யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/3/18

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்

பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர் பாக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவும் திட்ட மிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 15-ம் தேதி தொடங்கும் என்றும் அன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.அதன்படி, நாளை பேரவை கூடுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதால் பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கும். அதில் பட்ஜெட் மீது எத்தனை நாள் விவாதம் நடத்துவது, பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக் கப்படும்.


நேரம் ஒதுக்கவில்லை

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குபடுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக கடந்த பிப்.22-ம் தேதி தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியது. முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் பிரதமரை சந்தித்து மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காக பிரதமரிடம் நேரம் கோரப்பட்டது. ஆனால், நேரம் ஒதுக்கப்படவில்லை.தமிழக குழுவை பிரதமர் சந்திக்காததற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன.

சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அக்கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றன. எனவே, பட்ஜெட் தாக்கல் முடிந்தும் நாளை மாலை அல்லது 16-ம்தேதி காலை சிறப்புக் கூட்டத்தை கூட்டி, இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட லாம் என்று கூறப்படுகிறது.

சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதையே: ஸ்டீபன் ஹாக்கிங்கின் அந்த பேட்டியை மறக்க முடியுமா?

எளிய மனிதர்களும் அண்டவெளி அறிவியல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங் 'தி கார்டியன்' இதழுக்கு ஒருமுறை அளித்தப் பேட்டி உலகளவில் வாதவிவாதங்களுக்கு வழிவகுத்தது.

எல்லா மதங்களுமே சொர்க்கம், நரகம் குறித்து தத்தம் மக்களுக்கு போதிக்கிறது. ஆனால், எப்போதுமே மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட கருத்துகளை தெரிவித்த ஸ்டீபன் ஹாக்கிங் ஒருமுறை "சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை: எல்லாம் கற்பனைக் கதையே" என்றார்.
இதற்காக அவர் பல்வேறு மதத்தினரின் எதிர்ப்பையும் சம்பாதித்தார் என்பது வேறு கதை.


தி கார்டியனுக்கு அவர் அளித்த பேட்டியில், "மனித மூளையானது ஒரு கணினியைப் போன்றது. ஒரு கணினியின் உபகரணங்கள் பழுதாகி அது இயக்கத்தை நிறுத்திவிட்டால் எப்படி அது எங்கும் செல்வதில்லையோ அப்படித்தான் மனித உயிரும் மூளை தனது கடைசி நிமிட இயக்கத்தை நிறுத்தியவுடன் மனிதன் மரித்துப்போகிறான். அவர் அதன் பின்னர் சொர்க்கத்துக்கும் செல்வதில்லை, நரகத்துக்கும் செல்வதில்லை. இவை எல்லாம் வெறும் கற்பனைக் கதை. இருள் மீது பயம் கொண்ட மக்களுக்காக சொல்லப்பட்ட கதை" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "என்னுடைய மரணம் இளம் வயதிலேயே நிகழும் என்று சொல்லப்பட்டபது. ஆனால், அந்த கணிப்பைத் தாண்டியும் 49 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு மரணத்தின் மீது பயமில்லை. அதேவேளையில், மரணிக்க வேண்டிய அவசரத்திலும் இல்லை. நான் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன" என்றார்.
மதகுருமார்களின் எதிர்ப்பை சம்பாதித்த ஸ்டீபன் ஹாக்கிங்.

2010-ம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங் 'தி கிராண்ட் டிஸைன்', (The Grand Design) என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் அண்டம் உருவானவிதத்தையும் அண்டம் ஏன் இருக்கிறது என்பதை விளக்கவும் எந்த படைப்பாளியும் (கடவுளும்) தேவையில்லை எனக் கூறியிருந்தார். இந்தப் புத்தகம் பல்வேறு மத குருமார்களிடமும் எதிர்ப்பை சம்பாதித்தது.
யூத மதகுரு லார்ட் சாக்ஸ் என்பவர், "ஸ்டீபன் ஹாக்கிங் தர்க்கவாதங்களை கட்டுக்கதைகள் என்று உடைத்தெரியும் குற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்" எனக் குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தகக்து. 

கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையிலான குழு அறிக்கை அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோர்-ஆசிரியர்கள் கலந்துரையாடல், பிற திறன்களில் மாணவர்களின் நிலை, கல்விச்சூழலில் சந்திக்கும் சவால் குறித்தும் ஆய்வு செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது

குரூப் 3 தேர்வு முடிவு: 5 ஆண்டுக்கு பின் வெளியீடு :

20 காலி பணியிடங்களுக்கான குரூப் 3 தேர்வு முடிவு 5 ஆண்டுக்கு பின் வெளியிடப்பட்டுள்ளது. 03.08.2013ல் நடைபெற்ற எழுத்துத்தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். 46,797 விண்ணப்பதாரர்களில் 45,802 பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. 

நபார்டு வங்கி அதிகாரிகள் பணிக்கு அழைப்பு

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியில் 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான 92 உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 92

பணியிடம்: இந்தியா முழுவதும் 

பணி: Assistnat Manager in Grade A (Rural Banking Service) - 92

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. பொது - General - 46 
2. கால்நடை பராமரிப்பு - Animal Husbandry - 05 
3. பட்டய கணக்காளர்  - Chartered Accountant - 05 
4. பொருளாதாரம் - Economics - 09 
5. சுற்றுச்சூழல் பொறியியல் - Environmental Engineering - 02 
6. உணவு பதப்படுத்துதல், உணவு தொழில்நுட்பம் - Food Processing / Food Technology - 04 
7. வனவியல் - Forestry - 04 
8. நில மேம்பாடு (மண் விஞ்ஞானம்) - Land Development (Soil Science) / Agriculture - 08 
9. சிறு நீர்ப்பாசனம் (நீர் வளங்கள்) - Minor Irrigation (Water Resources) - 06 
10. சமூக வேலை - Social Work - 03

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Manager (RDBS) Agriculture - 08 

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.03.2018 தேதியின்படி 21 - 30குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.28150-1550(4) -34350-1750(7) - 46600 - EB - 1750(4) - 53600-2000(1)-55600 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க, கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.04.2018

ஆன்லைன் முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: 12.05.2018

ஆன்லைன் முதன்மை தேர்வு நடைபெறும் தேதி: 06.06.2018

ஆன்லைன் எழுத்து தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டை  27.04.2018 அன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1303180258Advt%202018-Grade%20A-Final-13.03.2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க முக்கியமான 8 ஆவணங்கள் :

முதன் முதலாக சொத்து வாங்குவதென்பது ஒரு வித பதட்டத்தையும்,மகிழ்ச்சியையும் சேர்ந்த உணர்வை கொடுக்கும். அப்படி வாங்கப்படும் ஒரு சொத்து நிலையானதாக இருக்கக் கீழ் கண்ட 8 அத்தியாவசிய ஆவணங்களை சரி பார்த்துகொள்ளுங்கள்.


1. டைட்டில் டீட் (Title deed)
ஒரு சொத்தினை வாங்குவதற்கு முன் அதன் அசல் டைட்டில் டீடை வாங்கி வக்கிலை வைத்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அந்தச் சொத்து அடைமானத்திலோ அல்லது எந்த ஒரு தனி நபருக்கு விற்கும் உரிமையையோ கொடுக்கப்பட்டிருக்கக் கூடாது. அதில் விற்பவரின் விவரம் மட்டுமே இருக்க வேண்டும்
2. சோதனைச் சான்றிதழ் (Encumbrance certificate)
பதிவுத் துறை அலுவலகத்திலிருந்து சோதனைச் சான்றிதழை பெற்று அந்த சொத்தின் மீது சட்ட ரீதியாக எந்த ஒரு கடனோ வில்லங்கமோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சொத்தை வைத்து நடத்தப்பட்டிருக்கும் பரிவர்த்தனைகள் பற்றி இது சொல்லும்.
3. சர்வே ஸ்கெட்ச் (Survey sketch)
சர்வே துறையிலிருந்து சொத்தின் திட்ட வரைபடத்தை பெற்று, விற்பவர் கூறிய அளவுகள் அதில் கச்சிதமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
4. ரிலீஸ் சான்றிதழ் (Release certificate)
நீங்கள் வாங்கவிருக்கும் சொத்து இதற்கு முன் வங்கி கடனில் இருந்திருந்தால் அந்தப் பணம் முழுவதுமாக திரும்ப செலுத்தப்பட்டு வங்கியிலிருந்து ரிலீஸ் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒருவேளை எதிர்காலத்தில் அந்த சொத்தை அடமானை வைக்க நினைத்தாலும் இந்த சான்றிதழ் உதவும்.
5. வரி ரசீதுகள் (Tax receipts)
நீங்கள் வாங்கவிருக்கும் சொத்தினை விற்பவர் அதுவரை சரியாக வரி செலுத்தியிருக்கிறாரா என  வரி செலுத்திய ரசீதுகளை பெற்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
6. விற்பனை பத்திரம் (Sale deed)
விற்பனை வரைவை வக்கீலை வைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவேண்டும்.
7. தாய் பத்திரம் (Mother deed)
தாய் பத்திரம்தான் ஒரு சொத்தின் உரிமையை பற்றி அதன் ஆரம்பத்தில் இருந்து சொல்லும். அதில் ஏதேனும் தகவல் விடுபட்டிருந்தால் பதிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
8. பவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)
சொத்தினை விற்பவர், அதை விற்கும் உரிமையை வேறு ஒரு தனி நபருக்கு அளித்திருந்தால் இந்த ஆவணம் அவசியம்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவை மட்டுமல்லாமல் நீங்கள் வசிக்கும் நகராட்சிக்கு / ஊராட்சிக்கு உட்பட்டு விதிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக ஒரு சொத்தை வாங்கும் போது வக்கீலின் வழிகாட்டுதலுடன் வாங்குவது நல்லது. முக்கிய ஆவணங்களை சரிபார்த்து வாங்கி வைக்கும்போது சொத்து வாங்குதல் நல்ல அனுபவமாக இருக்கும்.

05-04-2018 க்குள் CCE சார்பான அனைத்து பதிவேடுகளும் முடிக்கப்பட்ட வேண்டும்- DEEO உத்தரவு - செயல்முறைகள்:

நீட்: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நாளை முதல் அவகாசம்

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதனை வியாழக்கிழமை (மார்ச் 15) முதல் இணையதளத்தில் மேற்கொள்ளலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநர் டாக்டர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிபிஎஸ்இ மூலம் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தும், பல மாணவர்கள் விண்ணப்பங்களில் தவறான விவரங்களை அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தவறான விவரங்கள் அளிப்பதனால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் தர வரிசையில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, 100 சதவீதம் சரியான விவரங்களை உறுதி செய்து கொள்ளும் வகையில், விண்ணப்பங்களில் ஒருமுறை திருத்தம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 
அதன்படி மார்ச் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இணைதயளத்திலேயே திருத்தங்களை மேற்கொள்ளலாம். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் திருத்தங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில், மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றொரு வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்பட மாட்டாது. 
திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு, மாணவர்கள் அந்தத் திருத்தத்துக்கான விவரங்களை நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அறிவுறுத்தல்களை பெற்றோர் கவனமாகப் படித்து, தங்கள் பிள்ளைகள் திருத்தங்கள் மேற்கொள்ள உதவ வேண்டும்.

சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத் திட்டத்தை பின்பற்றுகின்றனவா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத் திட்டத்தை பின்பற்றுகின்றனவா என்று மத்திய அரசுக்கு சென்னை 
உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஆய்வு செய்ய கூடுதல் நிதி ஒதுக்குவது எப்போது? எவ்வளவு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்பது குறித்து மார்ச் 27-க்குள் பதிலளிக்க உத்தரவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பக்கத்துக்கு பக்கம் சித்திரம், க்யூ.ஆர்., கோடு, சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்

பக்கத்துக்கு பக்கம் வண்ண படங்கள், சித்திரங்கள் மற்றும், க்யூ.ஆர்., கோடு என, புதுவிதமாக, தமிழக பாடபுத்தகம் தயாராகியுள்ளது. புத்தகத்தில் பாடமாக மட்டுமின்றி, மொபைல் போனில், 'வீடியோ' வாயிலாகவும் படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பக்கத்துக்கு பக்கம் சித்திரம், க்யூ.ஆர்., கோடு: சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்தமிழகத்தில், 13 ஆண்டு களுக்கு பின், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், ஏழு ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது.


இந்த ஆண்டு அமல்


புதிய பாடத்திட்டம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு சவால் விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.ஆந்திரா, கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தையும்,

லண்டன், 'கேம்பிரிட்ஜ்' பாடத்திட்டத்தையும் கலந்து தயாரிக்கப்பட்டு உள்ளது.

புதிய பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள், பல உயர்கல்வி நிறுவன பேராசிரியர்களின், நேரடி மேற்பார்வையில் உருவாகி வருகின்றன.முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரவுள்ளது.

அதேநேரம், இரண்டு, மூன்று, நான்கு வகுப்புகளுக்கான பாட புத்தகங்களும் தயாராகி உள்ளன. இந்த பாட புத்தகங்களில், வண்ண படங்கள், சித்திரங்கள், பார்கோடு என, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு பக்கத்திலும், பாடங்கள் அருகே, அதற்கான படங்களை வீடியோவாக பார்க்க, டிஜிட்டல் குறியீடு மற்றும் க்யூ.ஆர்., கோடு குறிக்கப்பட்டுள்ளது. இந்த குறியீடுகளை, மொபைல் போன், 'ஆப்' பயன்படுத்தி, ஸ்கேன் செய்து வீடியோவாக பார்க்கலாம்.


செய்முறை


அதேபோல், பாட புத்த கத்தின் முடிவில், 'ஆக்டிவிட்டீஸ்' என்ற, செய்முறை இடம் பெற்றுள்ளது.


இந்த செய்முறையை பயன்படுத்தி, வினாக்களை கேட்கும் முறை நடைமுறைக்கு வருகிறது. பாடங்களில் இடம் பெற்றுள்ள, பெரும்பாலான அம்சங்களில், வண்ண புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ரோபாட்டிக், ரசாயன, வேதியியல், சோலார் பேமிலி என்ற சூரிய குடும்பம் குறித்து, மூன்றாம் வகுப்பில் இருந்தே, பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றக்கூடிய, மத்திய அரசின், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களுக்கு சவால் விடுக்கும் வகையில், தமிழகத்தின் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் அமைந்துள்ளன.

14/3/18

சட்ட கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை!!!

சென்னை;மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, சட்டக் கல்லுாரிக்கு 
காலவரையற்ற விடுமுறை அளித்து, கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லுாரி இயங்கி வருகிறது. 2008 நவ., 12ல், சட்டக் கல்லுாரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.இதையடுத்து, ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதி, சண்முகம்தலைமையிலான கமிட்டி, சென்னை சட்டக் கல்லுாரியை, வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்என, தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது.இதையடுத்து, காஞ்சிபுரம்மாவட்டம், புதுப்பாக்கம் கிராமம்; திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெரும்புதுார் உள்ளிட்ட இடங்களில், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு, கல்லுாரி இடம் மாற்றம் செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்தது.இதற்கு, சட்டக் கல்லுாரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பிப்., 26ல், கல்லுாரி வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று, 15வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.ஏற்கனவே, கடந்த, பிப்., 27 - மார்ச் 7ம் தேதி வரை, கல்லுாரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின், விடுமுறை, 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வராத நிலையில், கல்லுாரிக்கு காலவரையற்ற விடுமுறையளித்து, கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.உண்ணாவிரத போராட்டம்சட்டக் கல்லுாரி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, மாணவர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை, ஐகோர்ட் வழக்கறிஞர்கள், பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும், கையெழுத்து இயக்கத்தையும், நேற்று துவங்கினர். 10ம் தேதியில் இருந்து, 10 மாணவர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் நாடு அரசு ஊழியர் & ஆசிரியர்களின் CPS பிடித்தம் ஏ. . . .ப். .பமா?

ரூ.18,016 கோடி இருக்கு. . .! ஆனா இல்ல!


2003-ற்குப் பிறகு தமிழ் நாடு அரசு, அரசு ஊழியர் & ஆசிரியர்களிடம் CPS பிடித்தமாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்களிப்பு மற்றும் வட்டியுடன் சேர்த்து  ரூ.18,016,00,00,000/-யை ஓய்வூதியப் பொதுக்கணக்கில் வைத்திருப்பதாக சட்டமன்றத்தில் 2017-18
 *கோரிக்கை எண்.50-ல்* தெரிவிக்கப்பட்டிருந்தது.

31.3.2017 நிலவரப்படி அரசின் பொதுக்கணக்கில் வைக்கப்பட்டுள்ள தொகை,

எந்தந்த கணக்குத் தலைப்புகளில் இருந்து வரவு வைக்கப்பட்டுள்ளது என்ற விபரம்

எந்தந்த கணக்குத் தலைப்புகளில் இருந்து செலவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரம்

பொதுக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகை பிறவகையில் முதலீடு செய்யப்பட்ட விபரம் ஆகியவை குறித்து

*தகவலறியும் உரிமைச் சட்டத்தில்,*
 ஊழியர்களின் ஊதியப் பிடித்தங்களைச் செய்துவரும் கருவூலக் கணக்குத்துறையிடம் கேட்கப்பட்டது.

ஆனால், கருவூலக் கணக்குத்துறையோ பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை எவ்வளவு? எந்தத் தலைப்பில் வரவாக்கப்பட்டது? செலவாக்கப்பட்டது? உள்ளிட்ட எந்தக் கேள்விக்கும் தன்னிடம் பதில் இல்லை என அரசு தகவல் தொகுப்பு விபர மையத்தை (GOVT. DATA CENTRE)  கைகாட்டி ஒதுங்கிக் கொண்டது.

கருவூலம் தரும் ஊழியரின் ஊதிய ஓய்வூதியப் பிடித்தம் & நிலுவை விபரங்களை இணைய தளத்தில் வெளியிடும் அமைப்பான தகவல் தொகுப்பு விபர மையம் இக்கேள்விகளெல்லாம் தனது துறை தொடர்புடையது அல்ல எனக் கூறி நிதித்துறைக்கு அனுப்பிவிட்டது.

ஊழியருக்கான ஊதியம் வழங்கல் & தலைப்பு வாரியாகப் பிடித்தங்களை மேற்கொள்ளும் கருவூலக கணக்குத்துறையிடமே ஊழியர்களின் CPS பிடித்தங்கள் பற்றிய தகவல்கள் இல்லாதது ஊழியர்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

*திண்டுக்கல் எங்கெல்ஸ்*

BREAKING: ஆதார் எண் இணைப்பு- மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!!!

வங்கி கணக்கு, மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
*சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை சற்றுமுன் நீட்டித்தது உச்சநீதிமன்றம்.
*மார்ச் 31-க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது, அடுத்த தீர்ப்பு வரும் வரை காலக்கெடுவை காலவரையின்றி நீட்டிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.


பல்வேறு சேவைகளுடன் ஆதார் எண்-ஐ இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள ஆதார் வழக்கின் தீர்ப்பு வரும் வரை வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்ட வற்றுடன் ஆதார் எண்-ஐ இணைக்க கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆதார் கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமூக நல உதவிகளை பெறுவதற்கும் மானிய உதவி பெறுவதற்கும் மட்டுமே மத்திய அரசு ஆதார் எண்-ஐ கேட்க வேண்டும் என  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக ஆதார் இணைக்க மார்ச் 31-ம் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
எனவே, ஆதார் வழக்கில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை ஆதார் இணைக்க அவசியமில்லை.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம்.

ட்ரக்கிங் என்றால் என்ன?ட்ரக்கிங் பற்றிய ஒரு முழுமையான தகவல் .ட்ரக்கிங் எதற்க்காக செல்கிறார்கள் :

தேனி மலைப்பகுதிக்கு ட்ரக்கிங் சென்று ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், டிரெக்கிங் என்றால் என்ன, இளைஞர்களும், இளம் பெண்களும் டிரெக்கிங் செல்ல ஆர்வமாக இருப்பது ஏன் என்பதை பார்க்கலாம்.

டரக்கிங் என்பது, கால்நடையாக, மெதுவாக, கடினமான வழிகளில், குறிப்பாக மலைப் பகுதிகளில் பயணம் செய்வதைக் குறிப்பதாகும். ட்ரக்கிங் என்பது மிகவும் கடினமான, சவாலான செயல்பாடாகும். கடினமான, மலைப் பகுதிகளில் செல்ல வேண்டும் என்பதால் ட்ரக்கிங் செல்வதற்கு உடல் வலுவும், தாக்குப்பிடிக்கும் திறனும் வேண்டும்.

அதேநேரத்தில், குறிப்பிட்ட பகுதிகளை தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன், இயற்கைக் காட்சிகளை கண்டு ரசித்தபடியே கால்நடையாகச் செல்வதையும், இதற்காக ஆள் அரவமற்ற வனப்பகுதிகளை தேர்வு செய்வதும் ட்ரக்கிங் வகையிலேயே சேர்கிறது. டரக்கிங் என்பதை மலையேற்றம் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், மலையேற்றம் என்பது தனித்ததொரு செயல்பாடாகும். இயற்கையிலிருந்து விலகி, எந்திர கதியில் நகரச் சூழலில் வாழ்பவர்கள் இயற்கையை ரசிக்கவும், புத்துணர்ச்சி பெறவும் டரக்கிங், ஹைக்கிங், மலையேற்றம் போன்றவற்றைத் தேர்வு செய்கின்றனர்.

அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களிள் ஐ.டி துறையில் பணியாற்றும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்களது பணிச்சுமையில் இருந்து விடுபடவும், மன அழுத்தத்தை குறைக்கவும் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளில் வார விடுமுறையை கழிக்க டிரெக்கிங் செல்வது வழக்கம். போடி, கொடைக்கானல், மூணாறு, நீலகிரி, ஜவ்வாது மலை, கல்வராயன் மலை போன்ற பகுதிகளுக்கும், இதேபோல இமயமலை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ட்ரக்கிங் செல்பவர்கள் உண்டு. இத்தகைய பயணங்களை ஏற்பாடு செய்து, ஒருங்கிணைக்கும் டரக்கிங் கிளப்புகள் செயல்படுகின்றன. முறைப்படி செயல்படும் ட்ரங்கிங் கிளப்புகள் உரிய பயிற்சிகளைக் கொடுத்து, உடல் வலுவை சோதித்த பிறகே, ட்ரக்கிங் பயணங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.

முதலில் எளிமையான ட்ரக்கிங், பின்னர் சற்று கடினமான ட்ரக்கிங், அதன் பிறகு கடினமான ட்ரக்கிங் என படிப்படியாகவே அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல முடியும். இதேபோல, வனப் பகுதிகளுக்கு செல்லும்போது வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று, அறிவும் அனுபவமும் பெற்ற வழிகாட்டிகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதியாகும். தேனி மாவட்டம் குரங்கணியில் ட்ரக்கிங் சென்றவர்களுக்கு வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி நேர்ந்த துயரச் சம்பவம் என்பது, ட்ரக்கிங் கிளப்புகளை அரசு முறையாகக் கண்காணித்து, ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது.

டரக்கிங் என்பதை மலையேற்றம் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், மலையேற்றம் என்பது தனித்ததொரு செயல்பாடாகும். இயற்கையிலிருந்து விலகி, எந்திர கதியில் நகரச் சூழலில் வாழ்பவர்கள் இயற்கையை ரசிக்கவும், புத்துணர்ச்சி பெறவும் டரக்கிங், ஹைக்கிங், மலையேற்றம் போன்றவற்றைத் தேர்வு செய்கின்றனர். அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களிள் ஐ.டி துறையில் பணியாற்றும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்களது பணிச்சுமையில் இருந்து விடுபடவும், மன அழுத்தத்தை குறைக்கவும் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளில் வார விடுமுறையை கழிக்க டிரெக்கிங் செல்வது வழக்கம்.

போடி, கொடைக்கானல், மூணாறு, நீலகிரி, ஜவ்வாது மலை, கல்வராயன் மலை போன்ற பகுதிகளுக்கும், இதேபோல இமயமலை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ட்ரக்கிங் செல்பவர்கள் உண்டு. இத்தகைய பயணங்களை ஏற்பாடு செய்து, ஒருங்கிணைக்கும் டரக்கிங் கிளப்புகள் செயல்படுகின்றன. முறைப்படி செயல்படும் ட்ரங்கிங் கிளப்புகள் உரிய பயிற்சிகளைக் கொடுத்து, உடல் வலுவை சோதித்த பிறகே, ட்ரக்கிங் பயணங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். முதலில் எளிமையான ட்ரக்கிங், பின்னர் சற்று கடினமான ட்ரக்கிங், அதன் பிறகு கடினமான ட்ரக்கிங் என படிப்படியாகவே அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல முடியும். இதேபோல, வனப் பகுதிகளுக்கு செல்லும்போது வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று, அறிவும் அனுபவமும் பெற்ற வழிகாட்டிகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதியாகும். தேனி மாவட்டம் குரங்கணியில் ட்ரக்கிங் சென்றவர்களுக்கு வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி நேர்ந்த துயரச் சம்பவம் என்பது, ட்ரக்கிங் கிளப்புகளை அரசு முறையாகக் கண்காணித்து, ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது.

தேர்வுக்குத் தயாரா? - 10-ம் வகுப்பு - ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள் - தயாராவது எப்படி ?

பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தில் தொடர் பயிற்சி, வினாக்களைப் புரிந்துகொண்டு எழுதுவது, பிழைகளைக் கவனத்துடன் தவிர்ப்பது ஆகியவற்றைப் பின்பற்றினால் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.
ஆங்கிலம் முதல் தாள்
தவிர்க்க வேண்டிய தவறுகள்
ஒரு மதிப்பெண் வினாக்களில் பதில்களை எடுத்து எழுதும்போது சரியான தெரிவை (option) a,b,c அல்லது d எனக் குறிப்பிட்டுப் பதில் எழுதுவதும் கடைசியாக அவற்றைச் சரிபார்ப்பதும் நல்லது. கேட்கப்பட்ட எண்ணிக்கைக்கு அப்பால் அனைத்து வினாக்களுக்கும் பதில் அளித்தல், மனப்பாடப் பாடல் எழுத நன்றாகத் தெரியும் என்பதற்காக முழுப் பாடலையும் எழுதுதல் போன்றவை நேர விரயம்.
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து விடையளிக்கும் Comprehension பகுதியில் (வி.எண்.51), முதல் வினாவுக்கான விடையைப் பத்தியின் தொடக்க வரிகளிலும், கடைசி வினாவுக்கான விடையைப் பத்தியின் கடைசி வரிகளிலுமாக, மாணவர்கள் தவறான தேடல் மேற்கொள்கிறார்கள். பத்தியையும் குறிப்பிட்ட வினாவையும் முழுமையாக வாசித்துப் புரிந்துகொண்ட பின்னர், பத்தியில் சரியான இடத்திலிருந்து விடையை அடையாளம் கண்டு எழுதப் பழக வேண்டும்.
அதிக மதிப்பெண்களுக்கு
இலக்கணப் பகுதி வினாக்களுக்கு (வி.எண்.15-30) முந்தைய வருடங்களின் வினாத்தாள்களில் இருந்து பயிற்சி பெறுவது நல்லது. கணிதப் பாடம் போன்றே இலக்கணத்துக்கென அமைந்த சில எளிய சூத்திரங்களை நினைவில்கொள்வதும் நல்லது.
வி.எண்.52, Spot and Correct the Error எளிதான பகுதி என்று பிழைகளை அடையாளம் காட்டுவதுடன் விடையை முடித்துவிடுகிறார்கள். பிழைகளை நீக்கி வாக்கியங்களை எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண் கிடைக்கும். வி.எண்.53, (Picture Comprehension) படத்தின் கீழுள்ள வினாக்களுக்கு விடையளிப்பதில், இலக்கணப் பிழைகளைத் தவிர்த்தால் மட்டுமே 5 மதிப்பெண் கிடைக்கும்.
ஓரிரு வார்த்தைகளைப் பார்த்ததும் அவசரப்பட்டு விடையை முடிவு செய்தல் கூடாது. குறிப்பாக, வி.எண்.14 இம்மாதிரியான தவறுகளுக்கு இடமளிக்கிறது.
சரியான விடையை, மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட வரிகளில் மட்டும் எழுதுங்கள். 2 மதிப்பெண் வினாக்களை அதிகபட்சம் 30 வார்த்தைகளுக்குள்ளும், வி.எண்கள் 38, 50 ஆகியவற்றை 120 வார்த்தைகளுக்குள்ளும் எழுதினால் போதும்.
தேர்ச்சி எளிது
இப்போதிருந்து படிக்கத் தொடங்கினால்கூட ஆங்கிலம் முதல் தாளில் 35 முதல் 50 மதிப்பெண்கள் எடுத்துவிடலாம்.
Prose, Poem ஆகியவற்றின் தலா முதல் மூன்று பாடங்களில் இருந்து 5 மதிப்பெண்களுக்குரிய Paragraphs படிப்பதுடன், அவற்றைப் பிழையின்றி எழுதிப் பழகுங்கள். இதேபோல முதல் 2 மனப்பாடப் பாடல்களில் பயிற்சி இருந்தால், அப்பகுதிக்கான மதிப்பெண்ணைப் பெற்றுவிடலாம். இலக்கணப் பகுதியில் If Clause, Degrees of Comparisons, Combining the sentences, Punctuation ஆகியவற்றைப் படித்தால் 6 முதல் 11 மதிப்பெண்கள் எளிதில் பெறலாம்.
முதல் 3 பாடங்களின் இரண்டு மதிப்பெண் வினாக்களைப் படித்தாலே 4 அல்லது 6 மதிப்பெண்கள் உறுதி. எஞ்சிய பாடங்களின் 2 மதிப்பெண் வினாக்களை ஏற்கெனவே படித்த Paragraphs பகுதியிலிருந்தே எதிர்கொள்ளலாம். Rhyming words, Rhyme scheme, figure of speech ஆகியவற்றில் ஆசிரியர் அல்லது நன்றாகப் படிக்கும் சக மாணவர் உதவியுடன் ஓரிரு மணி நேரம் ஒதுக்கிப் பார்த்தாலே முடித்துவிடலாம்.
ஓரளவு பயிற்சியின் மூலமே Language Functions (வி.எண் 51-53) பிரிவில் 10-லிருந்து 15 மதிப்பெண்கள்வரை எடுக்கலாம்.
தேர்வறைக் கவனக் குறிப்புகள்
தெளிவான கையெழுத்தில் அடித்தல் திருத்தல் இன்றி எழுதுதல், அடுத்தடுத்த விடைகளுக்கிடையே போதிய இடைவெளியிட்டு எழுதுதல் அவசியம். வி.எண். 38, 50 ஆகியவற்றில் விடைகளின் தொடக்கத்தில் Synopsis எழுதுவதுடன், முடிவில் பொருத்தமான Proverb ஒன்றை எழுதிக் கட்டமிடுவது நல்லது. Rhyming words, Rhyme scheme, alliteration போன்றவற்றை எழுதி, பென்சிலால் அடிக்கோடிட்டும் காட்டலாம். Punctuation பகுதியில் பொருத்தமான குறிகளை, பென்சில் அல்லது கறுப்பு மை பேனாவைக் கொண்டு தனித்துக் காட்டலாம்.
வெளியிலிருந்தும் வினா
முதல் தாளில் சில வினாக்கள் பாடநூலுக்கு வெளியிலிருந்தும் கேட்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, வி.எண் 3 (Expansion), வி.எண் 5 (American/British English), வி.எண் 7 (Singular/Plural) போன்றவற்றைச் சொல்லலாம். ஆங்கில இலக்கணத்தின் பயன்பாடு, பொருளை நன்றாகப் புரிந்துகொள்வதும், விடையளிப்பதில் போதிய பயிற்சி கொண்டிருப்பதும் மட்டுமே இவ்வினாக்களுக்கு எளிதில் விடையளிக்க உதவும்.
இதுபோன்றே மாணவரின் இலக்கண அறிவு, மொழித் திறனைப் பரிசோதிக்கும் வினாக்களும் கணிசமாக உள்ளன. வி.எண் 9 (Phrasal Verb), வி.எண் 20 (Prepositional Phrase), வி.எண் 22 (Choose the correct phrase) ஆகியவை இவற்றில் அடங்கும். முந்தைய வருட வினாத்தாள்களில் இருந்து மேற்கொள்ளப்படும் திருப்புதல்கள் இவற்றுக்குக் கைகொடுக்கும்.
ஆங்கிலம் இரண்டாம் தாள்
முதல் தாளைவிட, 19 வினாக்கள் மட்டுமே அடங்கிய இரண்டாம் தாள் எளிமையாக அமைந்திருக்கும். 40 மதிப்பெண்கள்வரை இதில் சுலபமாகப் பெறலாம். ஆனால், மேலதிக மதிப்பெண்களைப் பெற விரும்பினால், முதல் தாளைவிட இதில் கூடுதல் கவனம் தேவை.
கதையும் உட்கூறுகளும்
வி.எண்.1-7, துணைப்பாடப் பகுதியில் அனைத்துக் கதைகளையும் வரிவிடாது வாசித்துப் புரிந்துவைத்திருப்பது அவசியம். கதைகள்தோறும் இடம்பெறும் கதாபாத்திரங்கள், அவர்களின் வயது, பேசும் வசனங்கள் (மேற்கோள்குறிகளுடன் உள்ளவை), கதை நிகழ்விடம் என அனைத்தையும் குறிப்பெடுத்து வரிசைப்படுத்தி வைத்துக்கொண்டு அவற்றில் பயிற்சி பெற்றால் முழு மதிப்பெண்களைப் பெறலாம். குறிப்பாக, (வி.எண் 6) மனவரைபடத்தைப் பூர்த்தி செய்வதில் இந்தத் தயாரிப்பு மிகவும் உதவும்.
இலக்கணப் பிழைகள் தவிர்க்க
10 மதிப்பெண்கள் அடங்கிய வி.எண்.8, Notes எழுதுகையில் Primary Notes, Secondary Notes என்றோ ஆங்காங்கே கோடிடும் குறிப்புகளாக மொத்தமாகவோ எழுதலாம். அதுவே Summary எழுதுகையில் Rough Copy முடித்து, Fair Copy எழுதும்போது ஏற்படும் இலக்கணப் பிழைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பதால் அவற்றில் கவனம் தேவை. வி.எண்கள் 9,10,11,13,15 ஆகியவற்றுக்குப் பதில் எழுதும்போதும் இலக்கணப் பிழைகளைத் தவிர்ப்பதில் கூடுதல் கவனம் தேவை.
வி.எண்.12, விளம்பரம் தயார் செய்வதில் எழுதுவதற்கு நீலம், கறுப்பு நிறப் பேனாக்களையும் படம் வரைதல், அடிக்கோடு இடுதலில் பென்சிலையும் பயன்படுத்தினால் போதுமானது.
வினாத் தேர்வில் கவனம்
வினா எண் 13-ல் கொடுக்கப்பட்ட தலைப்புச் செய்திகளை விரிவாக்கம் செய்யும்போது, செய்தி நிகழ்ந்த நாள், இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு இலக்கணப் பிழையின்றி எழுத வேண்டும். கூடவே PM, CM போன்ற abbriviations உள்ளிட்டவற்றை முழுமையாக எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண்கள் கிட்டும். வி.எண்.15-க்கு விடையளிக்கும்போது பொருத்தமான தலைப்புடன் ஓரிரு பத்திகளில் பதில் எழுதி, நிறைவாக ஒரு பழமொழியையும் எழுதுங்கள்.
16, 17,18 வினாக்களுக்கு ஆர்வத்துடன் பயிற்சி பெற்றால் முழு மதிப்பெண் பெறலாம். வி.எண் 19-ல் இடம்பெறும் A, B என 2 வினாக்களில், மொழிபெயர்ப்பில் நல்ல திறமையும் எழுத்து, இலக்கணப் பிழையின்றி எழுதப் பயிற்சி பெற்ற மாணவர்கள் மட்டும் வினா A- வைத் தேர்ந்தெடுக்கலாம். மற்றவர்கள் வினா B-ஐத் தேர்வுசெய்து, கொடுக்கப்பட்ட படம் குறித்து 5- 10 வரிகளுக்குள்ளாகத் தங்கள் கருத்தை வெளிப்படுத்தலாம்.
பாடக் குறிப்புகளை வழங்கியவர்: முனைவர் பு.ஜெயபிரபு.
பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), அரசு உயர் நிலைப்பள்ளி,
பூண்டி, தஞ்சாவூர்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி: மினிமம் பேலன்ஸ் அபராதக் கட்டணம் அதிரடிக் குறைப்பு:

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, தனது வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கில் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவிட்டால் விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது.

இந்த புதிய கட்டணக் குறைப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்த பட்ச இருப்பை பராரிக்கவேண்டும் என கடந்த ஆண்டு வங்கி அறிவித்தது. அதன்படி, மாநகரங்களில் வசிப்போரு ரூ.3 ஆயிரம், சிறு நகரங்களில் இருப்பவர்கள் ரூ.2 ஆயிரம், கிராமங்களில் வசிப்போர் ரூ. ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50 முதல் ரூ.25 வரை அபராதமும், ஜி.எஸ்.டி. வரியும் விதித்தது.

அதன்படி, ஸ்டேட் வங்கி அபராதம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்து கடந்த 8 மாதங்களில் அந்தவங்கி ரூ.1,717 கோடி அபராதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்தது. ஆனால், ஸ்டேட் வங்கியில் ஜூலை-செப்டம்பர் மாத காலாண்டு லாபமே ரூ.1,581 கோடிதான். இந்த செய்தி வெளியான பின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது, ஏராளமானோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் வாடிக்கையாளர்களின் தொடர் எதிர்ப்பு, அதிருப்தி காரணமாக குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் குறைத்து எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி மாத அபராதமாக அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறுநகரங்களில் ரூ. 40 அபராதமாக வசூலிக்கப்பட்டநிலையில் அது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும்.

ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கையால், ஏறக்குறைய 25 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து எஸ்பிஐ மேலாண் இயக்குநர் பி.கே. குப்தா கூறுகையில் ‘ வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களைக் கேட்டும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டும் அபராதக் கட்டணத்தை குறைத்துள்ளோம். வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். எங்களின் முயற்சிகள், நடவடிக்கை அனைத்தும் வாடிக்கையாளர்களின் நலனுக்காகவே’ எனத் தெரிவித்துள்ளார். *

கிராமப்புற முகவரிகளையும் எளிதில் தேட கூகுளில் புதிய வசதிகள்:

கூகுள் தேடு பொறியில் கிராமப்புறங்களில் உள்ள முகவரிகளையும் எளிதில் கண்டறிவதற்கான கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில், பெரும்பான்மையான புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள முகவரிகளை கூகுள் மூலம் கண்டறிவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதுபோன்ற பகுதிகளில் உள்ள முகவரிகளையும் எளிதில் கண்டறிவதற்கான நவீன தொழில் நுட்ப வசதிகள் தேடுபொறியில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், ப்ளஸ் கோடு என்ற புதிய முறையும் முகவரியைத் தேடிக் கண்டடைவதற்கான தேடு பொறியுடன் இணைக்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், வாய்ஸ் நேவிகேசன் (Voice Navigation) எனப்படும் குரல் மூலமாக வழிகாட்டும் தொழில்நுட்பத்தில், தமிழ், வங்காளம், குஜராத்தி, தெலுங்கு. கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஆறு பிராந்திய மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.*

அனைத்து ரயில் நிலையங்களிலும் 2019 மார்ச்சுக்குள் Wifi வசதி ஏற்படுத்த ரயில்வே திட்டம்:

அனைத்து ரயில் நிலையங்களிலும் 2019 மார்ச்சுக்குள் Wifi வசதி ஏற்படுத்த ரயில்வே திட்டம் நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வைஃபை வசதி ஏற்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அண்மையில் கூடிய ரயில்வே வாரியக் கூட்டத்தில் நாட்டில் உள்ள 8 ஆயிரம் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புறங்களிலும் இணைய வசதியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 7 ஆயிரம் ரயில் நிலையங்கள் கிராமப் பகுதிகளில் உள்ள நிலையில் அப்பகுதி மக்கள் ரயில் நிலையங்களுக்கு வந்து இணைய வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

13/3/18

அரசு பள்ளிகளில் திறந்த வெளி கிணறுகள்:பாதுகாப்பு உறுதிப்படுத்த அறிவுறுத்தல்

அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் திறந்த வெளிக்கிணறுகள் மற்றும் மின் இணைப்பு செல்லும் பகுதிகள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை, அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசு, அரசு உதவிபெறும், அனைத்து தனியார் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு, பாதுகாப்பான சூழல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களைக் கொண்டு குழு அமைக்க வேண்டும்.

இக்குழுவினர், அனைத்து பள்ளிகளிலும், திறந்த வெளிக் கிணறுகள், மின் இணைப்பு செல்லும் பகுதி, கழிவுநீர் கால்வாய் குழிகள், மூடிய நிலையிலும், குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் அமைந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள, ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.பள்ளிக்கு அருகில் உள்ள பகுதிகளையும் பார்வையிட்டு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஆய்வின் போது, பாதுகாப்பில்லாத வகையில், கழிவுநீர் தொட்டிகள், மின் இணைப்புகள், கிணறுகள் பள்ளிகளில் காணப்பட்டால், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.