யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/8/16

பனிரெண்டா?

பள்ளிக்கூடம் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியுமா

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்

பிரச்சினைகள் தீர

பிரண்டைதுளசி தூதுவேளை நாட்டு வைத்தியம்

புதியதாக மொபைல் போன்

பூண்டுல இவ்ளோ இருக்கா

பெண்களின் பருவ மாற்றங்களும்

பொன்மொழிகள்

17/8/16

மாணவர் சேர்க்கையில் தில்லுமுல்லுவை தவிர்க்க குறைதீர் நடுவர்

கல்லூரி மற்றும் பல்கலைகளில் மாணவர் சேர்க்கையில், தில்லுமுல்லு நடப்பதை தவிர்க்க, குறைதீர் நடுவரை நியமிக்க வேண்டும்’ என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.


கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கு பல விதிமுறைகள் உள்ளன. இளநிலைக்கு, பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு, ’கட் ஆப்’ அடிப்படையிலும், முதுநிலை பட்டப்படிப்புக்கு, இளநிலை மதிப்பெண் அடிப்படையிலும், மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையும் பின்பற்றப்பட வேண்டும்.

பெரும்பாலான கல்லூரி மற்றும் பல்கலைகளில், இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. மாறாக, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சிபாரிசுகள், பேராசிரியர்கள், சங்கங்களின் சிபாரிசு கடிதங்களுக்கு முக்கியத்துவம் அளித்தும், ’செனட், சிண்டிகேட்’ உறுப்பினர்களுக்கான மறைமுக இட ஒதுக்கீட்டிலும், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இந்த முறைகேடுகள் குறித்து, மத்திய அரசுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, அனைத்து பல்கலைகளிலும், ’ஓம்புட்ஸ் மேன்’ எனப்படும், குறை தீர் நடுவரை நியமித்து, மாணவர்களின் குறைகளை தீர்க்கவும், சேர்க்கை தில்லுமுல்லுவுக்கு முடிவு கட்டவும், யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

சுவாரசியம் நிறைந்த ‘ஸ்பேஸ் சயின்ஸ்’!

தொழில்நுட்ப வளர்ச்சியில், தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் துறை ‘ஸ்பேஸ் சயின்ஸ்’!

விண்ணில் தோன்றும் நட்சத்திரங்களை கணக்கிடுவது என்பது சாத்தியமற்றது. ஆனால், விண்வெளியில் உள்ள கோல்கள், அதன் வடிவங்கள், சுற்று வட்ட பாதைகள் உள்ளிட்ட எண்ணிலடங்காத அறிவியல் தகவல்களை கண்டறிந்து கணக்கிடுவது சாத்தியமான ஒன்று!


புதிய சட்டக்கல்லூரி கட்டடங்களுக்கு நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

புதிய சட்டக் கல்லூரிகளுக்கான கட்டடங்களுக்கு, நிதி ஒதுக்குவதற்கான அரசாணையை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

NEET (UG) - 2016 RESULTS | மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்) வெளியிடப்பட்டன.

மருத்துவப்படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசியதகுதிகாண் பொது நுழைவுத் தேர்வுமுடிவுகள் (நீட்) வெளியிடப்பட்டன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களைதேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வுமூலம்
நிரப்ப, மே 1-இல்முதல்கட்டமாகவும், ஜூலை 24-இல் தேர்வை2-ஆம் கட்டமாகவும் தேர்வு நடத்த வேண்டும்என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

      

அதன்படி, மே 1-இல் மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்திய முதல்கட்டத்தேர்வை நாடு முழுவதும் 6 லட்சம்பேர் எழுதினர்.  இந்தநிலையில், தேர்வுக்கு தாற்காலிக தடை விதித்து மத்தியஅரசு அவசரச் சட்டம் பிறப்பித்ததால்தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு விலக்குஅளிக்கப்பட்டது. ஆனால், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டுஇடங்கள் அனைத்தையும் "நீட்' தேர்வின் மூலம்மட்டுமே நிரப்ப வேண்டும் என்றுஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், 2-ஆம்கட்ட "நீட்' தேர்வை நாடுமுழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் பேர் இந்தத்தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கான முடிவுகள்http://cbseresults.nic.in/neet/neet_2016.htm என்றஇணையதளத்தில் இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

INSPIRE Award Nominations for the year 2016-17 are now open- Last date -30.09.2016

ரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம் : வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு

உபரி ஆசிரியர்கள் பெயரில் சமூகஅறிவியல் பணியிடங்களைரத்து செய்வதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
கட்டாயகல்வி உரிமைச் சட்டப்படி ஒவ்வொருஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களைநிர்ணயிக்க வேண்டும். அதன்படி உபரி ஆசிரியர்களைகணக்கிட்டு பணிநிரவல் செய்ய
வேண்டும். இந்தஆண்டு பெரும்பாலான அரசு உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள்உபரியாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன. இதில் சமூகஅறிவியல்ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறை உபரியாக கணக்கிட்டுள்ளது. அவர்கள்ஆக., 27 முதல் 29 வரை நடக்கும் கவுன்சிலிங்மூலம் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்கு வரலாறு ஆசிரியர்கள்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு.

தொடக்கக்கல்வி ஆசிரியர்களில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல்பெற்றவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம்கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு,

பி.எட். படிப்புக்கான கட்-ஆப் பட்டியல் ஆகஸ்டு 17-ம் தேதி (புதன்கிழமை) வெளியிடப் படுகிறது.

பி.எட். படிப்புக்கான கட்-ஆப் பட்டியல் ஆகஸ்டு17-ம் தேதி (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு 22-ம் தேதி தொடங்கி30 வரை சென்னையில் நடைபெற உள்ளது.அரசுமற்றும் அரசு உதவி பெறும்கல்வியியல் கல்லூரிக ளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் 1,777
பி.எட். இடங்கள்கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

வற்றிப் போகும் வாத்தியார்

10 கோடி பெண் தொழிலாளர்களுக்கு பேறு காலத்தில் உதவும் புதிய திட்டம்.

பீஹார் மாநிலத்தில் அடுத்தடுத்து அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வரும், முதல்வர் நிதிஷ் குமார்,உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'கிரெடிட் கார்டு' வழங்கும் திட்டத்தை நேற்று அறிவித்தார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது. 
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஐந்து ஆண்டுகளுக்கான தொலைநோக்கு ஆவணத்தை, நிதிஷ் குமார் வெளியிட்டார்.'பூரண மது விலக்கு, அரசு வேலையில், 35 சதவீதம் மகளிருக்குஒதுக்கீடு' என, பல வாக்குறுதிகளை அவர், அப்போது தெரிவித்தார். அதன்படி, ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, அதிரடி திட்டங்களை அவர் அறிவித்து வருகிறார். முதல் கட்டமாக, ஏப்ரலில், பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டது; எனினும், அரசியல்வாதிகள் உட்பட பலர், மது குடித்து கையும் களவுமாக பிடிபட்டனர்.

எம்.இ., - எம்.டெக்., 15 ஆயிரம் இடங்கள் காலி

அண்ணா பல்கலையின், எம்.இ., - எம்.டெக்., கவுன்சிலிங் முடிந்து விட்ட நிலையில், 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அண்ணாபல்கலை இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கு, தமிழ்நாடு பொது நுழைவு தேர்வான, 'டான்செட்' நடத்தப்படு கிறது. 
இந்த ஆண்டு, இத்தேர்வுக்கு, 39 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்; இவர்களில், 17 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுக்கு பின், அண்ணா பல்கலையில், தமிழ்நாடு பொது மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்தது. இதற்கு விண்ணப்பித்த, 7,000 பேரில், 6,676 பேர் மட்டும் தகுதி பெற்று, கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இதில், 4,764 பேர்மட்டுமே இடங்களை தேர்வு செய்தனர். 1,687 பேர் கவுன்சிலிங்குக்கு வரவில்லை. மற்றவர்கள் இடம் கிடைத்தும் ஒதுக்கீடு பெறாததால், 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.