யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/7/17

பிராந்திய மொழியில் உயர் கல்வி புத்தகங்கள்: பிரணாப்

உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் கற்க சிரமப்படுவதை தவிர்க்க, பிராந்திய மொழியில் உயர் கல்வி புத்தகங்கள் இருக்க வேண்டும் என ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

கல்வித்தரத்தில் வேறுபாடு:

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது: நம் நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் இளைஞர்களின் திறமையை மேம்படுத்த முடியும். நம் நாட்டில் கிராம பகுதிகளுக்கும், நகரப் பகுதிகளுக்கும் இடையே கல்வித்தரத்தில் மிகுந்த வேறுபாடு உள்ளது. தவிர மாநிலங்களுக்கு இடையிலும், கல்வி நிலையங்களுக்கும் இடையிலும் கல்வித்தரத்தில் வேறுபாடு உள்ளது.

ஆங்கிலத்தில் கற்க சிரமம்:

பிராந்திய மொழிகளில் தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிக் கல்வியை பிராந்திய மொழியில் படித்துவிட்டு, உயர் கல்வியை ஆங்கிலத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதனை தவிர்க்க பிராந்திய மொழியில் உயர் கல்வி புத்தகங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

வங்கக்கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கூட்டுப்பயிற்சி : அதிர்ச்சியில் சீனா

கடற்படையை வலிமைப்படுத்துவதற்காகவும், எதிரி நாடுகளால் ஏற்படும்
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், திடீரென போர் மூண்டால் எதிரி நாடுகளின் வியூகத்தை கணித்து செயல்படவும் ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சி நடத்தப்பட்டு வருகின்றது.
இந்தியா, அமெரிக்கா கடற்படைகள் இணைந்து, கடந்த 1992ம் ஆண்டு முதல் மலபார் என்ற பெயரில் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்த கூட்டுப் பயிற்சியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் ஜப்பான் கடற்படையும் இணைந்துள்ளது. இந்நிலையில், ஜூலை 7ம் தேதி முதல் வங்கக்கடல் பகுதியில், இந்தியா - அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் இணைந்து மலபார் 2017 என்ற பெயரிலான கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 17ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 2 போர்க்கப்பல்கள், சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன. அவற்றுக்கு இந்திய கடற்படை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடல் மற்றும் துறைமுகம் ஆகிய 2 பகுதிகளிலும் நடைபெறும் கூட்டுப்பயிற்சியில், வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வது, நீர்மூழ்கிக் கப்பல்களை தடுப்பது, கடலில் மூழ்குவோரை தேடுவது மற்றும் மீட்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்கு சீனா, பாகிஸ்தான் நாடுகளால், கடல்வழி அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்தியா உள்பட 3 சக்தி வாய்ந்த நாடுகளின் கூட்டுப்பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது சீனாவிற்கு பேரதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது

பயிற்சிக்கு 'டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்கள் கண்காணிப்பு : வீடியோ கான்பரன்சிங்கில் கலந்துரையாடல்!!!

மதுர மாவட்டத்தில் இன்று முதல் (ஜூலை 10) துவங்கும் எஸ்.எஸ்.ஏ.,- ஆர்.எம்.எஸ்.ஏ., சிறப்பு
பயிற்சியை கல்வித்தறை செயலாளர் உதயசந்திரன் நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பயிற்சிக்கு 'டிமிக்கி' கொடுக்காமல் சரியான நேரத்திற்கு ஆசிரியர்கள் சென்றுவிடுங்கள் என சங்கங்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பொதுவாக எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., உட்பட பயிற்சி வகுப்புகள் என்றாலே தாமதமாக செல்லும் ஒரு ஆசிரியர் கூட்டமே உள்ளது. சங்கம் பின்னணியில் உள்ள ஆசிரியர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி பயிற்சியில் பங்கேற்காமல் 'டிமிக்கி' கொடுத்து தப்பித்து விடுவர்.இந்நிலையில் இன்றுமுதல் ஐந்து நாட்கள் நடக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பில், 6-10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பாடம் வாரியாக பங்கேற்கின்றனர். இப்பயிற்சியின் செயல்பாடுகளை செயலாளர் உதயச்சந்திரன் நேரடியாக கண்காணித்து, முதன்முறையாக காணொலி காட்சி மூலம் பயிற்சியிலுள்ள ஆசிரியர்களிடம் கலந்துரையாடல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் அனைத்து தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கும், ஜூலை 10- 14 மற்றும் 24 - 28 ம்தேதி என இரண்டு கட்டங்களாக வட்டார வளமையங்களிலும் பயிற்சி நடக்கிறது.பயிற்சியை செயலாளர் கண்காணிப்பதால் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வலியுறுத்தி சங்கங்கள் சார்பில் 'வாட்ஸ்ஆப்' மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதில், 'ஆசிரியர்கள் முன்கூட்டியே பயிற்சி வகுப்பு நடக்கும் அறைக்கு சென்று விடுங்கள். பஸ் வரவில்லை, நிற்கவில்லை, திடீரென உடம்பு சரியில்லாமல் போச்சு போன்ற காரணத்தை தவிர்த்துவிடுங்கள். உண்மையிலேயே உடல் பாதிப்பு இருந்தால் முன்கூட்டியே அனுமதி பெற்று விடுங்கள்' என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வி அதிகாரி கூறியதாவது: பல லட்சம் ரூபாய் செலவிட்டு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் ஏனோ தானோ என்று தான் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இப்பயிற்சியில் ஆசிரியர்களுக்கு சில முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. இதனால் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என செயலாளர் எச்சரித்துள்ளார். 'வீடியோ கான்பரன்சிங்', 'ஸ்கைப்' மூலம் அவரே குறுக்கிட்டு பயிற்சி குறித்தும் கேட்கவும் வாய்ப்புள்ளது. பயிற்சி மையங்களில் இதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கோர்ட் வாய்ப்பூட்டு


மே மாதம் 24 ம் தேதி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில் 
, தனியார் நிறுவனங்கள் விற்கும் பாலில் வேதிக்கலப்படம் இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார். இது பெரும் எதிர்ப்பை கிளப்பியது.இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஹட்சன் , டோட்லா, விஜய் பால் நிறுவனங்கள் வழக்கு தொடுத்தன. அமைச்சர் பேச்சால் விற்பனையில் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், இதனால் அமைச்சர் ரூ. 1 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட் , தனியார் பால் நிறுவனங்கள் குறித்து ஆதாரம் இன்றி விமர்சிப்பதை அமைச்சர் நிறுத்த வேண்டும் என தடை விதித்தது. மேலும் தனியார் பால் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது

ஏர்இந்தியா விமானத்தில் இனி அசைவ உணவு கிடையாது!!!

அனைத்து உள்நாட்டு விமானங்களின் எக்கனாமிக் வகுப்பில் பயணம் செய்யும் பயணிக
ளுக்கான உணவுப் பட்டியலில் இருந்து அசைவ உணவுகள் நீக்கப்படுவதாக ஏர்இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டணத்தை குறைப்பதற்காகவும், உணவு வீணாவதை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஏர்இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சர்வதேச விமானங்களிலும், உள்நாட்டு விமானங்களில் முதல்வகுப்பு பயணிகளுக்கும் அசைவ உணவுகள் வழக்கம் போல் வழங்கப்படும் என ஏர்இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த முடிவுகளை ஏர்இந்தியா 2 வாரங்களுக்கு முன்னதாகவே எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. 90 நிமிடங்களுக்கும் குறைவான பயண தூரத்தை உடைய அனைத்து விமானங்களிலும் அசைவ உணவுகள் வழங்குவதை 6 மாதங்களுக்கு முன்னதாகவே ஏர்இந்தியா நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் விமானங்களில் அதிக சுமை ஏற்றப்படுவதை தவிர்ப்பதற்காக கடந்த மாதம் முதல் சாலட் உள்ளிட்ட உணவுகள், சில மேகசின்கள் வழங்குவதையும் ஏர்இந்தியா நிறுத்தியது

துணைவேந்தர் நியமனம்; தேடல் குழுவால் தாமதம்

அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த ராஜாராம், 2016 மே
மாதம் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு, மூவரின் பெயர்களை கவர்னருக்கு பரிந்துரை செய்தது.
அதை பரிசீலித்த கவர்னர், மூவரிடமும் நேர்முக தேர்வு நடத்தினார். அவர்களின் தகுதிகளில் திருப்தி அடையாத கவர்னர், தேடல் குழுவின் பரிந்துரையை நிராகரித்ததோடு, குழுவையும் கலைத்தார்.
பின், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி லோதா, கான்பூர் ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குனர் அனந்த பத்மநாபன் மற்றும் ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரதேவன் இடம் பெற்ற, புதிய தேடல் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர், ஜூலை, ௧ல் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர். இதன் பிறகும், புதிய துணைவேந்தர் தேர்வுக்கான, விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடம் இருந்து பெறப்படவில்லை; அதற்கான நடவடிக்கைகளையும், தேடல் குழு துவக்கியதாக தெரியவில்லை.
அதனால், புதிய துணைவேந்தர் தேர்வு விரைவில் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை; தாமதமாகலாம் என, எதிர்பார்க்கப்படுகி

சிறப்பு பேனா மூலம் அடையாள மை!!

தேர்தலின் போது வாக்களித்தவர்களின் விரலில் அடையாள மை வைப்பதற்காக 
தேர்தல் ஆணையம் சிறப்பு பேனாவை தயார் செய்து வருகிறது.
ஆரம்பத்தில், தேர்தல் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி நடத்தப்பட்டன.
அதன்பின், பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த இருமுறைகளிலும் தேர்தலில் ஓட்டு போட்டவர்களை அடையாளம் காண வாக்காளர்களின் கையில் அழியாத மை வைக்கும் முறை நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், தேர்தலின் போது வாக்களித்தவர்களின் விரலில் அடையாள மை வைப்பதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு பேனாவை தயார் செய்து வருகிறது.

மைசூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பெயிண்ட் மற்றும் வார்னிஷ் தொழிற்சாலையில் இந்த தயாரிப்பு பணி நடைபெறுகிறது.

அடையாள மை பாட்டில் தயாரிப்பு செலவைக் காட்டிலும், இந்த சிறப்பு பேனாவின் தயாரிப்புச் செலவு பாதி தான் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு பே‌‌னாவின் மூலம் ஆயிரம் வாக்காளர்களின் விரல்களின் அடையாள மை வைக்க முடியும் என்றும், இதனை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இருந்து பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.`

செல்போன் திருடர்கள் 'ஈ'தான் ஓட்டணும்: செல்போன் திருடுபோனால், செயலிழக்க வைக்கும் தொழில்நுட்பம் !

ஒரு வேளை செல்போன் திருடுபோனால், அதனை முற்றிலும் செயலிழக்க வைக்கும் புதிய
தொழில்நுட்பம் சோதனை அளவில் இருக்கிறது.

செல்போனை செயலிழக்க வைக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால், அதனை அனைத்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும், தங்களது உற்பத்தியில் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும்.

இதனை முன்னிட்டு, செல்போனில் இருக்கும் ஐஎம்இஐ எனப்படும் 15 இலக்க எண்ணை அழிப்பது குற்றச் செயலாகவும், அதற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கவும் வகை செய்ய தொலைத் தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் இருக்கும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம், தொலைந்து போகும் அல்லது களவு போகும் செல்போனை முற்றிலும் செயலிழக்க வைக்கலாம், அது எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடையதாக இருந்தாலும். மேலும் அந்த செல்போனில் சிம் கார்டு அகற்றப்பட்டிருந்தாலோ அல்லது ஐஎம்இஐ எண் மாற்றப்பட்டிருந்தாலும் கூட அதனை செயலிழக்க வைக்கலாம்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடட் நிறுவனம், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மையத்தில், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி பரிசோதித்து வருகிறது.

சென்ட்ரல் எக்யூப்மென்ட் ஐடின்டி ரெஜிஸ்டர் (CEIR) எனப்படும் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தால், செல்போன்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும், செல்போன் திருட்டுச் சம்பவங்களும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது இந்த சிஇஐஆர் தொழில்நுட்பம் ஒவ்வொரு செல்போனின் ஐஎம்இஐ தகவல்களுடன் இணைக்கப்படும். இதன் மூலம் அனைத்துத் தொலைத்தொடர்பு எண்களுக்கும் மையப் புள்ளியாக சிஇஐஆர் இருக்கும். இதில், களவுப் போன அல்லது தொலைந்து போன செல்போன் குறித்த தகவலை அனுப்பிவிட்டால், உடனடியாக அந்த செல்போன் எந்த தொலைத்தொடர்பு எண்ணுக்கும் பயன்படாத வகையில் முடக்கிவிட முடியும். அந்த செல்போனில் சிம் கார்டு இல்லாவிட்டாலும் இதனை செயல்படுத்த முடியும் என்கிறது தகவல்கள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வுமையம

தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும்  சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் 
மாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மெரீனா கடற்கரை, அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் லேசான மழை தூறல் விழுந்தது.

இரவு 7 மணி அளவில் படிப்படியாக மழை அதிகரித்து கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

கோயம்பேடு,  வட பழனி, மயிலாப்பூர், மந்தைவெளி, தி.நகர், கிண்டி, கோடம்பாக்கம், அண்ணா நகர், எழும்பூர், மண்ணடி, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர், திருமுல்லை வாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லா வரம்,  புழல்,  செம்பரம் பாக்கம், சோழவரம், பூண்டி, திருவள்ளூர்,  காஞ்சீபுரம் உள்பட பல பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் கனமழை பெய்தது.

வெப்பசலனம் காரணமாக நேற்றிரவு பெய்த மழை  இன்றும் நீடிக்கும் என்றும், நேற்று  இரவு  நுங்கம்பாக்கத்தில் 84 மி.மீட்டர் மழையும்,  மீனம் பாக்கத்தில் 46.2 மி.மீட்டர்  மழையும் பெய்துள்ளதாக வானிலை மையம்  அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலசந்திரன் இன்று பேட்டி அளித்தார். அப்போது  தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும். வட மற்றும் தென் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது என கூறினார்

ஐஐடி.,யில் மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!!

நாடு


முழுவதிலும் உள்ள ஐஐடி மற்றும் என்.ஐ.டி.,க்களில் மாணவர்கள் சேர்க்கை
ஐஐடி நுழைவு தேர்வில் இந்தி வினாத்தாளில் பிழை இருந்ததன் காரணமாக சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்தியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டுமின்றி பிழையில்லாத வினாத்தாள் கொண்டு ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் இந்த சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த ஐஐடி நிர்வாகம், வினாத்தாளில் பிழை இருப்பது தெரிந்ததும் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இது போன்ற அச்சுப்பிழைகள் இனி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விளக்கத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட், மாணவர்கள் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதுடன், சலுகை மதிப்பெண்ணிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தது

மொபைல் போன்களில் ஜி.பி.எஸ்., கட்டாயம்!!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல், அனைத்து மொபைல் போன்களிலும் ஜி.பி.எஸ்., வசதி
கட்டாயம்

                                        
இடம் பெற வேண்டும் என மத்திய தொலைதொடர்பு துறை கண்டிப்புடன் கூறியுள்ளது.

2016ல் வெளியான அறிவிப்பு

மத்திய தொலைதொடர்பு துறை கடந்த, 2016ம் ஆண்டு ஏப்., 22ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 2017 ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து மொபைல் போன்களிலும், 'பேனிக் பட்டன்' என்ற அபாய கால எச்சரிக்கை பொத்தான் வசதி இருக்க வேண்டும்; 2018 ம் ஆண்டு ஜனவரி, 1ம் தேதி முதல் அனைத்து மொபைல் போன்களிலும் ஜி.பி.எஸ்., வசதி இருக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் தயாரிக்கப்படும் மொபைல் போன்களில், 'பேனிக் பட்டன்' இடம் பெற்றுள்ளது. ஆனால், ஜி.பி.எஸ்., வசதியை ஏற்படுத்தினால், மொபைல் போன்களின் விலையை, 30 சதவீதம் வரை உயர்த்த வேண்டி இருக்கும் என, மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்து இருந்தன.

பெண்கள் பாதுகாப்பு

ஆனால், இந்த கருத்தை மத்திய தொலை தொடர்பு துறை ஏற்றுக்கொள்ளவில்லை. 2018 ம் ஆண்டு ஜனவரி, 1ம் தேதி முதல் அனைத்து மொபைல் போன்களிலும் ஜி.பி.எஸ்., வசதி இருக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்கு இது மிகவும் அவசியம். அபாய காலத்தில், சம்பந்தப்பட்டவரின் இருப்பிடத்தை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என கண்டிப்புடன் கூறியுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனாவை மிஞ்சும் : ஹார்வர்டு பல்கலைக்கழகம்!

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா இன்னும் 8 ஆண்டுகளில் சீனாவை முந்தும்
                      

ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2025ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என்றும், பல்வேறு துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசாயனம், வாகனம், எலக்ட்ரானிக் சாதனங்கள் ஏற்றுமதியில் இந்தியா சிறந்து விளங்கும் என்று கூறியுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம், பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்றும் தெரிவித்துள்ளது

ஒப்புகை சீட்டு முறையால் தேர்தல் முடிவு தாமதமாகும்: தேர்தல் கமிஷன்

தேர்தல்களில் ஒப்புகை சீட்டு வழங்கும் முறையை கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் 
வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு தலைமை தேர்தல் கமிஷன் கருத்து தெரிவித்துள்ளது.
அதில், 100 சதவீதம் ஒப்புகைச் சீட்டு வழங்குவதற்காக ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. நாடு முழுவதும் ஒப்புகைச்சீட்டு முறை கொண்டு வரப்பட்டால், தேர்தல் முடிவுகள் வெளியிட 3 மணிநேரம் வரை தாமதமாகலாம். முதல் சுற்று நிலவரங்களை காலை 11 மணிக்கு முன் வெளியிட முடியாது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுக்கள் எண்ணப்படும் போது, ஓட்டு எண்ணிக்கை துவங்கிய அரை மணிநேரத்திற்குள் முதல்கட்ட நிலவரங்கள் தெரிய வந்துவிடும். ஆனால் காகித சிலிப்கள் மூலம் எண்ணப்பட்டால் தேர்தல் முடிவுகளை வெளியிட 3 மணிநேரம் வரை தாமதம் ஆகலாம். இது தோராயணமான தாமத நேரம் மட்டுமே. மனிதர்கள் எண்ணும் போது முதல் சுற்று எண்ணுவதை முடிப்பதற்கே வெகு நேரம் ஆகும் என தெரிவித்துள்ளது

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!!

                                           

வருங்கால வைப்பு நிதியில் புதிதாக ஒரு கோடி பேர் இணைந்துள்ளனர் - அமைச்சர் தத்தாத்ரேயா

இந்த ஆண்டு பொதுமன்னிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அது வெற்றியும்
 பெற்றது. புதிதாக இணைந்த உறுப்பினர்களையும் சேர்த்து சுமார் 5.4 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். வருங்கால வைப்பு நிதி திட்டம் சத்துணவு ஊழியர்களுக்கும் நாடு முழுதும் விரிவுபடுத்தப்படும் என்றார் அமைச்சர்.

மேலும் அவர் கூறுகையில் ஊழியர்கள் தங்கள் நிலுவைத் தொகைகளை செலுத்த வசதியாக பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி உட்பட பல வங்கிகளுடன் ஒப்பந்தம் ஒன்றை வருங்கால வைப்பு நிதியம் செய்து கொண்டுள்ளது. அதே போல தவணை தொகைகளை வசூலிக்கவும், ஊழியர்களின் சேமிப்பை திரும்ப அளிக்கவும் ஆக்சிஸ் வங்கி, எச் டி எஃப் சி உட்பட பல வங்கிகளை இந்நிறுவனம் கூறியுள்ளது.

சேமிப்புத் தொகையை கையாளும் வங்கிகளுக்கு 1.10 சதவீத நிர்வாக கட்டணமாக செலுத்தப்பட்டு வந்தது. தற்போது அது 65 சதவீதமாக குறைந்துள்ளது.  முன்பு பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.350 கோடியை நிர்வாக செலவினமாக கொடுக்கப்பட்டது. புதிய வங்கிகளை இணைத்ததும் நிர்வாக செலவு ரூ. 140 கோடியாக குறைந்துள்ளது. அடுத்த வருடம் இத்தொகை ரூ 50 கோடியாக குறையும் என்றே எதிர்பார்க்கப்ப்படுகிறது

அமெரிக்காவின் MIT யில் பயில இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே ஒரு மாணவி

                                                            
   அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான மாஸாசூஸெட்ஸ் 
இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பயில இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே அனுமதி கிடைத்திருக்கிறது. அந்தப் பெண்ணின் பெயர் காவேரி நாதமுனி. 17 வயது காவேரி  பெங்களூரு சர்வ தேசப் பள்ளி மாணவி. மொத்த இந்தியாவிலும் ஒற்றாஇ நபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் இந்தப் பெருமை குறித்து காவேரியிடம் பேசுகையில், பாஸ்டனில் இயங்கும் MIT தொழில்நுட்பக் கல்லூரியில் கணினிப் பாடப் பிரிவில் சேர்ந்து பயில தனக்கு அட்மிஸன் கிடைத்திருப்பதாகவும், கல்லூரியில் சேர ஆகஸ்ட் மாதம் தான் அங்கே செல்லவிருப்பதாகவும் கூறினார். பெங்களூரு சர்வதேசப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவரான காவேரி கடந்த வாரத்தில் தான், 12 ஆம் வகுப்புகளுக்காக நடத்தப் படும் சர்வதேசப் பள்ளிகளுக்கான IB போர்டு தேர்வில் 45 மதிப்பெண்களுக்கு 44 மதிப்பெண்கள் என உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றுத் தேறினார்.

தனது பள்ளிப் படிப்பு மற்றும் மதிப்பெண் விகிதங்களில் தான் பெற்று வந்த தொடர் வெற்றிகளே உலக அளவில் சிறந்த இத்தனை பாரம்பரியம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனத்தில் தனக்கான இடத்தை உறுதி செய்ததில் முக்கியப் பங்காற்றியதாக காவேரி தெரிவித்தார்.

மகளின் இந்தப் பெருமைக்குரிய சாதனையைப் பற்றிப் பேசும் போது காவேரியின் அப்பா ஸ்ரீகாந்த் நாதமுனி சொன்னதாவது; காவேரிக்கு சிறு வயதிலிருந்தே எதையும் பகுப்பாய்ந்து தெளிவடையும் மனது இருப்பதால் அவரது இந்த வெற்றி குறித்து நாங்கள் முன்னரே அனுமானித்திருந்தோம். டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் அவருக்கிருக்கும் ஆர்வம் அவரை உலகின் பல முக்கியமான புராஜெக்டுகளில் கைகோர்க்க வைக்கலாம். காவேரி நிச்சயமாக நிறையச் சாதிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றால். படிப்பு மட்டுமல்ல பெண்ணுக்கு இசையிலும் நிறைய ஆர்வம் உண்டாம். 4 வயதிலிருந்து தன்னுடைய பாட்டியிடமிருந்து கர்நாடக இசை கற்று வருகிறாராம் காவேரி. படிப்பு, படிப்புக்கு நடுவில் பாட்டு, பாட்டுக்குப் பிறகு தனது புதிய புராஜெக்டுகள் என காவேரி எப்போதும் செம பிஸி!

அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் வந்த பிறகு இந்தியா மற்றும் அயல்நாடுகளில் இருந்து அமெரிக்க கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பயில விண்ணப்பிக்கும் மாணவர்களில் பலருக்கு கல்விக்கான விசா கிடைப்பதில்லை. அதற்கு காரணம் ட்ரம்ப்பின் H- 1B விசா நடைமுறைக் கட்டுப்பாடுகளே! இச்சூழலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கும் அமெரிக்காவின் புகழ் வாய்ந்த கல்வி நிறுவனம் ஒன்றில் பயில அனுமதி கிடைத்திருப்பதற்காக அந்த மாணவியை எத்தனை பாராட்டினாலும் தகும்

9/7/17

பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை மாநில மாநாடு

அமரர் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களால் தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள்  ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், 2014ம் ஆண்டில் ரூ.2000 ஊதியம் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.7000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

6 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களை முற்றிலும் தற்காலிக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பணியிலிருந்து , அரசுப் பணிக்கு மாற்றி மனிதாபிபான அடிப்படையில் வாழ்வளிக்க வேண்டி, மாண்புமிகு தமிழக முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி செயலர் அவர்கள் தலைமையில் விரைவில் சென்னையில் கோரிக்கை மாநில மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

எனவே, கோரிக்கை மாநில மாநாடு நடத்துவது சம்மந்தமாக ஆயத்த  கூட்டம் 9.7.2017 ஞாயிறு காலை மணிக்கு சிதம்பரம் ஆறுமுக நாவலர் நிலையத்தில் நடைபெறுகிறது.

அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் உயர் கல்வி படிக்க தடையில்லை

அரசுபள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள், உயர் கல்வி படிக்க தடையில்லை' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 2012 முதல், 16 ஆயிரத்து, 549
ஆசிரியர்கள், மாதம், 7,000 ரூபாய் சம்பளத்தில், பகுதி நேரமாக பணியாற்று கின்றனர்.
கணினி அறிவியல், ஓவியம், இசை, தோட்டக்கலை, தையல் என, பல சிறப்பு பாடங்களுக்கு, இந்த ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இவர்கள் பணி நிரந்தரம் கோரி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், நிரந்தரம் செய்ய வாய்ப்பே இல்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள் சிலர், 'பணியில் இருந்து கொண்டே, உயர் கல்வி படிக்கலாமா; அதற்கு அனுமதி உண்டா' என, பள்ளிக் கல்வித்துறைக்கு மனு அனுப்பி பதில் கேட்டனர்.

அதற்கு, 'உயர்கல்வி படிக்க, பகுதி நேர ஆசிரியர்களுக்கு எந்த தடையும் இல்லை' என, அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.சேலம் மாவட்ட ஆசிரியர் ஒருவர் கேட்ட தகவலுக்கு, மாநில திட்ட இயக்குனரகம் அளித்த பதிலில், 'உயர் கல்வி படிக்க, நிரந்தர பணியில் உள்ள ஆசிரியர்கள் மட்டுமே அனுமதி பெற வேண்டும். பகுதிநேர ஆசிரியர் பணி என்பது முற்றிலும் தற்காலிகமானது. எனவே, அவர்கள் விருப்பம் போல, உயர் கல்வி படிக்கலாம். அதற்கு தனியாக அனுமதி வாங்க வேண்டியதில்லை' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி? சிறப்புக் கட்டுரை

ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய
உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.
பொதுவான அரசாணைகள்

(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)

(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

(ஈ) புதியதாக பணி ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10,1991)

(உ) ஊதிய உயர்வு நிலுவை இருப்பின், அதற்கான சான்று கையொப்பமிட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறின், அடுத்த உயர் அலுவலரின் முன் தணிக்கை பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நிலுவையாக உள்ள இனங்களுக்குத் துறைத் தலைவரின் அனுமதி தேவை. (G.O Ms No.1285, Finance department Dated 11.10.1973 மற்றும் G.O Ms No.349, Finance department, Dated 21.5.1981)

(ஊ) தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியிருப்பின், தேர்வுகள் நடந்த கடைசி நாளுக்கு (பிரிவுகளாக நடந்திருப்பின், பிரிவுத் தேர்வு நடந்த கடைசி நாளுக்கு) மறுநாள் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் (அடிப்படை விதி 26(எ)ன் துணை விதி (2)
தற்காலிக மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு ஊதிய உயர்வு

(அ) தற்காலிக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், அவர் வசிக்கும் பதவியில் தகுதிகாண் பருவக்காலத்தில் தேர்வுகள் ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும். (அரசாணை எண். 1087, நிர்வாகத்துறை, நாள் 10.11.1982 அரசாணை எண். 231, P&AR,சி.16383 மற்றும் அரசு க.எண் 35068DOFIP&AR,நாள் 1.1.1994) தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவருக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter. No. 15285/FR.1746, Finance dated. 16.8.1975)

(ஆ) தகுதிகாண் பருவத்தினருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். தகுதிகாண் பருவக் காலத்தில் தேர்வுகள் வரையறை செய்யப்பட்ட பதவிகளுக்கு இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வழங்கப்படும். தகுதிகாண் பருவம் முடிந்து ஆணை வழங்கிய பின்னர் தான் இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது இனி இல்லை (G.O Ms No. 618, P&A.R., Dated 6.7.1987)
பணிஅமர்த்தப்பட்டால், முந்தையப் பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு சேராது. இருப்பினும் அதே பதவியில் அதே துறையிலோ வேறு துறையிலோ பணி அமர்த்தப்பட்டால் அதே ஊதியம் வழங்குவதுடன் முந்தைய பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (Govt. Letter. No.76362874, P&AR Dated 27.7.1988)
முன்ஊதிய உயர்வு

(அ) ஒரு குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றால் முன் ஊதிய உயர்வு வழங்கலாம் என குறிப்பான அரசாணை உள்ள பதவிகளுக்கு மட்டுமே, முன் ஊதிய உயர்வு வழங்கலாம்.
(ஆ) பணிக்கு வருவதற்கு முன்னரே குறிப்பிட் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (G.O Ms No.245, P&A.R., Dated 16.3.1985)

(இ) தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு ஒரு முன் ஊதிய உயர்வும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டு ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் (G.O Ms No.1755, P&A.R., Dated 22.11.1988) மேற்படி ஊதிய உயர்வு போட்டி நடைபெற்ற மறுநாள் முதல் கிடைக்கும். மொத்த பணிக்காலத்தில் இதுபோன்ற காரணத்திற்கு மூன்று ஊதிய உயர்வுகளுக்கு மேல் கிடைக்காது. இருப்பினும் மேற்படி ஊதிய உயர்வு பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்திற்குச் சேராது.

(ஈ) சார்நிலை ஊழியர்களுக்கான கணக்குத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Number Gazette பதிவுகளைக் கொண்டு முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter.No. 52011 iii/873 P&A.R., Dated 13.8.1987)
(உ) உதவியாளர் பதவி உயர்வை துறக்கின்ற தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கு முன் ஊதிய உயர்வு கிடைக்காது. (G.O Ms No.10302 அ.வி. 285-2, P&A.R., Dated 4.9.1985)
(ஊ) தண்டனையாக ஊதிய உயர்வு தள்ளிப் போகின்ற நிகழ்வில் ஒருவருக்கு Advance Increment பெறுவதற்கான தகுதி கிடைத்தால் அதுவும் வழங்கப்பட வேண்டும். (Govt. Letter No. 28857 FR.177-1, P&A.R. dated 29.4.77)
பதவிஇறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்றால் ஊதிய உயர்வு
ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்று விடுப்பு முடிந்து மீண்டும் அதே பதவியில் சேர்ந்தால் விடுப்புக்காலம் உயர் பதவியின் ஆண்டு ஊதிய உயர்வுக்கு சேரும் (24.3.1988 வரை விடுப்புக்காலம் பதவி உயர்வுக்கு சேராது என்று விதிகள் இருந்தன) (G.O Ms No.212, P&A.R., Dated 25.3.1988)
குற்றமாக கருதப்பட்ட தற்காலிகப் பணிநீக்க காலம்
கீழ்நிலைப் பதவியில் பணிபுரிந்த காலம் உயர் பதவிக்கு சேராது
தண்டனைக் காலம் விடுப்புகளை சேர்த்தோ அல்லது நீங்கலாகவோ என தண்டனை வழங்கப்படும் ஆணையில் குறிப்பிட வேண்டும். இருப்பினும், With Cumulative effect-ஆக தள்ளப்படும் ஊதிய உயர்வு எப்போதுமே விடுப்புக்காலம் சேர்த்துதான் இருக்கும். (விதி 24 & அதன் அறிவுரை 2 (b))
தண்டனையாக ஊதிய உயர்வைத் தள்ளிப் போடுதல்
ஊதியஉயர்வை தண்டனையாக கருதி குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடலாம். With 
Cumulative effect and Without Cumulative effect என இரு வகைகள் உள்ளன.
Without cumulative effect-ல் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு தண்டனைக்காலம் முடிவுற்றதும் நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும்.

With Cumulative effect-ல் தண்டனையாக நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வின் இழப்பு பணிக்காலம் முழுவதும் இருக்கும். தண்டனையாக நிறுத்தப்பட்டது மீண்டும் கிடைக்காது.
இதுவன்றி ஊதிய உயர்வு தள்ளிப் போகும் காலத்தில் விடுப்பு அனுபவித்தால் இணையான காலத்திற்கு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்.
ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிலிருப்பினும், ஊதிய உயர்வு வழங்கலாம். (Rule.6 under FR) ஆணை வழங்குதலை எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்கக் கூடாது. ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும் ஆணை வழங்கப்பட்டால், ஆனைக்குப் பின்னர் எதிர்வருகின்ற முதல் ஊதிய உயர்வு தள்ளிப் போகும். ஆணை வழங்கப்பட இருக்கின்றது என எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்க முடியாது. (அடிப்படை விதி 24)

ஊதியஉயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பிலிருந்தால்
ஊதியஉயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பில் இருந்தால் (LLP Without M.C. தவிர) ஊதிய உயர்வின் நிதிப்பயன் விடுப்பு முடிந்து பணியேற்ற உடன் வழக்கமான ஊதிய நாள் முதல் கிடைக்கும். நிதிப்பயன் தள்ளிப் போகாது. விடுப்பு என்பது எல்லா விடுப்பும் சேரும், LLP Without MC-ல் இருந்தால் விடுப்பு முடிந்து சேர்ந்த பிறகுதான் அனுமதிக்க முடியும். (Govt Letter No.48747/FRDOI/93-9, dated 30.5.1994) (G.O.Ms.No 90 P&AR, Dated 28.3.95)
பணிநீக்கப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால் ஊதிய உயர்வு

(அ) தகுதிகாண் பருவம் முடித்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால், அவர் பணிநீக்கத்திற்கு முன்னர் பெற்று வந்த ஊதியமே பெறலாம். அத்துடன் முந்தைய பணிக்காலமும், ஊதிய உயர்வுக்குக் கணக்கிடப்படும் (G.O.Ms.No.400 P&AR, Dated 7.4.1988) இதனைசாதாரணமாக ஊதியம் நிர்ணயம் செய்யும் அலுவலரே வழங்கலாம் - (Govt Letter no.44316/86-4. P&AR, Dated 29.8.1986)

(ஆ) இடைப்பட்ட பணி நீக்கக் காலம் Condone செய்யப்பட வேண்டிய தேவையில்லை (Govet Letter No.44318/86-4, Finance Department, Dated 29.8.1986)

(இ) தகுதிகாண் பருவக் காலத்தில் ஒருவருக்கு 1.4.1988 அன்று ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட தேர்வு தேறாத காரணத்தால் 1.4.1988 ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 1.4.1989 மற்றும் 1.4.1990 ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. இவர் 18.9.1990 அன்று நடைபெற்ற தேர்வில்தான் தேர்ச்சி பெறுகின்றார். இவருக்கு 1988, 1989, 1990 ஆகிய மூன்று ஊதிய உயர்வுகளும் சேர்ந்து 17.9.1990 அன்று ஒரு சேர வழங்கப்படும் என்று Rule of 28 of State and Subordinate Service Rules கூறுகிறது. இதனால் இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக Cumulative நிதி இழப்பு ஏற்படவில்லை.

(ஈ) தகுதிகாண் பருவக்காலத்தில் பயிற்சி முடிக்கவேண்டிய இளநிலை உதவியாளர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வு அப்பயிற்சி முடிந்த பின்னர் தான் வழங்கப்பட வேண்டும். அலுவலக நடைமுறை காரணமாக பயிற்சிக்கு அனுப்புவது தாமதப்பட்டால், அரசின் ஆணை பெற்று விதிகளைத் தளர்த்தி வழக்கமான நாளிலேயே ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt Letter No.6888/90-3, P&AR Dated 18.4.1990 மற்றும் G.O.Ms No. 71720 பணி-பி/92-1, P&AR Dated, 2.12.1992)

(உ) ஒரு பதவிக்கு பணி அமர்வு செய்வதற்கான தகுதிகள் அனைத்தும் ஒருவர் பெற்றிருக்கவேண்டும். ஏதேனும் ஒரு தகுதி குறைவாக இருந்தாலும் அவருக்கு ஊதிய உயர்வே கிடைக்காது. (Govt Letter No.16599A/FRI/74-3 Finance Dept, dated 21.3.1975 & G.O.Ms No.41, Finance Dept, Dated 11.1.1977)
(ஊ) பணி இறக்கம் பெறுவதைத் தொடர்ந்து ஒருவர் விடுப்பில் செல்வதால் விடுப்பு முடிந்து மீண்டும் பதவி உயர்வு பெற்று அதே உயர் பதவியில் சேர்ந்தால் விடுப்புக் காலத்திற்கும் ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது தள்ளிப் போகாது (Effective from 25.388) G.O.Ms.No.212, P&A.R., dated 25.388)
தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர்கள்
முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கலாம். இரண்டாம் உதிய உயர்வு தமிழ் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும்.
ஊதியவிகிதத்தில் அதிகபட்சம் பெற்றவருக்கு ஊதிய உயர்வு
1.1.96 முதல் (நிதிப்பயன்1.9.1998) ஒரு ஊதிய வீதத்தில் அதிக பட்சம் பெற்றுவிட்ட ஒருவருக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறைதான் ஊதிய உயர்வு கிடைக்கும் (GO.Ms No. 483, Finance (Pay commission) Dated 8.9.1998)ஊதியஉயர்வுக்கு சேரும் காலம் –
பணியேற்பிடைக்காலம் FR 26(d)
அயல்பணி FR-26(d)
உயர்நிலைப் பதவியின் பணிபுரிந்த காலம் கீழ்நிலைப் பகுதிக்கு சேரும் FR26(e))
பயிற்சிக்கு சென்ற காலம் - (GO.Ms.No.370, P&ARdL26689)– அனைத்து விடுப்புகள்-(FR2660)
மருத்துவச் சான்றின் பேரில் ஊதியமில்லா விடுப்பு - (FR 26 (bb)
ஊதியஉயர்வுக்கு சேராத காலம்
மருத்துவச் சான்று அல்லாத ஊதியமில்லாத விடுப்புFR26(bb)

அனுமதித்ததற்கும் அதிகமாக எடுக்கப்பட்ட வரன்முறை செய்யாத விடுப்புக்காலம்

மேல்நிலைப் பள்ளிகளில் ஐ.டி., பிரிவு அறிமுகம் 765 கணினி ஆசிரியர்கள் நியமனம்

தமிழக கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் கணினி கல்வி எட்டாக்கனியாக இருந்ததை மாற்றி, இந்த கல்வியாண்டில்
அறிவியல் பாடத்தில் ஒரு பிரிவாக 'ஐ.டி.' கல்வி என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது. ஐ.டி., கல்வி என்பதில் கணினி வரலாறு முதல் ஆன்ட்ராய்டு செயலி வரை அனைத்து பகுதிகளும் இடம் பெறும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படுகிறது.
இதையடுத்து கணினி பாடங்களுக்கு பயிற்றுனர்களை நியமிக்க அரசு செயலர் உதயச்சந்திரன் ெவளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பள்ளி கல்வித் துறையில் 2007-- 2016ம் கல்வியாண்டு வரை தரம் உயர்த்திய 525 மேல்நிலைப் பள்ளிகளில் தேவைக்கேற்ப கணினி ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். தற்போது 240 பள்ளிகளில் கணினி பாடப்பிரிவுகள் இல்லை. பயிற்றுனர் பணியிடம் கணினி பாடப் பிரிவுகள் செயல்படும் பள்ளிகளில், பயிற்றுனர் பணியிடம் தேவையாக உள்ளது. கணினி பயிற்றுனர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிட ஊதிய விகிதங்கள் ஒன்றே. இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது.

இந்தநிலையில் காலியாக உள்ள 765 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கணினி பயிற்றுனர்களாக மாற்றி ஒப்படைக்க, பள்ளி கல்வி இயக்குனர் அரசை கோரினார். இதனை அரசு பரிசீலித்தது. கணினி பிரிவு செயல்படும் பள்ளிகளில் கணினி பயிற்றுனர் பணியிடம் ஏற்படுத்தவும், பள்ளி கல்வி இயக்குனர் தொகுப்பில் உள்ள, காலியாக உள்ள 765 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, அதே ஊதியத்தில் கணினி பயிற்றுனர் பணியிடங்களாக மாற்றவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.