யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/10/17

வணக்கம். இன்றைய ஜேக்டோ ஜியோ கூட்டத்தில் கலந்து கொண்ட SSTA தோழர் ஒருவர் பதிவிட்டது...'



இ.நி.ஆ களின் நிலைபற்றி ஜேக்டோஜியோவின்  நிலைப்பாடு என்ன என்பதை அறிவதற்காக சென்றேன்.உள்ளபடி உரைக்கின்றேன் .

கூட்டம் உணர்வு பூர்வமாகவே இருந்தது. cpsக்கு தரும் முக்கியத்துவம், ஊதிய முரண்பாடுகளுக்கு தரவில்லையே என்ற ஆதங்கத்தை இ.நி.ஆ சார்பாக  உரைப்பதற்குதான் சென்றேன். ஆனால்,அதற்கு வாய்ப்பில்லாமல்  பங்கேற்ற அத்துனை சங்க வாதிகளும்  இடைநிலை ஆசிரியர் களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மிக கடுமையானது அதை களைந்தே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்கள். 

சங்கங்களின்பால் அவநம்பிக்கையோடு சென்ற எனக்கு  , இன்னும் ஜேக்டோ ஜியோவை நம்பலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. நமக்காக அரசு ஊழியர்களும் , பிறதுறைசார்ந்த சங்க வாதிகளும் நமக்காக குரல் கொடுத்து , இன்னும் மனித நேயம் சாகவில்லை என்பதை அறிய முடிந்தது.

தோழர்கள் தாஸ், பாலசந்தர், அன்பரசு, மாயவன்,மோசஸ், இன்னும் பிற தலைவர்கள் அத்துனைபேருமே வருகின்ற நீதிமன்ற அமர்வில் நமது ஊதிய முரண்பாடு  முக்கிய பிரச்சினையாக விவாதிக்கப்படும் என்பதை தெரிவித்தார்கள். 

நீதிமன்றத்தின் மூலம் நமக்கு முடிவு எட்டப்படவில்லையென்றால்,24/10/2017 அன்று ஜேக்டோ ஜியோ மீண்டும் கூடி அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

23/10/2017 நமக்கானதாக அமைய பிரார்திப்போம்.

ஜாக்டோஜியோவை நம்பி பின்சென்றோம் .
நம்பிக்கை வீணாகவில்லையென'்றே கருதுகின்றேன்.

நன்றி. '
[3:12 AM, 10/14/2017] +91 84897 46426: 

மத்திய அரசில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் ஊதியம் பெறும் அவல நிலையில் தமிழக இடைநிலை ஆசிரியர்கள்




ஜூலை 2009 ல் பணியில் சேர்ந்தஇடைநிலை ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் படி எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்வது...?

01-01-2016 அன்று
Pay-6890
Grade pay-2800
Personal pay-750
HRA-200
MA-100


பெற்ற இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய நிர்ணயம்...

Pay-6890+Grade pay-2800=9690

9690×2.57=24903

அரசாணை எண்: 303 நாள்: 11-10-2017ன் பக்கம் 21ல் உள்ள Pay Matrixன் படி,
தர ஊதியம் 2800க்கு கீழ் level 8க்கு நேராக கிடைமட்டமாக உள்ள 24903க்கு அடுத்த ஊதியம் 25300.

ஆகவே புதிய ஊதிய நிர்ணயத்தில், 01-01-2016ல் ஊதியம் 25300+PP 2000= 27300

இவர் ஜீலை 2016 மாத ஆண்டு ஊதிய உயர்வைக் கொண்டிருப்பார்,

01-07-2016ல் கீழ் level 9க்கு நேராக கிடைமட்டமாக உள்ள  அடுத்த ஊதியம் 26100.

01-07-2017ல் கீழ் level 10க்கு நேராக கிடைமட்டமாக உள்ள  அடுத்த ஊதியம் 26900. 

01-10-2017ல் ஊதியம்-26900 தனி ஊதியம்-2000 அகவிலைப்படி(5%)-1445 வீட்டு வாடகைப்படி-400 மருத்துவப்படி-300 மொத்தம் -31045

பணியில் சேர்ந்து 8 ஆண்டுகள் முடித்த ஒரு இடைநிலை ஆசிரியர் புதிதாக பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர் பெறும் ஊதியத்தை விட மிகவும் குறைந்த ஊதியம் பெறும் நிலை. ..

இந்த நிலை மாறிட 2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்த 21000 இடைநிலை ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினால் தான் இழந்த ஊதியத்தை பெற முடியும். 

ஒற்றுமை ஓங்குக.  விரைவில் களப்போராட்டம் மற்றும் சட்ட போராட்டம். 
ஆயத்தமாவோம். .

ஜேக்டோ ஜியோ முடிவுகள்




1)  20/10/2017 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஊதியக்குழு முரண்பாடுகளை, அரசின் ஏமாற்றுத்தனத்தை கூட்டம்போட்டு விளக்குதல்


2) 23/10/2017 க்குள் இடைநிலைஆசிரியர் உட்பட முரண் நீக்கப்பட்டு 21 மாத நிலுவை வழங்கப்படாவிட்டால் போராட்ட நடவடிக்கைகளை 24/10/2017 அன்று ஜேக்டோ ஜியோ கூடி முடிவெடுக்கும்.

13/10/17

FLASH NEWS-ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் சம்பளம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக
தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 மடங்கு அதிகரிக்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளம் ரூ.6.100லிருந்து ரூ.15,700 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.77 ஆயிரத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இந்த சம்பள உயர்வு 2016ம் வருடத்தை கருத்தியலாக,1.10.17 முதல் பண பயனுடன்அமல்படுத்தப்படும்.

பென்சன்தாரர்கள்
பென்சன் மற்றும் குடும்ப பென்சன்தாரர்களுக்கும் 2.57 மடங்கு பென்சன் அதிகரிக்கப்படும். இதன் மூலம் குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 ஆகவும், அதிகபட்ச பென்சன் ரூ.1,12,500 மற்றும் குடும்ப பென்சன் 67,500ஆகவும் இருக்கும்.ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கூடுதல் செலவு

சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள, கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ. 3 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.11 ஆயிரமாகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள ஊழியர்களின் நலனை கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும்.இதனால், அரசுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனை அரசே ஏற்று கொள்ளும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வீட்டு வாடகை படியும், மருத்துவ படியும் ஏமாற்றம்.

Image may contain: text

ஊதியக்குழு அறிவிப்பு ஏமாற்றம்*

*21 மாதங்களுக்கு நிலுவைத் தொகை இல்லை.

*மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ 18,000/
என அறிவித்ததை தற்போது 21,000 ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
ஆனால் தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ 15700.

Innovations In Educational Administration -என்ற தலைப்பின் -கீழ் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தேசிய விருது வழங்குவதற்கு பரிந்துரை செய்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு? விரிவான செய்தி தொகுப்பு.

அலுவலர்கள் குழு 2017-ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'மத்திய  ஊதியக் குழு  திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் போதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை  வழங்கி வருகிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திட ‘அலுவலர் குழு’ 2017-ஐ அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை 27.9.2017 அன்று தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது. இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக்கொண்ட கால அளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழுதான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டு வர வழி வகுத்துள்ளது.

இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வுசெய்து, இன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை  செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்.  தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது  என தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநிலத்தின் நிதிநிலையையும், அதே சமயம் அரசின் திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப்பயனுடனும் அமல்படுத்த ஆணையிட்டுள்ளேன்.  இதன்படி, தற்போது  உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100  மற்றும் அதிகபட்ச ஊதியம்  ரூ.77,000  என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 மற்றும்  அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 எனவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும், முந்தைய ஊதியக்குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுவாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான  உயர்வைவிட இம்முறை அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியைப் பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850 என்றும், அதிகபட்ச ஓய்வூதியம்,  குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500 மற்றும் ரூ.67,500 என்றும் உயர்த்தி வழங்கப்படும். மேலும், ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்துச் செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின்  குறைந்தபட்ச  ஊதியம் ரூ.3000 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.11,100 ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம்,  நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தமுடிவுகளின் அடிப்படையில்,  அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும்.  இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14,719 கோடியை தமிழ்நாடு  அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


  இவ்வறிவிப்புகள் மூலம் சுமார் பன்னிரண்டு  லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 இல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி, பின்னர் புதிய ஊதிய மாற்றம் செய்திட வேண்டி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் விண்ணப்பம்_ 11/10/17.

Image may contain: text

TN-7th PC- HRA SLAB


TN -7th PC- தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை (3% + 3 %)

TN -7th PC- PAY FIXATION TABLE



TN-7th PC- நகர ஈட்டுப்படி குளிர்கால படி ,மலை வாழ் படி மற்றும் இதர படிகள்



PAY DIFFERENCE FOR NEW & OLD SCALE (6th & 7tH PAY COMMISSION)

அரசாணை எண் 300 நிதித்துறை நாள் 10.10.17- அகவிலைப்படி 3%- 01.07.2017 முதல் உயர்த்தி (136% to 139% ) ஆணை வெளியிடப்படுகிறது


TN-7th PC-இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையப்படவில்லை

7th PC-புதிய ஊதிய விகிதம் அமுலுக்கு வரும் நாள் விவரம்

FLASH NEWS-G.O.Ms.No.303, Dated 11th October 2017-ABSTRACT OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Pay - Orders - Issued - The Tamil Nadu Revised Pay Rules, 2017 - Notified. Posted: 12 Oct 2017 01:00 AM PDT G.O.Ms.No.303, Dated 11th October 2017-ABSTRACT OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Pay - Orders - Issued - The Tamil Nadu Revised Pay Rules, 2017 - Notified NMMS EXAM | 2017 REG - DIRECTOR PROCEEDINGS! Posted: 11 Oct 2017 08:04 PM PDT JACTTO - GEO அவசரக்கூட்டம் 13.10.17(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது

ஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதல்வர் அவர்களின் அறிவிப்பு குறித்து
பரிசீலனை செய்ய ஜாக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் 13.10.17(வெள்ளிக்கிழமை) மதியம் சரியாக 2.00 மணிக்கு சென்னை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.


 எனவே ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழவில் இடம் பெற்ற அனைத்து துறைவாரி சங்க தலைவர்கள் (சங்கத்திற்கு ஒருவர் மட்டும்) தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மு.சுப்பிரமணியன்,
மாயவன்,
மீனாட்சி சுந்தரம்,
தாஸ்,
அன்பரசு,
வெங்கடேசன். ஒருங்கிணைப்பாளர்கள்,
மோசஸ்-நிதிக்காப்பாளர்,

தியாகராஜன்- செய்திதொடர்பாளர்.

NMMS EXAM | 2017 REG - DIRECTOR PROCEEDINGS!




FLASH NEWS-G.O.Ms.No.303, Dated 11th October 2017-ABSTRACT OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Pay - Orders - Issued - The Tamil Nadu Revised Pay Rules, 2017 - Notified.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி

12/10/17

13-ல் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்!!!

மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில்
வரும் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் இளங்கோவன் மதுரையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்.13, 14 தேதிகளில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ளது.

இதில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கைஎடுத்தல், பருவ மழை தொடங்க உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு விரைவாக பணப்பலன் வழங்குதல், பள்ளி வளாகங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களில் மாணவர்களை மரக்கன்றுகள் நட ஊக்குவித்தல், பிளஸ் 1 மாதிரி வினாத்தாள் தயாரித்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டெங்கு குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என, கோரிக்கை!!!

மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் மாணவ - மாணவியர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு
உள்ளதாக, சுகாதார துறை எடுத்த கணக்கெடுப்பில், தெரிய வந்துள்ளது.தமிழகத்தில், 'டெங்கு' காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், டெங்குவால் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் சிகிச்சையில் உள்ளனர். அதில், 5௦ சதவீதம் மாணவ - மாணவியர். அதனால், பள்ளிகளில், டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.அப்போது, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், பள்ளிக்கு வராமல் இருந்தது தெரிய வந்துள்ளது. ஒரு பள்ளிக்கு சராசரியாக, இரண்டு பேர் வீதம், ஒரு லட்சம் பேர் வரை, காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அதனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலை, உள்ளாட்சி அமைப்புகள் சேகரிக்க, மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு உள்ளன. அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை :

'டெங்கு குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.காய்ச்சல் காரணமாக, பள்ளி, கல்லுாரிக்கு வரும் மாணவ - மாணவியரின் எண்ணிக்கை சரிந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், 10 முதல், 40 சதவீதம் மாணவ - மாணவியரும், கல்லுாரிகளில், 10 முதல், 20 சதவீத மாணவ - மாணவியரும் விடுப்பு எடுத்துள்ளனர்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால், ஒரு வாரம் அல்லது, 10 நாள் வரை, மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. பள்ளி சென்று, காய்ச்சலுடன் ஓரிரு மாணவர்கள் வீடு திரும்பினால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், அந்த பயத்தில், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. ஆயினும், பள்ளியில் பாடம் நடத்துவதை தள்ளிப் போட முடியாது. பள்ளிக்கு வராதவர்கள், பாடத்தை கவனிக்க முடியாமல் போகிறது.

இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.'தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் தாக்கம் நாளுக்கு நாள்அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரின் நலன் கருதி, விடுமுறை அறிவிக்க அரசு முன்வர வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்திய பொருளாதார மந்தநிலை தெற்காசியா வளர்ச்சியை பாதிக்கும் : உலக வங்கி!!!

ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி அமல் போன்ற
நிச்சயமற்ற செயல்பாடுகளால் இந்திய பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. இதனால் தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய பொருளாதாரம் மற்றும் தெற்காசிய பொருளாதாரம் குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 2017 ல் 7 சதவீதமாக உள்ள பொருளாதார சரிவு, 2018 ல் 7.3 சதவீதம் வரை இருக்கும். ஆகையால் நீடித்த வளர்ச்சி பெற வறுமை ஒழிப்பு பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி விகித மந்தநிலை, தெற்காசிய வளர்ச்சி விகிதத்தை பாதிக்கும்.

இதன் விளைவாக பொருளாதார வளர்ச்சியில் தெற்காசியா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளை விட இரண்டு இடங்கள் பின்தங்கி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2016 ல் 7.1 சதவீதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவு, 2017 ம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே 5.7 சதவீதத்தை எட்டி உள்ளது. ஜிஎஸ்டி, 2018 ம் ஆண்டிலேயே இந்தியாவின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணத்தை தடுக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

குழந்தை திருமணத்தை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த போது 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பெண்ணை மணந்து கணவர் பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமையே என்றும், மேலும் திருமணமாகி ஒரு வருடத்திற்குள் அந்த பெண் புகார் 
அளித்தால் அது வன்கொடுமையாக கருதப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

18 வயதுக்குக்குள் உள்ள மனைவியுடன் உறவு கொள்வது சட்ட விரோதம் அல்ல என்ற ஷரத்து நீக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஆட்சியை அமைத்தது சசிகலாவா?: பதில் சொல்லாமல் சென்ற ஓபிஎஸ்!

                                                        ஆனால் சசிகலா சிறைக்கு சென்றதும் கட்சியில், காட்சிகள் மாறின. சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டனர், ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி இணைந்து ஆட்சியை நடத்தி வருகிறது. ஓபிஎஸ் துணை முதல்வரானார்.

இந்நிலையில் ஐந்து நாட்கள் சசிகலா சிறையில்
இருந்து பரோலில் வந்துள்ள நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இந்த ஆட்சி அமைய சசிகலாதான் காரணம் என தனது சசிகலா பாசத்தை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து செல்லூர் ராஜூ தினகரனின் ஸ்லீப்பர் செல் என அழைக்கப்பட்டார். உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்த செல்லூர் ராஜூ, தான் எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடக்கும் ஆட்சிக்கு ஆதரவு எனவும், தான் ஸ்லீப்பர் செல் இல்லை எனவும் கூறினார்.

இந்நிலையில் பல்வேறு அரசுப் பணிகள் காரணமாக தேனி சென்றிருந்த துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை திரும்புவதற்கு முன்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், இந்த ஆட்சி அமைய காரணமாக இருந்தது சசிகலாதான் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பினர். ஆனால் ஓபிஎஸ் அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

SSTA-FLASH அரசு ஊழியர்கள் சம்பளம், மதுபான விலை உயர்கிறது : தமிழக அமைச்சரவை ஒப்புதல்!!!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை
கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் 7 வது ஊதியக்குழு பரிந்துரை, டெங்கு காய்ச்சலை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 7 வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்தை 20 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மதுபான விலையை உயர்த்தி, தமிழக அரசின் வருவாயை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5,212 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்படி பீர் விலையில் ரூ.10ம், குவாட்டர் விலையில் ரூ.12 ம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

TNPSC: DEC-2017 துறை தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன!!!

விளம்பர எண்: 480
விளம்பர நாள்:23.9.17

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் 
தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

*இடைநிலை ஆசிரியர்கள்*

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools

3.  124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

*பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்*

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .(or)
152.The Account Test for Executive Officers

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில் *மற்ற அலுவலர்கள்* தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .

2 . 172 - The Tamil Nadu Government Office Manual


*TNPSC: DEC-2017 துறை தேர்வு வகுப்பு*

*Trichy-ல் வகுப்புகள் துவங்கும் நாள் OCTOBER  21 முதல்*

The classes starts at

*OMEGA COACHING CENTER near SRC College ,*
*Chatram Bus stand TRICHY.*

விண்ணப்பங்கள் மற்றும் வகுப்புகளுக்கு கீழ்கண்ட எண்ணை தொடா்பு கொள்ளவும்

9443503804
8526625242

BIG BREAKING-- வெளியானது 7 வது ஊதியக்குழுவில் உள்ள சாரம்சங்கள் !!!

                                               
தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி.*

*தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100இல் இருந்து 15,700 ஆக உயர்வு.*


*தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு*

*7வது ஊதிய குழு பரிந்துரைகள் - 1.10.2017 தேதி முதல் பணப்பயனுடன் அமல்படுத்தப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு*

தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 மடங்கு உயர்வு !!

தமிழக அரசு ஊழியர்கள் சம்பளம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 மடங்கு அதிகரிக்கப்படுகிறது.

குறைந்தபட்ச சம்பளம் ரூ.6.100லிருந்து ரூ.15,700 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.77 ஆயிரத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.

இந்த சம்பள உயர்வு 2016ம் வருடத்தை கருத்தியலாக,1.10.17 முதல் பண பயனுடன்அமல்படுத்தப்படும்.

*பென்சன்தாரர்கள்*

பென்சன் மற்றும் குடும்ப பென்சன்தாரர்களுக்கும் 2.57 மடங்கு பென்சன் அதிகரிக்கப்படும். இதன் மூலம் குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 ஆகவும், அதிகபட்ச பென்சன் ரூ.1,12,500 மற்றும் குடும்ப பென்சன் 67,500ஆகவும் இருக்கும்.ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


*கூடுதல் செலவு*


சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள, கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ. 3 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.11 ஆயிரமாகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள ஊழியர்களின் நலனை கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும்.இதனால், அரசுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனை அரசே ஏற்று கொள்ளும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவு !!

அலுவலர்கள் குழு 2017-ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'மத்திய  ஊதியக் குழு  திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் போதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது, 
உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை  வழங்கி வருகிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திட ‘அலுவலர் குழு’ 2017-ஐ அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை 27.9.2017 அன்று தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது. இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக்கொண்ட கால அளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழுதான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டு வர வழி வகுத்துள்ளது.

இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வுசெய்து, இன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை  செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்.  தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது  என தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநிலத்தின் நிதிநிலையையும், அதே சமயம் அரசின் திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப்பயனுடனும் அமல்படுத்த ஆணையிட்டுள்ளேன்.  இதன்படி, தற்போது  உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100  மற்றும் அதிகபட்ச ஊதியம்  ரூ.77,000  என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 மற்றும்  அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 எனவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும், முந்தைய ஊதியக்குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுவாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான  உயர்வைவிட இம்முறை அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியைப் பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850 என்றும், அதிகபட்ச ஓய்வூதியம்,  குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500 மற்றும் ரூ.67,500 என்றும் உயர்த்தி வழங்கப்படும். மேலும், ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்துச் செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின்  குறைந்தபட்ச  ஊதியம் ரூ.3000 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.11,100 ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம்,  நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த முடிவுகளின் அடிப்படையில்,  அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும்.  இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14,719 கோடியை தமிழ்நாடு  அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வறிவிப்புகள் மூலம் சுமார் பன்னிரண்டு  லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.

தீபாவளி விடுமுறையில் மாற்றம் வருமா?

தீபாவளி திருநாள் விடுமுறை 17.10.17 மற்றும் 18.10.17 ஆகிய நாட்கள் என மாவட்ட தொ.க.அலுவலர் அளித்துள்ள பட்டியலில்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், 19.10.17 அன்று தான் அமாவாசை வருவதால், அன்று தான் நோன்பு கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால் 18.10.17 மற்றும் 19.10.17 ஆகிய நாட்களே தீபாவளி விடுமுறையாக விடப்பட வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வேலூர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினரிடம் கேட்டபோது, இது உடனடியாக மாவட்ட தொ.க.அலுவலர் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய விடுமுறை மாற்றங்கள் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு.

அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 20% உயர்வு- அமைச்சரவை ஒப்புதல்

இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை சுமார் 20% உயர்த்த தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 7வது ஊதியக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11/10/17

4ஜி நெட்வொர்க்: ஜியோ முதலிடம்!

நெட்வொர்க் நிறுவனங்களிலேயே 4ஜி பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் முதலிடம் பிடித்திருப்பதாக டிராய் தெரிவித்துள்ளது.
இந்தியத் தொலைத் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு, செப்டம்பர் மாதத்தில் இந்திய நெட்வொர்க் நிறுவனங்களின் இணைய சேவை வேகம் குறித்து ‘மை ஸ்பீடு ஆப்’ வாயிலாகச் சோதனை மேற்கொண்டது. அதில், செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக ஜியோவின் சராசரிப் பதிவிறக்க வேகம் 18.43 எம்.பி.பி.எஸ்.ஸாக இருந்துள்ளது. ஜியோவைத் தொடர்ந்து வோடஃபோன் 8.99 எம்.பி.பி.எஸ்., ஐடியா செல்லுலார் 8.74 எம்.பி.பி.எஸ்., ஏர்டெல் 8.55 எம்.பி.பி.எஸ். ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பதிவேற்ற வேகத்தைப் பொறுத்தவரையில் ஐடியா செல்லுலார் (6.30 எம்.பி.பி.எஸ்.) முதலிடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து 5.77 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் வோடஃபோனும், 4.13 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் ரிலையன்ஸ் ஜியோவும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன. ஏர்டெல் (4.08 எம்.பி.பி.எஸ்.) நான்காவது இடத்தில் உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்துக்குப் பிறகு இந்தியாவில் டேட்டா பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த செப்டம்பரில் தினசரி 20 கோடி ஜி.பி. அளவிலான டேட்டா பயன்படுத்தப்பட்டுவந்தது. இந்த ஆண்டில் தினசரி 150 கோடி ஜி.பி. அளவிலான டேட்டா பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கிலத்தை புரிந்து படிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் !!

ஆங்கிலத்தை புரிந்து படிக்கும் வகையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வர
வேண்டும்’ என, ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் மாற்றி அமைப்பது குறித்து, கருத்து கேட்பு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், 15க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், தற்போதுள்ள முப்பருவ முறையில், இரண்டாம் பருவத்திற்கான பாடங்களை குறைத்து, அவற்றை மூன்றாம் பருவத்தில் இணைக்க வேண்டும். ஆசிரியர்களை கல்வி பணிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். விவசாயம் மற்றும் அறிவியல் தொடர்பான பாடங்களை புதிதாக அமைப்பதோடு, அறிவியல் ஆய்வுக்கான உபகரணங்களை வழங்கிட வேண்டும்.மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி, வாசிப்பு பயிற்சியுடன், ஆங்கிலத்தை புரிந்து படிப்பதற்கேற்ப பாடத்திட்டம் வகுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்

புதிய பாடதிட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியத்துவம்-பட்டதாரி ஆசிரியர்கள் யோசனை!!

அரசு ஊழியர் ஊதிய உயர்வு : அமைச்சரவை நாளை முடிவு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை நடைபெற உள்ளது.

மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. 

இதற்கான பரிந்துரைகளை பெறுவதற்காக, 'அலுவலர் குழு' அமைக்கப்பட்டது. இக்குழு, செப்., 27ல், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, அறிக்கை வழங்கியது. அதன் அடிப்படையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, எத்தனை சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காக, நாளை காலை, 11:15 மணிக்கு, தலைமை செயலகத்தில், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

G.O No. 293 Dt: October 05, 2017 - MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – List of Approved Hospitals – Addition of Hospitals and inclusion of additional Specialities in the hospitals – Orders – Issued.

பள்ளிக்கல்வி - கணினி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் கோரி இயக்குனர் உத்தரவு - விரைவில் கணினி ஆசிரியர்கள் பணியமர்த்த வாய்ப்பு - இயக்குனர் செயல்முறைகள்

10/10/17

யூனியன் வங்கியில் அதிகாரி வேலை: பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!

                                             

9 மாதமாக என்ன செஞ்சீங்க..? சூடு பிடிக்கிறது சேகர் ரெட்டி வழக்கு..! உயர்நீதிமன்றம் அதிரடி.!

பணமதிப்பு நீக்க நடவடிக்கையையொட்டி மணல் ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டி வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமான 
வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. இதில் புதிய இரண்டாயிரம் நோட்டுகளும் ஏராளமாக பிடிபட்டன. இதன் மீதான விசாரணையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில்  அடைக்கப்பட்டார். பின்னர் உத்திரவாதம் அடிப்படையில் ஜாமீனில் வெளிவந்தார் சேகர் ரெட்டி.

பின்னர் இவர் குறித்த இந்த வழக்கில் தொய்வு காணப் பட்டது.இந்நிலையில் கடந்த 9 மாதங்களாக  சேகர் ரெட்டி மீதான வழக்கில் சிபிஐ எந்த நடவடிக்கை எடுத்தது என சென்னை உயர்நீதிமன்றம்  சிபிஐ- கு கேள்வி எழுப்பியுள்ளது.

  
சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக கடந்த ஜனவரி மாதம் வழக்கு தொடரப்பட்டது.

இதனை தொடர்ந்து, தற்போது கடந்த 9 மாதங்களாக இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேலும் இது குறித்த வழக்கு விசாரணை நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

SSTA -FLASH 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை!!!

                                                

இந்திய குடியுரிமை பணியில் சேர்வதற்கான போட்டித்தேர்வில் கலந்துகொள்வதற்கு மீனவர்களின் வாரிசுகள் தேர்வு செய்யப்பட்டு அகில இந்திய குடிமை பணிகளுக்கான பயிற்சி நிலையம் மூலம் அளிக்கப்படும் சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு அனுமதி கோரும் விண்ணப்ப படிவம்!!

                                                         

டெங்கு: மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை!!!

முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் 
என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதற்கு இதுவரை 85 பேர் பலியாகி உள்ளனர். இந்தத் தகவலை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மதுரை அரசு மருத்துவமனையில், 300-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று(அக்டோபர் 08) மாலை ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பெரிதாகப் பரவவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட ஒருசில இடங்களில் மட்டுமே டெங்கு உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் படுக்கை வசதி, ரத்த பரிசோதனை செய்ய இயலாத தனியார் மருத்துவமனைகள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளோம்.

இது தொடர்பாக இந்திய மருத்துவ கழகத்திடமும் கோரிக்கை வைத்தோம். இதை ஏற்றுக் கொண்டு அவர்களும் தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளோம். இது வரை 4,716 பேர் இதன் மூலம் சிகிச்சை பெற்றுள்ளனர். அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் போதிய அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மற்ற துறையினர் செய்து கொடுக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடப்பாண்டில் 770 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போலி மருத்துவர்கள் எளிதில் தப்பிக்காத வகையில் சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. போலி மருத்துவர்களைக் கண்டறிவதற்காக மருத்துவ சேவைப்பணிகள் இயக்குநர் தலைமையில் நிபுணர் குழு அமைத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்

310 தொலை தூர கல்வி நிலையங்கள் மூடல்!!!

வெளி மாநிலங்களில் செயல்படும் 310 தொலை தூர கல்வி நிலையங்கள்
மூடப்படும் என நேற்று முன்தினம் (அக்டோபர் 7) அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலை துணைவேந்தர் டாக்டர் ஏ. கணபதி, “மத்திய அரசின் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்' சார்பில் (institutes of eminence) சிறந்த முறையில் செயல்படும் பல்கலைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில், பாரதியார் பல்கலைக்கழகம் நிதியுதவி பெறும் தகுதியைப் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தில், பதிவுக் கட்டணமாக மட்டும் ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும். அந்நிறுவனம், பாரதியார் பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து விட்டால் ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் வீதம், ஐந்தாண்டுகளுக்கு 1,000 கோடி ரூபாய் வழங்கும். இதன் மூலம் உள் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்கலை தேவைகளை மேம்படுத்த முடியும். இங்குள்ள கல்லூரி ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று, சிறப்பு பயிற்சி பெறலாம். மேலும், வெளிநாடுகளில் இருந்து நிபுணத்துவம் பெற்ற கல்வியாளர்களை வரவழைத்து, கல்வி கற்பிக்க செய்யலாம். தற்போது பல்கலையில் 150 கோடி ரூபாய் அளவுக்கு, ஓய்வூதிய நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஓய்வூதிய பண பலன் சார்ந்த பிரச்சினை இருக்காது.

2015 ஆம் ஆண்டு வரை, பலகலை மானிய குழுவான யூஜிசி அங்கீகாரத்துடன் தொலை தூர கல்வியை நடத்தி வருகிறோம். எனினும், உயர்கல்வி துறை அமைச்சரின் ஆலோசனைப்படி, வெளி மாநிலங்களில் செயல்படும், 310 தொலை தூர கல்வி நிலையங்களை மூட முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்குள் செயல்படும் 150 தொலை தூர கல்வி நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிச்சாமியை முந்த ஓபிஎஸ் போட்ட ரகசிய கூட்டம்???

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு
வருகிறது. இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நவம்பர் 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை துணை முதல்வர் ஓபிஎஸ் பார்வையிட்டு வருகிறார். 

தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் மாவட்ட அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்ட ஓபிஎஸ் மாவட்ட அளவில் உள்ள சுயஉதவி குழுக்கள் 20 ஆயிரம் பேரை அழைத்து வரவேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர் கழகம் மற்றும் கிளை பொறுப்பாளர்களை பெரியகுளம் அருகே உள்ள பண்ணை வீட்டுக்கு அழைத்து ஓபிஎஸ் ரகசிய கூட்டம் போட்டதாக தகவல்கள் வருகின்றன.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அந்தந்த பகுதியில் இருந்து அதிகமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களையும் அழைத்து வரச்சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ். குறிப்பாக சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய கூட்டத்தை விட அதிகமாக கூட்டத்தை தேனியில் கூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கேட்பவர்களை செருப்பால் அடியுங்கள்: சந்திரசேகர ராவ்!

                                               
சமீபத்தில் நடந்த தெலுங்கானாவில் சிங்கரனி கொலிரியஸ் கம்பெனி லிமிடெட் (எஸ்சிசிஎல்) அமைப்பின் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தெலுங்கானா போகு கானி கர்மிகா சங்கம் வெற்றி பெற்றது. இந்த வெற்றி விழாவில் 
தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசினார்.
அப்போது அவர், எஸ்சிசிஎல்.,ல் லஞ்சத்தை அனுமதிக்காதீர்கள். யாரும் லஞ்சம் தராதீர்கள். ஒருவேளை எந்த அதிகாரியாவது, விடுமுறை, மருத்துவ பலன், வீடு கட்டுவதற்கான கடன் பெறுவது உள்ளிட்ட உங்களின் தொழிலாளர் பயன்களை பெற லஞ்சம் கேட்டால் அவர்களை செருப்பால் அடியுங்கள். லஞ்சம் கேட்பவர்களுக்கு சரியான பாடம் புகட்டுங்கள்.
தகுதி உடைய தொழிலாளர்கள் அனைவருக்கும் வட்டியில்லாத வீட்டு கடன் வழங்கப்படும். வாக்குதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். எஸ்சிசிஎல் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஐஐடி.,க்கள் மற்றும் ஐஐஎம்.,களில் படிக்க சீட் கிடைத்தால் அதற்கான கல்வி செலவை மாநில அரசே ஏற்கும்.
உங்களின் பிரச்னைகளை நேரடியாக கண்டிட விரைவில் சிங்கரனி யாத்திரை மேற்கொள்ள உள்ளேன். நீங்கள் மக்களுக்கு எப்படி மருத்துவ சேவை வழங்குகிறீர்கள் என்பதை கண்டறிய சிங்கரனி மருத்துவனையில் நான் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளேன் என்றார்

பிஇ படித்தவர்களுக்கு மின் துறையில் பணியிடங்கள்!! (Last date 10.10.2017)

NSPCL நிறுவனம் அமைக்கும் மின் நிலையங்களுக்கு எலக்ட்ரிக்கல், 
மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன்,  எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் பி.இ., படித்தவர்களை தேர்தெடுக்கிறது. *

*பணி விவரம்: -*

Engineering Executive Trainees.

1. Electrical:

4 இடங்கள் (ஓபிசி-3, எஸ்டி-1).

*தகுதி: -*

Electrical/Electrical & Electronics/Electrical, Instrumentation & Control/Power Systems & High Voltage/Power Electronics/Power Engineering ஆகிய பாடங்களில் பி.இ.

2. Mechanical:

7 இடங்கள் (எஸ்சி-5, எஸ்டி-1, ஓபிசி-1).

*தகுதி: -*

Mechanical Engg. (Mechanical/Production/Industrial Engg.,/Production & Industrial Engg./Thermal/Mechanical & Automation/Power Engineering) ஆகிய பாடங்களில் பி.இ.,

3. Instrumentation:

2 இடங்கள் (எஸ்சி-1, ஓபிசி-1).

*தகுதி: -*

Instrumentation Engg.,/Electronics & Instrumentation Engg/Instrumentation & Control Engg., ஆகிய பாடங்களில் பி.இ.,

4. Electronics Engineering:

2 இடங்கள் (ஓபிசி):

*தகுதி: -*

Electronics/Electronics & Telecommunication/Electronics & Power/Power Electronics/Electronics  & Communication/Electrical & Electronics ஆகிய பாடங்களில் பி.இ., விண்ணப்பதாரர்கள் கேட்-2017 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.150/-. (எஸ்சி.,/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது).

விண்ணப்பதாரர்கள் www.nspcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

*ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2017.*

அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து விவாதமா ??

Flash News : வரும் புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது -  7வதுஊதிய குழு பரிந்துரைகள் தொடர்பாக ஆலோசனை!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமானது தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.


7வதுஊதிய குழு பரிந்துரைகள் மற்றும் மழை காலங்களில் எடுக்க வேண்டிய ஏற்பாடுகள் பற்றி அமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தின் போது அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. மதுரைக்கிளை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் இது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டிய உள்ள நிலையில் அதனை இறுதி செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனத்தில் அதிகாரி பணியிடம்!!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பள்ளிக்கல்வித்துறை
மற்றும் எழுத்தறிவித்தல் துறையின் கீழ் இயங்கும் தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனத்தில் அதிகாரிகள், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.*

*பணி: -*

1. Director: (Academic) 1 இடம் (பொது)
2. Joint Director: (Media): 1 இடம் (பொது)
3. Deputy Director (Administration): 1 இடம் (பொது)
4. Deputy Director (Academic): 1 இடம் (பொது)
5. Deputy Director (Accounts): 1 இடம் (பொது)
6. Training Officer (Humanities/Social Science): 1 இடம் (ஓபிசி)
7. Section Officer: 7 இடங்கள் (பொது)
8. Assistant Audit Officer: 1 இடம் (பொது)
9. Stenographer: 1 இடம் (பொது).

விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, வயது, முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.nios.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

*விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2017*

உள்ளாட்சித் தேர்தல்: நீதிமன்ற அவமதிப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட
வழக்கில், மாநில தேர்தல் ஆணையர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்.09) உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17ஆம் தேதிக்கு முன்னதாகவே நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாகக் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் அமல்படுத்தவில்லை. எனவே, இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (அக்டோபர் 09) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் எம்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டார். இதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், குறித்த காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டும் அதைச் செய்யாமல் இருப்பதை நீதிமன்ற அவமதிப்பாகத்தான் கருத வேண்டியுள்ளது என்று கூறியுள்ளனர்.

மனுதாரரின் புகார் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான், செயலர் டி.ஆர்.ராஜசேகர் ஆகியோர் வரும் அக்டோபர் 23ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 23க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இருவகையான இருள்

குறையும் ரயில் கட்டணம்!

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவின்போது வசூலிக்கப்படும்
வணிகர் தள்ளுபடி விலையை (MDR) திரும்பப் பெற மத்திய அரசு பரீசிலனை செய்து வருகிறது. இதன் மூலம், ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவுக்குக் கட்டணம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்டிசிடி இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு வணிகர் தள்ளுபடி விலைக் கட்டணம் பொருந்தும். டெபிட் / கிரெடிட் கார்டு சேவைகளை வழங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இந்தக் கட்டணத்தை வசூலிக்கின்றனர். ரயில்வே அமைச்சர் தெரிவித்தபடி, இந்த எம்.டி.ஆர்., பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜூன்30 ஆம் தேதியுடன் முடிய இருந்த சேவைக் கட்டண ரத்து செப்டம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இதனை 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ரூ. 20 முதல் 40 வரை சேவைக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின்போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவையை அளிப்பதற்காக வங்கிகள் பெறும் கட்டணத்தைத் திரும்பப் பெற மத்திய அரசு பரீசிலனை செய்துவருகிறது. இதனால், ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான கட்டணம் தானாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., வருவாயில் சுமார் 33% ஆன்லைன் முன்பதிவுகளிலிருந்து வரும் சேவைக் கட்டணமாகும். கடந்த நிதியாண்டின் வருவாயின் படி, ஐ.ஆர்.சி.டி.சி.யின் மொத்த வருவாய் ரூ.1,500 கோடியில் ரூ. 540 கோடி டிக்கெட் முன்பதிவுகள் மூலம் வந்தது என மூத்த ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடிக்கு ஆப்பு??? ஆளுநர் வைக்கும் செக்!!!

                                                       
தமிழக காவல்துறையை நவீனமயமாக்க வாக்கி டாக்கி வாங்கியதில்
ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது. தமிழக அரசுக்கு எதிராக இந்த ஊழல் தற்போது பூதாகரமாக எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.


பொதுவாக வாக்கி டாக்கி வாங்குவதற்கான டெண்டர் ஒதுக்கும்போது பல நிறுவனங்கள் பங்கேற்கும். அதில், ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் போட்டியிடும் போது ஒப்பந்தத் தொகை குறையும். அதற்கு மாறாக ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ஒப்பந்தம் கோரியிருந்தால் அந்த ஒப்பந்த நடைமுறை ரத்து செய்யப்படும். இதுதான் காலம் காலமாக உள்ள நடைமுறை.

ஆனால், 2017-2018-ஆம் ஆண்டுக்கான வாக்கி டாக்கி வாங்கும் ஒப்பந்த புள்ளி கோரலில் மோடோரோலோ சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் மட்டுமே பங்கேற்றுள்ளது. அதற்கு ரூ.83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளார்.
உண்மையில், அந்த திட்டத்திற்கு ரூ.47.56 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அதைக் கொண்டு 10 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதிக பட்சமாக ரூ.83.45 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, வெறும் 4 ஆயிரம் வாக்கி டாக்கிகள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய விதிமீறலாகும்.
ஒரு வாக்கி டாக்கியின் விலை ரூ.4700 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ.2.08 லட்சம் என்ற விலைக்கு வாங்கப்பட்டு பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் அனுப்பியிருந்தார். ஒப்பந்த புள்ளி கோரலில் ஒரே ஒரு நிறுவனமே, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து விட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ள நிரஞ்சன் மார்டி, வாக்கி டாக்கியின் தொழில்நுட்ப மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை, வாக்கி டாக்கி வழங்கும் நிறுவனத்திற்கு அளித்த ஒப்பந்த ஏற்பு ஆணை, கொள்முதல் ஆணை ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறு காவல்துறை தலைமை இயக்குனரை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த ஊழலை திமுக கையிலெடுத்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார் மு.க.ஸ்டாலின். இதன் பேரில் ஆளுநர் தலைமைச்செயலருக்கு உத்தரவிட வேண்டும். இந்நிலையில் தமிழக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்து தமிழகத்தில் பாஜக நல்ல பெயரை எடுக்க ஆளுநரை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக புதிதாக வந்துள்ள ஆளுநர் வாக்கி டாக்கி ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ஏன் உத்தரவிடக்கூடாது? என ஆளுநர் தலைமைச் செயலரிடம் கேட்கலாம் எனவும், புதிய ஆளுநர் இந்த விவகாரத்தை கையிலெடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுக்க இருப்பதாக பேசப்படுகிறது.

100ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரைகடைபிடியுங்கள்

6B43~1கணினி என்றால் என்ன?

Get Your Bank Mini Statements on Your Mobile Without the Internet

MOBILE

அறிந்துகொள்ளுவேம்

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

ஆசிரியர்களை பற்றி தவறாகவோ

ஆண்ட்ராய்ட் போனில் பேட்டரி பராமரிப்பு

ஆன்மீகத்தில்பெண்கள் தெரிந்துக்கொள்ளவேண்டிய சில விஷயங்கள்

இஞ்சிப் பால்

9/10/17

மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தின் முதுகலை சட்ட படிப்புக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன.இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஸ்ரீநிவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை பல்கலைக்கழகத்தின் எம்.எல். (பிரைவேட் ஸ்டெடி) படிப்புக்கு கடந்த ஜூன் மாதம் தேர்வு நடைபெற்றது.அந்த தேர்வின் மறுமதிப்பீட்டு முடிவுகள் நாளை வெளியிடப்படும். மாணவர்கள் www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நர்சிங், பிபார்ம் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின

பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உள்ளிட்ட 9 பட்டப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தது. அரசுமருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 796 இடங்கள் நிரம்பவில்லை.
தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பிபார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பிஎஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய 9 பட்டப் படிப்புகள் உள்ளன. 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்7,843 இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் காலியிடம் இந்தப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று நடந்த கடைசி நாள் கலந்தாய்வில் 230 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கானஅனுமதி கடிதத்தை பெற்றனர்.

முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்களும்நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7,843 இடங்களில் 7,047 இடங்கள் நிரம்பின. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 796 இடங்கள் காலியாக உள்ளன. விரைவில் 2-ம் கட்டம் இது தொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜிடம் கேட்டபோது,"முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். 2-ம் கட்ட கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 796 இடங்கள் நிரப்பப்படும்"என்று தெரிவித்தார்.

ஆசிரியர்,அமைச்சு பணியாளர்களின் மதிப்பெண் சான்று உண்மைத்தன்மையை ஆன்லைனில் சரி பார்க்கலாம்: அரசு தேர்வுகள் துறை உத்தரவு

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே சரி பார்த்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்தவர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் போலியாக அளித்தது கடந்த 2004ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் அனைவருக்கும் அவர்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை பரிசோதிப்பதற்காக அரசுத் தேர்வுகள் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.


இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் உண்மை சான்றுகள் சரி பார்த்து மீண்டும் வருவதற்கு பல மாதங்கள், ஆண்டுகள் ஆகிறது. இவ்வாறு வீண் காலதாமதம் ஏற்படுவதால் ஆசிரியர்கள் தகுதி காண் பருவம் முடிக்க முடிவதில்லை. அதுபோல கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்கள் பவானி சாகர் பயிற்சிக்கு செல்ல முடியவில்லை. இந்த காலதாமதத்தை தவிர்க்க தற்போது அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சான்றுகளின் உண்மைத் தன்மையை சரி பார்த்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணி அரசுத் ேதர்வுகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணியை விரைந்து செய்து முடிக்கும் வகையில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பிரத்யேகமாக யூசர் ஐடி, பாஸ்வேர்டு வழங்கப்படுகிறது.

இந்த யூசர் ஐடி, பாஸ்வேர்டு பயன்படுத்தி லாகின் செய்து மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். ஆன்லைனில் கிடைக்கப் பெறாத மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும், உண்மைத் தன்மை ஒத்துப் போகாத சான்றிதழ்களின் நகல்களை மட்டும் தேர்வு துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் பணி முக்கியத்துவம் வாய்ந்த பணி என்பதால் தனிக் கவனம் செலுத்தி நம்பகத்தன்மை வாய்ந்த பணியாளர்களைக் கொண்டு இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அரசுஊழியர்களுக்கு சாதகமான அரசானைகள்!!!

1)GO.MS.200 P&AR dt 19.4.96

     உயர்கல்வி பயில அனுமதி
கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள்
துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால்,அனுமதி
அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.


2)GOVT Leter no 14735/s/10/
dt 08.042010
        தகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய
அனைத்துதகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து
ஆறுமாதத்திற்குள்
தகுதிகான்பருவம் நிறைவு
செய்துஆனைகள் பிறப்பிக்க
பட வில்லை என்றால்,தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ்அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.

3)GO.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75
             துறைத்தலைவரால்
வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு
அலுவலருக்கு மேல்முறையீடு
செய்த ஒரு அரசுஊழியரின்  விண்ணப்பத்தின் மீது
ஆறு மாதத்திற்குள் மேல்முறையீட்டு
அலுவலா் இறுதி ஆனைபிறப்பிக்கவேண்டும்.

4)GO.MS.112 P&AR
       அசையாசொத்துவாங்க
அனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும்
அவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி
அளிக்கவில்லை, என்றால்
அனுமதி அளித்ததாக கருதி
அவ்வரசுப்பணியாளர் அவ்
அசையாசொத்தை வாங்கிக்கொள்ளலாம்.

5)Govt Leter 248 P&AR dt 20.10.97
     தண்டனைகள் நடப்பிலிருப்
பதால் பதவிஉயர்வு நிறுத்தப்
பட்ட அரசுஊழியருக்கு அதே
தண்டனை நடப்பிலிருந்தாலும்
அடுத்தபதவிஉயர்வு வழங்கவேண்டும்.

6)Govt Leter no 35/N/2012-/9
P&AR  N Dept 03.04.2013
  ஒமுங்குநடவடிக்கை நடப்பிலிருப்பவருக்கு ஓய்வு
பெரும் நாள் அன்று Not Permited For Retired ஆனை
வழங்கப்படவில்லை என்றால்
அவா் ஓய்வுபெற்றதாக கருதப்படும்.

7)Tamilnadu Govt Servent Conditions And servuce Act 2016 Rule 44
      அரசுஊழியரிடம்  பதவி
உயர்வுவேண்டி பெறப்பட்டை
மேல்முறையீட்டு விண்ணப்பத்தை துறைத்தலைவர் நாண்கு மாதத்திற்குள் முடிக்கவேண்டும்.

8)Govt Leter No 12516 P&AR 2015
    அரசுஊழியர்களின் கோரிக்கை சாா்ந்த எந்த மனுவாக இருந்தாலும்
அவர்கள் விண்ணப்பிக்கும்
போதே அனைத்து விவரங்கள்
மற்றும் விளக்கங்கள் கேட்டு
பெறவேண்டும் இரண்டாம்
முறை எதுவும் கேட்கக்கூடாது.

மதிப்பெண் கணக்கீட்டு முறையை 10, பிளஸ் 2 வகுப்பு தேர்வில் நிறுத்தணும்

10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மதிப்பெண் கணக்கீட்டு முறையை நிறுத்தும்படி, மாநில கல்வி வாரியங்களையும், சி.பி.எஸ்.இ.,யையும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.
இது பற்றி பள்ளி கல்வித்துறை செயலர், அனில் ஸ்வரூப் கூறியதாவது:மாநில கல்வி வாரியங்களும், சி.பி.எஸ்.இ.,யும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மதிப்பெண் கணக்கீட்டு முறையை செயல்படுத்தி வருகின்றன.அடுத்த கல்வியாண்டு முதல், மதிப்பெண் கணக்கீட்டு முறையை நிறுத்த வேண்டும் என, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 'கிரேடு' முறை தான் சிறப்பாக இருக்கும். 

ஏனெனில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக, மதிப்பெண்களை கூடுதலாக வழங்கும் முறை, பல மாநிலங்களில் நீடிக்கிறது. இதில் அதிகளவில் முறைகேடுகள் நடக்கின்றன.நாடு முழுவதும், ௨௦௧௮ முதல், பிளஸ் 2 தேர்வில், மதிப்பெண் வழங்குவதில், பொதுவான முறையை கடைபிடிக்க வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

8/10/17

போட்டித் தேர்வுமூலம் உதவிப் பேராசிரியர்கள் தேர்வு!!!

521 அரசுப் பள்ளிகட்டிடங்கள் இடிப்பதற்கு இயக்குனர் மற்றும் கலெக்டர்களிடம் பரிந்துரைக்கடிதம்!!

பள்ளி மாணவர்களுக்குவழங்கிய இரண்டாம் பருவபாடபுத்தங்களில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' !!!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 11, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (அக்.6) நடைபெற்றன.
சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ,5 ஆயிரமும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன், மொழிபெயர்ப்பாளர் ஆனைவாரி ஆனந்தன், புலவர் கி.த.பச்சையப்பன், பாக்கம் தமிழன், தமிழ் வளர்ச்சி கண்காணிப்பாளர் பவானி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

ஒரு முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இந்துப்பண்டிகையான தீபாவளிக்கு இரண்டு நாட்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது !!

பொது மக்கள் கவனத்திற்கு- வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தும் -2018-அக்டோபர் 3 முதல் அக்டோபர் 31 2017 வரை நடைபெறுகிறது

பிரதமர் புகைப்படங்களை பள்ளியில் வைக்க உத்தரவு

'பள்ளிகளில், ஜனாதிபதி பிரதமர் புகைப்படங்களை வைத்திருக்க வேண்டும்' என கோவா அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 
பனாஜியில் மாநில கல்வித்துறை உயரதிகாரிஒருவர் கூறியதாவது:

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பள்ளிகளில், மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது புகைப்படங்களை கண்டிப்பாக வைத்திருக்கும் படி உத்தர விட்டுள்ளது. இவர்களை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பெயர்கள் கூட தெரியாமல் குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து கோவாவில் அரசு மற்றும் அரசு நிதியுதவியுடன் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் ஜனாதிபதி,பிரதமர் புகைப்படங்களை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இலவச, 'செட் - டாப் பாக்ஸ்' ரூ.1,200க்கு விற்பனை

தமிழக அரசு, இலவசமாக வழங்குவதாக அறிவித்த, 'செட் - டாப் பாக்ஸ்'களை, சில ஆப்பரேட்டர்கள், 500 - 1,200 ரூபாய் வரை விற்பதாக, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
'தமிழகத்தில், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் கேபிள், 'டிவி' ஒளிபரப்புக்காக, 'செட் - டாப் பாக்ஸ்' இலவசமாக வழங்கப்படும்' என, சட்டசபை தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
தற்போது, அதற்கான உரிமம் கிடைத்து விட்டதால், செட் - டாப் பாக்ஸ் வினியோகத்தை, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் துவங்கியுள்ளது. பொது மக்களிடம் இருந்து, ஒரு பாக்சுக்கு, 175 ரூபாய் வசூல் செய்ய, ஆப்பரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.ஆனால், செட் - டாப் பாக்ஸ்களை, ஆப்பரேட்டர்கள், அதிக தொகைக்கு விற்பதாக, புகார் கூறப்படுகிறது.

 சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் கூறும்போது, 'எங்கள் ஆப்பரேட்டர், 1,200 ரூபாய் கேட்கிறார்; என்ன செய்வதென்றே தெரியவில்லை' என்றார். இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 500 - 800 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், அரசு கேபிள் நிறுவன அதிகாரிகள், 'பொதுமக்கள், 175 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்த தேவையில்லை' என, தெரிவித்தனர்.

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி: தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.220 ஆகிறது

சினிமா டிக்கெட் கட்டணத்தை, 25 சதவீதம் உயர்த்த,தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஜி.எஸ்.டி., மற்றும், கேளிக்கை வரி என, இரட்டை வரி விதிக்கப் பட்டதற்கு, எதிர்ப்பு கிளம்பியதால், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி, தியேட்டர் உரிமையாளர்களுக்கு, அரசு சலுகை வழங்கி உள்ளது.

 இதனால், தியேட்டர்களில், அதிகபட்ச டிக்கெட் விலை, 220 ரூபாயாகிறது.
சினிமா டிக்கெட்டிற்கு, சரக்கு மற்றும் சேவை
வரியான, ஜி.எஸ்.டி., 28 சதவீதம், கேளிக்கை வரி, 10 சதவீதம் என, இரட்டை வரி விதிக்கப்பட்டது. இதனால், பாதிக்கபட்ட தியேட்டர் உரிமையாளர்கள், 'இரட்டை வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். டிக்கெட் விலையை உயர்த்த, அனுமதிக்க வேண்டும்' என, அரசை வலியுறுத்தினர்.

வாக்காளர் சேர்ப்பு இன்று சிறப்பு முகாம்

தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று, வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.அடுத்த ஆண்டு, ஜன., 1ம் தேதியை, தகுதி நாளாக கொண்டு, வாக்காளர்பட்டியல் திருத்தப் பணி, தமிழகம் முழுவதும், இம்மாதம் துவக்கப்பட்டது.

வாக்காளர்களுக்காக, தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று, வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாற்ற விரும்புவோர், அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.
மற்ற நாட்களில், ஓட்டுச்சாவடி அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில், மனு அளிக்கலாம்.
பெயர் சேர்க்கும்விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி, வயது சான்று சமர்ப்பிக்க வேண்டும். 25 வயதிற்கு கீழ் உள்ள மனுதாரர்களுக்கு, வயது சான்றிதழ் கட்டாயம்.
மேலும், www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.வரும், 2018 ஜன., 1ல், 18 வயது நிறைவடைவோரும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.


18 - 25 வயதிற்குட்பட்டோர் தவிர, மற்றவர்கள், தங்களுடைய முந்தைய முகவரி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் ஆகியவற்றை, படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
இருப்பிட மாற்றம் செய்யாமலிருந்தால், தற்போதைய முகவரியில் வசித்து வரும் கால அளவையும், முன்னர் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க இயலவில்லை என்பதையும், குறிப்பிட வேண்டும். 'விண்ணப்பதாரர், படிவம் - 6ன் உறுதிமொழியில், முந்தைய முகவரியை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.

அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க146 மாணவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு

தனியார் மருத்துவக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு முடித்த, 146 மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை, 10 க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை அடுத்த, ஸ்ரீபெரும்புதுார் அருகில், பென்னலுாரில், அன்னை மருத்துவக் கல்லுாரிஉள்ளது.இங்கு, முதலாம் ஆண்டு படிப்பை முடித்த, 146 மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு அடிப்படையில், நாங்கள் தேர்வு செய்யப்பட்டோம். மாணவர்கள் சேர்க்கைக்கான ஒப்புதலை, மருத்துவ கவுன்சில் வழங்கி உள்ளது.தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தில், 'மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாவிட்டால், புதிதாக சேர்க்கை நிறுத்தப்படும்.'ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான பொறுப்பை, மாநில அரசு எடுத்து கொள்ளும்' என, கூறப்பட்டுள்ளது.நாங்கள், முதலாம் ஆண்டு பூர்த்தி செய்து விட்டோம். இரண்டாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, நாங்கள் செலுத்த வேண்டும். இந்நிலையில், மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை, கல்லுாரி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை என்பதால், இரு ஆண்டுகளுக்கு, மாணவர்கள் சேர்க்கையை நடத்தக் கூடாது என, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தற்போது, கல்லுாரியின் மருத்துவமனை மூடப்பட்டு விட்டது; அங்கு, ஊழியர்கள் இல்லை. கல்லுாரியில் இருந்தும், ஊழியர்கள் பலர் விலகி விட்டனர்.கல்லுாரியை நடத்தும் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு இடையே, பிரச்னைகள் உள்ளன. எனவே, மாநில அரசு அளித்த உத்தரவாதத்தின்படி, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் அனுமதியுடன், மாணவர்களாகிய எங்களுக்குரிய பொறுப்பை, அரசு எடுத்து கொள்ள வேண்டும்.எங்களை, அரசு மருத்துவக் கல்லுாரிளுக்கு மாற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டை தொடர, இடைக்கால உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.மனுக்கள், நீதிபதி, கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தன. மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், சிராஜுதீன் உள்ளிட்ட, வழக்கறிஞர்கள் ஆஜராகினர். விசாரணையை, ௧௦க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 996 JAO வேலை: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர் அதிகாரி (Junior Accounts officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து அக்டோபர் 15க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 996

பணி: Junior Accounts officer

தகுதி: 01.01.2017 தேதியின்படி M.Com., CA. ICWA, CS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.externalexam.bsnl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.externalbsnlexam.com/advertisement/NOTIFICATION_DRJAO_2017.pdf என்ற லிங்கை கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

*அகவிலைப்படி உயர்வு எப்போது : காத்திருக்கும் அரசு ஊழியர்கள்*

உயர்நீதிமன்ற உத்தரவால் அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கான சம்பள உயர்வு பரிந்துரைக் குழு தன் அறிக்கையை சமர்பித்துள்ள நிலையில் 1.7.2017 முதல் அகவிலைப்படி உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்' என அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். 'புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சம்பள குழு பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும்' என அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தத்தை திரும்ப பெற உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதற்கிடையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து பரிந்துரைப்பதற்காக ஐந்து பேர் குழு, முதல்வர் பழனிசாமியிடம் செப்., 27ல் அறிக்கையை தாக்கல் செய்தது. இதில், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகளை களையவும், 30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்படும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கவும் பரிந்துரைகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

'சம்பள மாற்ற பரிந்துரைகள் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டாலும் கூட, இடைவிடாத போராட்டங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி' என அரசு ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், பொதுச் செயலர் அன்பரசு கூறியதாவது: மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு 7வது சம்பள குழு பரிந்துரைகளை 1.1.2016 முதல் அமல்படுத்தியது.

மத்திய அரசு ஊழியர்கள் சம்பள மாற்றத்தையும், அதற்கான நிலுவை தொகையையும் பெற்று விட்டனர். அவர்களுக்கு 1.7.2017 முதல் சம்பள மாற்றத்திற்கான அகவிலைப்படி உயர்வு ஒரு சதவீதத்தையும் அரசு வழங்கி விட்டது. மத்திய அரசின் 8 வது சம்பள மாற்றத்திற்கான சம்பள விகிதங்களை பெறாத தன்னாட்சி நிறுவன ஊழியர்களுக்கு, பழைய சம்பள விகிதத்தில் 3 சதவீத அகவிலைப்படியை 1.7.2017 முதல் உயர்த்தி செப்., 26ல் மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் 1.1.2016 முதல் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் சம்பள மாற்றத்தையோ, நிலுவைத் தொகையையோ 21 மாதங்களாக பெறாமல் நிதி சுமைக்கு ஆளாகி உள்ளனர்.

மத்திய அரசு பழைய சம்பள விகிதத்தில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் அகவிலைப்படி உயர்வு அளித்துள்ளது போல், அரசு ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் பழைய சம்பள விகிதத்தின்படி அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்க வேண்டும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை, அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்று கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.

வாட்ஸ் அப்- ல் வைரலாகப் பரவும் ஆசிரியர்களுக்கான LOGO - உண்மைச் செய்தியா? வதந்தியா

வலைத்தள வதந்தி - ஆசிரியர்  LOGO-விற்கு உச்சநீதி மன்றம் அனுமதித்ததா?


வலைத்தள வதந்தி


🌺தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஆசிரியர்களுக்கு என்று தனி LOGO-ஐ பயன்படுத்த உச்சநீதி  மன்றமே அனுமதி அளித்துவிட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.


🌺இதன் உண்மைத் தன்மைக்கான எவ்வித சான்றும் அதில் இல்லை.


🌺மேலும் அதில், "மருத்துவர் & வழக்கறிஞர்கள் பயன்படுத்த அனுமதித்தது போல" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


🌺உண்மையில் இவர்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததா? அளிக்க முடியுமா? அளிக்க வேண்டிய அவசியமுண்டா? என பல கேள்விகள் எழுகிறது.


🌺மருத்துவர் & அவசரச் சிகிச்சை வாகனங்களில் சிவப்பு நிற '+' குறி LOGO இடம்பெற்றிருக்கும். உண்மையில் இது இவர்களுக்கானதே அல்ல.


🌺செஞ்சிலுவை இயக்கத்திற்காக, 1949-ம் ஆண்டு ஜெனீவா மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட LOGO அது.


🌺இதை மற்றவர்கள் பயன்படுத்துவது தண்டனைக்குறிய குற்றமாகும். ஆனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதை மருத்துவர் உள்ளிட்ட பலர் பயன்படுத்தி வருகின்றனர்.


🌺2007-ல் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) இந்திய மருத்துவக் குழுமத்திற்கு(IMC) இது குறித்து அறிவுறித்தி, தங்களின் LOGO-வை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தியது.


🌺அதன்பின்னரே, சிவப்பு நிற (90%) '+' குறியினுள் Dr அல்லது Rx என்று குறியிட்ட LOGO-ஐ பயன்படுத்த IMC முடிவெடுத்தது.


🌺இந்த LOGO-வையும் MBBS மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதியுண்டு என IMC கூறியுள்ளது.


🌺இதனை சித்தா, ஆயுர்வேதா, கால்நடை மருத்துவர்களோ, மருந்தகங்களோ பயன்படுத்தக் கூடாது.


🌺ஒரு LOGO- வைப் பயன்படுத்துவதில் இத்தனை வில்லங்கங்கள் உள்ள சூழலில்,


🌺ஏதோ ஒரு LOGO-ஐ  அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி உச்சநீதி மன்றம் அனுமதி அளித்தது என்று அறிவைப் போதிக்கும் ஆசிரியர்களே பகிர்ந்து வருவது வியப்பை அளிப்பதாகவே உள்ளது.


🌺ஒரு திறமைமிக்க ஆசிரியர் எனில் இது போன்ற தகவலைப் பார்த்தவுடன் உங்களின் மனதில்,


🌺உச்சநீதி மன்றத்தில் இதுக்காக வழக்காடியது யார்?


🌺இதை வடிவமைத்தது யார்?


🌺தீர்ப்பளித்தது யார்?


🌺தீர்ப்பின் விபரம் என்ன?


என்பன போன்ற கேள்விகள் எழுந்திருக்க வேண்டும் அல்லவா!?


🌺மற்ற குழுக்களுக்கு Forward செய்யும் முன் செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்து செயல்படுங்கள்.

அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை