யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/3/18

சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதையே: ஸ்டீபன் ஹாக்கிங்கின் அந்த பேட்டியை மறக்க முடியுமா?

எளிய மனிதர்களும் அண்டவெளி அறிவியல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங் 'தி கார்டியன்' இதழுக்கு ஒருமுறை அளித்தப் பேட்டி உலகளவில் வாதவிவாதங்களுக்கு வழிவகுத்தது.

எல்லா மதங்களுமே சொர்க்கம், நரகம் குறித்து தத்தம் மக்களுக்கு போதிக்கிறது. ஆனால், எப்போதுமே மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட கருத்துகளை தெரிவித்த ஸ்டீபன் ஹாக்கிங் ஒருமுறை "சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை: எல்லாம் கற்பனைக் கதையே" என்றார்.
இதற்காக அவர் பல்வேறு மதத்தினரின் எதிர்ப்பையும் சம்பாதித்தார் என்பது வேறு கதை.


தி கார்டியனுக்கு அவர் அளித்த பேட்டியில், "மனித மூளையானது ஒரு கணினியைப் போன்றது. ஒரு கணினியின் உபகரணங்கள் பழுதாகி அது இயக்கத்தை நிறுத்திவிட்டால் எப்படி அது எங்கும் செல்வதில்லையோ அப்படித்தான் மனித உயிரும் மூளை தனது கடைசி நிமிட இயக்கத்தை நிறுத்தியவுடன் மனிதன் மரித்துப்போகிறான். அவர் அதன் பின்னர் சொர்க்கத்துக்கும் செல்வதில்லை, நரகத்துக்கும் செல்வதில்லை. இவை எல்லாம் வெறும் கற்பனைக் கதை. இருள் மீது பயம் கொண்ட மக்களுக்காக சொல்லப்பட்ட கதை" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "என்னுடைய மரணம் இளம் வயதிலேயே நிகழும் என்று சொல்லப்பட்டபது. ஆனால், அந்த கணிப்பைத் தாண்டியும் 49 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு மரணத்தின் மீது பயமில்லை. அதேவேளையில், மரணிக்க வேண்டிய அவசரத்திலும் இல்லை. நான் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன" என்றார்.
மதகுருமார்களின் எதிர்ப்பை சம்பாதித்த ஸ்டீபன் ஹாக்கிங்.

2010-ம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங் 'தி கிராண்ட் டிஸைன்', (The Grand Design) என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் அண்டம் உருவானவிதத்தையும் அண்டம் ஏன் இருக்கிறது என்பதை விளக்கவும் எந்த படைப்பாளியும் (கடவுளும்) தேவையில்லை எனக் கூறியிருந்தார். இந்தப் புத்தகம் பல்வேறு மத குருமார்களிடமும் எதிர்ப்பை சம்பாதித்தது.
யூத மதகுரு லார்ட் சாக்ஸ் என்பவர், "ஸ்டீபன் ஹாக்கிங் தர்க்கவாதங்களை கட்டுக்கதைகள் என்று உடைத்தெரியும் குற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்" எனக் குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தகக்து. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக