களுக்கு கற்பிக்க நேரம் கொடுங்கள்.

1)EMIS update செய்ய கணிணி செண்டர் செல்லவும்,போட்டோ


2)ஆதார் எண் எடுக்க அலையவும்

3) இரும்பு சத்து,குடற்புழு நீக்க மாத்திரைகளை தேடிய அலையவும் அனுப்பாதீர்.

4) SMC பயிற்சி,IED பயிற்சி, MATHS KIT பயிற்சி.. என்று பள்ளிக்கே செல்லாமல் பயிற்சிக்க்கே செல்லும் நிலை.

5) தினந்தோறும் அறிக்கை புகைப்பட நகலுடன் அனுப்பி ,எதை எதற்கு அனுப்புவது என்று குழப்பம் ஆகிவிட்டது.

6)இன்றாவது பள்ளியில் சென்று கற்பிக்கலாம் என்று அமர்ந்தவுடன் ,ஒரு SMS..உறுதிமொழி எடுத்து புகைப்படத்துடன் அறிக்கை அனுப்பவும் என்று.
. எல்லாவற்றையும் பொறுத்து பாடம் கற்பிக்கலாம் என்று அமர்ந்தால் இரண்டு தலை தெரிகிறது .

நாங்கள் other Union Aeeo+ BRT..84 பதிவேடுகள் ,வாசிப்பு பயிற்சி,அடிப்படை கணக்குகள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று ஒருநாள் முடிந்துவிடுகிறது..


அடுத்த நாள் அதே யூனியன்brt போனில் பயிற்சிக்கு ஆள் பத்தவில்லை உடனடியாக 2_பேரை அனுப்பவும்..இது என்ன வேலைக்கு ஆள் பற்றாக்குறையா ? என்ன கொடுமை சார்..

இதுஎல்லாவற்றையும்விட எங்கே போட்டி,தேர்வு நடத்தினாலும் பாடிகார்டு போல் மாணவன் பின்னால் சென்று,முடித்து விட்டு ,பத்திரமாக வீட்டிற்கு அனுப்பவேண்டும்..


இதைடைப் செய்த ஆசிரியரை தேடுகிறேன்..அவர்மூலமாவது விடியல் நமக்கு கிட்டுமா?

TAX NEWS-ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானத்திற்கு 5% வரி ஆக குறைப்பு

Image may contain: 2 people
5% ஆக ரூ.   2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை மாத ஊதியம் பெருவோருக்கான வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக 
குறைப்பு

#வருமான வரி தொகையில் மாற்றமில்லை

 தனிநபர் வருமன வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கத்தில் இருக்கும்.

2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

📘4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any)

📘housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

📘housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- மற்றும்
அசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.



📘housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

📘CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் NPS திட்டத்தில் சேர்ந்து தொகை செலுத்தி இருந்தால், செலுத்திய தொகையை அதிகபட்சமாக ரூ.50,000/- வரை கழித்துக் கொள்ளலாம்.

📘School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது.

📘LIC : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது.

📘PLI : பிரீமியம் தொகையுடன் service Tax யும் சேர்த்து கழித்துக் கொள்ளலாம்.

📘Taxable income 5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.5000/- கழித்துக்  கொள்ளலாம். பிரிவு 87A.

📘Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும் .

EMIS மற்றும் AADHAR பதிவு பற்றி தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலக மீளாய்வு கூட்டத்தில் கூறப்பட்ட விபரங்கள்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடத்த கோரிக்கை!!

அந்த பணியிடங்களை நிரப்பாததால் 1,060 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்ப ஆசிரியர்களை தேர்வு செய்து தருமாறு பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடந்த வருடம் கடிதம் அனுப்பினார்.



இந்த இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தித்தான் தகுதியானவர்களை நிரப்ப வேண்டும். ஆனால் இதுவரை எழுத்து தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் முதுநிலை படிப்புடன் பி.எட். முடித்து வேலைக்காக காத்திருக்கும் சிலர் நேற்று சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்தனர். அவர்கள் கூறுகையில், உடனடியாக முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை நடத்தவேண்டும் என்று தெரிவித்தனர்.

நாடு முழுவதும் பிப்ரவரி 28-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் !!

இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

பணம் எடுப்பதற்கான உச்ச வரம்ப்பை முழுவதுமாக நீக்க கோரியும், வங்கிகள் தனியார் மயமாக்கும் நடவடிக்கை முடிவை கைவிட 
கோரியும்,பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது..

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு

எம்.பி.ஏ., - எம்.இ., உள்ளிட்ட, இன்ஜி., படிப்புகளுக்கான, 'டான்செட்' தேர்வுக்கு, பிப்., 20 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பு: 
அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்ற கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் போன்ற படிப்புகளில், வரும் கல்வி ஆண்டில் சேர விரும்புவோர், 'டான்செட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான, இத்தேர்வுக்கு, ஜன., 29ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. பிப்., 20 வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்.சி.ஏ., - எம்.பி.ஏ.,வுக்கு, மார்ச், 25லும், மற்ற படிப்புகளுக்கு, மார்ச், 26லும் தேர்வுகள் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

பிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு

பிளஸ் 2 தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, கூடுதல் கால அவகாசம் தரப்பட்டு உள்ளது.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவிப்பு:
வரும் மார்ச்சில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், தங்களின் ஹால் டிக்கெட்டை, ஜன., 25 முதல், 29 வரை, பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்படுகிறது. தேர்வர்கள், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா?

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்களுக்கு, அரசு கல்லுாரிகளில் தனி இட ஒதுக்கீடு கிடையாது,'' என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் தெரிவித்து உள்ளார்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு, அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், கடந்த ஆண்டு மட்டும், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல், அனைத்து மாநில மாணவர்களும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இந்த தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்க முடியுமா என்பது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் கூறியதாவது: வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், இந்தியாவில் நடக்கும், 'நீட்' தேர்வில் பங்கேற்கலாம். அவர்களுக்கு, வெளிநாடுகளில் தேர்வு மையங்கள் கிடையாது.

அதில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றால், மத்தியஅரசின் ஒதுக்கீட்டிலோ, தமிழக ஒதுக்கீட்டிலோ இடங்கள் கிடையாது. ஆனால், அவர்களால், தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெற முடியும். அதற்கு, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இவ்வாறு அவர் கூறினார்."

சி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 
தனியார் பள்ளிகள் இணைய, ஆன்லைன் முறையில், விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் கல்விஆண்டில், இணையும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் பணிகள் முடிந்து விட்டன.
இந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ.,யில் இணைய விரும்பும் பள்ளிகளிடம், ஆன்லைனில் விண்ணப்பம் பெறும் பணி, ஜன., 2 முதல், துவங்கி உள்ளது. 'பள்ளிகள், http://cbseaff.nic.in என்றஇணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம். ஜூன், 30 வரை, விண்ணப்ப பதிவு நடக்கும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

இன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது.

வரும் கல்வி ஆண்டில், இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், கல்வி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க, அரசு பல்வேறு விதிமுறைகள் வகுத்துள்ளது. 
பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க, பள்ளிக்கல்வித் துறையிலும், கல்லுாரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்திலும், கல்வி கட்டண கமிட்டிகள் செயல்படுகின்றன.இந்த கமிட்டிகள், பள்ளி, கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு,மாணவர் எண்ணிக்கை, பாடத்திட்டம், கூடுதல் வசதிகள் அடிப்படையில், கட்டணம் நிர்ணயிக்கிறது. வரும் கல்வி ஆண்டில், இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், தற்போதுள்ளதை விட, அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதற்கான, கட்டண நிர்ணய பணி துவங்கி உள்ளது.

அனைத்து இன்ஜி., கல்லுாரிகள், முதுநிலை அறிவியல் படிப்பு நடத்தும் கலை, அறிவியல் கல்லுாரிகள், தங்கள் விண்ணப்பங்களை, பிப்., 28க்குள் அனுப்புமாறு, சுயநிதி கல்லுாரிகள் கட்டண நிர்ணய கமிட்டி அறிவித்துள்ளது. 'புதிய கட்டணம், மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்' என, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.

பள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: அமைச்சர் பாண்டியராஜன்

வரும் கல்வியாண்டில் இருந்து அரசின் பள்ளிப் பாடத் திட்டத்தில் காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபூபக்கர் பேசியது: எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அரசின் பள்ளி பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருந்த காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாறு எடுக்கப்பட்டுவிட்டது. எனவே, அரசு மீண்டும் அவரது வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அப்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் குறுக்கிட்டுக் கூறியது: வரும் கல்வியாண்டில் இருந்து அரசின் பாடத்திட்டத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்றார்.

997 சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள 997 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

கடலூர்
 மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 400 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 597 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பூர்த்திசெய்திட பிப்.1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 இந்தப் பணியிடங்கள் அனைத்துக்கும் விண்ணப்பிப்பதற்கு பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் ஆவர்.  

 சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் நகராட்சிகளில் இனச் சுழற்சி விவரம் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான வயது வரம்பு 40-க்கு மிகாமலும், கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
 பழங்குடியினருக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி போதுமானது. சமையல் உதவியாளர் பணிக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான வயது உச்ச வரம்பு 21-40. கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி போதுமானது.
 பழங்குடியினர் என்றால் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. மேற்கண்ட இரு பணியிடத்துக்கும் விண்ணப்பிப்போரது இருப்பிடம் காலிப்பணியிடத்திலிருந்து 3 கி.மீ. சுற்றளவுக்குள் இருக்க வேண்டும்.
 எனவே, தகுந்த சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகர்மன்ற அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பி வைக்கப்படும் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

TET-ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கணிதத்தை எப்படிப் படிக்கலாம்?

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகும் வாசக நண்பர்களே! இந்தப் பதிவில் கணிதப் பாடத்தை நாம் எவ்வாறு படிக்க வேண்டும் என்பதை காண்போம்!


மொழி, சமூகம், அறிவியல், பொருளாதாரம் என எதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும் அதற்கான புத்தகங்களைப் படித்தாலோ, ஒருவரிடமிருந்து விளக்கத்தைக் கேட்டாலோ நமக்குத் தேவையான தகவலைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், கணிதத்தை அப்படித் தெரிந்துகொள்ள முடியாது.

தொடர்மொழி

உதாரணமாக, 8-ம் வகுப்பு அறிவியலையோ, சமூக அறிவியலையோ புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நேரடியாகப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், 8-ம் வகுப்புக் கணிதத்தைத் தெரிந்துகொள்வதற்காக நேரடியாகப் படித்தால் நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடியாது. அதற்கு முன்பு 7-ம் வகுப்பு வரை உள்ள கணிதப் புத்தகங்களைப் படித்திருந்தால் மட்டுமே 8-ம் வகுப்புக்கான கணிதப் புத்தகம் புரியும். ஏனெனில், 7-ம் வகுப்பு வரை படித்த கணிதத்தின் தொடர்ச்சியே 8-ம் வகுப்பில் தொடரும். எனவே, கணிதத்தை ஒரு தொடர்மொழி (Sequential Language) என அழைக்கலாம்.

இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதால்தான் நாம் 9-ம் வகுப்பு படிக்கும்போதும், 11-ம் வகுப்பு படிக்கும்போதும் அதைப் படிக்காமல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புப் பாடங்களை நேரடியாகப் படிக்க மாணவர்களை வற்புறுத்துகிறோம். இதனால்தான் அவர்கள் மனப்பாடம் செய்து படிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவரால்கூடக் கணிதத்தில் அதிக மதிப்பெண்களை வாங்க முடியவில்லை. ஏனெனில் அது ஒரு தொடர்மொழி என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.
பள்ளியில், குறிப்பாக 10-ம் வகுப்பில் 100 க்கு 100 எடுக்கும் மாணவர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சிகூடப் பெற முடியவில்லை. 12-ம் வகுப்பில் சிறப்பாக மதிப்பெண் பெற்றவர்களால் கல்லூரி வரும்போது குறைந்தபட்ச மதிப்பெண்கள் கூட எடுக்க முடியவில்லை.
திடீரென்று மாணவர்கள் எதிர்கொள்ளும் கணிதப் பாடங்கள் மிகவும் கடினமான சூழ்நிலைக்குள் தள்ளிவிடுகின்றன.

கணிதம் தனித்திறன்

கணிதம் கற்பது மற்ற பாடங்களைக் கற்பது போன்று அல்ல. இதற்கென்று வித்தியாசமான கற்கும் திறன் தேவைப்படுகிறது. மற்ற பாடங்களுக்கு அவற்றுக்கான புத்தகங்களைப் படித்து, புரிந்துகொண்டு பின்பு தேர்வில் எழுதினாலே போதும். ஆனால், கணிதத்தில் வெற்றிபெற இன்னும் சில உத்திகளைக் கையாள வேண்டும்.
கணிதம் ஒரு வேற்று மொழி போன்றது. முக்கோணவியல் ஒரு மொழி; அதில் Sin ,Cos போன்றவை மொழியின் புது வார்த்தைகள். இந்தப் புது வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளாமல், மொழியைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு நிலைகளைத் தெரிந்துகொண்டாலே போதும், நீங்கள் கணிதத்தில் சிறந்து விளங்கலாம்.
1. புரிந்துகொள்ளுதல்
2. புரிந்துகொண்டதை வெளிப்படுத்துதல்
3. கற்றுக்கொண்டதைப் பயன்படுத்துதல்
4. மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தல்
உதாரணத்துக்குச் சிலவற்றை பார்க்கலாம்.

இமயமலையைப் பற்றிப் படிக்கிறோம், அதன் நீளம், உயரம் முதலான அதன் தன்மைகளைத் தெரிந்துகொள்கிறோம். பின்பு தேர்வில் மீண்டும் நினைவுகூர்ந்து எழுதுகிறோம். நீங்கள் இமயமலையைப் பற்றிப் படித்தது உன்மையா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள நேரில் சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கணிதப் பாடத்தில் நீங்கள் மேற்கண்ட முறையில் தேர்ச்சி பெற முடியாது.

பயன்படுத்தும் திறன் இல்லை யெனில், அதனைக் கணிதத்துக்கான அறிவாகச் சொல்ல முடியாது.
இசை, ஓவியம், பிற மொழிகளைக் கற்றல் ஆகியவை போன்றுதான் கணிதமும் ஒரு தனித்திறன்.

நீட் நுழைவுத் தேர்வின்றி மருத்துவப்படிப்பு: சட்டப்பேரவையில் இன்று சட்டமுன்முடிவு

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) இல்லாத மருத்துவப் படிப்புகளுக்கு வழிவகை செய்யும் சட்டமுன்முடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை தொடர்பாக "நீட்' தேசிய தகுதித் தேர்வை எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பாடப் பிரிவுகளில் சேர கண்டிப்பாக "நீட்' தேர்வை எழுத வேண்டும்.

இந்நிலையில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் பாடப் பிரிவுகளில் சேர நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு நீட் (NEET) நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்முடிவை தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறது.

கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு துணைசெய்யும் வகையில் பழைய முறையையே பின்பற்றி மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  இந்த சட்ட முன்முடிவை தாக்கல் செய்கிறார். பின்னர், இந்த சட்ட முன்முடிவை அரசு தாக்கல் செய்வதற்கான காரணம் விளக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இது பற்றிய விவாதமும் நடைபெறும் என்று கருதப்படுகிறது.

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (என்இஇடி) முறையில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமிழக உறுப்பினர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

புதுவை மாணவர்கள், தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு கல்வி வாரியப் பாடப் பிரிவுகளைப் படிப்பதால் "நீட்' தகுதித் தேர்வால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால்தான்,  "நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளித்து முதல்வர் வி.நாராயணசாமி தீர்மானம் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNTET நிபந்தனை - பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா..?

RTE - Act ல்  சிக்கித் தவிக்கும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் TET முழுவிலக்கு எதிர்பார்ப்பு.

TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வுகிடைக்கும் என்று எதிர்பார்த்து அரசு விதிகளின் அடிப்படையில் 23/08/2010க்குப்பிறகு பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள்இன்றும் காத்துக் கொண்டு உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு நீதி மன்ற வழக்குகள் காரணமாகதமிழகத்தில் நடத்தப்படாமல் இருந்த நிலையிலும் கூட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 23/08/2010க்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம்பெற்ற ஆசிரியர்கள் தம் தகுதியை மாணாக்கர்களின் தேர்ச்சி விழுக்காடு மூலம்தகுதியை முழுவதும் நிரூபித்துக் காட்டிக் கொண்டு உள்ளனர்.ஆயினும் தமிழக அரசின் கருணைக் கடைக்கண் பார்வை படவில்லை என்ற மன கஷ்டத்தில்விரைவில் ஒரு நல்ல விடியல் கிடைக்கும் என இன்றும் காத்துக் கொண்டுஇருக்கின்றனர்.

காரணம் மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வெளிவந்த நாள் ஆகஸ்டு 23(2010)தமிழகத்தில் 5 ஆண்டுகள் நிபந்தனை அடிப்படையில்தமிழகத்தில் 2016 நவம்பர் 15 ஆம் நாளுக்கு பிறகு இந்தவகை ஆசிரியர்களின்நிலையும் பணியும்....???( கேள்விக்குறி )இதனைகடந்த பல நாட்களாக பல ஊடகங்கள் மற்றும் கல்வி சார்ந்த இணையதளங்கள்நினைவுபடுத்தி வருகின்றன. 23/08/2010 க்குப் பிறகுகடந்த ஐந்து ஆண்டுகளில் பணியில் சேர்ந்து நிறைவான தேர்ச்சி விழுக்காட்டினைதந்து கொண்டுள்ள இந்த ஆசிரியர்களுக்கு இன்றும் ஆசிரியர் தகுதித் தேர்வைக்காரணம் காட்டி நியாயமாக கிடைக்க வேண்டிய பல உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்இன்றுவரை பணியாற்றி வருகின்றனர்.தமிழகத்தில்பல கல்வி மாவட்டங்களில் இதுவரை கொடுக்கப்பட்ட ஒருசில சலுகைகளும் முன்னறிவிப்புஇன்றி நிறுத்தப்பட்டுள்ளன ...ஒரு சில ஆசிரியர்களுக்கு... இன்று வரை

* வளரூதியம் இல்லை.
* ஊக்க ஊதியம் இல்லை.
* மேல் படிப்புக்கு அனுமதி இல்லை.
* தகுதிகாண் பருவம் முடிக்க ஒப்புதல் இல்லை.
* மருத்துவ விடுப்புக்கு அனுமதி இல்லை.
* பணிப்பதிவேடு (SR) துவங்கவில்லை.
* ஈட்டிய விடுப்பு பலன் இல்லை.
* பங்கீட்டு ஓய்வு ஊதிய திட்ட எண் பெற இயலவில்லை.
* கடன் பெறக்கூட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதிய சான்று தர மறுப்பு.
* வரையறை விடுப்புகள் இல்லை.₹ மிகவும் கொடுமை இதில் யாதெனில் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை ஒருசில ஆசிரியர்கள் ஊதியமே பெறாமல் இன்றும் பணியில் உள்ளனர்.இவை எல்லாவற்றிலும் மேலாக தகுதியற்ற ஆசிரியர்கள் என ஒரு சில பள்ளிகளின் மூத்தஆசிரியர்களால் எள்ளி நகையாடப்படும் சூழலும் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.

தமிழக அரசு கருணை உள்ளத்தோடு, இவர்களின் பிரட்சனைகளை உள்ளார்ந்து பார்க்கும்நிலையில் 23/08/2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்றுள்ள அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்துமுழு விலக்கு அளிப்பது மட்டுமே ஒரே தீர்வு.இவர்களின் ஒட்டுமொத்த ஒரே நம்பிக்கை தமிழக அரசின் கல்வி சார்ந்த கொள்கைமுடிவில் மறு பரிசீலனை செய்து அரசு விதிமுறைகளின்படி முறையே பணியில் உள்ள இந்தபட்டதாரி ஆசிரியர்களின் எதிர்காலத்தை கருணை உள்ளத்துடன் பார்த்து,ஒரு அரசாணைபிறப்பிக்க வேண்டும் என மாண்புமிகு தமிழக கல்வித் துறை அமைச்சரை நேரில்சந்தித்து மனு கொடுத்து இருந்தனர்.முதன்மை அமைச்சர்களின் மேலான கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.

2016 ஜுலை ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில்நடந்த சட்ட மன்றக் கூட்டத் தொடரில் கல்வித் துறை சம்மந்தமான அறிவிப்புகளில்இந்த பணியில் உள்ள நிபந்தனை ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழு விலக்கு தந்துஅரசாணை வெளிவரும் என எதிர் பார்த்து சுமார் மூவாயிரம் ஆசிரியர்களுக்கும்காத்து கொண்டு இருந்தனர்.அதற்கான அறிவிப்பு வராத நிலையிலும் கூட விரைவில் நல்ல முடிவு வரும் என்றஏக்கத்தில் நாட்களை எண்ணிக்கொண்டு வருகின்றனர்.

தமிழக அரசின் கல்வித் துறை அரசாணை 181 ன் அடிப்படையில் எதிர் வரும்TNTETஅறிவிப்பு தினத்திற்கு முன்பு இந்த வகை நிபந்தனை ஆசிரியர்களின்பிரச்சினைகளுக்கு தீர்வாக  TET லிருந்து பணியில் உள்ள பட்டதாரிஆசிரியர்களுக்கு முழு விலக்கு அளிக்க தமிழக அரசு முன் வந்தால் இந்த சிக்கலானசூழலில் உள்ள  ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் எனபல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசிடம் கோரிக்கையை வைக்கின்றனர்.இந்த வகை நிபந்தனை ஆசிரியர்களின் வேண்டுதல்களை தமிழக அரசு தீர்த்துவைக்கும்நிலையில்  பல நாட்களாக எதிர்பார்ப்பில் உள்ள ஆசிரியர்களின் வாழ்வாதாரம்பாதுகாக்கப்படும் என்பது உண்மை.

நெல்லை மாவட்டத்தில் 1669 பள்ளி செல்லாக் குழந்தைகள் மீட்பு 465 பேர் பள்ளியில் சேர்ப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி செல்லாத 1669 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில் 465 பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர் என ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.


குழந்தை தொழிலாளர் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இப்பேரணியை வ.உ.சி. மைதானத்தில்
ஆட்சியர் மு. கருணாகரன், கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியது: 14 வயதுள்ள குழந்தைகளை பணியில் அமர்த்தக்கூடாது. 14 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி போன்ற நிகழ்வுகள் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 2015-16 ஆம் ஆண்டில் 1669 குழந்தைகள் பள்ளி செல்லாத குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை சிறப்பு பயிற்சி மையங்களிலும், முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் 465 குழந்தைகள் 15 இடங்களில் நடைபெறும் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நிகழாண்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டாய்வில் பல்வேறு இடங்களில் பேப்பர் பொறுக்குதல், பிச்சை எடுத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட 32 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் 10 குழந்தைகளை முறையாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். 8 குழந்தைகளை குழந்தைகள் நலக்குழுவிடமும், 4 குழந்தைகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார் அவர். பேரணி பிரதானச் சாலை, தெற்கு பிரதான வீதி வழியாக இக்னேசியஸ் கல்லூரியை வந்தடைந்தது. பேரணியில் இக்னேசியஸ் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 400 மாணவிகள் பங்கேற்றனர்.

பேரணியில், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சந்திரகுமார், தொழிலாளர்துறை இணை ஆணையர் சரவணன், உதவி ஆணையர் ஹேமலதா, தொழிலாளர் ஆய்வாளர் பு. ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

TNTET- 2017:ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல் விநியோகம் செய்யப்படலாம்?

TNTET 2017 - ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 - ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. 
இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் டிஆர்பி அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வெள்ளிக்கி அன்று காலை 11 மணியவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிர்யர் தகுதித் தேர்வு 2017:

- TNTET 2017 தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறலாம்.
தேர்வுகள்:
- தாள் I - 29.04.2017
- தாள் II - 30.04.2017
- தாள்  I மற்றும் தாள் IIக்கான தனித்தனியான விண்ணப்பங்கள் வெளியிடப்படும்.
- மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் 15.02.2017 அன்று முதல் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் கடந்த தேர்வை போலவே இம்முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும்.
- மாவட்ட அளவில் இப்பணிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் தலைமை தாங்குவார்.
- விண்ணப்பங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகம் செய்யப்படும். பிப்ரவரி மாதம் இறுதி வரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
- ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே விநியோகம் செய்யப்படும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் மட்டுமே ஒப்படைக்கப்பட வேண்டும்.
- அதிகபட்சமாக 7 லட்சம் விண்ணப்பங்கள் விற்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர்பார்ப்பு.
- தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 4 ஆயிரம் மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
- தேர்வு பணியில் ஏறத்தாழ 40 ஆசிரியர்கள் பன்படுத்தப்படலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று அதற்கான ரசீது வழங்க மாவட்ட கல்வி அலுவலகத்தில் 13 குழுக்கள் (தாள் 1க்கு 6 குழுக்களாகவும், தாள் 2க்கு 7 குழுக்களாக அமைத்து செயல்படும். தேவைப்பட்டால் குழுக்களின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்படலாம்.
- விண்ணப்பங்கள் விற்கப்படும் இறுதி தேதி: 08.03.2017
- நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக  கியூப்பா அமைப்பு தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 
 இதையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டம் 2014ம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது அதைப் பற்றி பேசவே கூடாது என்பது தான் சட்டம். ஆனால் அதனை மீறி தமிழகத்தில் எவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதித்தது ஏன். மேலும் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்த சட்ட ரீதியான பதில்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சுமார் 1050 கிராமங்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை கட்டமைக்க மத்திய அரசு முடிவு.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க மத்திய அரசு இலவச வைபை ஹாட்ஸ்பாட் வழங்க திட்டமிட்டுள்ளது.

அதன் படி சுமார் 1050 கிராமங்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை கட்டமைக்க முடிவு செய்துள்ளது. 
 இந்த திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கென இண்டர்நெட் வழங்க சிறப்பு டவர்கள் கட்டமைக்கப்படுகின்றன.

இதனை பயன்படுத்தி கிராம வாசிகள் தங்களது மொபைல் போன்களில் இண்டர்நெட் வசதியை பெற முடியும். மத்திய அரசின் டிஜிட்டல் வில்லேஜ் திட்டம் சுமார் 62 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் துவங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. 

ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்ந்து மத்திய அரசும் இலவச வைபை வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

NEET EXAM - மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவிப்பு

மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் 80 இடங்களில் இந்த நீட் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மருத்துவச் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. நீட் தேர்வு எழுதுவோர்  இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்திற்கு நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நீட் தேர்வு எழுதாமல் பழைய முறைப்படி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வழிவகை செய்யும் சட்டமுன்வடிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

31/1/17

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும் -முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை

எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னை எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் படிப்புகளுக்கான “டான் செட்” பொது நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக துறைசார் பொறியியல் கல் லூரிகள், உறுப்புக்கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.பிளான். எம்.ஆர்க். இடங்கள் “டான்செட்” பொதுநுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 2017-18-ம் கல்வி ஆண்டில் எம்சிஏ, எம்பிஏ படிப்புக்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 25-ம் தேதியும், எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான்.

 படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 26-ம் தேதியும் நடைபெற உள்ளன.இத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.annauniv.edu/tancet2017) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதி ஆகும். ஆன்லைன் விண்ணப்ப முறை, விண்ணப்பக் கட்டணம் போன்ற விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டையும் இணைய தளத்தில் இருந்துதான் பதிவிறக் கம் செய்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.annauniv.edu/tancet2017) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதி ஆகும். ஹால்டிக்கெட்டையும் இணையதளத்தில் இருந்துதான் பதிவிறக் கம் செய்ய வேண்டும்.

TNTET: (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வை (தாள்-2) ஏப்ரல் 30-ம் தேதியும் (ஞாயிற்றுக் கிழமை) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்.

இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும்,பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதற்காக 11 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படுகின்றன.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுத்தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது. தமிழகத் தில் டெட் தேர்வு நடத்தும் பொறுப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) விதிமுறை. ஆனால், நீதிமன்ற வழக்குகள் காரண மாக தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.

தற்போது வழக்குகள் முடிவடைந்து விட்டதால் டெட் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும் அதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.

டெட்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர் பாக பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் இறுதி வாரத்தில் நடத்துமாறு பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வை (தாள்-2) ஏப்ரல் 30-ம் தேதியும் (ஞாயிற்றுக் கிழமை) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. தேர்வுக் கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 8-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும் ஏப்ரல் மாதம் நடத்தப் படவுள்ள டெட் தேர்வு 3-வது டெட் தேர்வாகும். தமிழகத்தில் முதலாவது டெட் தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதமும், அந்த தேர்வில் நேரக்குறைவு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கைமிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் நேரத்தை அதிகரித்து அதே ஆண்டு அக்டோ பர் மாதம் துணை தேர்வாக இன்னொரு தேர்வும், அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் என 3 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக் கென சிறப்பு டெட் தேர்வு 2014-ம்ஆண்டு மே மாதம் நடந்தது. பொதுவான டெட் தேர்வு என்று பார்த் தால் இதுவரை 3 டெட் தேர்வுகள் நடத்தப்பட்டுள் ளன. ஏற்கெனவே நடத்தப்பட்ட டெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

7 ஆண்டுகள் செல்லத்தக்கது

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் உடனடியாக ஆசிரியர் வேலை கொடுக்கப்படுவதில்லை. வெயிட்டேஜ் மார்க் அடிப்படையில்தான் ஆசிரியர் கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, டெட் தேர்வு மதிப்பெண் 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு மதிப்பெண் 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் படிப்பு மதிப்பெண்) கணக்கில் எடுக்கப்பட்டு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. .டெட் தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும். எனினும் தேர் வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தங்கள் மதிப் பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும் டெட் தேர்வு எழுதலாம்.

HSC Feb 2017 Practical Exam Batch Allotement & Aural / Oral Mark Sheet Preparation

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  கால அவகாசம் அளித்துள்ளது.


விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதை எதிர்த்து வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் மேலும் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அதுவரை விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகப் பத்திரப் பதிவு செய்ய தடை நீடிக்கிறது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த தடை உத்தரவால் மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்து அரசுதான் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டனர்.

ஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி அளிக்க வகை செய்ய தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்க வகை செய்யும் அவசரச்சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவரின் அனுமதியையும் பெற்றது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, உடனடியாக அவசரச் சட்டம் சட்டமாக ஒப்புதல் பெறப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த சட்டத்தில் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டு, தமிழக மக்களின் போராட்டத்துக்கு முழு வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.

குடியரசுத் தலைவரின் கையெழுத்துப் பெறப்பட்டதை அடுத்து, இந்த சட்டம், இன்று மாலை அரசிதழில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜல்லிக்கட்டு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அரசியல் சாசனத்தில் காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக விரைவாக தீர்ப்பளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வைத்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு எழுதப்பட்டுவருவதாகக் கூறியிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் போராட்டம் வெடித்ததை அடுத்து, ஒரு வார காலத்துக்கு ஜல்லிக்கட்டுத் தொடர்பாக தீர்ப்பளிக்கக் கூடாது என்று தடை பெற்றது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடியாது - தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரல் 30ம் தேதிக்குப் பிறகே நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அமைச்சர் எஸ்பி வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த அவசர சட்ட முன்வடிவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக் காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில், உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாகவும், வாக்குப்பதிவு அலுவலர்கள் ஏப்ரல் மாதம் பள்ளி தேர்வுப் பணியில் ஈடுபடுவதால் ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்த சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை 10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே, பல அரசுப் பள்ளிகளையும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 8300 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

மத்திய அரசில் காலியாக இருக்கும் 8300 பல் செயல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜன.30) கடைசி நாளாகும்.


மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பல் செயல் உதவியாளர் பணிக்கு 8300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18 முதல் 25 வயது நிரம்பிய 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800 வழங்கப்படும்.

ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது சலுகை அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கான எழுத்துத் தேர்வில் 2 தாள்கள் உண்டு. இப்பணிக்கு இணையதளம் மூலம் இன்று ஜன.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த விபரங்களை http://ssconline.nic.in  அல்லது http://164.100.129.99/mts/html/mtsfinalnotice301216.pdf  என்ற இணையதள லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பிப்ரவரி 1ம் தேதி முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்.

ATM - ல் 24,000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாட்டை பிப்  .1 முதல் தளர்த்த முடிவு செய்துள்ளது.
இது நடப்பு கணக்குகளுக்கு (Current Account)மட்டுமே பொருந்தும். சேமிப்பு கணக்குகளுக்கு (SB Account) கட்டுப்பாடு தொடரும். விரைவில் இக்கட்டுப்பாடும் தளர்த்தப்படும் என தெரிகிறது.

Whatsappல் புதிய வசதிகள்!






வாட்ஸ்அப் நிறுவனம், அதன் செயலிக்கு தொடர்ச்சியாக புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. சீக்கிரமே இந்த வசதியெல்லாம் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை தன் நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் 'லொகேஷன் ஷேரிங்' வசதி வர உள்ளதாம். அதே போல, நண்பர்கள் புது ஸ்டேட்டஸ் போட்டால் தெரியப்படுத்தும் வகையிலும் ஒரு வசதி வர உள்ளதாம்.

மேலும், வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்கு கால் செய்யும்போது பேட்டரி தீர்ந்துபோகும் நிலை வந்தால், அதற்கு நோட்டிஃபிக்கேஷன் அனுப்பப்படுமாம். மேலும் இதைப்போன்ற பல வசதிகள் சீக்கிரமே வாட்ஸ்அப்பில் வரும் என்று கூறப்படுகிறது. புதிய வசதிகளை அனுபவிக்க, போனில் இருக்கும் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்தாலே போதும்.

IT CALCULATION FORM 2016-17 [New]

TNOU B.Ed Entrance Exam Result - Published...