யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/3/18

பள்ளி கல்வித் துறையில் மாற்றம்; அரசு முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு



பள்ளிக் கல்வித் துறை யில், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள தற்கு, ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, ஒரு ஆய்வாளர்; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகிக்க, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி இருப்பர். தொடக்க கல்வியில், மாவட்டத்துக்கு குறைந்தபட்சம், இரண்டு தொடக்க கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், மூன்று வகை நிர்வாகங்களை கலைத்து விட்டு,ஒரே ஒரு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி பதவியை மட்டும் வைத்திருக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதன்படி, வட்டாரஅளவில், அனைத்து அரசு மற்றும் தனியார் நர்சரி, மெட்ரிக், மேல்நிலை பள்ளி களின் நிர்வாகங்களை, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரி கவனிப்பார். இந்த திட்டத்தால், ஏ.இ.இ.ஓ.,க்கள், தற்போது கவனிக்கும், தொடக்க பள்ளி நிர்வாகத்தை மட்டுமின்றி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டும்.

அதனால், வேலைப்பளு பல மடங்கு அதிகரிப்பதுடன், நிர்வாக பணிகளை முடிக்க, காலதாமதம் ஏற்படும் என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:தற்போதைய நிலையில், மூன்று இயக்குனரகத்துக்கும் தனியாக, மாவட்ட அளவில் அதிகாரிகள் இருப்பதே தொடர வேண்டும்.


அதிகாரிகள் எண்ணிக்கையை குறைத்து, ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு மட்டும், முழு அதிகாரத்தை கொடுத்தால், யார் பெரியவர் என்ற, அதிகார பிரச்னையும் அதிகரிக்கும்.ஏ.இ.இ.ஓ., பதவி என்பது, கீழ்நிலையில் உள்ள பதவி. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஏ.இ.இ.ஓ.,க்களை விட சீனியர்களாக இருப்பதால், முரண்பாடுகள் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக