யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/12/16

புயல் நிவாரண நிதிக்கு அரசு ஊழியரின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்யலாம்!!!

முதல்வருக்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்.

தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் முதல்வர் தனிப்பிரிவில் அளித்துள்ள கோரிக்கை மனு:


சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் ‘வார்தா’ புயல்
பாதிப்பால் ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அரசின் புயல் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு ஒரு சிறிய உதவியாக இருக்கும்.

 எனவே, புயல் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்துகொள்ளலாம். இந்த மாத சம்பளத்திலேயே பிடித் தம் செய்துகொள்ளும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.அகவிலைப்படி உயர்வால் ஒவ் வொரு ஆசிரியருக்கும், அரசு ஊழியருக்கும் குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் கூடுதலாக கிடைக்கும். எனவே, ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்துகொள்வதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது.

அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு "பணிப்பதிவேட்டை. DSR டிஜிட்டல் மயமாக்கும்  திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை:: 


  1) அனைத்து SR ஐயும் மாவட்டக்  கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை  ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.

 2) SR DISTRICT TREASURY யில் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக ஃபோன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,

3)மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்

4)ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்

5)ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்

 6)அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR அந்தந்த மாவட்டத்தில்  மட்டுமேயிருக்கும்,.வேறு மாவட்டப பதிவில் சென்று தேடினால் இருக்காது..

7) ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி  வைக்கப்படும்.

 8) RETIREDMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது,மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்

9)ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளிSR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க  வேண்டும்


8) SR SCANE செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்,,அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...

9)SR DETAILS ம்  WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்.,இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...

10)N.O.C,
ஆதார்எண். சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..

11)எதிர்காலத்தில் MANUEL SR MAINTENANCE இருக்காது்

12) DSR ல் NEXT INCREMENT ,
.HRA SLAp அனைத்துமிருக்கும் 

12)SCANE முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,,அதன்பின் நாம் ஏதேனும் மிழை திருத்தம்  மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,அவ்வுயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கும்...

2017-ல் எப்ப எல்லாம் லாங் லீவ் போடலாம்...!

2017-ல் எப்ப எல்லாம் லாங் லீவ் போடலாம் ஒரு ஐடியா காலண்டர்!
ஜனவரி! ஜனவரி மாதத்தில் பொங்கல் வார இறுதி நாட்களில் வந்து ஏமாற்றம் அளித்தலும். லாங் லீவ் போட ஒரு வாய்ப்பு இருக்கிறது. அது ஜனவரி 26 முதல் 29 வரை. ஜனவரி 26 - குடியரசு தின விழா - 
வியாழன்
ஜனவரி 27 - லீவ் போட வேண்டிய நாள் - வெள்ளி ஜனவரி 28 - சனி
ஜனவரி 29 - ஞாயிறு

பிப்ரவரி! பிப்ரவரியிலும் லாங் லீவ் போட ஒரு வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் மூன்று நாள் லாங் லீவ் 24 முதல் 26 வரை கிடைக்கும்.
பிப்ரவரி 24 - மகாசிவராத்திரி - வெள்ளி
பிப்ரவரி 25 - சனி
பிப்ரவரி 26 - ஞாயிறு

மார்ச்! மார்ச் மாதம் இரண்டு முறை லாங் லீவ் போட வாய்ப்புள்ளது. ஆனால், இது இரண்டும் வட இந்தியர்களுக்கு சாதகமானது.
மார்ச் 11 - சனி
மார்ச் 12 - ஞாயிறு
மார்ச் 13 - ஹோலி
மார்ச் 25 - சனி
மார்ச் 26 - ஞாயிறு
மார்ச் 27 - லீவ் போட வேண்டிய நாள் - திங்கள்
மார்ச் 28 - குடீ பாடவா (மராத்திய பண்டிகை) - செவ்வாய்

ஏப்ரல்! இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் மூன்று முறை லாங் லீவ் போட வாய்ப்பு அமைந்துள்ளது.
ஏப்ரல் 1 - சனி,
ஏப்ரல் 2 - ஞாயிறு
ஏப்ரல் 3 - லீவ் எடுக்க வேண்டிய நாள் - திங்கள்
ஏப்ரல் 4 - ராம் நவமி - செவ்வாய்
ஏப்ரல் 13 - வைசாக்கி (பஞ்சாப் திருவிழா) - வியாழன்
ஏப்ரல் 14 - சித்திரை 1, குட் ப்ரைடே (Good Friday) - வெள்ளி ஏப்ரல் 15 - சனி
ஏப்ரல் 16 - ஞாயிறு
ஏப்ரல் 29 - சனி
ஏப்ரல் 30 - ஞாயிறு
மே 1 - மே தினம் - திங்கள்

ஜூன்! பொதுவாகவே ஜூன், ஜூலையில் விடுமுறைகள் கிடைப்பது அரிதிலும், அரிது. இம்முறை மூன்று நாள் லாங் லீவ் வந்துள்ளது.
ஜூன் 24 - சனி
ஜூன் 25 - ஞாயிறு
ஜூன் 26 - ரம்ஜான் - திங்கள்

ஆகஸ்ட்! இந்த வருடம் குடும்பத்துடன், நண்பர்களுடன் எங்கேனும் பெரிய பயணம் செல்ல வேண்டும் என்றால் நீங்கள் ஆகஸ்ட் மாதத்தை தேர்வு செய்துக் கொள்ளலாம்... ஆகஸ்ட் 12 - சனி
ஆகஸ்ட் 13 - ஞாயிறு
ஆகஸ்ட் 14 - கிருஷ்ண ஜெயந்தி - திங்கள்
ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம் - செவ்வாய்
ஆகஸ்ட் 16 - லீவ் போட வேண்டிய நாள் - புதன்
ஆகஸ்ட் 17 - லீவ் போட வேண்டிய நாள் - வியாழன் ஆகஸ்ட் 18 - பாரிஸ் புத்தாண்டு - வெள்ளி
ஆகஸ்ட் 19 - சனி
ஆகஸ்ட் 20 - ஞாயிறு
ஆகஸ்ட் 25 - பிள்ளையார் சதுர்த்தி - வெள்ளி
ஆகஸ்ட் 26 - சனி
ஆகஸ்ட் 27 - ஞாயிறு

அக்டோபர்! ஆகஸ்ட்-க்கு அடுத்ததாக அக்டோபரில் ஒரு பெரிய லாங் லீவ் வாய்ப்பு கிடைக்கிறது...
செப்டம்பர் 30 - சனி
அக்டோபர் 1 - ஞாயிறு அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி - திங்கள்
அக்டோபர் 14 - சனி
அக்டோபர் 15 - ஞாயிறு அக்டோபர் 16 - தீபாவளி முதல் நாள் கொண்டாட்டம் - திங்கள் அக்டோபர் 17 - லீவ் போடவேண்டிய நாள் - செவ்வாய்
அக்டோபர் 18 - தீபாவளி - புதன் அக்டோபர் 19 - லீவ் போடவேண்டிய நாள் - வியாழன்
அக்டோபர் 20 - பாய் தூஜ் (Bhai Dooj) பாய் போட்டா, வட இந்திய பண்டிகை - வெள்ளி
அக்டோபர் 21 - சனி
அக்டோபர் 22 - ஞாயிறு

டிசம்பர்! டிசம்பர் மாதம் இரண்டு முறை லாங் லீவ் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது...
டிசம்பர் 1 - மிலாடி நபி - வெள்ளி டிசம்பர் 2 - சனி
டிசம்பர் 3 - ஞாயிறு
டிசம்பர் 23 - சனி
டிசம்பர் 24 - ஞாயிறு
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் - திங்கள்

டிசம்பர் 30 - சனி
டிசம்பர் 31 - ஞாயிறு

கொத்தடிமைகள் மீட்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க மாநில அளவில் ஒரு அதிகாரியை நான்கு வாரத்திற்குள் நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரோஸ்ஆன் ராஜன் என்பவர் பொது மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள கொத்தடிமைகளை தொழிலாளர்களை மீட்டு ,அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. கொத்தடிமை தொழிலாளர்களை மீட்பது, அவர்களால் யாரால் கொத்தடிமைகளாக அமர்த்தப்பட்டனர், எப்போது விடுவிக்கப்பட்டார்கள், விசாரணை ,விடுவிப்பு மற்றும் ஆரம்ப கட்ட மறுவாழ்வு தொகை போன்ற ஆவணங்களை அதிகாரிகள் நீதிமன்றங்களில் சமர்ப்பிப்பது இல்லை. இதனால், நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொத்தடிமைகளாக இருக்கும் தொழிலாளர்களை மீட்டு,அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மாநில அளவில் ஒரு அதிகாரியை நான்கு வாரங்களுக்குள் நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், கொத்தடிமைகளாக பணி அமர்த்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்த திட்ட வரைவை மூன்று மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்?

தமிழக தலைமைச்செயலாளர் ராமமோகன ராவ் வீடு மற்றும் அவரது மகன் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலாளர் பதவியில் இருப்பவர் வீட்டில் வருமான வரிச் சோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்று 
சொல்லப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்படுவதால் எந்நேரமும் அவர் மாற்றப்படலாம் என்று கருதப்படுகிறது. அப்படி அவர் மாற்றப்படும் பட்சத்தில் அடுத்த புதிய தலைமைச் செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

🖊தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிலேயே பல ஆண்டுகள் அனுபவம் படைத்தவர்கள், மூத்தவருக்குத்தான் தலைமைச் செயலாளர் பதவி தரப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், ராமமோகன ராவ் விஷயத்தில் இந்த மரபு கடைபிடிக்கப்படவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி வரிசையில் 19-வது இடத்தில் இருந்த ராமமோகன ராவுக்கு மற்ற 18 பேர்களை புறம் தள்ளி விட்டு தலைமைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

🖊கிரிஜா வைத்தியநாதன்

இப்போது இவருக்கு முன்பு 18 பேரில்  ஒருவருக்கு தலைமைச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 18 பேரில் முதலிடத்தில் இருப்பவர் சக்தி காந்ததாஸ். இவர் இப்போது மத்திய அரசு பணியில் இருக்கிறார். அவருக்கு அடுத்து இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் நில நிர்வாகத்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர், கமிஷனராக இருக்கிறார். எல்லோரையும் விட தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்போதைக்கு இவர்தான். இவர் எந்தவித சர்ச்சைக்கும் ஆளாகாத ஒருவர் என்கிறார்கள். இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1981 பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவர். இவருக்கு தலைமைச் செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்கின்றனர். இவர் ஓய்வு பெறுவதற்கு 3 ஆண்டுகள் இருக்கிறது.

🖊வி.கே.ஜெயக்கொடி

18 பேரில் தமிழக கேடரில் இருக்கும் 8 அதிகாரிகள் தற்போது டெல்லியில் இருக்கின்றனர். இவர் தவிர தற்போது ஞானதேசிகன் ஏற்கனவே தலைமைசெயலாளர் ஆக இருந்திருக்கிறார். இவர் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். 7வது இடத்தில் இருக்கும் கே.கந்தன் அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனராக இருக்கிறார். இவர் நெல்லையைச் சேர்ந்தவர். 9-வது இடத்தில் அம்புஜ் சர்மா தொழில்துறை இயக்குனர் மற்றும் கமிஷனராக இருக்கிறார். 12-வது இடத்தில் இருக்கும் வி.கே.ஜெயகோடி பவர்பின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். இவருக்கும் தலைமைச் செயலாளர் பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

🖊சண்முகம்

13-வது இடத்தில் இருக்கும் மீனாட்சி ராஜகோபால் கிராமவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனராக இருக்கிறார். 16-வது இடத்தில் இருக்கும் ராஜிவ் ரஞ்சன், நெடுஞ்சாலைத்துறை செயலாளராக இருக்கிறார். இவரும் புதிய தலைமைச் செயலாளர் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இருக்கிறார். 17-வது இடத்தில் இருக்கும் கே.சண்முகம் நிதித்துறை கூடுதல்முதன்மைச் செயலாளர் ஆகவும் இருக்கிறார். இவருக்கும் தலைமைச் செயலாளர் ஆக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இவர் நிதித்துறையில் அனுபவம் மிக்கவர் என்கிறார்கள். ஆட்சியாளர்களுடன் வளைந்து போகும் திறன் கொண்டவர் என்றும் சொல்கிறார்கள். 18-வது இடத்தில் இருக்கும் சி.சந்திரமவுலி வணிகவரித்துறை கூடுதல் முதன்மை செயலாளர் கமிஷனராக இருக்கிறார்.  இவர்களைத் தவிர ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ்-க்கும் தலைமைச் செயலாளர் ஆகும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

🖊சீனியாரிட்டி முக்கியம்

இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்திடம் கூறுகையில். "தமிழகத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் டிசம்பர் 31 உடன் ஓய்வு பெறுகின்றனர். தலைமை செயலாளர் பதவி என்பது பணி மூப்பு அடிப்படையில்தான் வரவேண்டும். தங்களுக்கு யார் ஏற்றவர்களாக இருக்கின்றனர் என்பதைப் பார்த்து ஆட்சியாளர்கள்  நியமிப்பதால் சீனியாரிட்டி பார்ப்பதில்லை. இப்போது மிகவும் மூத்தவர் என்று பார்த்தால் கிரிஜா வைத்திய நாதன் இருக்கிறார். அவருக்கு இன்னும் சில வருடங்கள் பணி இருக்கிறது. அவர் மீது சர்ச்சைகள் ஏதும் இல்லை. விதிமுறைப்படி அவர்தான் நியமிக்கப்பட வேண்டும்" என்றார். ஆனால், தலைமைச் செயலக வட்டாரத்தில் தற்போதைய நிதித்துறை செயலாளர் சண்முகத்துக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.

ஊழியர்களின் சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க தீர்மானம் நிறைவேற்றம்!!!

நாடு முழுவதும் ஊழியர்களுக்கான சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க வகை செய்யும் தீர்மானத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.

தில்லியியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான 
முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஊழியர்களுக்கான சம்பள பரிவர்த்தனையில் ஒரு கூடுதல் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ரூபாய் நோட்டுக்கள் மூலமாக நேரடியாக சம்பளம் வழங்கும் முறையும் பின்பற்றப்படும்.

ஊழியர்கள் வங்கி மூலம் வேறு பணப்பரிவர்தனைகளை நிகழ்த்த வசதியாக இந்த வசதி கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இப்போது செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திருத்தம் மூலம் ஊழியர்களின் சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்று கட்டாய ப்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு டெபாசிட் விவகாரம்: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வாபஸ்!!!

ரூபாய் 5000-க்கு மேல் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்வது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது._

_கடந்த மாதம் 8-ஆம் தேதி 500 ருபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு 
அறிவித்தது. மேலும் மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது._

_ஆனால் கடந்த 19-ஆம் தேதி அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில், 'ரூபாய் 5000 அல்லது அதற்கு மேல் வங்கிகளில் டிசம்பர் 30-ஆம் தேதி வரை  ஒரே ஒருமுறை மட்டுமே டெபாசிட் செய்யலாம் என்றும், அவ்வாறு டெபாசிட் செய்பவர்கள் கூட குறைந்த பட்சம் இரண்டு  வங்கி அதிகாரிகள் முன்னிலையில் ஏன் அந்த தொகை தாமதமாக டெபாசிட் செய்யப்படுகிறது என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும்' என்றும் கூறப்பப்பட்டிருந்தது._

_ஆனால் கடந்த திங்கள் அன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 'ருபாய் நோட்டுகளை டெபாசிட் செய்பவர்களிடம் எந்த விதமான விசாரனையும் நடத்தப்படாது என்று அறிவித்தார். இதனால் ஒரு குழப்பமான சூழல் நிலவியது._

_இந்நிலையில் டிசம்பர்-19-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது._

ரூ.10 நாணயம் செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தமிழகத்தில், சில நாட்களாக, '10 ரூபாய் நாணயங்கள் செல்லாது' என, புரளி கிளம்பியதை அடுத்து வணிகர்கள், அரசு பஸ்களில் இந்நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர்.
சுற்றறிக்கை :
இந்நிலையில், ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 10 ரூபாய் நாணயத்தின் வடிவம், எடை, டிசைன், எந்த ஆண்டில், யார் நினைவாக அச்சடிக்கப்பட்டது போன்ற விபரங்களை அளித்து, வங்கிகள், தங்கள் பகுதி வணிக நிறுவனங்களில் விழிப்புணர்வு நோட்டீசாக ஒட்ட உத்தரவிட்டுள்ளது.மேலும், 2010ல் தான், 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது எனவும், அதன்பின், தலைவர்களின் நினைவாக, அடுத்தடுத்த ஆண்டுகளில், நாணயம் அச்சடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.செல்லும் :
கடைசியாக, ஜூன், 22ல், சுவாமி சின்மயானந்தா நுாற்றாண்டு விழா நினைவாக, 10 ரூபாய் நாணயம் அச்சடிக்கப்பட்டு உள்ளது. எனவே, தயக்கமின்றி, 10 ரூபாய் நாணயங்களை வாங்கிக் கொள்ளலாம் என, அறிவித்துள்ளது. மேலும், சில்லரை தட்டுப்பாட்டை போக்க,பாரத ஸ்டேட் வங்கிகளுக்கு, 10 ரூபாய் நாணயங்கள், 15 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 770 அரசுப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் திட்டம் விரைவில் துவக்கம் அமைச்சர் பாண்டிராஜன் தகவல் :

சென்னை, டிச. 19& தமிழகத்தில் உள்ள 770 அரசு உயர்நிலை, மேல்நிலைப் 
பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.     தமிழக சட்டமன்றத்தில்முதல்வர் ஜெயலலிதா ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி விதி எண் 110 ன் கீழ் பள்ளிக்கல்வித்துறையில்770 பள்ளிகளில்மெய்நிகர் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அப்போது,  தமிழக மாணவர்களுக்குஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக் கொண்டு சேர்க்கும் வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மெய்நிகர் வகுப்பறைகள் (விர்சுவல் கிளாஸ் ரூம்) ஏற்படுத்தப்படும்.
முதற்கட்டமாக770 அரசுப் பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் மெய்நிகர் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். மேலும், 11 மைய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலிருந்துநடத்தப்படும் வகுப்பறை செயல்பாடுகளை, இணையத் தொடர்பின் வாயிலாக கிராமப்புறப் பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் பெற்று மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்தினை செம்மையாக செயல்படுத்த கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு கட்டடங்கள் மற்றும் தளவாடங்கள், நூலகம் மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் . இதற்கென 33 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என கூறினார்.
அதனைத்தொடர்ந்து மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் சார்பில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 770 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் துவக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 11 மண்டலமாக பிரித்து இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த  மையத்திலோ அல்லது பள்ளிகளிலோநடைபெறும் பாடத்தினைவகுப்பறையில்விடியோ கான்பரன்சிங் முறையில் பாடம் மாணவர்கள் கற்கலாம். இந்த முறையில் பெரும்பாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வகுப்புகள் ஆடியோ, வீடியோ, விசுவல் முறையில் நடத்தப்படும்.
இந்தவகுப்பறை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இணையத்தில் இணைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் பாடம் நடைபெறும்போது மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.    இந்த வகுப்பறைஅமைக்க பள்ளியில் கணிப்பொறி, இணையம், யூபிஎஸ், பிராட்பேண்ட் வசதி கட்டாயம் இருக்க வேண்டும். இந்த வகுப்பு நடத்தப்படுவதன் மூலம் இதுவரை பாடங்களை மனப்பாடம் செய்த மாணவர்கள் இனிமேல் நேரடியாகவும்,செயல்முறையுடன் கூடிய பாடங்களை வீடியோ மூலம் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் கற்றல் அறிவை மாணவர்களிடையே 100 சதவீதம் வளர்க்க முடியும். ஆங்கில அறிவும் எளிதில் கிடைக்கும் என்பதால் இந்த புதிய வகுப்பு முறை தமிழக பள்ளி கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கான உபகரணங்கள் தற்பொழுது பள்ளிகளுக்கு அனுப்பபட்டு பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டிராஜன் கூறும்போது, தமிழகக்தில் 10,12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவக்கப்பட உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையிலும், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு துவக்கப்படும் என தெரிவித்தார். ரயில்வே கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டம்?  பஸ் கட்டணங்கள்அதிகமாக இருப்பதால் சாதாரண நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ஆனால்  கடந்த சிலஆண்டுகளாக குறிப்பாக பாஜ அரசு மத்தியில் பதவியேற்றது முதல் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

SECOND SPELL TEACHERS COUNSELLING NEWS:

Image may contain: text

ஆசிரியர்களுக்கு பணி வரன்முறையில்லை:

Image may contain: text

ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் பி.எட் கணினி அறிவியல் படித்தவர்கள் புறக்கணிப்பு வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் குற்றச்சாட்டு

பெரம்பலூர்,
ஆசிரியர்நியமன தகுதி தேர்வில் பி.எட் கணினி அறிவியல்படித்தவர்கள்
புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆலோசனைகூட்டம்
பெரம்பலூரில்தமிழ்நாடு பி.எட் கணினிஅறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தாஜ்தீன்தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள்சங்க மாநில தலைவர் அருள்ஜோதிவாழ்த்தி பேசினார். மாநில பொது செயலாளர்குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
ஆசிரியர்நியமன தகுதி தேர்வான டி.இ.டி, டி.ஆர்.பி போன்றதேர்வுகளில் பி.எட் கணினிஅறிவியல் படித்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பிறபாடப்பிரிவுகளுக்கு இணையாக கணினி அறிவியல்பாடம் பிரதான திட்டமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் கணினி அறிவியல் பாடத்திற்கெனகணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
காலிபணியிடம்
இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வி இணைஇயக்குனரின் (தொழிற்கல்வி) ஆணைப்படி, அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களிடமும் 1-11-2016 அன்று கணினி அறிவியல்ஆசிரியர் பணி காலியிடம் குறித்துஅறிக்கை கோரப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. எனவேபி.எட் கணினி அறிவியல்தகுதியுள்ள ஆசிரியர்களை அந்த பணியிடத்தில் நியமனம்செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில்மாநில துணை செயலாளர் புகழ், தலைமை ஆலோசகர் கண்ணன் உள்படபலர் கலந்து கொண்டனர். முடிவில்மாவட்ட பொருளாளர் மருது நன்றி கூறினார்.

10TH 12TH PRACTICAL EXAM DATE ANNOUNCED:

10 மற்றும் 12ம் வகுப்பு செய்முறைத்தேர்வு அறிவிப்பு.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 31-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் மார்ச் 8-ல் தொடங்கி 30-ம் தேதி வரையும் நடக்கவுள்ளன.பிளஸ் 2-வில் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர் களுக்கும் (ஒரு பாடத்துக்கு 50 மதிப்பெண்) அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவி யல் பாடத்துக்கும் (25 மதிப்பெண்) செய்முறைத்தேர்வு உண்டு.

பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், செய்முறைத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற எதிர் பார்ப்பு தேர்வெழுத உள்ள மாணவர் கள் இடையே எழுந்துள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந் தராதேவியிடம் கேட்டபோது, 
“பிளஸ் 2 செய்முறைத்தேர்வை பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி 3-வது வாரத்துக்குள்ளாகவும் அதேபோல், 10-ம் வகுப்பு செய்மு றைத்தேர்வை பிப்ரவரி 3-வது வாரம் முதல் மார்ச் 5-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

10-ம் வகுப்புக்கு மத்திய கல்வி வாரிய தேர்வு கட்டாயம் அரசுக்கு பரிந்துரை.

மத்திய கல்வி வாரிய திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இப்போது வாரிய தேர்வு அல்லது பள்ளிகள் நடத்தும் தேர்வில் ஏதாவதுஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். 2017-18-ம் கல்வி ஆண்டு முதல் மத்திய கல்வி வாரிய தேர்வு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு மத்திய கல்வி வாரியம் பரிந்துரை அனுப்பியுள்ளது. அதேபோல இந்தி, ஆங்கிலம், நவீன இந்திய மொழி என 3 மொழிகளில் கல்வி பயிலும் திட்டம் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. இதில் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

21/12/16

குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட இந்த உணவுகளை சாப்பிடுங்க

குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தான மிட்டாய்

சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்

சிறந்த 25 பொன்மொழிகள்

சென்னை மற்றும் சுற்றுவட்டாரபகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்புமற்றும்

தமிழ் இலக்கண இலக்கியம்