யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/2/18

நீட்' தேர்வுக்கு புதிய விதிகள் அறிவிப்பு; தனித்தேர்வர், தொலைநிலை படித்தவருக்கு தடை!!!

                                              
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு விதிகள் திருத்தப்பட்டுள்ளன. தனித்
தேர்வர்கள், தொலைநிலை படித்தவர்கள், நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகள், மீண்டும் திருத்தப்பட்டுள்ளன. அவற்றில், நீட் தேர்வு குறித்த, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 'இவை, இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறைகள் - 2017 என்ற பெயரில் அழைக்கப்படும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த விதிகள், நீட் தேர்வை நடத்தும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, தேர்வை நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய விதிகள் வருமாறு:

● பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்ட விதிகளின்படி, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

● இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேரும் ஆண்டின், டிச., 31ல், 17 வயது நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வு நடக்கும் நாளில், 25 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க கூடாது. இதில், பொது பிரிவு தவிர, மற்ற இனத்தவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு, அதிகபட்ச வயதில், ஐந்து ஆண்டுகள் கூடுதல் சலுகை வழங்கப்படும்

● பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1, பிளஸ் 2 என, பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் தொலைநிலை கல்வியான, திறந்தநிலை பள்ளியில் படித்தவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத தனித்தேர்வர்கள், நீட் தேர்வு எழுதஅனுமதிக்கப்பட மாட்டார்கள்

● இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' பாடப்பிரிவுகளில் படித்திருத்த வேண்டும். பிளஸ் 2வில் வேறு பிரிவுகளில் படித்து, உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகளை கூடுதலாக எடுத்திருந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது

● பொது பிரிவு மாணவர்கள், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் ஆகிய பாடங்களில், பிளஸ் 2 தேர்வில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர், குறைந்தபட்சம், 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். மாற்று திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத இடங்கள் தனியாக ஒதுக்கப்படும்.இவ்வாறு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமலர் நாளிதழின் ஆசிரியர்களை கேவலமாக நடத்தும் போக்கை கண்டித்து நாளிதழ்களை எரிக்கும் ஆசிரியர்கள்

                                              
                                             
மேலும் தெரிந்தவர்களிடமும் அண்டை அயலாரிடமும் பேசி இது போன்ற ஆசிரியர் விரோத நாளிதழை புறக்கணிக்க ஆசிரியர்கள் வேண்டுகோள்*

 *அனைத்துப் பள்ளிகளிலும் இதனை  வாங்குவதை நிறுத்த ஆசிரியர்கள் கோரிக்கை*

FLASH NEWS:TN SCHOOL EDUCATION-மாணவர் தினசரி வருகை மற்றும் மாதாந்திர அறிக்கை Android Mobile Appல் வருகிறது,...

                                          
                                                                                                                                                                                                                                                                                                                                                                                   
 CLICK HERE PLAY STORE LINK FOR APPS DOWNLOAD

வெளியானது நீட் தேர்வுக்கான தேதி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

                                             


மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு வரும்
மே 6 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், தேசிய அளவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளதோடு விலக்கு அளிக்க முடியாது என வெளிப்படையாக தெரிவித்தும் விட்டது.

இதையடுத்து கடந்த முறையை போல தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மாணவர்களுக்கு அரசு சார்பில் நீட் தேர்விற்கு பயிற்சியளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வரும் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ ஏற்கனவே அறிவித்திருந்தது.

நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும். அதேபோல் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் நீட் தேர்வு வினாத்தாள் கொடுக்கப்படும். நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 180 கேள்விகள் மட்டுமே இடம்பெறும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வரும் மே 6 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீட் தேவுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆன் லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மேலும் வரும் மார்ச் 9 ஆம் தேதியே கடைசி நாள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

High school Hm Incharge Additional Allowance. .... Karur DEO proceedings. ..

பி.எட்.மாணவர் சேர்க்கைக்கு "நுழைவுத் தேர்வுமுறை" ரத்து!!!

வீடு வீடாக சென்று பெற்றோர்களை கெஞ்சும் தலைமை ஆசிரியர்!!!

அரசு ஆணை எண்.307. நாள்.13.10.2017ன் படி மாற்றுதிறனாளிக்குரிய ஊர்தி படி ரூபாய்.2500.தான். சில கருவூலங்களில் ரூபாய்.2000 என கூறி அரசு ஆணையினை மறுக்கும் செயல் தவறு. RTI தகவல்.



முடங்கியது சி.பி.எஸ்.இ. இணையதளம்!!!

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு 
தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.*

*தேர்வுக்காக இன்று(பிப்.,8) முதல் மார்ச் 9 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.*

*விண்ணப்ப கட்டணம், பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 1,400 ரூபாய் எனவும், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 750 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு கட்டணத்தை செலுத்த கடைசி நாள் மார்ச் 10. இந்நிலையில் நீட் நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கூறிய சில மணி நேரங்களில் சி.பி.எஸ்.இ., இணையதளம் முடங்கியது.*

7/2/18

ஊதிய முரண்பாடு களையப்படவில்லை' - போராட்டத்தை அறிவித்தது இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்

ஆசிரியர்கள் தங்கள் ஊதிய உயர்வு குறித்துப் போராட்டங்கள் நடத்தும்போது, 'இந்த வாத்தியாருகளுக்கெல்லாம் என்ன கேடு. வருசத்துல பாதிநாள்தான் வேலை.

  கை நிறைய சம்பளம். அதையும் வாத்தியார்கள் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறாங்க" என்றெல்லாம் பொதுப்புத்தி மக்களின் மனதில் ஊடுறுவிக்கிடக்கிறது.
ஆனால், இடைநிலை ஆசிரியர்களின் புலம்பலும் வேதனையும் வேறுமாதிரியாக இருக்கின்றன. இடைநிலை ஆசிரியர்கள் என்பவர்கள், 1-ம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்கள். இப்படி வேலை செய்யும் இந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது என்று இவர்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். அதுபற்றிய விவரங்களை இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) என்ற அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் நம்மிடம் விவரித்தார்.
"2009-க்குப் பிறகு, நியமனம் செய்யப்பட்ட 21,000 இடைநிலை ஆசிரியர்கள் இருக்கிறோம். எங்களில் 1.6.2009-க்கு முன் வேலையில் சேர்ந்தவர்களுக்கு அடிப்படை ஊதியம் 11,170 என்றும் 1.6.2009-க்குப் பின்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,000 என அடிப்படை ஊதியத்தில் 3,170-ஐ குறைத்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரே பதவி, ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி இருந்தும் இருவேறுபட்ட அடிப்படை ஊதியங்களை இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வருகிறோம். இந்த ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் ஆரம்பித்து இந்த வருடம் ஜனவரி

மாதம் வரை பல்வேறு போராட்டங்களைச் சென்னையிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்திவிட்டோம். அரசும் எங்களை அழைத்து 8 நாள்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. முடிவில், 2009-க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்ய பரிந்துரைக்கப்படும் என எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்தது.
ஆனால், இன்றுவரை உத்தரவாதத்தை நிறைவேற்றாமல் 8 ஆண்டுகளாகத் தொடர்ந்த அதே ஊதிய முரண்பாடுகளை இந்த ஊதியக் குழுவிலும் தொடர்ந்துள்ளது. இதனால் ஒரு நாள் இடைவெளியில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு 12 ஆண்டுகள் வருடாந்தர ஊதிய வித்தியாசம் ஏற்படுகிறது. இந்தத்தொகை முரண்பாடு பல லட்சங்களைக்கொண்டதாக இருக்கிறது. தற்போது தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு துப்புரவுப் பணியாளர்கள் பெறும் ஊதியமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் ஊதிய முரண்பாட்டைக் களையவும் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டியும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கடந்த 6.1.2018 அன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தோம். ஆனாலும், அரசு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையவில்லை. இதனால், அடுத்தகட்டப் போராட்டங்களை நடத்துவதற்குத் தயாராகிவிட்டோம். வருகிற மார்ச் மாதம் துப்புரவு பணியாளர்கள் ஊதியத்தைப் போன்றே இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதை மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உணர்த்தும் வகையில் DPI வளாகத்தில் துப்புரவு செய்யும் போராட்டமும் இரண்டாம் கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் தலைமைச் செயலக முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம்" என்றார் ஜே.ராபர்ட்

நீட்' தொடர்பான தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திங்களன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எந்த மாற்றமம் இல்லை. இவ்வாண்டு 'நீட்' தேர்வில் அரசின் பயிற்சி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட வாரியாக பயிற்சி மையங்களில் தேர்வு செய்யப்படும் 2000 மாணவர்களுக்கு சென்னையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் மூலம் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களின் மதிப்பெண்களை வைத்து மதிப்பீடு செய்கிறோம்; மத்திய அரசின் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் மாணவர்களுக்கு மொபைல் ஆப் மூலம் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

இன்ஜி., முதல் பருவ தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு கணிதம், இயற்பியலில் 50 சதவீதம் பேர், 'அவுட்'

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் முதல் பருவ தேர்வில், கணிதம் மற்றும் இயற்பியலில், 50 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன.
அண்ணா பல்கலை இணைப்பு அந்தஸ்தில் உள்ள, 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் பி.ஆர்க்., கல்லுாரிகளில், தன்னாட்சி கல்லுாரிகள் தவிர, மற்ற கல்லுாரிகளில், அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அண்ணா பல்கலையின் வினாத்தாள்கள் கடினமாகவும், மாணவர்களின் சிந்தனை திறனை சோதிக்கும் வகையிலும் தயாரிக்கப்படுகின்றன. அதனால், அண்ணா பல்கலை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், எந்த போட்டி தேர்வையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.

இந்நிலையில், 2017ல், பிளஸ் 2 படிப்பை முடித்து, இன்ஜினியரிங் மற்றும் ஆர்கிடெக்ட் படிப்பில் சேர்ந்த மாணவர்கள், நவம்பரில் நடந்த முதல் பருவ தேர்வில் பங்கேற்றனர். அண்ணா பல்கலையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு நடந்த, முதல் தேர்வு இது.முதல் பருவதேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு முடிந்து, தேர்வு முடிவுகளை, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஜி.வி.உமா நேற்று அறிவித்தார்.



அண்ணா பல்கலையின் இணையதளம் மட்டு மின்றி, மாணவர்களின் மொபைல்போன் எண்களுக்கும் நேரடியாகவே, மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டன. பகல், 2:00 மணி முதல், 'ரிசல்ட்' வெளியிடப்பட்டது.இந்த தேர்வு முடிவில், கணிதத்தில், 43.67; இயற்பியலில், 52.77 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக, ஆங்கிலத்தில், 80.48 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடல்சார் இன்ஜி., வேதியியல் பாடத்தில், 71.59; பொது வேதியியலில், 59.08; சிக்கலான கணக்குகளை தீர்க்கும் வகையிலான, 'ப்ராப்ளம் சால்விங்' பிரிவில், 61.7; இன்ஜி., கிராபிக்ஸ், 63.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுஉள்ளனர். இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகளுக்கு உதவும், தொழில்நுட்ப ஆங்கிலத்தில், 55.68 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

கணிதம் மற்றும் இயற்பியலில், 50 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறாததால், அந்த பாடங்களில் மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க, இன்ஜி., கல்லுாரிகள் முடிவு செய்து உள்ளன.இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில், 'பிளஸ் 2வில், மனப்பாட முறையில் படித்து வந்த பல மாணவர்கள், கணிதம், இயற்பியலில் சிக்கலான கணக்குகளை தீர்க்க சிரமப்பட்டுள்ளனர்.'அவர்களுக்கான பயிற்சிகள் தொடர்கின்றன. இரண்டாவது பருவ தேர்வுகளில், இந்த நிலைமை மாறிவிடும்' என்றனர்.

தமிழ் வழியில் மதிப்பெண் குறைவு தமிழ் வழி மாணவர்கள், ஆங்கில வழி மாணவர்களை விட, குறைந்த தேர்ச்சி பெற்றுள்ளனர். வேதியியலில், 37.24; இன்ஜி., கிராபிக்ஸ், 62.46; 'ப்ராப்ளம் சால்விங்' 64.52; கணிதம், 26.39; இயற்பியல், 33.14 சதவீதம் பேர் தேர்ச்சியாகி உள்ளனர். 'ப்ராப்ளம் சால்விங்' பிரிவில், ஆங்கில வழி மாணவர்களை விட, தமிழ் வழியில், 2.82 சதவீதம் பேர் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மொபைல்போனில், 'ரிசல்ட்' வழக்கமாக இணையதளத்தில் மட்டுமே, அண்ணா பல்கலையின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முறை, மாணவர்களின் மொபைல்போன் எண்ணுக்கு, நேரடியாக மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டது. பெரும்பாலான மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோரின் மொபைல்போன் எண் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவர்களுக்கு பிள்ளைகளின் மதிப்பெண் தெரிய வந்தது. புதிய விதிகளின் படி, ஆங்கிலத்தில், 'ஓ' பிரிவு முதல் வகுப்பாக கருதப்படுகிறது. 'ஏ, ஏ பிளஸ், பி, பி பிளஸ்' ஆகிய தர வரிசை எண்களில் உள்ளவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள். அதற்கு குறைவான மாணவர்கள் தேர்வை, மீண்டும் எழுத வேண்டும்.

தமிழக அரசில் ஆய்வக உதவியாளர் பணி!!!

சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான். ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்'' என்றார்.
மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றான்.
''கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்'' என்றார்.

''கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான் மாணவன்.

''கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத்  தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார் சாக்ரடீஸ்.

''அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே...''

''ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்'' என்றார்.

''எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான்.

''மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்'' என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.

அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.

7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : எல்லை விரிவாக்க அரசாணை வெளியீடு!!!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை விரிவாக்க அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சில கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் அரக்கோணம், நெமிலி தாலுகாவில் உள்ள சில கிராமங்களும் சிஎம்டிஏ உடன் இணைக்கப்பட்டுள்ளது. தரமான உள்கட்டமைப்பு மற்றும் சீரான வளர்ச்சி ஆகியவற்றை இலக்காக கொண்டு சென்னை நகரத்தின் எல்லையில் விரிவாக்கப்படும் என்று சென்ற ஆண்டு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முன்னதாக சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படுவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, சென்னை மாவட்டம் இனி 122 வருவாய் கிராமங்கள், 16 வட்டங்கள், 3 கோட்டங்களுடன் சுமார் 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக இருக்கும். மேலும் தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட வடசென்னை கோட்டத்தில் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களும், அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மத்திய சென்னை கோட்டத்தில் அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களும், கிண்டியை தலைமையிடமாகக் கொண்ட தென்சென்னை கோட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


1974-ம் ஆண்டு சிஎம்டிஏ செயல்பட தொடங்கிய போது சென்னை பெருநகர எல்லை 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. 40 ஆண்டுகளாக சென்னை பெருநகர எல்லையில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது சென்னை பெருநகரத்துடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களும் அரக்கோணம் தாலுக்காவும் இணைக்கப்படவுள்ளன.

இதனால் சென்னையின் எல்லை 8,878 சதுர கிலோமீட்டராக பிரம்மாண்ட வடிவம் பெற இருக்கிறது. சென்னை பெருநகர விவரிவாக்கத்தின் முறையான திட்ட அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ம் ஆண்டில் சென்னையின் மக்கள் தொகை 1.30 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக பெருநகர விரிவாக்கம் பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய வல்லுநர் குழு தலைவராக ஸ்ரீதர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வல்லுநர் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சாந்தா ஷீலா நயார் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்க 26.02.2016 அன்று உத்தரவிடப்பட்டது. இந்த ஆணையின்படி குழு அமைக்கப்பட்டு பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. அதன்படி 26.06.2016, 15.09.2016, 16.09.2016, 22.09.2016, 6.10.2016, 2.12.2016 மற்றும் 9.03.2017 ஆகிய நாட்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டது.


இந்நிலையில் மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய 21.10.2016 அன்று ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைகளையும் பரிசீலித்து வல்லுநர் குழு அறிக்கை தயாரிக்க இருந்த நிலையில் சாந்தா ஷீலா நாயர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில் தமிழ்நாடு அரசு அமைத்த வல்லுநர் குழு தனது பணியினை தொடர்ந்து விரைவாக அறிக்கை சமர்பிக்க ஏதுவாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.தர் வல்லுநர் குழுவின் தலைவராக தமிழக அரசு நியமித்து 3ம் தேதி (நேற்று) உத்தரவிட்டுள்ளது. இந்த குழு, அரசு அலுவலர்களின் ஓய்வூதியம் குறித்த அறிக்கையை வருகிற நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் 140000மாணவர்கள் ஒரே ஆண்டில் அரசுப்பள்ளியை நோக்கி வந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் 140000மாணவர்கள் அரசுப்பள்ளிக்கு ஒரே ஆண்டில் அரசுப்பள்ளியை நோக்கி வந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் முதல் வகுப்பிலிருந்தே கணினி கல்வி மற்றும்  கணினி வழிக்கல்வி அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுவதால் புதிய மாணவர் சேர்க்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றது.
கல்வியில் கணினி அறிவியல் பாடம்.
இதற்காக, 8 - 10ம் வகுப்புமாணவர்களில், ஐ.டி., நெட்வொர்க் உருவாக்கப்பட்டு, அதில், ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். கேரள கல்வி கட்டமைப்புக்கான தொழில்நுட்பம் என்ற பெயரில், மாநில அரசின் சார்பில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், தொழில்நுட்ப கல்வி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.  இதற்காக , 30 ஆயிரம் மாணவர்களுக்கு, 'மொபைல் ஆப்' உருவாக்கம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, அவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் வகையில், 'ஹார்டுவேர், அனிமேஷன், சைபர் சேப்டி, எலக்ட்ரானிக்ஸ்' மற்றும் மலையாளம் கம்ப்யூட்டிங் உள்ளிட்டவை குறித்து, கற்றுக் கொடுக்கின்றனர்.

கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலம்.
2016-ம் ஆண்டுக்கான கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் கணினிக் கல்வி பயின்றவராக உள்ளனர்.
கேரளாவில் 49 சதவீதத்தினர் அதாவது 39.17 லட்சம் குடும்பங்களில், தலா ஒருவர் கணினி அறிவு பெற்றிருப்பதால் அம்மாநிலம் கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலமாக உள்ளது. பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.
கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற மற்ற பாடங்களைப் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், அம்மாநிலத்துக்கு முன்னோடியாக 2011-ம் ஆண்டே அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை தமிழக அரசு தொடங்கியது. ஆனால், தற்போது தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தை பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் இன்று பல புரட்சிகளை செய்தாலும், கணினி கல்விக்கு முக்கியத்துவம் தராதது வேதனைக்குரியது. மத்திய அரசின் மூலம் கிடைக்கப் பெறும் நிதியை முறையாக செயல்படுத்தி அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை முறையாக மாணவர்களுக்கு கற்பிக்க மாநில அரசும், பள்ளி கல்வித்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் 
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655 /2014

தலைமை ஆசிரியருக்கு கத்திக்குத்து எதிரொலி: ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு நிதியுதவி பெறும் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் பாபு (57). இவர் மாணவரை செய்முறை ேதர்வுக்கு செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர், தலைமை ஆசிரியரை கத்தியால் சரமாரி குத்திவிட்டார். இதில் படுகாயம் அடைந்த தலைமை ஆசிரியர், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் செங்கல்பட்டுக்கு வருகை தந்தார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்தியது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். அவர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். கத்திக்குத்துப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமை ஆசிரியருக்கு மருத்துவ செலவாக ரூ.20 லட்சம் அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

5-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுடன் தரையில் அமர்ந்து பாடம் கேட்ட திருவண்ணாமலை ஆட்சியர்

திருவண்ணாமலை அடுத்துள்ள மலப்பாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளான பூஜா, மற்றும் வைஷ்ணவி ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்புற சூழல் குறித்து தங்களிடம் சில நல்ல திட்டங்கள் இருப்பதாகவும் அதை மாவட்ட ஆட்சியர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி கடிதம் எழுதினார்கள்.
இதை படித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அந்த மாணவிகளை அழைத்து திட்டங்களை முழுவதுமாக கேட்டறிந்தார். அவர்களின் திறமையை பாராட்டும் விதமாக தன்னுடைய ஆட்சியரின் இருக்கையில் அமர வைத்தும் அழகு பார்த்தார். அத்தோடு மட்டுமில்லாமல் இன்று அம்மாணவிகளை அழைத்து திருவண்ணாமலை வேங்கிகால் புதூரில் உள்ள அரசு தொடக்கபள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பூஜாவையும், வைஷ்ணவியையும் தங்களின் சுற்றுச் சூழல் குறித்த திட்டத்தை மாணவர்களுக்கு பாடம் எடுக்க சொல்லி பெருமைப்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் ஆகிய இருவரும் ஒன்றாக தரையில் அமர்ந்து கைத்தட்டி மாணவர்களின் பாடத்தை கேட்டறிந்தனர்.
பள்ளி மாணவிகள்தானே என்று அலட்சியமாக இல்லாமல் மாணவர்களளின் திறமைகளையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற ஆட்சியரின் இச்செயல் பாராட்டுக்குரியது என ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆசிரியர்களுக்கான 2018-19 ஆண்டிற்கான பணிமாறுதல் கால அட்டவணை

எய்ம்ஸ்’ மருத்துவ நுழைவுத் தேர்வு ஆன்லைன் பதிவு தொடங்கியது!

                                          

மத்திய சுகாதாரத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் 
செயல்படும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இம்மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் இன்று தொடங்கியது.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிற ஆசை மருத்துவம் படிக்க விரும்பும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இருக்கும். அதற்கு மத்திய அரசின் சுகாதாரத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (பிப்ரவரி 5) தொடங்கியது. அடுத்த மாதம் (மார்ச்) 5ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாகத் தேர்வு எழுதும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, மாணவர்கள் இனி தேர்வு எழுதத் தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. இணயதளம் வழியாகவே தேர்வு எழுதலாம்.

இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் புது டெல்லி, பாட்னா, புவனேஸ்வரம், குண்டூர் உள்பட 9 நகரங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரலாம்.

மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக ஆன்லைனில் aiimsexams.org என்ற வலைத்தளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தற்போது பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளும் இந்த நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இன்ஜி., முதல் பருவ தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு கணிதம், இயற்பியலில் 50 சதவீதம் பேர், 'அவுட்'

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் முதல் பருவ தேர்வில், கணிதம் மற்றும் இயற்பியலில், 
50 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன.
அண்ணா பல்கலை இணைப்பு அந்தஸ்தில் உள்ள, 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் பி.ஆர்க்., கல்லுாரிகளில், தன்னாட்சி கல்லுாரிகள் தவிர, மற்ற கல்லுாரிகளில், அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அண்ணா பல்கலையின் வினாத்தாள்கள் கடினமாகவும், மாணவர்களின் சிந்தனை திறனை சோதிக்கும் வகையிலும் தயாரிக்கப்படுகின்றன. அதனால், அண்ணா பல்கலை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், எந்த போட்டி தேர்வையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.

இந்நிலையில், 2017ல், பிளஸ் 2 படிப்பை முடித்து, இன்ஜினியரிங் மற்றும் ஆர்கிடெக்ட் படிப்பில் சேர்ந்த மாணவர்கள், நவம்பரில் நடந்த முதல் பருவ தேர்வில் பங்கேற்றனர். அண்ணா பல்கலையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு நடந்த, முதல் தேர்வு இது.முதல் பருவதேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு முடிந்து, தேர்வு முடிவுகளை, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஜி.வி.உமா நேற்று அறிவித்தார்.



அண்ணா பல்கலையின் இணையதளம் மட்டு மின்றி, மாணவர்களின் மொபைல்போன் எண்களுக்கும் நேரடியாகவே, மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டன. பகல், 2:00 மணி முதல், 'ரிசல்ட்' வெளியிடப்பட்டது.இந்த தேர்வு முடிவில், கணிதத்தில், 43.67; இயற்பியலில், 52.77 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக, ஆங்கிலத்தில், 80.48 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடல்சார் இன்ஜி., வேதியியல் பாடத்தில், 71.59; பொது வேதியியலில், 59.08; சிக்கலான கணக்குகளை தீர்க்கும் வகையிலான, 'ப்ராப்ளம் சால்விங்' பிரிவில், 61.7; இன்ஜி., கிராபிக்ஸ், 63.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுஉள்ளனர். இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகளுக்கு உதவும், தொழில்நுட்ப ஆங்கிலத்தில், 55.68 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

கணிதம் மற்றும் இயற்பியலில், 50 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறாததால், அந்த பாடங்களில் மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க, இன்ஜி., கல்லுாரிகள் முடிவு செய்து உள்ளன.இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில், 'பிளஸ் 2வில், மனப்பாட முறையில் படித்து வந்த பல மாணவர்கள், கணிதம், இயற்பியலில் சிக்கலான கணக்குகளை தீர்க்க சிரமப்பட்டுள்ளனர்.'அவர்களுக்கான பயிற்சிகள் தொடர்கின்றன. இரண்டாவது பருவ தேர்வுகளில், இந்த நிலைமை மாறிவிடும்' என்றனர்.

தமிழ் வழியில் மதிப்பெண் குறைவு தமிழ் வழி மாணவர்கள், ஆங்கில வழி மாணவர்களை விட, குறைந்த தேர்ச்சி பெற்றுள்ளனர். வேதியியலில், 37.24; இன்ஜி., கிராபிக்ஸ், 62.46; 'ப்ராப்ளம் சால்விங்' 64.52; கணிதம், 26.39; இயற்பியல், 33.14 சதவீதம் பேர் தேர்ச்சியாகி உள்ளனர். 'ப்ராப்ளம் சால்விங்' பிரிவில், ஆங்கில வழி மாணவர்களை விட, தமிழ் வழியில், 2.82 சதவீதம் பேர் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மொபைல்போனில், 'ரிசல்ட்' வழக்கமாக இணையதளத்தில் மட்டுமே, அண்ணா பல்கலையின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முறை, மாணவர்களின் மொபைல்போன் எண்ணுக்கு, நேரடியாக மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டது. பெரும்பாலான மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோரின் மொபைல்போன் எண் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவர்களுக்கு பிள்ளைகளின் மதிப்பெண் தெரிய வந்தது. புதிய விதிகளின் படி, ஆங்கிலத்தில், 'ஓ' பிரிவு முதல் வகுப்பாக கருதப்படுகிறது. 'ஏ, ஏ பிளஸ், பி, பி பிளஸ்' ஆகிய தர வரிசை எண்களில் உள்ளவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள். அதற்கு குறைவான மாணவர்கள் தேர்வை, மீண்டும் எழுத வேண்டும்.

2013 தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு படிப்படிப்படியாக வேலை - செங்கோட்டையன் பேட்டி!!!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி்க்கு உட்பட்ட 
பகுதிகளில் ரூ.33 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல்

நாட்டினார்.


பின்னர் செய்தியாளா்கள் சந்திப்பின் போது பேசிய அவர்,

2013ஆம் ஆண்டு வெயிட்டேஜ் உள்ளவா்களுக்கும் இப்பொழுது புதிதாக வரக்கூடியவா்களுக்கும் எப்படி அதை பரிசீலிப்பது என்று அரசு கோப்புகள் நகா்ந்து கொண்டுள்ளது. மிகவிரைவில் அதற்கான நல்லமுடிவுகள் மேற்கொள்ளப்படும். 13 ஆயிரம் வேலைவாய்ப்பு என்பது படிப்படியாக எங்கெங்கே ஆசரியர் காலிப்பணியிடங்கள் வருகிறதோ அங்கு நிரப்பப்படும்.

நீட்தேர்வில் விலக்கு வேண்டும் என்று தொடா்ந்து அந்த முயற்சிகளை நாம் மேற்கொண்டுவருகிறோம் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்கையும் துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

+1 பொதுத்தோ்வு என்பது தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த பணிகளில் தற்போது விடைத்தாள்கள் சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் ஆசிரியா்களுக்கு எப்படி வருகிறது என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


செங்கோட்டையனுக்கு அரசியல் தெரியாது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருந்த கருத்துக்கு  பதிலளித்த அமைச்சா் செங்கோட்டையன் யார் கேட்கின்ற கேள்விக்கும் யார் சொல்கின்ற கேள்விக்கும் நான் பதில் சொல்வது வழக்கம் இல்லை. அவர்கள் ஏதோ கருத்துக்களை சொல்லிக் கொண்டுடிருப்பார்கள், அதற்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் என் துறையின் வளா்ச்சி என்பது மங்கிப்போய்விடும் என்று தெரிவித்தார்.

கனவு ஆசிரியர்' விருதுக்கு ஆன் லைன் விண்ணப்பம்???

கனவு ஆசிரியர்' விருது குறித்து எழும் சர்ச்சைகளுக்கு, முற்றுப்புள்ளி 
வைக்கும் நோக்கில், 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை அமல்படுத்த, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் துடிப்பான, இளம் ஆசிரியர்களுக்கு, நடப்பாண்டில் முதன்முறையாக, 'கனவு ஆசிரியர்' விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க, ஜன., 29ம் தேதியுடன், அவகாசம் முடிந்த நிலையில், நேற்று அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தலா, 12 ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப, இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, விருதுக்கு தகுதியானோர் பட்டியல், அனுப்ப வேண்டாமென, நேற்று காலை தெரிவிக்கப்பட்டது. இதோடு, கனவு ஆசிரியர் விருதுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்படும் எனவும், தகவல் வெளியாகி உள்ளது. முதன்மை கல்வி அலுவலர், அய்யண்ணனிடம் கேட்ட போது, ''கனவு ஆசிரியர் விருதுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்து, அதிகாரபூர்வ தகவல் இல்லை. ஆனால், விரைவில் தகவல் வெளியாகலாம்,'' என்றார்.

சி.இ.ஓ.,க்கள் கூட்டம் மாற்றம்!!!

மதுரை: மதுரையில் தேர்வுத்துறை சார்பில் நடக்க இருந்த, அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம், சென்னைக்கு மாற்றப்பட்டது.
மார்ச் 2018, பொதுத் தேர்வுகள் தொடர்பாக, அனைத்து சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் ஆலோசனை கூட்டம், மதுரையில், பிப்.,9ல் நடப்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதிகாரிகள் தங்குவதற்கு, ஓட்டலில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், 'பிப்., 9ல் சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தப்படும்' என, கல்வி இயக்குனர், இளங்கோவனும் அறிவித்தார். ஒரே நாளில், இரண்டு இயக்குனர்களும் கூட்டம் நடத்த முடிவு செய்ததால், மதுரை கூட்டம் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அமைச்சர், செயலர் பங்கேற்க முடிவு செய்துள்ளதால், கடைசி நேரத்தில், சென்னையில் நடத்த கல்வித்துறை முடிவு செய்தது' என்றார்

நீட்' தொடர்பான தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

சென்னை: 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் 
என்ற தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திங்களன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எந்த மாற்றமம் இல்லை. இவ்வாண்டு 'நீட்' தேர்வில் அரசின் பயிற்சி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட வாரியாக பயிற்சி மையங்களில் தேர்வு செய்யப்படும் 2000 மாணவர்களுக்கு சென்னையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியின் மூலம் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களின் மதிப்பெண்களை வைத்து மதிப்பீடு செய்கிறோம்; மத்திய அரசின் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் மாணவர்களுக்கு மொபைல் ஆப் மூலம் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

வங்கியில் ரூ.2,410; கையில் ரூ.1,520... முதல்வரின் சொத்து இது!

புதுடில்லி : திரிபுரா முதல்வர், மாணிக் சர்க்கார், தன் வங்கிக் கணக்கில், 2,410 
ரூபாயும், கையிருப்பாக, 1,520 ரூபாயும் இருப்பதாக, தேர்தல் கமிஷனிடம் வழங்கி உள்ள சொத்து கணக்கில் குறிப்பிட்டு உள்ளார்.

முடிவு

வட கிழக்கு மாநிலமான, திரிபுராவில், முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில், மார்க்.கம்யூ., ஆட்சி நடக்கிறது. தொடர்ந்து, 20 ஆண்டுகளாக, திரிபுராவின் முதல்வராக, இவர் பதவி வகிக்கிறார்.

திரிபுராவில், 18ல், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மார்ச், 3ல், ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இந்நிலையில், தன்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும், முதல்வர் மாணிக் சர்க்கார், தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ள சொத்து விபரங்களை பார்த்து, பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.மாணிக் சர்க்கார், தன் வங்கிக் கணக்கில், 2,410 ரூபாயும், கையிருப்பு தொகையாக, 1,520 ரூபாயும் வைத்திருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். 2013 சட்டசபை தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விபரத்தில், வங்கிக் கணக்கில், 9,720 ரூபாய்வைத்திருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

மத்திய அரசு ஊழியர் முதல்வராக ஆட்சியில் இருந்த போதும், ஐந்து ஆண்டுகளில், அவரது வங்கி சேமிப்பு, 7,310 ரூபாய் குறைந்துள்ளது. மேலும், அவருக்கு சொந்தமாக வாகனம்எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.


மாணிக் சர்க்காரின் மனைவி, பாஞ்லி பட்டாசார்ஜி, மத்திய அரசு ஊழிய ராக பணியாற்றினார்.

அவரிடம், 20 ஆயிரத்து, 140 ரூபாய் கையிருப்பாகவும், 12 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பாக இருப்பதாகவும், 20 கிராம் தங்க நகைகள் வைத்து உள்ளதாகவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : எல்லை விரிவாக்க அரசாணை வெளியீடு!!!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை விரிவாக்க அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சில கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் அரக்கோணம், நெமிலி தாலுகாவில் உள்ள சில கிராமங்களும் சிஎம்டிஏ உடன் இணைக்கப்பட்டுள்ளது. தரமான உள்கட்டமைப்பு மற்றும் சீரான வளர்ச்சி ஆகியவற்றை இலக்காக கொண்டு சென்னை நகரத்தின் எல்லையில் விரிவாக்கப்படும் என்று சென்ற ஆண்டு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முன்னதாக சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படுவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, சென்னை மாவட்டம் இனி 122 வருவாய் கிராமங்கள், 16 வட்டங்கள், 3 கோட்டங்களுடன் சுமார் 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக இருக்கும். மேலும் தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட வடசென்னை கோட்டத்தில் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களும், அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மத்திய சென்னை கோட்டத்தில் அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களும், கிண்டியை தலைமையிடமாகக் கொண்ட தென்சென்னை கோட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1974-ம் ஆண்டு சிஎம்டிஏ செயல்பட தொடங்கிய போது சென்னை பெருநகர எல்லை 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. 40 ஆண்டுகளாக சென்னை பெருநகர எல்லையில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது சென்னை பெருநகரத்துடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களும் அரக்கோணம் தாலுக்காவும் இணைக்கப்படவுள்ளன.

இதனால் சென்னையின் எல்லை 8,878 சதுர கிலோமீட்டராக பிரம்மாண்ட வடிவம் பெற இருக்கிறது. சென்னை பெருநகர விவரிவாக்கத்தின் முறையான திட்ட அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ம் ஆண்டில் சென்னையின் மக்கள் தொகை 1.30 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக பெருநகர விரிவாக்கம் பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு : லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணி!

                                      


லக்ஷ்மி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள தலைமை நிதி அதிகாரி 
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : தலைமை நிதி அதிகாரி

பணியிடம் : சென்னை

கல்வித் தகுதி : சி.எ., முடித்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி : 14.02.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1OQR4RcZFRAD0fuGqnWwAcvBwONXOr3HJ/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

தமிழக அரசில் ஆய்வக உதவியாளர் பணி!!!

டில்லி மெட்டோவில் 1896 பணியிடங்கள்!!!

CRC LEVEL TRAININGS SCHEDULE 2018 - 2019 (PRIMARY TEACHERS)

CRC LEVEL TRAINING SCHEDULE 2018 - 2019 (UPPER PRIMARY TEACHERS)

ஸ்கூட்டர் மானியத்திற்கு கால அவகாசம் நீடிப்பு!!!

CM CELL REPLY- A,B பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் தற்போது வழங்க இயலாது - தமிழக அரசு பதில்


கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப்.13 உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு.


கனவு ஆசிரியர்' விருதுக்கு ஆன் லைன் விண்ணப்பம்?

கனவுஆசிரியர்' விருது குறித்து எழும் சர்ச்சைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை அமல்படுத்த, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் துடிப்பான,
இளம் ஆசிரியர்களுக்கு, நடப்பாண்டில் முதன்முறையாக, 'கனவு ஆசிரியர்' விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க, ஜன., 29ம் தேதியுடன், அவகாசம் முடிந்த நிலையில், நேற்று அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தலா, 12 ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப, இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, விருதுக்கு தகுதியானோர் பட்டியல், அனுப்ப வேண்டாமென, நேற்று காலை தெரிவிக்கப்பட்டது. இதோடு, கனவு ஆசிரியர் விருதுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்படும் எனவும், தகவல் வெளியாகி உள்ளது. முதன்மை கல்வி அலுவலர், அய்யண்ணனிடம் கேட்ட போது, ''கனவு ஆசிரியர் விருதுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்து, அதிகாரபூர்வ தகவல் இல்லை. ஆனால், விரைவில் தகவல் வெளியாகலாம்,'' என்றார்

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப் படுத்தப்படுமா ? டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு அரசிடம் விரைவில் அறிக்கை

6/2/18

TNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13,000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்

அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை : விரைவில் அரசாணை

'சிவகங்கை: அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு மே மாதம் தலா 15 நாட்கள்
அமைப்பாளருக்கும், உதவியாளருக்கும் கோடை விடுமுறை விட அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்களில் 25 லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தில் இணை உணவும், மாநில அரசு திட்டத்தில் மதிய உணவும் வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகின்றன. ஆனால் அங்கன்வாடி மையங்களுக்கு இல்லை.பெரும்பாலான மையங்களில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையே உள்ளன. இதனால் குழந்தைகளுக்கு அம்மை, கொப்புளங்கள் போன்ற வெப்ப நோய் தாக்குகின்றன. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருகின்றனர். ஊழியர்கள் மட்டும் பணிக்கு செல்லும் நிலை உள்ளது. இதையடுத்து கோடை விடுமுறை கேட்டு அங்கன்வாடி மைய ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஆண்டில் 300 நாட்களும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இணை உணவு கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விடுமுறை விட அரசு தயக்கம் காட்டியது. கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு பிப்., 6 முதல் பிப்., 8 வரை தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.பிப்., 1 சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஊதிய முரண்பாடுகளை களைவதாகவும், மையங்கள் மூடாதபடி மே மாதம் தலா 15 நாட்கள் அமைப்பாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும் விடுமுறை விடப்படும் என, தெரிவித்தனர். விரைவில் விடுமுறைக்கான அரசாணை வெளியாக உள்ளது.

'எய்ம்ஸ்' நுழைவு தேர்வு : ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்

எய்ம்ஸ் கல்லுாரிகளில், மருத்துவ படிப்பில் சேர, மே,
26, 27ல் நுழைவு தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவு, இன்று துவங்குகிறது.
நாட்டின் உயரிய மருத்துவ கல்வி நிறுவனங்களாக, மத்திய அரசின், 'எய்ம்ஸ்' கல்லுாரிகள் செயல்படுகின்றன. மத்திய சுகாதார துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, இந்த கல்லுாரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நுழைவு தேர்வு எழுதி, தேர்ச்சி பெறவேண்டும். வரும் கல்வி ஆண்டில், இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, மே, 26 மற்றும், 27ல் நடத்தப்படும் என, எய்ம்ஸ் நிறுவனம் அறிவித்துஉள்ளது. அதற்கான, 'ஆன்லைன்' பதிவு இன்று துவங்குகிறது. இந்த ஆண்டு, கணினி வழியில் மட்டுமே, நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வில் பங்கேற்க, இன்று முதல் மார்ச், 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புதுடில்லி, பாட்னா, புவனேஸ்வர், குண்டூர் உட்பட, ஒன்பது இடங்களில் உள்ள கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, இந்த நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, https://www.aiimsexams.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

இன்ஜி., முதல் பருவ தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு!!!

சென்னை: அண்ணா பல்கலையில், முதல் பருவ தேர்வு முடிவுகள், இன்று
வெளியிடப்படுகின்றன. 1.33 லட்சம் மாணவர்களுக்கு மொபைல் போனில், 'ரிசல்ட்' அனுப்பப்படுகிறது.
அண்ணா பல்கலை இணைப்பில், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில், தன்னாட்சி கல்லுாரிகள் தவிர, மற்ற கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு, நவம்பர், டிசம்பரில் நடந்தது. இந்த தேர்வில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. பல்கலையின் தேர்வுத்துறையில், மாணவர்களின் மொபைல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அந்த மொபைல் எண்களுக்கு, மாணவர்களின் தேர்வு முடிவுகள், குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமா தெரிவித்துள்ளார். 'எந்தெந்த கல்லுாரிகள் சார்பில், தேர்வு கட்டணம் செலுத்தவில்லையோ, அந்த கல்லுாரி மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்' என, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

pay matrix single page

மாவட்ட கருவூலத்திற்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்க கிடப்பில் போடப்பட்ட முதன்மை செயலர் பரிந்துரை!!!

மதுரை, பிப். 5--மதுரை மாவட்ட கருவூலத்தில் ஊழியர் பற்றாக்குறையால் ஒருவர் 4 ஆயிரம் 
ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்கும் அவலம் நிலவுகிறது. கூடுதல் ஊழியர்களை நியமிக்க ஏதுவாக, மாவட்ட கருவூலத்தை ஓய்வூதிய அலுவலகமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட கருவூலத்தில் 1980 க்கு முன்பு வரை தேவையான ஊழியர்கள் இருந்தனர். இங்கிருந்த ஊழியர்கள் 1980 ஜன., 24 துவங்கப்பட்ட திண்டுக்கல் கருவூலம், 1987 செப்., 1 துவக்கப்பட்ட மதுரை சம்பளக்கணக்கு அலுவலகம், 2000 அக்., 1 துவங்கப்பட்ட தேனி கருவூலத்திற்கு பிரித்து அனுப்பப்பட்டனர். புதிய அலுவலகங்கள் துவங்கிய போதெல்லாம் இங்கிருந்து ஊழியர்கள் மாற்றப்பட்டதால் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் எண்ணிக்கை மட்டும் 44 ஆயிரம் உள்ளது. மாதந்தோறும் 100 பேர் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற துவங்குகின்றனர். தற்போது ஒரு கருவூல அலுவலர், ஒரு உதவி அலுவலர், 10 கணக்கர்கள், 5 கண்காணிப்பாளர்கள் தான் பணிபுரிகின்றனர். இவர்கள் 44 ஆயிரம் ஓய்வூதியர்கள் உட்பட அரசு ஊழியர்களின் சம்பளம் உட்பட அனைத்துப் பணிகளையும் கவனிக்கின்றனர். ஒரு கணக்கர் குறைந்தது 4 ஆயிரம் ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்க வேண்டியுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒரு ஊழியர் 750 ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்கிறார். எனவே கூடுதல் ஊழியர்களை நியமிக்க ஏதுவாக மாவட்ட கருவூலத்தை ஓய்வூதிய அலுவலகமாக மாற்ற வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. ஆனால் நடவடிக்கை இல்லை.மூத்த குடிமக்கள், ஓய்வூதியர் நலச்சங்க தலைவர் காளிதாஸ் கூறியதாவது: ஓய்வூதிய வழங்கும் அலுவலகத்தின் அவசியத்தை உணர்ந்து கருவூலத்துறை முதன்மை செயலர் ஜவஹர் நிதித்துறையினருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் நிதித்துறையில் அவரது பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதிய பணிகளில் மந்தம் நிலவுகிறது. நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

தேர்வு முறையில் பழைய நிலையே தொடரும்’: சி.பி.எஸ்.இ.,

சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில்,
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், 6 - 8ம் வகுப்பு வரை, ஒரே மாதிரியான தேர்வு முறையை அமல்படுத்தவும், மதிப்பீட்டு முறையிலும் ஒரே நடைமுறையை பின்பற்றவும், அந்த வாரியம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு, பெற்றோர், மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
எனினும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட முறையில், 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால், மாணவர்களின் தன்னம்பிக்கையையும், திறனையும் மேம்படுத்தவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்தது.
இதற்கிடையே, சி.பி.எஸ்.இ.,யின் அறிவிப்புக்கு, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நல கமிஷன் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இத்திட்டம் கைவிடப்படுவதாக, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

சமூக வலை தளங்களில் பரவும் ரயில்வே வேலை குறித்த தகவலை நம்ப வேண்டாம்!!!

வேலைவாய்ப்பு : பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் பணி!

                                                  


இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில்
காலியாக உள்ள சயின்டிஸ்ட்/இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 106

பணி இடம் : பெங்களூரு

பணியின் தன்மை : சையின்டிஸ்ட்/இன்ஜினியர்

வயது வரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ. 56100/-

கல்வித் தகுதி : பிஇ/பிடெக்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கட்டணம் : ரூ.100/- இதனை ஆன்லைன் வழியாகவும், அல்லது அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.

கடைசித் தேதி : 20.02.2018

மேலும் விவரங்களுக்கு https://www.isro.gov.in/sites/default/files/advtsciengrsc2018detailedforweb.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Hero Motocorp நிறுவனத்தில் 6577 வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது!!!

வேலையின் பெயர்:  Manager and various Roles


சம்பளம் : Rs.55,000/- per month.

தேர்வு முறை: Written test

Apply Link: https://goo.gl/SSncek

கல்வி:  Any Degree

கடைசி நாள்: 20.03.2018

மேலும் தகவலுகள்
https://goo.gl/SSncek
www.sstaweb.com

I.T SOFTWARE 11.0


Click here

ஊதிய முரண்பாடு களையப்படவில்லை' - போராட்டத்தை அறிவித்தது இடைநிலை ஆசிரியர்கள் சங்கம். 05/02/2018 SSTA-பொதுச்செயலாளர் பேட்டி

                                                       

ஊதிய முரண்பாடு களையப்படவில்லை' - 
போராட்டத்தை அறிவித்தது இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்* *(SSTA)*
Vikatan 5 Feb. 2018 18:36
  Vikatan

ஆசிரியர்கள் தங்கள் ஊதிய உயர்வு குறித்துப் போராட்டங்கள் நடத்தும்போது, 'இந்த வாத்தியாருகளுக்கெல்லாம் என்ன கேடு. வருசத்துல பாதிநாள்தான் வேலை. கை நிறைய சம்பளம். அதையும் வாத்தியார்கள் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறாங்க" என்றெல்லாம் பொதுப்புத்தி மக்களின் மனதில் ஊடுறுவிக்கிடக்கிறது. ஆனால், இடைநிலை ஆசிரியர்களின் புலம்பலும் வேதனையும் வேறுமாதிரியாக இருக்கின்றன. இடைநிலை ஆசிரியர்கள் என்பவர்கள், 1-ம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்கள். இப்படி வேலை செய்யும் இந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது என்று இவர்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். அதுபற்றிய விவரங்களை இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) என்ற அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் நம்மிடம் விவரித்தார்.
"2009-க்குப் பிறகு, நியமனம் செய்யப்பட்ட 21,000 இடைநிலை ஆசிரியர்கள் இருக்கிறோம். எங்களில் 1.6.2009-க்கு முன் வேலையில் சேர்ந்தவர்களுக்கு அடிப்படை ஊதியம் 11,170 என்றும் 1.6.2009-க்குப் பின்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,000 என அடிப்படை ஊதியத்தில் 3,170-ஐ குறைத்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரே பதவி, ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி இருந்தும் இருவேறுபட்ட அடிப்படை ஊதியங்களை இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வருகிறோம். இந்த ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் ஆரம்பித்து இந்த வருடம் ஜனவரி

மாதம் வரை பல்வேறு போராட்டங்களைச் சென்னையிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்திவிட்டோம். அரசும் எங்களை அழைத்து 8 நாள்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. முடிவில், 2009-க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்ய பரிந்துரைக்கப்படும் என எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்தது.
ஆனால், இன்றுவரை உத்தரவாதத்தை நிறைவேற்றாமல் 8 ஆண்டுகளாகத் தொடர்ந்த அதே ஊதிய முரண்பாடுகளை இந்த ஊதியக் குழுவிலும் தொடர்ந்துள்ளது. இதனால் ஒரு நாள் இடைவெளியில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு 12 ஆண்டுகள் வருடாந்தர ஊதிய வித்தியாசம் ஏற்படுகிறது. இந்தத்தொகை முரண்பாடு பல லட்சங்களைக்கொண்டதாக இருக்கிறது. தற்போது தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு துப்புரவுப் பணியாளர்கள் பெறும் ஊதியமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் ஊதிய முரண்பாட்டைக் களையவும் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டியும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கடந்த 6.1.2018 அன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தோம். ஆனாலும், அரசு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையவில்லை. இதனால், அடுத்தகட்டப் போராட்டங்களை நடத்துவதற்குத் தயாராகிவிட்டோம். வருகிற மார்ச் மாதம் துப்புரவு பணியாளர்கள் ஊதியத்தைப் போன்றே இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதை மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உணர்த்தும் வகையில் DPI வளாகத்தில் துப்புரவு செய்யும் போராட்டமும் இரண்டாம் கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் தலைமைச் செயலக முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம்" என்றார் ஜே.ராபர்ட்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

4/2/18

ITI/டிப்ளமோ தகுதிக்கு காரைக்குடி CECRI-ல் பல்வேறு பணிகள் காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் (CECRI) சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தில் காலியாக உள்ள 17 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்த காலியிடங்கள்: 17

பணியிடம்: காரைக்குடி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Fitter – 01

பணி:  Welder – 02

பணி:  Wireman – 01

பணி:  Ref. & A/C Mechanic – 03

பணி:  Draughtsman (Civil) – 01

பணி:  PASAA  – 03

பணி:  Plumber – 01

பணி:  Carpenter  – 01

பணி:  Mechanical Engineering – 01

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ITI/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது:  14 வயது பூர்த்தியடைந்திருக்க  வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் http://www.cecri.res.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து நேர்,நேர்முகத்தேர்வின்  போது சமர்ப்பிக்க வேண்டும். 

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 21.2.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Central Electrochemical Research Institute, Karaikudi

கூடுதல்  விவரங்கள் அறிய  http://www.cecri.res.in/Portals/0/Careers/APP-02-2018_AdvtCopy.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

அரசு ஊழியர்களின் வெளிநாட்டு வேலைக்கு செக்: நீதிமன்றம் அதிரடி!!!

அரசு ஊழியர்கள் வெளிநாட்டில் பணிபுரிவது தொடர்பாக 
அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


அரசு ஊழியர்களை வெளிநாட்டில் வேலை பார்க்க அனுமதிக்கும் அரசாணை எப்படி செல்லத்தக்கது? எத்தனை பேர் வெளிநாட்டு வேலையை முடித்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்? வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அளிக்கப்படும் அதிகபட்ச கால வரம்பு எவ்வளவு? தமிழகத்தில் எத்தனை பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்? ஆகிய கேள்விகளுக்கு மாநில பொதுத்துறை செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.


ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பரகத் அலிகான். இவர் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லா விடுமுறையில் 3 ஆண்டுகள் வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய அனுமதி அளிக்கும் அரசாணையின் அடிப்படையில் துபாய் வேலைக்கு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தார். அனுமதி கிடைப்பதற்கு முன்பு வெளிநாட்டு வேலையில் சேர்ந்து பணிக்காலம் முடிந்து மீண்டும் அரசு பணியில் சேர்ந்தார். இந்நிலையில் அனுமதி கிடைப்பதற்கு முன்பு பணியில் சேர்ந்தற்காக பரகத் அலிகானுக்கு ஊதிய உயர்வு நிறுத்த தண்டனை வழங்கப்பட்டது. இதனால் 4 ஆண்டுகள் அவரது பெயர் வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதனிடையே இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் துணை ஆட்சியர் பதவி உயர்வு மறுக்கப்பட்டது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் அவர் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அதிகாரிகள் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

 இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், “தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 3 ஆண்டுகள் சம்பளம் இல்லா விடுமுறையில் வெளிநாட்டில் வேலைபார்க்க அனுமதி வழங்கி தமிழக அரசின் பொதுத்துறை 20.5.1991-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இளைஞர்கள் வேலைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அப்படியிருக்கும் போது, அரசு ஊழியர்களை 3 ஆண்டுகள் விடுமுறை வழங்கி வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்க அனுமதி வழங்கி விட்டு நாடு திரும்பியதும் மீண்டும் அரசு பணியில் சேர அனுமதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

அரசு ஊழியர் ஒருவர் தாய் நாட்டிலும், வெளிநாட்டிலும் இரு வேலை பார்ப்பது எப்படி? என்பதை தீவிரமாக பார்க்க வேண்டும். இதனால் அரசு ஊழியர்களை வெளிநாட்டில் வேலை பார்க்கும் அரசாணையின் அடிப்படையில் எத்தனை பேர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்? இந்த அரசாணை எப்படி செல்லத்தக்கது? எத்தனை பேர் வெளிநாட்டு வேலையை முடித்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்? வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அளிக்கப்படும் அதிகபட்ச கால வரம்பு எவ்வளவு? தமிழகத்தில் எத்தனை பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்? ஆகிய கேள்விகளுக்கு மாநில பொதுத்துறை செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

DSE - பள்ளிகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்!!!

வேலைவாய்ப்பு: தெற்கு ரயில்வேயில் தொழில்பழகுநர் பயிற்சி!

                                                

தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவில் நிரப்பப்படவுள்ள தொழில்பழகுநர் 
பயிற்சியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 737

கல்வித் தகுதி: பத்து, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி, ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: கல்வித் தகுதி அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

கடைசி தேதி: 23.02.2018

மேலும் விவரங்களுக்கு http://www.sr.indianrailways.gov.in/cris/uploads/files/1516796744237-001-CW-PER-ActApp%20Notification-2018-SIGNED%20COPY.pdf
என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

பணிபுரியும் பெண்களுக்கான பட்ஜெட்!

                                                

2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பில்,பணிபுரியும் 
பெண்களுக்கான வருங்கால வைப்பு நிதி 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாகப் பெண்களும் ஆண்களும் தங்களது சம்பளத்திலிருந்து 12 சதவிகிதத்தைச் செலுத்துகின்றனர். இந்நிலையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பெண்கள் தங்களது சம்பளத்திலிருந்து செலுத்தும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியானது 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களது வீட்டுக்கு எடுத்துச்செல்லும் சம்பளத்தின் அளவு உயரும் என்பதால் பணிபுரியும் பெண்கள் இந்த பட்ஜெட் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் மொத்த பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு 40 சதவிகிதமாக இருக்கிறது. அதேநேரம் இந்தியாவில் அவர்களின் பங்களிப்பு 24 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என்று பொருளாதார வல்லுநர்களும் தொழில் துறை நிபுணர்களும் கூறுகின்றனர். அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ள வருங்கால வைப்பு நிதி அறிவிப்பு அதற்கு ஒரு பாதையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நீட் தேர்வு: மாணவர்களை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம்!!!

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் 
என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.

சென்னை, தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பட்ஜெட் விளக்க ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொருளாதார நிபுணர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு முன் தமிழிசை செளந்தரராஜன் நிருபர்களிடம் கூறியது:
தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஒரு கோரிக்கை. நீட் தேர்வு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த முறை நடத்தப்பட்டது. இதன் மூலம் தெருக்கோடியில் உள்ள மாணவர்களுக்குக் கூட நீட் மூலம் இடம் கிடைத்து மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, மறுபடியும் நிச்சயமற்ற தன்மையை வைத்துக் கொண்டு மாணவர்களை யாரும் குழப்பக்கூடாது.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மாநில பாடத் திட்டமும் நீட் தேர்வில் சேர்த்துக் கொள்ளப்படும் என மிகத் தெளிவாக கூறி உள்ளார். மாணவர்கள் இதில் தேர்ச்சி பெற நன்றாக படிக்கச் சொல்வதே சரி. இதில் அரசியல் கூடாது.
தமிழ் ஓங்கி ஒலிக்கும்: தமிழ் உணர்வு பாஜக-வுக்கு அதிகம் உள்ளது. வைகோ உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், இனிமேல் மொழியை வைத்து அரசியல் செய்ய முடியாது.
தமிழ் மொழி முதுமொழி; தெய்வமொழி. பாஜக ஆட்சியில் தமிழ் நிச்சயமாக தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கும். பாஜக தலைவர்கள் யாரும் தமிழ் பற்றில் வைகோவுக்கு குறைந்தவர்கள் அல்ல என்றார் தமிழிசை செளந்தரராஜன்.

பதவி உயர்வில் இழுபறி கல்வித்துறையில் அதிருப்தி!!!

பொதுத்தேர்வு பணிகள் புறக்கணிப்பு இயக்குனருக்கு அமைச்சு பணியாளர்கள் 'நோட்டீஸ்'

இடைக்கால நிவாரணம்: மின் ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு!!!

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான, ‘ஹால் டிக்கெட்’கள் 
வெளியிடப்பட்டு உள்ளன. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

மொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி திறன் தேர்வு, செய்முறை தேர்வு போன்ற விபரங்களை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாமல், தேர்வு மையங்களுக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் வசதி!!!

*சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் வசதி 
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கலாம் என்று பள்ளி கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ் அறிவித்துள்ளார். மேலும்,  காவல்துறை, மாவட்ட ஆட்சியர், பாஸ்போர்ட் உள்ளிட்ட துறைகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்*

பிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை!!!

புதிய கற்றல் முறை மற்றும் படிநிலைகள்!!!

                           
                                            



படிநிலைகள்
https://drive.google.com/file/d/1zjEkBhDqOR-Diau4H3CXVH28By4XRPue/view?usp=drivesdk

கற்றல்முறை
https://drive.google.com/file/d/11R16Fztjb2rIl4dor0GbKRDlatO7T5Cq/view?usp=drivesdk

4,603 நூலகங்கள் டிஜிட்டல் மயம்: பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தகவல்

தமிழகம் முழுவதும், 4,603 நுாலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்,'' 
என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, அண்ணா நுாலகம் சார்பில், 'நுாலகங்கள் மற்றும் தகவல் மையங்களின் முன்னேற்றத்துக்கான சர்வதேச தற்போதைய நிகழ்வுகள்' என்ற தலைப்பிலான, தேசிய மாநாடு, நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: 

அண்ணா நுாற்றாண்டு நுாலக பணிகளுக்கு, ஐந்து கோடி ரூபாய்; மதுரை தமிழ் சங்கத்திற்கு, ஆறு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும், 312 நிரந்தர நுாலகங்களின் புத்தகங்கள், டிஜிட்டலுக்கு மாற்றப்பட உள்ளன. அவற்றில், 119 நுாலகங்களுக்கு, கணினி இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, 4,603 நுாலகங்களும் கணினி மயமாக்கப்படும். 32 மாவட்ட நுாலகங்களில், ஐ.ஏ.எஸ்., அகாடமியை, முதல்வர் திறந்து வைக்க உள்ளார். 12 மாவட்டங்களில், நடமாடும் மொபைல் நுாலக திட்டம் துவங்கப்பட உள்ளது.
மொபைல் நுாலகங்கள், காலையில் ஒரு பள்ளி, மாலையில் ஒரு பள்ளி என, மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பு பயிற்சி அளிக்கும். பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கூறும் ஓலைச்சுவடிகள், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தமிழக நுாலகங்களில், மூன்று மாதங்களில், ஒரு லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை போரில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண நுாலகத்துக்கு, ஒரு லட்சம் புத்தகங்களை அரசு வழங்க உள்ளது.மற்ற நாடுகளில் தமிழர்கள் வாழும் பகுதி நுாலகங்களுக்கு, 2,500 முதல், 5,000 வரையில் புத்தகங்கள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், பொது நுாலகத்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன்; இணை இயக்குனர், நாகராஜ முருகன் பங்கேற்றனர்.
நேற்று அமைச்சர்செங்கோட்டையன் அளித்த பேட்டி: 
'நீட்' தேர்வில் விலக்கு பெறுவதற்கு, தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை எதிர்கொண்டு, நீட் தேர்வுக்கான விலக்கு பெற, முதல்வர் தலைமையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நுாலகத் துறைக்கான, 'செஸ்' வரி விகிதத்தை, 4 சதவீதமாக, மத்திய பட்ஜெட்டில் உயர்த்தியுள்ளனர். இதன்மூலம், உள்ளாட்சி துறைகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.தற்போது, நுாலகத்துறை வளர்ச்சிக்கு, உள்ளாட்சித்துறை வழியாக கிடைக்கும், செஸ் வரியின் நிலுவைத் தொகையை பெற, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளோம். 
உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு, இதுகுறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தான் கண்டுபிடித்தது. தேர்வு பணியில் ஈடுபட்ட, டில்லியை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளோம்.வரும் காலங்களில், தேர்வு பணிகளில் தனியார் துறையை ஈடுபடுத்து வது குறித்து, பரிசீலித்து முடிவு எடுப்போம். இந்த பிரச்னையில், நாங்கள் எந்த விதமான விசாரணைக்கும், தயார் நிலையில் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

வாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.!!!

                                           
வாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை 
பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலி நாளுக்கு நாள் புதிய வேகத்தில் பயணித்து வருகிறது. வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் மக்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட வாய்ஸின் மூலம் தகவலை டைப் செய்து வசதி தற்போது புழகத்திற்கு வந்துள்ளது.
இத்துடன், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும், பணப்பரிமாற்ற வசதியும் விரைவில் அப்டேட் வெர்ஷனில் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆப்ஷனில் நெட் பேங்க் போன்று பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். சமீபத்தில் இதுக் குறித்த தகவலை அறிவித்த அந்நிறுவனம், இதுக் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகளிடன் கலந்து பேசி வருவதாகவும், அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தது.
இந்நிலையில், மெசெஜை பேசினால் அதுவாகவே டைப் செய்யும் அப்டேட் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன்படி, வாட்ஸ் அப்பின் செட்டிங்கிஸ் சென்று, விருப்பமான மொழியை முதலில் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு, தமிழ் இந்தியா என்ற ஆப்ஷனை தேர்வு செய்துக் கொள்ளவும். பின்பு அதில் தோன்றும் கிபோர்ட் வாய்ஸ் டைப்பிங்கில் பேசினால், நாம் அனுப்ப வேண்டிய தகவல் தானாகவே டைட் செய்யப்பட்டு விடும்.
வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட், பயன்படுத்துவோர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான தவறான மெசேஜ்களை 10 நிமிடத்திற்கு டெலிட் செய்யும் வசதி மற்றும் ஸ்டெடஸ் வசதி ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட்டிற்கு பிறகு, பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் கணிசமாக உயர்ந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலை.. வேலை... வேலை... இந்திய ரயில்வேயில் 26,502 லோகோ பைலட், டெக்னீசியன் வேலை

                                                  
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் 2018-ஆம் ஆண்டிற்கான 26 ஆயிரத்து
505 உதவி லோகோ பைலட், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் மார்ச் 5-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2018-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 50 ஆயிரம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர்களை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி லோகோ பைலட், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. இதில் சென்னைக்கு 945 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற வாழ்த்துக்கள்.
CENTRALISED EMPLOYMENT NOTICE (CEN) No.01/2018
மொத்த காலியிடங்கள்: 26,502
பணி: உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot)
காலியிடங்கள்: 17673
பணி: டெக்னீசியன் (Technicians)
காலியிடங்கள்: 8829
மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. RRB Ahmedabad - 164
2. RRB Ajmer - 1221
3. RRB Allahabad - 4694
4.. RRB Bangalore - 1054
5. RRB Bhopal - 1679
6. RRB Bhubaneswar - 702
7. RRB Bilaspur - 945
8. RRB Chandigarh - 1546
9. RRB Chennai - 945
10. RRB Gorakhpur - 1588
11. RRB Guwahati - 367
12. RRB Kolkata - 1824
13. RRB malda - 880
14. RRB Mumbai - 1425
15. RRB Muzaffarpur - 465
16. RRB Patna - 454
17. RRB Ranchi - 2043
18. RRB Secunderabad - 3262
19. RRB Siliguri - 477
20. RRB Thiruvananthapuram - 345
சம்பளம்: மாதம் ரூ.19,990 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: மெட்ரிக்/பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்தவர்கள், 3 டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதாவது: Armature and Coil Winder, Electrician, Electronics Mechanic, Fitter, Heat Engine, Instrument Mechanic, Machinist, Mechanic Diesel, Mechanic Motor Vehicle, Millwright Maintenance Mechanic, Mechanic Radio & TV, Refrigeration and Air-conditioning Mechanic, Tractor Mechanic, Turner, Wireman அல்லது மெட்ரிக், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட துறைகளில் தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரண்டீஸ்) முடித்தவர்கள் அல்லது 3 years Diploma in Mechanical, Electrical, Electronics, Automobile Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்டமாக நடத்தப்படும் கணினி வழியிலான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.250. இதனை நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தியும் ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: சென்னை மண்டலத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மண்டலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்குரிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  வேலை http://tz.ucweb.com/2_2mD7f

கடிதம் எழுதி கலக்டரை சந்தித்த 9ஆம் வகுப்பு மாணவியை தனது இருக்கையில் அமர வைத்த கலெக்டர்.*

தேசிய மருத்துவ காப்பீடு திட்டம்: அக்டோபர் 2 முதல் அமல் மத்திய அரசு அறிவிப்பு!!!

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏழைகளுக்கான தேசிய மருத்துவ காப்பீடு திட்டம்,
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், ஒரு நபர் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.

தேசிய அளவில் மிகப்பெரிய காப்பீடு திட்டமான இது, வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதியான காந்தி ஜெயந்தி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
மருத்துவத்துக்கு தற்போது அதிகளவில் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை முறையாக செயல்படுத்தும் பட்சத்தில் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் கிடைக்கும்.   

கலெக்டரை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டம்!!!

நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படும்!

                                       
தமிழகத்தில் ஏற்கனவே 100 நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,
நாளை (பிப்ரவரி 4) மீதமுள்ள 312 நீட் தேர்வு மையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 450 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 'ஸ்பீட்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து 20 கோடி ரூபாய் செலவில் நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வழங்கத் தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக 100 நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டது. நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவதற்காக தமிழக பள்ளிக்கல்வித் துறையின், http://tnschools.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் 2017 அக்டோபர் 31ஆம் தேதி வரை பதிவு செய்தனர்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய நூலகர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன், “பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக 12 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் செயல்படுத்தப்படும். நீட் தேர்விலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கமாகும். நீட் தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீட் பயிற்சிக்காக முதற்கட்டமாக 100 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை மீதமுள்ள 312 மையங்களும் தொடங்கப்படும். எனவே தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் நாளை முதல் 412 பயிற்சி மையங்களும் செயல்படும்” எனத் தெரிவித்துள்ளார்.