கல்வித் தரம் மோசமாக இருப்பது குறித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பூஜா குல்கர்னி எழுப்பிய கேள்விகளுக்கு, கிண்டல் தொனியில் பதிலளித்த, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள, அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஜனவரியில், திறனாய்வு தேர்வு நடந்தது. இதில், 40 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற, 14 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அக்., 30ம் தேதி, செய்யாறில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது, முட்நாட்டூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்னார்சாமியிடம், எஸ்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி விளக்கம் கேட்டார். அதற்கு, 'என்னை கேட்காமலேயே, பள்ளியில் தேர்வு வைத்து விட்டீர்கள்' என, கூலாக பதிலளித்ததாக தெரிகிறது.கீழ்கணவாயூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி, 'மலைவாழ் பசங்க; அப்படித்தான் இருப்பாங்க; நாங்க என்ன செய்ய முடியும்' என கூறியுள்ளார். எந்த கேள்விகளுக்கும், சரியான பதிலை அளிக்காமல், கிண்டலடிக்கும் தொனியில், இருவரும் பதில் கூறியதாக கூறப்
படுகிறது.இவர்கள் மீது, ஏற்கனவே பல புகார்கள் இருந்ததால், இருவரையும் சஸ்பெண்ட் செய்ய, குல்கர்னி உத்தரவிட்டார். அதன்படி, இருவரையும் சஸ்பெண்ட் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
முறைகேடு ஆசிரியரும்தப்பவில்லை!
ஜவ்வாதுமலை, பெருங்காட்டூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், 54, தொண்டு நிறுவனம் ஒன்றை துவக்கி, தன் மனைவியை தலைவராகவும், உறவினர்களை நிர்வாகிகளாகவும் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், நான்கு பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வந்தன. இதில், இரு பள்ளிகளை, ரவிச்சந்திரனின் மனைவி நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அரசு தெரிவித்த இடத்திற்கு மாறாக, வேறு இடத்தில் பள்ளியை துவக்கியது, அரசு ஒதுக்கிய பணத்தை முறையாக செலவு செய்யாமல், மாணவர்களுக்கு தரமற்ற உணவுகளை வழங்கியது உள்ளிட்ட முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.இதையடுத்து, ரவிச்சந்திரனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.