யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/3/17

General Tamil Question and Answer for Teachers Exam..!! ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

பாரதிதாசன் 


1. பாரதிதாசன் பிறந்த தினம் - ஏப்ரல் 29, 1891 

2. பாரதிதாசனின் புனைப்பெயர் - புரட்சிக் கவிஞர், பாவேந்தர் 

3. பாரதிதாசனின் ஊர் - புதுச்சேரி 

4. பாரதிதாசனின் இயற்பெயர் - கனக சுப்பு இரத்தினம் 

5. பாரதிதாசன் ----------- எனும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார் - குயில் 

6. புரட்சிக்கவி என்று பாரதிதாசனை பாராட்டியவர் யார்? - அறிஞர் அண்ணா 

7. பிசிராந்தையார் என்ற நு}லுக்கு 1969-ல் ---------------- விருது கிடைத்தது - சாகித்ய அகாதமி

8. பாரதிதாசனின் பெற்றோர் - கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள் 

9. புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக பாரதிதாசன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1954 

10. பாரதிதாசனின் படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் ------------ இல் பொது உடைமையாக்கப்பட்டன. - 1990 

11. அகத்தியன் விட்ட புதுக்கரடி என்ற நு}லின் ஆசிரியர் - பாரதிதாசன் 

12. பாரதிதாசன் ----------- ஆம் ஆண்டு பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார் - 1920 

13. கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், நாடோடி என்ற புனைப்பெயர்களைக் கொண்டவர் - பாரதிதாசன் 

14. எந்த ஆண்டு புதுவையில் கவிஞரின் நினைவு மண்டபம் புதுவை நகரசபையால் கட்டப்பட்டது - 1965 

15. பாரதிதாசன் இறந்த தினம் - ஏப்ரல் 21, 1964 (அகவை 72) 


பாரதிதாசன் பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் :

📃 பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், 'புரட்சி கவிஞர்" என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவி என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு பாரதிதாசன் விருதினை வழங்கி வருகிறது மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.

📃 1946 - அவரது 'அமைதி-ஊமை" என்ற நாடகத்திற்காக அவர் தங்கக் கிளி பரிசு வென்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக