யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/3/17

முக்கியச் செய்தி-2016 அக்டோபர் முன்னர் பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை மீண்டும் பத்திர பதிவு செய்யலாம்.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2016 அக்டோபர் முன்னர் பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை மீண்டும் 
பத்திர பதிவு செய்யலாம்.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Image may contain: text

சென்னை: அக்.,23க்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனையை மறுபதிவு செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்க கோரி, வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ரியல் எஸ்டேட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறுகையில், 8 மாதமாக தடை நீடிப்பதால் வாங்கிய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை தெரிவிக்கப்பட்டது.
வழக்கை தொடர்ந்த ராஜேந்திரன் கூறுகையில், அனுமதியில்லாத மனைகளை பத்திர பதிவு செய்யவே எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.

மீறக்கூடாது:
இதனைதொடர்ந்து நீதிபதிகள், கடந்த 2016 அக்., 23க்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனையை மறுபதிவு செய்யலாம். சாலைக்கு 22 அடி இடம் விட வேண்டும் என்ற விதியை மீறக்கூடாது. விளை நிலங்கள் விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனக்கூறினர்.

ஒத்திவைப்பு:
தொடர்ந்து நிலங்களை வரைமுறைப்படுத்த மேலும் கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து வழக்கை ஏப்ரல் 7 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக