ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக மானிய குழுவால் நடத்தப்படும் தேசிய தகுதித்தேர்வு, தமிழ்நாட்டில் மாநில அளவில் நடத்தப்படும் மாநில அளவிலான தகுதித்தேர்வு மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வுகள் போன்றவை வெறும் கண்துடைப்பாகத்தான்
நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகளால் ஒரு பயனும் இல்லை' என்கிறார்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள். என்ன காரணம்? ஏராளமானோர் படித்து வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கத்தானே தேர்வு நடத்தப்படுகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது, எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற கேள்விகளோடு சந்தித்தோம்.
"எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் பெயர் அளவுக்குத்தான் பெரும்பாலான பி.எட் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் வருடத்தில் 60 ஆயிரம் பேர் பி.எட். முடித்து வருகிறார்கள். இதனை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு தான் ஆசிரியர் தகுதித்தேர்வினை கொண்டு வந்தார்கள். ஆனால், அதிலும் சரியான நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆசிரியர் காலியிடங்கள் அதிகம் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நிரப்புவதில் இருந்து விலக்கு பெற்றிருக்கிறார்கள். இதனை எதிர்த்து தமிழக அரசு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. சிறுபான்மையினர் பள்ளியில் தகுதியான ஆசிரியர்கள் தேவையில்லை என்கிறார்களா? என்று தெரியவில்லை. தற்போது அரசு உதவிப்பெறும் சிறுபான்மையினத்தவர் நடத்தும் பள்ளிகளைத் தவிர இதர பள்ளிகளில் காலியிடங்கள் மிகவும் குறைவு என்கிறார்கள். இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பினை வழங்குவார்கள் என்று தெரியவில்லை" என்கிறார் நெட்-ஸ்லெட் தேர்வுகளின் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அமைப்பின் ஆலோசகருமான பேராசிரியருமான சுவாமிநாதன்.
காருண்யா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி
தகுதித்தேர்வு செல்வகுமார்
வரும் பா. மோசே செல்வகுமார் "ஏப்ரல் மாதம் இறுதியில் நடக்க இருக்கிற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆசிரியர் பயிற்சி முடித்த 2,72,000 பேரும், பட்டப்படிப்புடன் பி.எட். முடித்தவர்கள் 5,28,000 பேர் என எட்டு லட்சத்துக்கு அதிகமானோர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். ஆனால், இதுவரை எவ்வளவு ஆசிரியர்கள் காலியிடம் இருக்கிறது என்ற விவரங்கள் வெளியிடவில்லை. ஏற்கெனவே தகுதித்தேர்வில் வெற்றி பெற்று 35 ஆயிரம் பேர் மேல் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய பதிலும் இல்லை. தற்போது நடைபெற உள்ள தேர்வில் ஐம்பதாயிரம் பேருக்கு மேல் தேர்ச்சி பெறும்போது அவர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பினை வழங்குவார்கள் என்று தெரியவில்லை.
2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு பிறப்பித்த 181-வது அரசாணையின் மூன்றாவது பிரிவில் ‘அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ எனக் குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் தகுதித்தேர்வை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் சொற்ப சம்பளத்தில் அவர்களுக்குப் பிடித்தவர்களுக்கு பணி வழங்குகிறார்கள். தனியார் பள்ளிகளில் தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி வழங்கப்பட்டிருந்தால் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 35,000 பேருக்கும் வேலை கிடைத்திருக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளின் தேர்வினை நடத்தி ஏராளமானவர்களுக்கு வேலையும் வழங்கி இருக்கலாம். ஆனால் நடக்கவில்லை.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக மாணவர்களிடமிருந்து கட்டணம் பெறுகிறார்கள். ஆனால், சரியான சம்பளத்துடன் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்குச் சரியாக எழுதப் படிக்கத் தெரிவதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு பக்கம் ஆசிரியர் பணியில் சேரக் கடுமையான போட்டியும், இன்னொரு புறம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குச் சரியாக படிக்கத் தெரியவில்லை என்பது நமது குழந்தைகளின் கல்வி முறையும், தரமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
பள்ளிக் கல்வியில் இப்படி என்றால் கல்லூரிக் கல்வியில் இதைவிட மோசம். பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், கல்லூரியில் பல்கலைக்கழக மானியக்குழு யூஜிசி நெட் தேர்விலும், மாநில அரசு நடத்தும் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பல முறை வலியுறுத்தியும் தமிழக அரசு இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், வருடத்தில் இரண்டு முறை யூஜிசி நெட் தேர்வும், வருடத்தில் ஒரு முறை மாநில அரசு தகுதித்தேர்வினை நடத்துகிறது.
தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு நடத்திய ஸ்லெட் தேர்வில் 1395 பேரும், 2012-ம் ஆண்டு 5495 பேரும், 2016-ம் ஆண்டு 8550 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்கி இருந்தால் உயர்கல்வியில் காலியிடமே இருக்காது. ஆனால் வேறு அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டும் ஸ்லெட் தேர்வு நடக்க இருக்கிறது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
இந்தத் தேர்வு எதற்காக நடத்தப்படுகிறது? இதன் நோக்கம் என்ன? தேர்ச்சி பெற்றவர்கள் எந்தளவுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது? என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதிலே இல்லை. ஒவ்வொரு முறையும் லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதுவதன் மூலம் பெரும் தொகை கிடைக்கிறது என்பதற்காக நடத்துகிறார்களா என்று தெரியவில்லை. எல்லாம் ஒரு கண் துடைப்புக்காகவே தகுதித்தேர்வினை நடத்துகிறார்கள்.
பல்கலைக்கழகங்களில் உள்ள காலியிடங்களுக்கு பல வித குளறுபடிகள் மூலமாகவும், கல்லூரியில் உள்ள காலியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்புகிறார்கள். 2012-ம் ஆண்டு 2012ல் அறிவிக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 3120 உதவி பேராசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ளதாக அறிவித்தார்கள். ஆனால், இதுவரை நிரப்பப்படவில்லை. கடந்த ஒராண்டுக்கும் மேலாக ஐந்து பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் இருக்கிறார்கள். துணைவேந்தர் இல்லாததால் பலரும் படித்த படிப்புக்கான பட்டத்தையே பெற முடியாமல் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது கல்வித் தரத்தை பற்றி என்ன செல்வது என்று தெரியவில்லை" என்று முடித்தார் .
நெட்-ஸ்லெட் அசோசியேசன் அமைப்பின் செயலாளர் ஏ.ஆர். நாகராஜன் "
தகுதித்தேர்வு நாகராஜன் நெட்-ஸ்லாட் அசோசியேசன்
ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு பேர் நேர்முகத் தேர்வுக்கு என்ன தகுதியோடு வருகிறார்கள் என்ற தகவலில் அடிப்படையிலேயே ஸ்லெட் தேர்வு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு தேர்ச்சி பெற்றவர்கள் ஏராளமானவர்கள் இருந்தும் திரும்பத் திரும்ப நடத்துகிறார்கள். இதில் முடிவினை அறிவிக்கும்போது பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறையினையும் கடைப்பிடிப்பதில்லை. ஆசிரியர்களை நியமிக்கும்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையும் கண்டுகொள்வதில்லை. எந்த விதிமுறையும் கடைபிடிப்பதில்லை. இதனை நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச்சென்றாலும், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு வருவதற்கு முன்பாக தகுதியில்லாதவர்கள் நியமித்து விடுகிறார்கள். இந்த நிலையில் கல்வித் தகுதியினை எங்குப் போய் தேடுவது என்று தெரியவில்லை" என்கிறார்.
தகுதித்தேர்வில் இவ்வளவு குளறுபடிகள் இருப்பதைப் பார்க்கும்போது திகைப்பாய் இருக்கிறது. அரசு மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது குளறுபடிகளின் ஒட்டுமொத்த உருவமாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
http://www.vikatan.com/news/tamilnadu/84781-teacher-eligibility-test-is-just-another-eyewash-slams-teachers.html