அலுவலகத்தில் மதிய வேளையில் போடும் ஒரு குட்டித்தூக்கம் படைப்பாற்றல் திறனை அதிகரிக்கும் என இங்கிலாந்து பல்கலைக்கழக
ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
தினமும் மதிய வேளையில் அலுவல்களுக்கு நடுவே ஒரு 20 நிமிடம் தூங்கினால் வேலை செய்வோரின் திறன் அதிகரிப்பதாக இங்கிலாந்து லீட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தூக்கம் ஊழியர்களின் படைப்பாற்றல் திறனை அதிகரிப்பதுடன் முடிவெடுக்கும் திறனையும் அதிகரிப்பதாக நிருபிக்கப்பட்டுள்ளது. மதிய நேர குட்டித் தூக்கங்களில் மன அழுத்தம் குறைவதுடன் இதய நோய் பாதிப்புகள், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் ஆகியவை வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போ, உங்க பாஸிடம் நல்ல பேர் வாங்க தினமும் மதியம் ஒரு குட்டித்தூக்கம் போடுங்க பாஸ்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக