யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/3/18

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்

பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர் பாக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவும் திட்ட மிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 15-ம் தேதி தொடங்கும் என்றும் அன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.அதன்படி, நாளை பேரவை கூடுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதால் பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கும். அதில் பட்ஜெட் மீது எத்தனை நாள் விவாதம் நடத்துவது, பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக் கப்படும்.


நேரம் ஒதுக்கவில்லை

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குபடுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக கடந்த பிப்.22-ம் தேதி தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியது. முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் பிரதமரை சந்தித்து மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காக பிரதமரிடம் நேரம் கோரப்பட்டது. ஆனால், நேரம் ஒதுக்கப்படவில்லை.தமிழக குழுவை பிரதமர் சந்திக்காததற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன.

சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அக்கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றன. எனவே, பட்ஜெட் தாக்கல் முடிந்தும் நாளை மாலை அல்லது 16-ம்தேதி காலை சிறப்புக் கூட்டத்தை கூட்டி, இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட லாம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக