யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/3/17

Question and Answer for Teachers Exam..!! ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

1. அ, இ, உ மூன்றும் ....... எழுத்துக்கள் - சுட்டு எழுத்துக்கள்

2. தமிழின் மெய்யெழுத்துக்கள் மொத்தம் எத்தனை? - 18

3. தனித்து இயங்கி, முதன்மை பெற்று வழங்கும் எழுத்துக்கள் யாவை? - முதலெழுத்துக்கள்

4. முதலெழுத்துகள் மொத்தம் எத்தனை? - 30

5. சார்பெழுத்துகள் மொத்தம் எத்தனை? - 10

6. ஐகாரக்குறுக்கம், ஒளகார குறுக்கம் என்பது ....... சார்பெழுத்துகள்

7. உயிர்மெய் (நெடில்) எழுத்து பெறும் மாத்திரை? - 2 மாத்திரை

8. ஆசிரியர் வந்ததும் கேள்வி கேட்பார் என்பது எந்த காலத்தைக் குறிக்கும்? - எதிர்காலம்

9. தமிழ் இலக்கணத்தில் திணை என்னும் சொல் தரும் பொருள் - பிரிவு

10. கண் சிமிட்டும் நேரம் அல்லது விரல் சொடுக்கும் நேரம் என்பது ....... ஆகும் - மாத்திரை

11. தமிழ் மொழியில் பால் எத்தனை வகைப்படும்? - 5

12. 'வண்டு" என்பது எந்த வகை குற்றியலுகரம்? - மென்தொடர் குற்றியலுகரம்

13. 'அஃது" என்பது ......... குற்றியலுகரம் - ஆய்தத்தொடர்

14. குறுகிய ஓசையுடைய இகரம் எது? - குற்றியலிகரம்

15. புறத்திணைப் பிரிவுகள் எத்தனை வகைப்படும்? - 7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக